கிறிஸ்துமஸ் செய்தி - ஓர் ஆய்வு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*கிறிஸ்துவின் மானிட அவதாரம்.*
*The Incarnation of Christ* .
*எழுதியவர் - பாஸ்டர் S.ஜான் மதியழகன்.*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*திருமறை பகுதிகள்/* Bible Passages :
யோவான் 1:1-2 ;
யோவான் 1:14 ;
பிலிப்பியர் 2:5- 11 ;
திருவெளிப்பாடு 13:8.
தொடக்க நூல் 3:15
யோவான் 3:16
*I* . கிறிஸ்து உலகில் பிறக்கும் முன்பாகவே இருந்தார் - The Pre-Existence of Christ before the creation of the world .
யோவான் 8:58; 10:30; 14:9 ; 17:5 .
*II* . கிறிஸ்து உலகில் பிறக்கும் முன்பதாக வார்த்தையாக இருந்தார். கடவுளிடம் இருந்தார். கடவுளாக இருந்தார் .
வார்த்தையை " வாக்கு " ( Word, Greek. Logos ) என்று அழைக்கலாம்.
*III* . வாக்கு மனிதர் ஆனார்- வார்த்தை மாம்சமாகி - வார்த்தையானவர் மாம்சமாகி - திருவாக்கு மானிடனாகிவிட்டார்.
word was made flesh - வாக்கு சதையானது. சதை என்பது 'சார்க்ஸ்' ( sarx ) என்னும் கிரேக்கச் சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பு.
(i) ' சார்க்ஸ்' என்பது எபிரேயச் சிந்தனைப் பின்னணியில் ,கடந்து போகக்கூடிய , இறந்து போகக்கூடிய, மண்ணுலகு சார்ந்த, குறையற்ற , நிலையற்ற , அழிவுக்குரிய ஒன்றைக் குறிக்கும்.
(ii) கிரேக்கச் சிந்தனையில் இது (மாம்சம் /சதை ) தீயது , பருப்பொருள் சார்ந்தது , மனிதரை சிறைப்பிடித்து வைத்திருப்பது எனப் பொருள்படும்.
(iii) திருத்தூதர் தூய பவுலின் பார்வையில் இது பாவ நாட்டமுடையது, பாவத்தின் கருவி ஆகும்.
(iv) ஏசாயா 40:6,7 - இல் இது நிறைவற்ற ,வலுவற்ற மனித இயல்பைக் குறிக்கிறது.
எபிரேயச் சிந்தனையின் பின்னணியிலேயே யோவான் 'சார்க்ஸ்' என்னும் சொல்லைக் கையாள்கிறார்.
எனவே இங்கு வாக்கு குறையுள்ள, நிலையற்ற, அழிவுக்குரிய மனித இயல்பை , மனித உடலை ஏற்றுக் கொண்டார் என்று பொருள் கொள்ள வேண்டும்.
வார்த்தை மாம்சமானது , வாக்கு சதையானது என்பதை வாக்கு குறையுள்ள, நிலையற்ற, அழிவுக்குரிய மனிதரானார் என்று பொருள் கொள்ள வேண்டும்.
*IV* . வார்த்தை மாம்சமானதை -வாக்கு மனிதனானார் என்பதை "கிறிஸ்துவின் மானிட அவதாரம் " என்கிறோம்.
அவதாரம்- Incarnation- மனித உருவேற்பு - ஊனுடலேற்பு (in-Fleshment) என்ற வார்த்தையால் விளக்குகிறோம்.
Incarnation = in-flesh-ment =ஊனுடலேற்பு.
கடவுள் விண்ணுலகிலிருந்து மண்ணுலகுக்கு இறங்கி வந்தது அவதாரம் ஆகும்.
அவதாரம் என்ற வடமொழிச்சொல்லின்/சமஸ்கிருதச்சொல்லின் பொருள் 'கீழ் இறக்கம்' /'கீழிறங்குதல்' ஆகும்.
The 'coming down' of God is 'avatara ' which literally means 'one who descends' - from the abode of gods to this earth.
*V* . கிறிஸ்துவின் மானிட அவதாரம் கிறிஸ்துவின் பிறப்புடன் மட்டும் முடிந்து விடவில்லை . அது அவரின் சிலுவை மரணம், உயிர்த்தெழுதல், பரத்துக்கேறுதல் மற்றும் கடவுளின் வலப்பக்கத்தில் அமர்தல் வரை தொடர்கிறது. பிற மதங்களில் வரும் அவதாரங்கள் கடவுள் தீமையை அழிக்க மனிதனாக வருவதையும் பிறகு வந்த வேலை முடிந்த பிறகு மனித உருவத்தை விட்டு விட்டு பழைய கடவுள் நிலைக்கே திரும்புவதையும் காட்டுகின்றன. ஆனால் கிறிஸ்துவின் மானிட அவதாரத்தில் கிறிஸ்து தான் மனிதனாக பிறந்த அந்த மனித உருவேற்பை /ஊனுடலேற்பை விட்டு விடாமல் இன்றும் கடவுளாக -மனிதனாக (God-Man ) கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார் என்று வேதத்தில் வாசிக்கிறோம்.
