Wednesday, January 7, 2026

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!


உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...!


"மத்தவங்க உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது அவர்களின் பிரச்சினை, உங்களுடையது அல்ல!", அமெரிக்காவின் முன்னால் First Lady, Eleanor Roosevelt அவர்களின் மிக பிரபலமான வார்த்தைகள் இவை.


1. எல்லாத்தையும் பெர்சனலா எடுத்துக்கிறத உடனே நிறுத்துங்க! 


மக்கள் சொல்லும் & செய்யும் பெரும்பாலான விஷயங்கள் அவர்களின் உலகத்தின் பிரதிபலிப்புதான் என்பதை புரிந்துகொள்ளுங்கள். 


"உங்களின் எண்ணங்களை விட அதிகமாக உங்களை காயப்படுத்தும் வேறு எதுவும் இந்த உலகில் இல்லை" என்றார் புத்தர். அதனால, உங்களுக்கு சொந்தமில்லாத எதையும் நீங்க எடுத்துக்காதீங்க! 


2. உங்களுடைய கவனத்திறனை ஒரு பொக்கிஷம் போல பாதுகாத்துக் கொள்ளுங்கள்!


உங்கள் கவனத்திறன்தான் உங்களுடைய எனர்ஜி. உங்கள் எனர்ஜிதான் உங்கள் வாழ்க்கையாக மாறுகிறது. 


அதனால் உங்களை  ஆக்கும் விஷயங்கள் மீது கவனம் செலுத்துங்கள், அழிப்பவை மீது அல்ல! 


"நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் யாராக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதற்கு நீங்கள் போடும் ஓட்டு" என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் James Clear. 


3. ரெஸ்பாண்ட் பண்ணுங்க, ரியாக்ட் பண்ணாதீங்க!


ரியாக்ட் பண்றது இன்ஸ்டிங்க்ட் (Instinct) அல்லது அடிப்படை மனித இயல்பு. ஆனா, ரெஸ்பாண்ட் பண்றது மாஸ்டரி (Mastery). 


இதை பின்வருமாறு அழகாக விளக்குகிறார் ஆஸ்திரியா நாட்டின் நரம்பியல் மற்றும் மனநல மருத்துவரான Victor Frankl. 


“ஒரு வினைக்கும், அதற்கான  எதிர்வினைக்கும் இடையில் உள்ள இடைவெளியில்தான் இருக்கிறது உங்கள் சுதந்திரம்" என்கிறார். 


அதாவது ஒருத்தர் உங்ககிட்ட ஒன்னு சொல்றதுக்கும், நீங்க அதுக்கு ரியாக்ட் பண்றதுக்கும் இடையில் உள்ள இடைவெளியில்தான் உங்கள் அமைதியே இருக்கிறது என்கிறார் Victor Frankl. 


4. மக்கள் என்ன வேணும்னாலும் நெனச்சிட்டுப் போகட்டும் விடுங்க! 


"மக்கள் உங்களைப் பற்றி சொல்லும் கருத்துகளுக்கு நீங்கள் மதிப்பு கொடுத்தால், நீங்கள் அவர்களின் கைதி ஆகிவிடுவீர்கள்" என்கிறார் பிரபல சீன ஞானி Lao Tsu. 


"பிறர் உங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நீங்கள் கைவிடும்போது உங்கள் சுதந்திரம் பிறக்கிறது" என்பதை நினைவில் வையுங்கள்!


5. உங்கள் அகங்காரத்தை (Ego) குறையுங்கள், உங்கள் அமைதி அதிகமாகும்!


சண்டை போடுவது, பிறருக்கு தன்னை நிரூபித்துக் காட்டுவது மற்றும் தற்காப்பு செய்துகொள்வது எல்லாம் உங்கள் ஈகோவுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் உங்கள் மனதுக்கு அமைதிதான் பிடிக்கும். 


அதனால், உங்கள் ஈகோவுக்கு தீனி போடுவதை நீங்கள் நிறுத்திவிட்டால், உங்களுடைய அமைதியான மற்றும் வலிமையான வடிவத்துக்குள் நீங்கள் அடி எடுத்து வைக்கிறீர்கள்!


