Sunday, May 2, 2021

11 Useful ideas to young writer

 புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள் - சுஜாதா


1. தப்பான பத்திரிக்கைக்கு அனுப்பாதீர்கள். 'துருவனும் குகனும்' என்று ஞான பூமிக்கு அனுப்ப வேண்டியதை, 'போலீஸ் செய்தி'க்கு அனுப்பாதீர்கள்.


2. தெரியாத இடம், தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். 'பம்பாய் ரங்காச்சாரி வீதி, இரவு ஏழு மணி இருள்' என்றால், பம்பாயில் ரங்காச்சாரி வீதி கிடையாது, இரவு ஏழு மணிக்கு இருட்டாது என்று ஒரு கோஷ்டி ஆசிரியருக்குக் கடிதம் எழுதக் காத்திருக்கும்.


3. அந்தரத்தில் எழுதாதீர்கள். அதாவது, உங்கள் கதை கருந்தட்டான்குடியிலோ, மதராஸ் 78 லோ எங்காவது ஓர் இடத்தில் நிகழட்டும். அதற்குக் கால்கள் வேண்டும். ஜியாக்ரபி வேண்டும். மிகச் சுலபம் உங்கள் சொந்த ஊர், சொந்த வீதி...


4. சொந்தக் கதையை எழுதாதீர்கள். மற்றவர் கதையை எழுத முயற்சி செய்யுங்கள். இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்து எழுதிப் பாருங்கள். கேஸ் போட்டால் தப்பிக்கலாம்.


5. பெரிய பெரிய வாக்கியங்கள், வார்த்தைகள் வேண்டாம். 'உமிழ் நீரைத் தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்.' என்று சொல்வதை விட 'துப்பினான்' என்பது மேல்.


6. ஒரு வார்த்தையை ஒரு கதையில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். அவன், இவன், கை, கால் போன்ற அன்றாட வார்த்தைகள் தவிர; உதாரணமாக, பரிணாமம். 'அவன் மனத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்த பரிணமிப்பில்... இத்தியாத்திக்குப் பதிலாக, 'அவன் மனத்தில் எண்ணங்கள் மாறுதலடைந்து அந்தப் பரிணமிப்பில் பெட்டர். அதைவிட பரிணாமம் போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பது மேல்.


7. தெரிந்தவர்களின், உறவுக்காரர்களின் பெயர்களைக் கதைமாந்தர்களுக்குச் சூட்டாதீர்கள். டெலிபோன் டைரக்டரியையோ செய்தித்தாளையோ திறந்தால் எத்தனையோ பெயர்கள். என் நண்பர் ஓர் எழுத்தாளர்; கும்பகோணத்தில் ஒரு வக்கீல் பெண்ணைப் பெயர், அட்ரஸ் சகிதம் கதையில் உண்மையாகக் குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின் அப்பா பத்திரிக்கை மேல் கேஸ் போட்டு விட்டார். ரியலிஸம் என்பது பேர் வைப்பது அல்ல.


8. நிறைய எழுதாதீர்கள். முதல் ட்ராப்ட்டைப் பாதியாகக் குறைத்து, அதே கதையைச் சொல்ல முடியுமா பாருங்கள். அவன் அங்கே போனான் என்பதைவிட 'போனான்' என்பதில் அவனும் அங்கேயும் இருக்கின்றது. அதற்காக 'னான்' என்று அற்பமாகச் சுருக்க வேண்டாம். அதெல்லாம் என் போன்ற கோணங்கி எழுத்தாளர்களுக்கு.


9. இரண்டு பக்கமும் நெருக்கமாக எழுதாதீர்கள். நிறைய இடம் விட்டுப் பளிச்சென்று நல்ல பேப்பரில் எழுதுங்கள். முதல் பக்கத்தை மட்டும் மூன்று நான்கு பிரதிகள் வைத்துக் கொள்ளுங்கள். திரும்பி வந்தால் உடனே மற்றப் பத்திரிக்கைக்கு அனுப்ப செளகரியம்.


10. பத்திரிக்கை ஆபீசுக்கு நேராகப் போய்க் கதை கொடுக்காதீர்கள். அங்கே கிடக்கும் கதைக் குப்பைகளைப் பார்த்தால் ரொம்பச் சோர்வாக இருக்கும்.