*VI* . கிறிஸ்து விண்ணிலிருந்து மண்ணுலகுக்கு " கீழிறங்கி " வந்ததை திருத்தூதர் பவுல் எபேசியர் 4:9 யில் குறிப்பிட்டுள்ளதை வாசிக்கிறோம்.
"ஏறிச்சென்றார் என்பதனால் அவர் முன்பு மண்ணுலகில் கீழான பகுதிகளுக்கு இறங்கி வந்தார் என்பது விளங்குகிறதல்லவா ? "
*VII* . நிசேயா விசுவாசப்பிரமாணமும் (Nicene Creed ) அதநாஷியஸ் என்பவரின் விசுவாசப்பிரமாணமும் (The Athanasian Creed) கிறிஸ்துவை குறித்து கூறும்போது ' இறங்கினார்' என்ற வார்த்தையை குறிப்பிடுகின்றன.
(i) மனிதராகிய நமக்காகவும் , நமக்கு இரட்சிப்பு உண்டாகவும், பரமண்டலத்திலிருந்து இறங்கிப் பரிசுத்த ஆவியினாலே , கன்னி மரியாளிடத்தில் அவதரித்து , மனிதனானார். " - Nicene Creed.
(ii) அவர் நமக்கு இரட்சிப்புண்டாகப் பாடுபட்டு : பாதாளத்தில் இறங்கி ,மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார் -The Athanasian Creed.
*VIII* . உலகத்தோற்றத்து முன்னிருந்த கிறிஸ்து தன்னை எவ்வாறு தாழ்த்தினார் என்று கூறும் பிலிப்பியர் 2 : (5 ) , 6- 11 கிறிஸ்தியல் பாடல் ( *Early Christian Hymn / Christological Hymn)* இதை விளக்குகிறது.
மூன்று வரிகளைக் கொண்ட ஆறு சரணங்களைக் கொண்ட இப்பாடலில் (1) கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு ஆதியில் எவ்வாறு இருந்தார் ( *beginning* ) ,
(2) தன்னை வெறுமையாக்குதல் ( *emptying* ),
(3)மரித்தல் ( *dying* ) , (4)உயர்த்தப்பட்டிருத்தல் ( *being exalted* ) ,(5) தந்தையாம் கடவுள்
எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளியது ( *being named* ), (6)இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர் , கீழுலகோர் அனைவரும் மண்டியிட்டு 'இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவும் அறிக்கை செய்யும் படி மாட்சிமையை அருளியது ( *being glorified* ) ஆகியவைகளைக் காணலாம்.
இப்பாடலில் கிறிஸ்து தன்னை வெறுமையாக்கியதை 'கெனாசிஸ் கொள்கை ' ( *Kenosis/Kenotic Christology* ) மூலமாக விளக்கலாம்.
கெனாசிஸ் என்ற கிரேக்க வார்த்தை கெணு ( *kenoo* , Gk.)என்ற வார்த்தை யிலிருந்து வந்ததாகும். 'கெணு' என்றால் 'வெறுமையாக்குதல்' , 'வெளியேற்றுதல்' ( *to empty out , drain* ) என்ற பொருள் படும். கெனாசிஸ் ( *Kenosis* ) என்பதை வெறுமைக் கொள்கை , வெறுமையாக்கும் கொள்கை என்று அழைக்கிறோம்.
இயேசு பூமியில் பிறந்த போதும் பூமியில் வாழ்ந்த போதும் சிலுவையில் மரித்த போதும் முழுமையான கடவுளாகவும் முழுமையான மனிதனாகவும் , நூறு சதவீதம் கடவுள்-மனிதனாகவே ( *God-Man* ) இருந்தார்.
இயேசு மனிதனாக பிறந்த போது தனது மகிமையை /மாட்சிமையை அவர் துறந்தார். தன்னை அவர் வெறுமையாக்கினார் என்று கூறும் போது தனது இறையாற்றலையும் எல்லாம் அறியுந்தன்னமையையும் வெறுமையாக்கினார். அவர் தன்னை வெறுமையாக்கின போது ஆண்டவரின் ஆவி / தூய ஆவியார் அவரை நிரப்பினார்.