இம்மாதிரியான மேலும் பல பயனுள்ள பதிவுகளை வாசிக்க Dr.Harinarayanan பக்கத்தை follow பண்ணுங்க 💐🫶🙏


#tamil #motivation #tamilstatus #drhari #trending #tamilviral #lifetips

Tuesday, December 30, 2025

Goose bump moment for me

 "லுத்தரன் திருச்சபைக்கு கிடைத்த அரிய காலம்” ஐசக் ஐயரின் காலம் 


பிப்ரவரி பதினைந்தில்,

பதவி அல்ல — பொறுப்பு அணிந்து வந்தார்,

விழுப்புரம் மண்ணில்

வசனங்கள் மட்டும் அல்ல

வாழ்க்கையும் உபதேசமான நாள் அது.


தபசுக் காலம் வந்தபோது

மேடையை இளைஞருக்குக் கொடுத்து,

“ஏழு வார்த்தைகள்”

ஏழு வாலிபர்களின்

உள்ளங்களில் இருந்து எழுந்தது —

அது போதகர் அல்ல, பாதை காட்டி.


லுத்தரன் இசை கச்சேரியில் கீதம் மட்டும் இல்லை,

மருத்துவ முகாமில் மருந்து மட்டும் இல்லை,

ஒடுக்கப்பட்டவர்களின் ஞாயிறில்

குரல் இல்லாதவர்களுக்கு

குரலாக நின்றார்.


ஆங்கில வழி ஆராதனையாய்

உலகத்தோடு ஆலயம் பேசச் செய்தார்,

லெந்து காலம் — இசையாக,

அரை இரவு — ஜெபமாக,

கடைசி காசு — சாட்சியாக,

பட்டிமன்றம் — சிந்தனையாக மாறியது.


வருமானம் உயர்ந்தது

காசுக்காக அல்ல,

கர்த்தரின் இல்லம்

கடன் இல்லாமல்

கண்ணியமாக நிற்கவே.


இன்றுவரை ஒரு சண்டையும் இல்லாத

இந்த திருச்சபை —

அவருடைய மிகப் பெரிய திட்டம்,

ஏனெனில்

சமாதானமே அவரின் நிர்வாகம்.


“அனைவருக்குமான ஆயர்”

என்ற பெயர்

விளம்பரம் அல்ல,

ஏழைகளின் கண்களில்

ஒளியாக மின்னும் உண்மை.


இணைய வழி நாளிதழ் —

இந்த காலத்தின் தூதன்,

பிப்ரவரி முதல்

டிசம்பர் இறுதி வரை

ஒரு நாள் கூட தளராத

அர்ப்பணத்தின் பதிவு.


ஐசக் ஐயரே,

நீங்கள் ஆலயத்தை

அழகுபடுத்தவில்லை —

ஆலயத்தை ஆலயமாக வைத்திருக்கிறீர்கள்.

அதுவே

இந்த காலத்தின்

அரிய ஆசீர்வாதம்.



எழுத்து 

ஜெ.ஜினோ கர்ட்டீஸ் ஜோசப்

Thursday, November 27, 2025

Thomas Bridges

 "நீ பாறையில் அடிக்கப்பட்டு, உன் உடல் அடுப்பில் வேக வைக்கப்பட்டிருக்கும்"


ஒரு முறை ஒரு பிரெஞ்சு நாத்திகர் பிஜி தீவுக்குச் சென்றார். அங்கே ஒரு பழங்குடி இனத் தலைவர் பைபிளைப் படித்துக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த அந்த வெள்ளையர், 


"நாங்கள் எல்லாம் என்றைக்கோ இந்தப் புத்தகத்தைப் பொய்யென்று தூக்கி எறிந்துவிட்டோம். நீங்கள் இன்னும் இதைப் படித்துக்கொண்டிருக்கிறீர்களா?" என்று ஏளனமாக கேட்டார்.


அதற்கு அந்தத் தலைவர், அருகில் இருந்த ஒரு பாறை மற்றும் பெரிய அடுப்பை காட்டி, "நண்பரே, இந்த பைபிள் மட்டும் எங்களிடம் வராமல் இருந்திருந்தால், இந்நேரம் நீங்கள் அந்தப் பாறையில் மண்டை உடைக்கப்பட்டு, அந்த அடுப்பில் வெந்து கொண்டிருந்திருப்பீர்கள். இந்தப் புத்தகம் என் கையில் இருப்பதால்தான், நீங்கள் இப்போது உயிருடன் என் முன் நிற்கிறீர்கள். அதற்கு நன்றி சொல்லுங்கள்" என்று பதிலளித்தார்.


