Friday, July 4, 2025

முதுமை ஓர் வரம்

 முதுமை ஓர் வரம்

(எழுத்தாளர்.மு.முகமது.யூசுப் .

                   உடன்குடி).


மனித வாழ்வில், பிறப்பு, இறப்பு என்பது தொடர் சங்கிலியால் நிகழும் ஒர் செயல்பாடு.

இளமையும், முதுமையும் கூட நாம் விரும்பியோ விரும்பாமலோ இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஒர் வரமுறை. அதுமட்டுல்ல, எல்லாமே கடந்து செல்லும் மேக கூட்டங்கள் தான்.


முதியோரை, அவர்களும், சமுதாயமும் சுமையாகக் கருதுவதைக் காணலாம்.


முதுமை ஒரு வரம்


அது குறிப்பிப்பிட்ட ஒரு சிலரைத் தவிர எல்லோருக்கும் வாய்க்காத ஒரு அருள்.

எல்லோரும் இறைவா எனக்கு நீண்ட ஆயுளை வழங்கி அருள், நல் வாழ்வைத் தந்தருள் என்று தான் வேண்டுகிறோம். 


அப்படி வேண்டி பெற்ற வயோதிகத்தை நாம் கடினம் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.


மனைவியைத் தவிர மற்ற அனைத்து உறவுகளும், நம் வாழ்வின் எல்லைக் கோட்டைத் தாண்டியே நிற்கும் தன்மை கொண்டது தான். பெற்ற பிள்ளைகள், உற்றார் / உறவினர், நண்பர்கள் கூட எட்டி நின்று பார்க்கும் வாழ்க்கை முறையே.

பின் ஏன் குடும்பத்திற்காக, பிறருக்காகவோ, சமுதாயத்திற்காகவோ வாழ வேண்டும் என்று நினைக்கிறோம். இவ்வாறு நினைக்கும்போது முதியோர் மகிழ்ச்சியை, ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது.


எந்த உயிரினமும் தானே சுமந்து செல்வதில்லை, யாருக்கும் யாரும் பொறுப்பாளர்கள் இல்லை . 

படைத்த இறைவனே பொறுப்பு. 

நமக்கு நிர்ணயத்தைப் போல், 

நம் பிள்ளைகளுக்கும் இறைவன் நிர்ணயிப்பார். 

நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்.


வாழ்வில் பெரும் பகுதியை பிள்ளைகளுக்காகவும், பிறருக்காகவும் வாழ்ந்து விட்டோம், கரையேற்றி விட்டோம். இனி முதியவர் வாழ்வு கலங்கரை விளக்குத்தான். முதியோர் காட்டும் பாதையில் பயணிப்பது தான் அவர்களுக்கு நல்லது.


முதியவர்களின் பொறுமையையும் அனுபவமும் வாழ்விற்கு மிக முக்கியம் வாய்ந்தது.  

பின் சந்ததியினருக்கு ஒர் சாட்சி .. சாதிக்க துடிப்பவர்களுக்கு அவர்கள் விட்டுச் சென்ற ராஜபாட்டை .


முதியவர்கள் (3 ) மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம்.


1. உடல் நலம்

2. மன மகிழ்ச்சி

3. பொருளாதார பின்புலம் என்பவை. 


1.சிறிய உடற்பயிற்சிகள்

        உற்சாகத்தை தரும்.


2. மன மகிழ்சியின் முக்கிய காரணம்..,,,,,,,,, எதிர்பார்ப்பு இல்லாமல்

வாழ்வது. எதிர்பார்ப்பு

இல்லை என்றால் ஏமாற்றம் இல்லை.


3. முதியவர்கள் தங்கள் கடேசி மூச்சு நிற்கும் வரை யாரையும் சார்ந்து நிற்க வேண்டாம். பொருளாதார பின்புலத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க ேவண்டாம்.

நம்மைச் சார்ந்தவர்களின் சூழ்நிலை மாறலாம்.


இப்படி செய்தால் பிள்ளைகளுக்கு பாரமாய் இருக்க மாட்டார்கள். அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருப்பீர்கள்.

அன்பு தாரளமாய் தொடர்ந்து கிடைத்துக்

கொண்டே இருக்கும்.


மனைவியை முந்திச் செல்ல பிரார்த்தனை செய்யுங்கள். ஆயிரம் குணாதிசயங்கள்

மாறுபட்டு இருந்தாலும் அவரின் அரவணைப்பை யாராலும் நிரப்ப முடியாது. அந்த வெற்றிடம் மனைவிக்கே சொந்தம்.


இருவரும் தனித்தனியே பிள்ளைகளோடு வாழ்வதை முற்றிலும் தவிர்த்திருங்கள்.. _ முதுமையில் தான் துணையின் முக்கியத்துவம் உணரப்படும்.


ழுடிந்தது வாழ்வு என்றாலும், வானமே

எல்லை என்று சிறகுகளை விரியுங்கள்.

ஆங்காங்கே சில இறகுகள் இல்லாமல் இருக்கலாம்.

இருந்தாலும் உயர உயர பறக்க முடியும். இன்பம் துன்பம், சோகம், யாவைற்றையும் ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். உலகமே உங்கள் கைவசமாகும்.


படித்ததில் பிடித்துது.

Current Post

தீயோனிடமிருந்து என்னை விடுவியும்

தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை அறிந்துள்ளது. அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது. திருவெளிப்பாடு 12:12  பிசாச...