மாதப்பிறப்பு ஆராதனை
அக்டோபர் மாதத்தின் வாக்குத்தத்தம் - சங்கீதம் 147:14
அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
சங்கீதம் 147:14
தலைப்பு:மனநிறைவுடன் நிலைத்திரு
அறிமுகம்
சங்கீதம் 147 என்பது “அல்லேலூயா சங்கீதங்களில்” (Psalm 146–150) ஒன்றாகும்.
“அல்லேலூயா” (கர்த்தரைத் துதியுங்கள்) எனத் தொடங்கியும், “அல்லேலூயா” என முடிவடையும் மகிழ்ச்சியான சங்கீதம்.
பின்னணி
பாபிலோனிய சிறைவாசத்திலிருந்து இஸ்ரவேலர் திரும்பி, எருசலேம் சுவர்களையும் ஆலயத்தையும் மீண்டும் எழுப்பிய காலம்.
அவர்கள் சந்தித்த கஷ்டங்களில், கடவுளே சமாதானத்தையும் வளத்தையும் வழங்குபவர் என்பதை மக்களிடம் நினைவூட்டும் சங்கீதம் இது.
வசனத்தின் முக்கியத்துவம்
அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார் – இந்த வசனம் மூன்று ஆசீர்வாதங்களை வாக்குத்தத்தமாக அறிவிக்கிறது:
1. எல்லைகளில் சமாதானம்,
2. உசிதமான கோதுமையால்
திருப்தி,
3. மனநிறைவு கொண்ட
நிலையான வாழ்க்கை.
I. கடவுள் நம் எல்லைகளில் சமாதானத்தை நிறுவுகிறார்
“அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி”* (சங். 147:14a).
எல்லைகள் என்பது: குடும்பம், சமூகம், தேசம், நம் வாழ்வு அனைத்தையும் குறிக்கிறது.
சமாதானம் (Shalom) = முழுமையான நலனும், பாதுகாப்பும் (ஏசாயா 26:3).
“அமைதியான மனம் உடம்புக்கு ஜீவம்” (நீதி 14:30).
இயேசு சொன்னார்:
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
யோவான் 14:27
“அவர் எங்கள் சமாதானம்” (எபே. 2:14).
குடும்பங்களில் பிளவு, சண்டை, போர் – இதற்கு தீர்வு கிறிஸ்துவின் சமாதானம் மட்டுமே.
கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம் “சமாதானக்காரர்கள்” ஆக இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம் (மத். 5:9).
II. கடவுள் நம்மை உசிதமான கோதுமையால் திருப்தி படுத்துகிறார்
உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்” (சங். 147:14b).
உயர்தர கோதுமை
உசிதமான கோதுமை என்றால் என்ன?
எபிரெயர் மூலத்தில் “Chelev Chittim” என்று உள்ளது; அதாவது சிறந்த தரமான கோதுமை, மிகச் சுத்தமானதும், மிகச் சிறந்ததும்.
தேவன் தனது ஜனங்களுக்கு மிகச் சிறந்ததைத் தருகிறார்; குறைவானதை அல்ல.
சங்கீதம் 81:16: “உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார், கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.”
சங்கீதம் 81:16
சங்கீதம் 103:5: “அவர் உன்னை நன்மைகளினால் திருப்தி படுத்துகிறார்.”
மனிதனுக்கு வாழ்வதற்குத் தேவையான உணவு, உடை, குடியிருப்பு போன்ற அடிப்படை தேவைகளை கடவுள் நிறைவாக தருகிறார்.
மத்தேயு 6:11: “எங்கள் அன்றாட அப்பத்தை இன்றைக்கு எங்களுக்கு அருளும்.”
கானான் தேசத்தில் பால் தேன் ஓடும் வளம் கொடுக்கப்பட்டது (யாத்திரி 3:8).