11. கடைசியாக, எழுதுவதை நிறுத்தாதீர்கள். சளைக்காதீர்கள். என்றாவது. எல்லாரிடமும்- ஆம், எல்லாரிடமும் ஒரு கதை- நல்ல கதை இருக்கிறது. தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறையப் பார்க்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். குட்லக்..... 

  - சுஜாதா


 

Saturday, May 1, 2021

Oru kutti story by Sundar Pichai

 கரப்பான்பூச்சிக் கோட்பாடு..

இது கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை அவர்களால் பகிரப்பட்டக் கதை…

ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்தப் பெண் பயத்தால் கூச்சலிட ஆரம்பித்தார். மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த கரப்பானை அவர் மீதிருந்து விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அது வரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்த பதற்றம் பற்றிக் கொண்டது. மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த கரப்பானை தன் மீதிருந்து விளக்கி விட்டார்.

ஆனால் அந்த கரப்பான் இப்பொழுது வேறொரு பெண் மீது சென்று அமர்ந்து கொண்டது. இப்பொழுது இந்தப் பெண் அதே போல் கூச்சலிட ஆரம்பித்தார். அமைதியாக இருந்த மொத்த உணவகமும் இப்பொழுது அமைதியிழந்து

காணப்பட்டது.

இதை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர் சூழ்நிலையை சரி செய்ய விரைந்தார்.


இந்த முறை கரப்பான் பறந்து சென்று அந்த பணியாளர் மீது அமர்ந்து கொண்டது. பணியாளர் தன்னை நிதானித்துக் கொண்டு தன் சட்டையின் மீது அமர்ந்திருக்கும் கரப்பானின் நடத்தையை கவனித்தார். அது தன் நகர்தலை நிறுத்தியதும், தன் விரல்களால் அதை பிடித்து உணவகத்திற்கு வெளியே வீசியெறிந்தார்.

நான் என் காபியைப் பருகிக் கொண்டே இதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனது இந்த நிகழ்ச்சியிலிருந்து சில கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தது

அவர்களின் அந்த நடத்தைக்கு கரப்பான் பூச்சி தான் காரணமா? அப்படியெனில் அந்தப் பணியாளர் ஏன் அதன் மூலம் அமைதி இழக்கவில்லை? அவர் மட்டும் எந்த ஆரவாரமுமின்றி அதை நேர்த்தியாகக் கையாண்டார்.

எனவே அந்த பெண்களின் நடத்தைக்கு கரப்பான் பூச்சி காரணம் அல்ல. அந்த கரப்பான் ஏற்படுத்தும் தொந்தரவைக் கையாள முடியாத அவர்களின் இயலாமை தான் அவர்களின் அந்த நடத்தைக்குக் காரணம்.

இதன் மூலம் நான் உணர்ந்தது என்னவெனில், என் தந்தை அல்லது மனைவி அல்லது முதலாளியின் கடுமையான பேச்சு என்னை அமைதியிழக்கச் செய்யவில்லை, அந்த வாக்குவாதத்தை கையாள முடியாத என் இயலாமை தான் என்னைத் தொந்தரவு செய்கிறது. என் அமைதியை குலைக்கிறது.

சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசல்கள் என்னை தொந்தரவு செய்யவில்லை, ஆனால் அந்த நெரிசல்களைக் கையாள முடியாத என் இயலாமை தான் என்னைத் தொந்தரவு செய்கிறது.

என் வாழ்வில் குழப்பத்தை சிக்கல்கள் உருவாக்குவதில்லை, அதற்கு நான் செய்யும் எதிர்வினை தான் உருவாக்குகிறது.

இதன் மூலம் நான் கற்றது

வாழ்வில் நான் எதிர்வினை ஆற்றக் கூடாது, பதிலளிக்க வேண்டும் (I should not react in life, I should always respond).

நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மிடம் உள்ள அனைத்தையும் பறிக்கக்கூடும் ஒன்றைத் தவிர, அது தான் ஒரு சூழ்நிலைக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்.

வாழ்வில் நமக்கு நடக்கும் விடயங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது ஆனால் அதற்கு நாம் எப்படி பதிலளிக்கிறோம் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

Friday, April 30, 2021

A response from an atheist

 * நாத்திகர்களின் தெளிவான பார்வை!