*IX* . கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கிறிஸ்துமஸ் குடிலுடன்( *Crib* ) முடிவடைவது இல்லை. அது கல்வாரி சிலுவையில் முடிவடைகிறது. கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை முதலாவது அறிவித்தவர் கடவுளே ( ஆதி. /தொ.நூ. 3:15) அது முதலாவது அறிவிக்கப்பட்ட நற்செய்தி ( *Proto Evanvelium* ) என்று அழைக்கப் படுகிறது. அது இயேசுவின் பிறப்பை பற்றிய முதலில் அறிவிக்கப்பட்ட நற்செய்தியாக /இறைவாக்காக (first proclaimed good news & first prophecy about Christ's birth into this world ) இருந்தாலும் கல்வாரி சிலுவையில் சாத்தானின் தலையை -அதிகாரத்தை -வல்லமையை
பெண்ணின் வித்தாகிய/ *ஸ்திரியின் வித்தாகிய* ( *Seed of the Woman) /*
*இயேசு நசுக்குவார்* *என்கிற நற்செய்தியாக அது இருக்கிறது.*
" *உலகத்தோற்றமுதல்* *அடிக்கப்பட்ட* (slaughtered) *ஆட்டுக்குட்டி* " என்று கிறிஸ்து திருவெளிப்பாடு 13:8 யில் அழைக்கப்படுகிறார். ஆதாம் முதல் உலகின் கடைசி மனிதனின் பாவம் வரை இயேசு சிலுவையில் சிந்தின இரத்தத்தின் மூலமாக மன்னித்தார். இயேசு பிறப்பதற்கு முன்பு பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்தவர்களின் பாவங்களையும் இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர்களின் பாவங்களையும் இயேசு பரத்துக்கேறி பிதாவின் வலப்பக்கத்தில் அமர்ந்த பிறகு உலகின் கடைசி நபர் ஆணோ /பெண்ணோ அவர் செய்யப் போகும் பாவங்களையும் இயேசு சிலுவையில் சிந்தின தமது இரத்தத்தின் மூலமாக மன்னித்தார். "இயேசு எனது பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் இயேசுவை என் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொள்ளுகிறேன் என்று எவர்கள் விசுவாசித்து இயேசுவை ஏற்றுக் கொள்ளுகிறார்களோ அவர்கள் பாவங்கள் அனைத்தையும் இயேசு சிலுவையில் மன்னித்து விட்டார். அவ்வாறு அறிக்கை செய்து இயேசுவை ஏற்றுக் கொள்ளுபவர்களை இயேசு கடவுளுடைய மக்களாக ஏற்றுக்கொள்ளுகிறார். இதற்கு ' *மறைமுக ஒப்பந்தம்,'* *மௌனமான* , *கூறாது உணர்த்தும்* *ஒப்பந்தம்* ( *TACIT CONTRACT* ) என்று பேராயர் டாக்டர் ஞானாபரணம் ஜான்சன் கூறியுள்ளார்.
கடவுளுடைய ஒரேபேறான மகனிடம் (இயேசுவிடம்) நம்பிக்கை கொள்ளும் அனைவருக்கும் கடவுள் என்றுமுள்ள மெய்வாழ்வை /நிலைவாழ்வை தருகிறார். யோவான் 3:16 .
*துணை நின்ற நூல்கள்*
Bibliography
~~~~~~~~~~~~~~~~~
Khristadvaita:A Theology for India- R.H.S.BOYD.
The Birth of the Messiah- Raymond E.Brown.
Dake's Annotated Reference Bible.
New Revised Standard Version Bible.
The New Jerome Biblical Commentary-Raymond E.Brown et.al.,
The New Collegeville Bible Commentary- Series Editor : Daniel Durken.
New Bible Commentary- Edited by G.J.Wenham et.al.,
வாழ்வு பெற : யோவான் நற்செய்திச் சிந்தனைகள்- கு.எரோணிமுசு.
கிறிஸ்தத்வைதம்: இந்தியாவுக்கு ஓர் இறையியல்- ஆர்.எச்.எஸ்.போய்ட். தமிழாக்கம்: அருள்திரு. டி.ஆர். அம்பலவாணர்.
பேராயர் ஞானாபரணம் ஜான்சன் வாழ்க்கை வரலாறு - மறைதிரு அறிவர். ஈவா மரியா சீபர்ட் ஜான்சன்.
அவதாரங்களா ? அவதாரமா ? - பேராசிரியர் முனைவர் பாசுகரதாசு.
திருமறை விளக்கவுரை- ஞானா இராபின்சன் & தி.தயானந்தன் பிரான்சிஸ்.
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு .
பரிசுத்த வேதாகமம் O.V. (பவர் )
பரிசுத்த வேதாகமம் R.V. (மோணகன்)
புதிய ஏற்பாடும் சங்கீதங்களும்- தே.இராஜரீகம் மொழிபெயர்ப்பு.
தென்னிந்திய திருச்சபை இறை வழிபாட்டு நூல்.
ஐ.எஸ்.பி.சி.கே. ஜெப புத்தகம்.
*குறிப்பு* :தங்களது மேலான கருத்துக்களை வாட்ஸ்ஆப் மூலமாக தெரிவியுங்கள் .நன்றி.
*எழுதியவர்* : *Pr.S.ஜான் Madiyazhagan