அ) பிஜி தீவின் வரலாறு (Fiji):

 * 19-ம் நூற்றாண்டுக்கு முன், பிஜி தீவு "நரமாமிசம் உண்ணும் தீவு" (Cannibal Isles) என்றே அழைக்கப்பட்டது. அங்கு எதிரிகளைக் கொன்று உண்ணும் வழக்கம் மிகக் கடுமையாக இருந்தது.


 * ஜேம்ஸ் கால்வர்ட் (James Calvert), ஜான் ஹன்ட் போன்ற கிறிஸ்தவ மிஷனரிகள் அங்கே சென்ற பிறகுதான் அந்தப் பழக்கம் முழுமையாக மாறியது. எனவே, "பைபிள் இல்லை என்றால் நீங்கள் உணவாகி இருப்பீர்கள்" என்ற வாதம் வரலாற்று ரீதியாகப் பார்த்தால் அந்தச் சூழலுக்குப் பொருந்தக்கூடியதே.


ஆ) சார்லஸ் டார்வின் (Charles Darwin) மற்றும் டியரா டெல் ஃபியூகோ (Tierra del Fuego):


 * பரிணாமக் கோட்பாட்டின் தந்தை சார்லஸ் டார்வின், தனது ஆரம்பகால பயணத்தின்போது (Beagle Voyage), தென் அமெரிக்காவின் டியரா டெல் ஃபியூகோ என்ற இடத்தில் வாழ்ந்த பழங்குடி மக்களைச் சந்தித்தார். அவர்களைப் பார்த்து, "இவர்கள் மனித நிலையை அடையவே மாட்டார்கள், இவர்களை நாகரிகப்படுத்தவே முடியாது" என்று கருதினார்.


 * ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு, தாமஸ் பிரிட்ஜஸ் (Thomas Bridges) என்ற மிஷனரி அங்கு சென்று பணி செய்தபின், அந்த மக்களிடம் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டு டார்வின் வியந்தார்.


 * டார்வின் தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில், "மிஷனரிகள் இவ்வளவு பெரிய மாற்றத்தை உருவாக்குவார்கள் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை" என்று கூறி, அந்த மிஷனரி சங்கத்திற்கு (South American Missionary Society) நிதியுதவியும் செய்தார்.


 * டார்வின் அந்த மக்களிடம், "முன்பு கப்பல்கள் உடைந்தால் மாலுமிகளைக் கொன்று தின்றவர்கள், இப்போது அவர்களைக் காப்பாற்றி உபசரிக்கிறார்கள்" என்று எழுதினார்.


மிஷனரிகள் சமூகச் சீர்திருத்தம் மற்றும் காட்டுமிராண்டித்தனமான பழக்கங்களை (Cannibalism, Sati, Human Sacrifice) ஒழித்தார்கள் மிஷனரிகளின் வருகைக்குப் பின்தான் பல பழங்குடி இனங்களில் நரமாமிசம் உண்ணும் பழக்கம் நின்றது என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும்.

Tuesday, November 11, 2025

தீயோனிடமிருந்து என்னை விடுவியும்


தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை அறிந்துள்ளது.

அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது.

திருவெளிப்பாடு 12:12 


பிசாசு எனக்கு வலை விரிக்கிறது.

ஆனால் கிறிஸ்து என்னை விடுவிக்கிறார். 


பிசாசு நான் பொய்களை நம்பும்படி செய்கிறது;

ஆனால் கிறிஸ்து உண்மையை வெளிப்படுத்துகிறார். 


பிசாசு என்னைச் சோதிக்கிறது;

ஆனால் கிறிஸ்து அதனை வெற்றிபெற உதவுகிறார். 


பிசாசு என்னை அச்சுறுத்துகிறது;

ஆனால் கிறிஸ்து எனக்குத் துணிவைத் தருகிறார். 

 

பிசாசு என்னைப் பலவீனப்படுத்துகிறது;

ஆனால் கிறிஸ்து என்னை வலுப்படுத்துகிறார். 


பிசாசு என்னைக் கீழே தள்ளுகிறது;

ஆனால் கிறிஸ்து என்னை தூக்கி விடுகிறார். 


பிசாசு என் வீழ்ச்சியில் மகிழ்கிறது;

ஆனால் கிறிஸ்து என்னைத் தேற்றுகிறார். 


ஆண்டவராகிய இயேசுவே,

பல சமயங்களில் நான் உமக்கு அல்லாமல், பிசாசுக்கு கீழ்ப்படிகிறேன்.

பல சமயங்களில் நான் பிசாசின் பிரதிநிதியாகிவிட்டேன்.