கடவுளை மறுப்பவர்கள் வாழ்க்கை சிரமமானது. நாங்கள் தவறுதலாகக்கூட தவறு செய்ய முடியாது. ஆத்திகர்கள் ஏதாவது பூச்சியை வணங்கினாலும் அதனை தன் நம்பிக்கை என்று சொல்லிவிட்டால் போதும். ஆனால் அதனை மறுப்பவன் ஆதாரபூர்வமாகவும் அறிவியல்பூர்வமாகவும் அதை செய்தாகவேண்டும். ஆக நாத்திகன் நேர்மையாளனாகவும் நியாயவானாக இருந்தாக வேண்டியது கட்டாயம்.


நாத்திகர்களின் வாழ்க்கை சுவாரஸ்யமானது. ஏனெனில் எங்களை சந்திக்கும் அனேக பக்திமான்கள் எங்களை தோற்றுப்போனவர்கள் என்று நிரூபிக்க போராடுகிறார்கள். அறிவுடமையை அறியாமை வெற்றிகொள்ள போராடுவது ஒரு சுவாரசியமென்றால், சமயங்களில் அறியாமை வென்றுவிட்டதாக அவர்கள் சொல்வது இன்னுமொரு சுவாரஸ்யம். ஒரு முன்னாள் நாத்திகர் பட்டு வேட்டி சட்டை கட்டினால் அது நாத்திகத்தின் வீழ்ச்சியாகவே பார்க்கப்படும். ஆனால் எல்லா மடத்திலிருந்தும் கசமுசா சமாச்சாரங்கள் அம்பலமானாலும் மதம் புனிதமானதாகவே நீடிக்கும். இத்தகைய சவால்களே நாத்திகர்கள் வாழ்வை சுவாரசியமாக்குகின்றன. அதனால்தான் எம்.ஆர்.ராதா வசனத்தை நூறுமுறை கேட்டாலும் சலிக்காத வெகுஜனத்துக்கு ஒருமுறை சாமி படம் பார்ப்பதே எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.


நாத்திகர்கள் வாழ்வு பொறுப்புகள் நிறைந்தது. எந்த முட்டாள்தனத்தை ஒழிக்க விரும்புகிறார்களோ அந்த முட்டாள்தனத்தை பின்பற்றுபவர்களது உரிமைகளுக்கும் அவர்கள்தான் குரல்கொடுத்தாக வேண்டும். அதனால்தான் பெரியார் கடவுளை மற என்று சொன்னதோடு நில்லாமல் மனிதனை நினை என்றும் சொன்னார். இதன் இன்னொரு விளக்கம் கடவுளை மறந்தால்தான் மனிதனைப்பற்றி நினைக்கமுடியும். தஞ்சை பெரியகோயிலின் இடது பக்கம் பன்றியைப்போல உருவமுடைய ஒரு சிலையைக்கொண்ட சன்னதி உண்டு. அதை தோப்புப்கரணம் போட்டபடியே வணங்கிய ஒருவர் “யானை மாதிரியும் இருக்கு பன்னி மாதிரியும் இருக்கே.. என்ன சாமி இது??” என்ற சந்தேகத்தை வாய்விட்டு சொல்லிக்கொண்டிருந்தார். இந்த வாய்ப்பு கடவுளை நம்பாவதவனுக்கு கிடையாது. அவர்கள் பெரியாரையும் தெரிந்துகொண்டாக வேண்டும் மத புத்தகங்களையும் தெரிந்துகொண்டாக வேண்டும்.


நாத்திகம் சிக்கனமானது மற்றும் எளிமையானது. விபூதி குங்குமத்தில் தொடங்கி மாட்டுச்சாணி வரை எதுவும் வேண்டியதில்லை. வீடு கட்டினால் ஒரு கழிப்பறைக்கான இடம் கூடுதலாக கிடைக்கும் (பூஜை அறைக்கான குறைந்தபட்ச இடம் அத்தியாவசியமான ஒரு பயன்பாட்டு இடத்துடன் ஒப்பிடப்பட்டிருக்கிறது.. அவ்வளவுதான்). ஒரேயொரு நபர் திருப்பூரிலிருந்து திருப்பதி போய்வரும் செலவைவிட என் ஒருமாத வீட்டு வாடகை குறைவு. குலதெய்வத்துக்கான பூஜை தொடங்கி பேருந்தில் நீட்டப்படும் சாமி உண்டியல்வரையான எல்லா நன்கொடை வேண்டுகோள்களை நிர்தாட்சண்யமாக நிராகரிக்க முடியும். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று நீங்கள் அறியப்பட்டுவிட்டால் சோதிடம், ஜாதகம், பரிகாரம் போன்ற தீயசக்திகள் பற்றி உங்களிடம் பிரச்சாரம் செய்யப்படமாட்டாது. மலச்சிக்கலுக்குக்கூட ஜாதகத்தை ஒருமுறை பார்த்துவிடலாம் என்று சொல்வது பேஷனாகிவிட்ட காலத்தில் இது எத்தனை பெரிய சவுரியம்?


