Friday, February 17, 2023

Don't Gossip

 ""இழிவுபடுத்த வேண்டாம்...

பரவாயில்லை விட்டுவிடுங்கள்!!""


♦ஒரு தம்பதி 50வயதில் குழந்தை

பெற்றுக் கொள்கின்றார்களா?

பரவாயில்லை விட்டுவிடுங்கள்!


♦ஒரு பெண் பலகாலம் சென்று

திருமணம் முடிக்கவில்லையா?

பரவாயில்லை விட்டுவிடுங்கள்!


♦திருமணம் முடிந்து 5ஆண்டுகள்

ஆகியும் இன்னும் குழந்தை பெற்றுக்

கொள்ளவில்லையா?

பரவாயில்லை விட்டுவிடுங்கள்!


♦அவன் 30வயது கடந்தும் ஒழுங்கான தொழில் இல்லாமல்

அலைந்து கொண்டிருக்கிறானா?

பரவாயில்லை விட்டுவிடுங்கள்!


♦அவள் பேரப்பிள்ளைகளை கண்டபிறகும்,தன் கணவனோடு

கைகோர்த்து வீதியில் நடக்கிறாளா?

பரவாயில்லை விட்டுவிடுங்கள்!


♦அவள் கல்விக்காக வெகுதொலைவில் சென்று தனியே

தங்கியிருந்து படிக்கிறாளா?

பரவாயில்லை விட்டுவிடுங்கள்!


♦அவரவர் அவர் விரும்பியவாறு

வாழ்ந்து கொள்ளட்டும்..அவர்களுக்கு

வெளியில் சொல்லமுடியாத

உங்களால் கற்பனை பண்ணமுடியாத அளவு சோகங்களும்,துயரங்களும் இருக்கும்.


அவர்களைக்கண்டால்,கொஞ்சம்

புன்னகையுடன் உரையாடுங்கள்.

முடியாவிட்டால்,மௌனமாக

கடந்துவிடுங்கள்..


அது போதும்..


உங்களது வாழ்க்கை உங்களுக்கானது..

அவர்களது வாழ்க்கை

அவர்களுக்கானது..


சமுதாய சீர்கேடு அல்லாத எந்த செயலையும் நாம் புறம்பேசி

இழிவுபடுத்த வேண்டாமே..


புறம் பேசி,புறம்பேசி,புறம்பேசி

அலைவதைவிட,இத்தகைய

மன நிலைஅமையப் பெற்றால்

நாம் உயர்நதவர்கள் தானே..!?


Current Post

தீயோனிடமிருந்து என்னை விடுவியும்

தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை அறிந்துள்ளது. அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது. திருவெளிப்பாடு 12:12  பிசாச...