சில சமயங்களில் நான் தெரிந்தோ, தெரியாமலோ அண்டைவீட்டார்களுக்கும் எனக்கும் வருத்தத்தை ஏற்படுத்துகிறேன். 

என்னை  பிசாசிடமிருந்தும், அவனுடைய தீவினைகளிலிருந்தும் விடுவியும்.

பிசாசுக்கு எதிராக நான் போராடும் போது எனக்கு வெற்றி அளியும். ஆமென். 


+ பேராயர் ஞானாபரணம் ஜான்சன்

~~~~~~~~~~~~~~~~~~

*Deliver me from the Evil* 


The Devil has come down to you in great fury, knowing that his time is short (Revelation 12:12, NEB). 


The devil spreads the net,

but Christ frees me again. 


The devil makes me believe the lies, 

but Christ reveals the truth. 


The devil tempts me constantly,

but Christ helps me not to yield. 


The devil threatens me,

but Christ encourages me. 


The devil exploits my weaknesses,

but Christ strengthens me. 


The devil pushes me down, 

but Christ lifts me up. 


The devil laughs at my fall, 

but Christ comforts me. 


Lord Jesus,

many times I have obeyed the devil and not you.

Many times I have become an agent of the devil.

Sometimes knowingly and sometimes unknowingly, I have brought misery both to my neighbours and to myself.

Deliver me from the devil and his evils.

Give me also victory in my fight against the devil. Amen. 


+ Bishop Gnanabaranam Johnson

தூய மார்ட்டின் திருநாள்


நவம்பர் 11ஆம் நாள் பல கிறிஸ்தவர்கள் தூய மார்ட்டின் திருநாளைக் கொண்டாடுகின்றனர். நவம்பர் 10ஆம் நாள் பிறந்த மார்ட்டின் லுத்தர் அடுத்த நாள் திருமுழுக்குப் பெற்றார். பல குழந்தைகள் வெகு சீக்கிரத்திலேயே மரித்துப் போனதால் பெற்றோர்கள் தங்களுடைய சிறு குழந்தைகள் விரைவிலேயே திருமுழுக்கு ஆசியைப் பெற்றுக் கொள்ள விரும்பினர். 11ஆம் நாள் தூய மார்ட்டினுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாக இருந்ததால், லுத்தருக்கு மார்ட்டின் என்ற பெயர் கொடுக்கப்பட்டது.    


               மார்ட்டின் யார்? கி.பி. 316 இல் ஹங்கேரியில் புற சமயத்தைச் சேர்ந்த ஒரு உரோமானிய அதிகாரிக்கு மகனாகப் பிறந்தார். அவர் உரோம படையில் சேர்ந்து ஒரு படை வீரரானார். குளிர்காலம் ஒன்றில் அவர் ஏமியன்ஸ் (பிரான்சு) நகருக்கு வெளியே குதிரையில் சவாரி செய்து கொண்டிருந்த போது, ஓர் ஏழை பிச்சைக்காரர் மேலங்கி இல்லாமல் நடுங்கி கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர் தன்னுடைய வாளை உருவி, தன்னுடைய மேலங்கியை இரண்டு துண்டுகளாகப் பிரித்து, ஒரு பாதியை பிச்சைக்காரரிடம் கொடுத்தார். மறுநாள் இரவில் கிறிஸ்து மார்ட்டினுடைய மேலங்கியை அணிந்து அவருக்கு தரிசனத்தில் தோன்றி கூறினார்: "இன்னும் திருமுழுக்குப் பெறாத மார்ட்டின் அவருடைய மேலங்கியின் ஒரு பகுதியை எனக்குக் கொடுத்துள்ளார்." விரைவில் மார்ட்டின் இராணுவத்தை விட்டு விலகினார். திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆயராகவும் பின்னர் தூர் (Tours) நகரத்தின் பேராயராகவும் ஆனார். அவரைப் பற்றிய பல வியத்தகு செயல்கள் பதிவாகி, அவர் புனிதர் பட்டம் பெற்றார். அவருடைய பல செயல்கள் மறந்து விட்டன. ஆனால் அவரது மேலங்கியைப் பிரித்து பிச்சைக்காரருடன் பகிர்ந்து கொண்ட இரக்கச் செயல் மறக்க முடியாத ஒரு கருணை செயலாகிவிட்டது. அவர் கிறிஸ்துவின் கட்டளையை நிறைவேற்றினார். "நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்." அன்பிற்கு ஓர் எடுத்துக்காட்டாக கலைஞர்கள் அந்தக் காட்சியை ஓவியமாக வரைவதும், சிற்பமாக செதுக்கியும் உள்ளனர். கிழக்கு ஜெர்மனியில் பல நகரங்களில் சிறு பிள்ளைகள் மாலையில் தாங்களே சுயமாக உருவாக்கிய விளக்குகளுடன் பாடல்களைப் பாடி சுற்றி வருவார்கள்.  


லுத்தர் மடலாயத்திற்குள் நுழைந்த எர்பர்ட் (Erfurt) என்ற இடத்தில் சிறு பிள்ளைகள் சந்தை கூடும் இடத்தில் கூடினர்.


அக்கூட்டத்தில் உரோமக் கத்தோலிக்கப் பேராயர் புனித மார்ட்டினைப் பற்றியும், லுத்தரன் பேராயர் மார்ட்டின் லுத்தரைப் பற்றியும், மாநகராட்சி மன்ற தலைவர் மார்ட்டின் லுத்தர் கிங்கைப் பற்றியும் பேசினார்கள் என்று உள்ளூர் ஆயர் என்னிடம் கூறினார். 