“எல்லாம் சரி, இவ்வளவு பெருமை பேசினாலும் உங்க ஏரியா ஏன் வீக்காயிகிட்டே இருக்கு?” எனும் நக்கல் எனக்கு கேட்காமலில்லை. இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை, பெரியார் காலத்தைவிட இப்போது எங்கள் அணி பலவீனமான நிலையில்தான் இருக்கிறது. எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் மதம் பிரச்சாரம் செய்யப்படுமளவுக்கு கடவுள் மறுப்பு பிரச்சாரம் செய்யப்படுவதில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் பிரதோஷம் என்றால் என்னவென்றே தெரியாத தஞ்சாவூரில் இன்று அந்த நாளில் பெரியகோயில் பக்கமே போக முடியவில்லை. டிவியை திறந்தால் லேகிய வியாபாரிகளைவிட தாயத்து வியாபாரிகளே அதிகம் ஆக்கிரமித்திருக்கிறார்கள். சம்சாரத்தோடு சண்டையிட்டவர்களும் வாழ்வு சலித்த வெளிநாட்டவர்களும் மட்டும் வந்துபோகும் இடமான திருவண்ணாமலையில் ரஜினிகாந்தின் அருணாசலம் படத்துக்குப் பிறகு கிரிவலத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது


ஆனால் இதுகுறித்தெல்லாம் நாம் கவலைகொள்ளத் தேவையில்லை. காரணம் கடவுள் மறுப்பு என்பது கொள்கையல்ல. அது ஒரு உண்மை அவ்வளவே. பூமி சூரியனை சுற்றுகிறது என்பதைப் போல, உலகம் உருண்டை என்பதைப் போல இதுவும் ஒரு கண்டுபிடிப்பு. என்ன, மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றை பொய்யென சொல்லும் கண்டுபிடிப்பு. ஐன்ஸ்டீன் ரிலேட்டிவிட்டி தியரிகூட பலருக்கு புரிவதில்லை, அதற்காக புரிந்தவர்கள் வருந்த முடியுமா? இல்லை பெரும்பான்மையோடு ஐக்கியமாவதற்காக புரிந்துகொண்டதை மறக்க முடியுமா? பல மேம்பட்ட மனிதப் பண்புகளுக்கு இது அடிப்படையானது என்பதால் நாத்திகம் எல்லோருக்கும் பரிந்துரைக்கப்படவேண்டியது என்பது மட்டும்தான் நாம் நினைவில் கொள்ளவேண்டிய செய்தி.


மேலும் மதம் பணக்காரனையே மதிக்கும் என்பதையும் மடங்கள் கிரிமினல்களின் கூடாரம் என்பதையும் நாத்திகர்களை மெனக்கெட வைக்காமல் அவர்களாகவே அம்பலமாக்கிக்கொள்கிறார்கள். மத பாரபட்சமில்லாமல் எல்லா கடவுளரின் ஏஜெண்ட்களும் இதில் அடக்கம். கேள்வி கேட்காத ஞானத்தைக் கொடு என்கிறது பைபிள். இது எல்லா மதங்களின் பொதுக்கருத்தாக இருப்பதால்தான் டி.ஜி.எஸ்.தினகரனும் மேல்மருவத்தூர் பங்காருவும் ஆயிரக்கணக்கான கோடிகளில் புரள்கிறார்கள். பர்தா பெண்ணுக்கு பாதுகாப்பு எனும் அராஜகமான வாதத்தை கைவிட இன்றுவரை மறுக்கிறது இசுலாம். நாய்கள்கூட உலவ முடியும் கோயிலில் மூன்றிலொரு பங்கு மக்களை அனுமதிக்க மறுக்கிறது இந்து மதம். வாழ்வில் உருப்படுவதற்கான மார்க்கமானது யாதொரு மார்கத்தையும் பின்பற்றாதிருப்பதுதான் என்பதை மார்கங்களே இப்போது ஓரளவுக்கு சொல்லித்தருகின்றன. ஆகவே நமக்கு பாதிவேலை மிச்சம்.