உபாகமம் 8:7–9: “நீங்கள் குறைவற்ற தேசத்தில் அப்பம் உண்ணுவீர்கள்.”
கடவுள் தம் ஜனங்களைத் தவிர்க்காமல், வளமாய் கொடுப்பவர்.
“நானே ஜீவ அப்பம்; என்னிடத்தில் வருகிறவன் பசியடைய மாட்டான்” (யோவான் 6:35).
“நான் உயிரோடிருக்கும் அப்பமாகியிருக்கிறேன்; யாராவது இந்த அப்பத்தை உண்டு வாழ்ந்தால் அவன் என்றைக்கும் உயிரோடிருப்பான்” (யோவான் 6:51).
சங்கீதம் 103:5: “அவர் உன்னை நன்மைகளினால் திருப்தி படுத்துகிறார்.”
உலக ஆசைகள் நம்மை பசியோடு வைக்கின்றன; ஆனால் கிறிஸ்துவில் தான் உண்மையான திருப்தி/நிறைவு கிடைக்கிறது.
பொருள் செல்வம், புகழ், அதிகாரம் எதுவும் நம்மை நிறைவுறச் செய்ய முடியாது; கிறிஸ்து மட்டுமே நம் உள்ளத்தைக் நிறைவடைய செய்வார்.
III. கடவுள் நம்மை மனநிறைவுடன் நிலைத்தவர்களாக மாற்றுகிறார்
“மனநிறைவுடன் நிலைத்திரு.”
மனநிறைவு = கடவுளுடைய கிருபையில் நம்பிக்கை வைக்கும் நிலை.
பவுல் கூறுகிறார்: *“எனக்கு இருக்கிற நிலையிலே திருப்தியாயிருக்க கற்றுக்கொண்டேன்” (பிலி. 4:11).
கடவுளில் நிலைப்பவர்களை ஒருபோதும் அசைக்கமுடியாது கற்பாறை மீது கட்டின வீடை போல (மத். 7:24–25).
“போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
1 தீமோத்தேயு 6:6
இன்றைய உலகம் எப்போதும் “மேலும், மேலும்” என்று குரல் கொடுக்கிறது.
ஆனால் கிறிஸ்துவில் உள்ளவர்:
“கிடைத்ததிலே திருப்தியாய்” வாழ்கிறார்
நீங்கள் பணஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணங்கள். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
எபிரேயர் 13:5
மனநிறைவு கொண்டவர்களுக்கு மன அமைதியும், ஆன்மீக நிலைத்தன்மையும் கிடைக்கிறது.
முடிவு
சங்கீதம் 147:14 நமக்குக் கொடுக்கும் மூன்று பெரிய வாக்குத்தத்தங்கள்:
I.எல்லைகளில் சமாதானம் – குடும்பம், சமூகம், நாடு அனைத்திலும் கிறிஸ்துவின் சமாதானம் நம்மை காக்கிறது (யோவான் 14:27).
II. உசிதமான கோதுமையால் திருப்தி – கடவுள் நம்முடைய அடிப்படை தேவைகளையும் ஆன்மீக பசியையும் கிறிஸ்துவில் நிறைவாகத் தருகிறார் (யோவான் 6:35).
III. மனநிறைவுடன் நிலைத்திரு – எந்த நிலையிலும் தேவபக்தியோடும் திருப்தியோடும் நிலைத்து வாழும் வாழ்க்கை உண்மையான ஆசீர்வாதமாகும் (பிலி. 4:11; 1 தீமோ 6:6).
இவை அனைத்தும் கிறிஸ்துவில் நிறைவேறுகின்றன.
ஆகையால் நாம், மனநிறைவுடன் நிலைத்திரு; கிறிஸ்துவின் சமாதானத்தில் வாழ்ந்து, அவருடைய அப்பத்தில் திருப்தி பெற்று, அவரது கிருபையில் நிலைத்திருப்போம், ஆமென்.
Written by : Rev. Dr. William Charles