புனித மார்ட்டின்,மார்ட்டின் லுத்தர், மார்ட்டின் லுத்தர் கிங் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய மூவர். புனித மார்ட்டின் திருநாளன்று அவர்களை நினைவு கூருவது தகுதியானது. 


மறைதிரு.அறிவர்.சீபெர்ட் ஜான்சன்

Wednesday, October 29, 2025

26 M got heart attack

Recently a doctor treated an young adult stroke victim aged 26 was shocked. Even though it's rare scenerio it's really hurts to see such cases!

His sharing follows....

The man with no habits of alcohol smoke or even gutkhas.!


He depressed for his breakup he made himself in lonely environment he quit social exposure for the past 6 months


this is a wake-up call for all of us. 


Depression is not weakness — it’s a silent warning from your mind.


Mental health matters as much as physical health.

Continuous stress, isolation, and untreated depression can affect your brain and body in serious ways.


Talk about your feelings.

Stay connected with your loved ones.

Exercise regularly.

Don’t let loneliness take control — reach out before it’s too late.


And avoid thaniya poi sapdu thaniya padam paru thaniya vazha kathuko kind of post 


Let’s spread awareness that mental well-being saves lives.

Take care of your mind, body, and soul — because healing starts within. ❤️

Monday, October 27, 2025

வெண்மை நிற புலி இளைஞனை கொன்றது

 26.09.2014 அன்று டெல்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெண்மை நிற புலி இளைஞனை கொன்றது. 


ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வையாளர்கள் யாருக்கும் நம் கல்விமுறை நமக்கு கற்றுக் கொடுக்கவேயில்லையே...!


ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்.. அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது. பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள்... கூச்சலிடுகிறார்கள்... அதன் பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது. இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

காரணம்.. அறிவின்மை.. 

என்ன செய்வது என்கிற அறிவின்மை.


மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும்... ஆனால் நெருப்பிற்கு பயப்படும். கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும். இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல்..


(a+b)2 =a2 + 2ab + b2 

என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்..? 


ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை.. மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்.. அது முதலையாக இருக்கலாம், சிங்கமாக இருக்கலாம், அல்லது யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன்..?


அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும். இந்த அறிவைக்கூடக் கற்றுக் கொடுக்காமல் பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன..?


தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.


மற்றவர்களை மதிப்பது எப்படி..? மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி..? 


பெற்றோரிடம் நடந்து கொள்வது எப்படி..?


சாலை விதிகள் என்ன..? 

ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்..?


 அடிப்படைச் சட்டங்கள் என்ன..?

 நமக்கான உரிமைகள் என்ன..?


 காவல் நிலையங்களை எப்படி அணுகுவது..?

 

விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது..?


 விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது..?


 மாரடைப்பு வந்தால் என்ன செய்வது..?


 நோய்களை எவ்வாறு கண்டறிவது..? 


எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை.. பின் விளைவுகள் உள்ளவை..?


மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது..?


 கணவனிடம் எப்படி நடந்து கொள்வது..?


 மற்றவர்களை நேசிப்பது எப்படி..?


 நேர்மையாய் இருப்பது எப்படி..?


இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன்தான் என்ன..?

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...