பெண்ணடிமைத்தனம், சாதிக்கொடுமை, மூடநம்பிக்கை என சமூகத்தின் சகல நோய்களுக்கும் வேராக கடவுள் நம்பிக்கையே இருந்திருக்கிறது என்ற காரணத்தால்தான் பெரியார் தன் கோடரியை அதன்மீது வீசினார். அதனால்தான் அவரது இயக்கம் மிகவேகமாகவும் மிக வீரியமாகவும் பரவிற்று. திராவிட இயக்கம் நாற்றம் பிடிக்கத்தொடங்கியது ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் சமரசத்துக்குப் பிறகுதான். நாமும் வேரை விட்டுவிட்டு சுலபமானவற்றை வெட்டுவதற்கு முயற்சி செய்கிறோம். சூத்திரன் என்றால் வேசிமகன் என்று பொருள், அந்த அடையாளத்தை துடைத்தெறிவது பெரியாரின் நோக்கமாக இருந்தது. இப்போது அந்த நோக்கத்தின் நிலை எப்படி இருக்கிறது? வேசிமகன் எனும் அடையாளம் பற்றிய கவலை போய் இப்போது பெரிய வேசிமகன் யார் எனும் போட்டியில் திருப்தியடைந்து நிற்கிறது சமூகம். ஆகவே நாத்திகம் தோற்றதாக என்றைக்குமே கருதமுடியாது, உண்மைக்கு போட்டியே கிடையாது எனும்போது தோல்வி எங்கேயிருந்து வரமுடியும்?. ஆனால் நாத்திகர்கள் கடமைதவறிவிட்டார்கள் (அல்லது தவறிவிட்டோம்) என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது.


பெருமையையும் ஆராய்ச்சியும் போதும். இறைமறுப்பாளர்கள் செய்வதற்கான குறைந்தபட்ச கடமை ஒன்றுண்டு அதுபற்றி பேசிவிடலாம். சென்ற தலைமுறை நாத்திகர்கள் பலர் தங்கள் வீட்டில் புதிய நாத்திகர்களை உருவாக்கத்தவறிவிட்டார்கள். குறைந்தபட்சம் நமது பிள்ளைகளை மட்டுமாவது கடவுளை மறுப்பவர்களாக தயாரிப்பது அவசியம். இதில் சுதந்திரம் பேசுவது பேராபத்தில் முடியும். சைவமா அசைவமா என்பதை வேண்டுமானால் அவர்களே தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் அவர்களை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது நம் கடமை அதனை குழந்தையின் விருப்பத்துக்கு விட்டுவிடுவேம் என்று நியாயம் பேசக்கூடாது . அதுபோலவே இல்லாதவற்றை நம்புவோராக குழந்தைகள் வளர்வதும் ஒருவகையில் ஆரோக்யக்கேடானதுதான்.


#பகிருங்கள்

Wednesday, April 28, 2021

Corona and Siddha

 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

கொரனோவால் எந்த உயிரிழப்பும் இல்லாமல் சிறப்பாக கட்டுப்படுத்தி, குணப்படுத்தியதாக  சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டிய சித்த மருத்துவர் திரு.வீரபாபு அவர்கள் கொரோனாவைக் குணப்படுத்த கபசுரக் குடிநீருக்கு துணை மருந்தாக அவர் கண்டுபிடித்த மூலிகை தேநீரையும் சேர்த்துக் கொடுத்து தமிழக அரசின் ஒத்துழைப்புடன் ஆங்கில மருந்து இல்லாமல், முழுவதும் சித்தா மருந்துகளைக் கொண்டே #கொரோனாவை ஒரே வாரத்தில் குணப்படுத்தி வருகிறார்.


அவ்வாறு தாம் கொடுக்கும் மூலிகை தேநீரில் சேரும் பொருட்களை  மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து உள்ளார்.

அதன் விபரங்கள் 


#மூலிகை #தேநீர்:


சுக்கு - 100 கிராம்,

அதிமதுரம் - 100 கிராம்,

சித்தரத்தை - 30 கிராம்

கடுக்காய்த்தோல்- 30 கிராம்

மஞ்சள் - 10 கிராம்,

திப்பிலி - 5 கிராம்,

ஓமம் - 5 கிராம்

கிராம்பு- 5 கிராம்,

மிளகு - 5 கிராம்


மேற்குறிய அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.


இவற்றை இடித்துப் பொடிசெய்து ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தவும். 

ஒரு பாத்திரத்தில் 400 மி.லி நீர் விட்டு அதில் இந்த பொடியை 10 கிராம் அளவு போட்டு நன்கு கொதிக்க விடவும். இக்கசாய நீர் 100 மி.லி அளவாக வற்றியதும் ஒரு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை அல்லது 10 மி.லி அளவு தேன் சேர்த்து கிளறி, இறக்கி ஆற வைக்கவும்.

இளம் சூடாக ஆறிய பின்பு இதை வடிகட்டி காலையில் உணவிற்கு பின்பு குடிக்கவும். இரவிலும் இதே போல் செய்து உணவிற்குப் பின்பு குடிக்கவும்.


பொதுவாக கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களுக்கு கபசுரக் குடிநீரை உணவிற்கு முன்பும், இந்த #மூலிகை #தேநீரை உணவிற்குப் பின்பும் கொடுக்கப் படுகிறது.


இந்த மூலிகை தேநீர் அடுப்பில் கொதிக்கும் போது 5 கற்பூரவள்ளி இலைகள், 10 புதினா இலைகளும் சேர்க்கலாம்.


இந்த மூலிகைத் தேநீரை பெரியவருக்கு ஒருவேளைக்கு 100 மி.லி அளவு கொடுக்க வேண்டும். 

சிறுவர்களுக்கு இதில் பாதி அளவு 50 மி.லி போதும்.

இதை கொரோனா அறிகுறிகள் குணமாகும் வரை கொடுக்க வேண்டும்.


கொரோனா இல்லாதவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இதை தினமும் ஒருவேளை வீதம் காலையில் குடித்து வரலாம்.!

பத்தியமில்லை.


உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசை  தமிழரின் மூலிகை மருந்து ஓட ஓட விரட்டுகிறது  என்பது வியப்பான நற்செய்தி.


 

வாழ்க சித்த மருத்துவம்.

வளர்க தமிழரின் புகழ்.

🍃🍃🍃🍃🍃🍃🍃

Covid-19 second wave

 *கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.*


1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?* 


இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை *(Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ)* க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை. 


2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?* 


இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந்த வைரஸ்க்கு இருக்கிறது. 


3. *கரோனா வைரஸ் வந்து போனதே தெரியாமல் பலர் இருக்கலாம் என்று கூறுகிறார்களே உண்மையா ?* 


ஓரளவு உண்மை. ஆனால் ஏதாவது ஒரு அறிகுறியையாவது அவர்கள் அனுபவித்து இருப்பார்கள். அது காய்ச்சலாகவோ, லேசான சளியாகவோ, உடல்வலியாகவோ இருந்து இருக்கலாம். எந்த அறிகுறியும் தராமல் கரோனா வைரஸ் உங்கள் உடலை விட்டு நீங்கி இருக்காது. வெளிப்புற அறிகுறி உங்களுக்கு தெரியாவிட்டாலும் *CT Lungs* எடுத்து பார்த்தால் அதன் தாக்கம் இல்லாமல் இருக்காது. எனவே ஒரு அறிகுறியையாவது நீங்கள் அனுபவிப்பீர்கள்.


4. *எனக்கு இருமல் காய்ச்சல் இருக்கிறது. ஆனால் சோதனை செய்ய பயமாக இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் ?* 


உங்களுக்கு இருமல் காய்ச்சல் ஒரு நாள் இருந்தால் கூட யோசிக்காமல் உடனே அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் *RT PCR* பரிசோதனைக்கு உங்கள் மாதிரியை கட்டாயம் கொடுங்கள். உயிர் காக்க முன்னரே நாம் நடவடிக்கைகள் எடுத்து கொள்ளலாம். பயந்து சோதனை செய்யாமல் இருந்தால் வைரஸ் பல்கி பெருகி உங்கள் உயிருக்கே உலை வைக்கலாம். அதே நேரத்தில் நீங்கள் முகக் கவசம் அணியாமல் வெளியே செல்லும்போது உங்களால் பலருக்கு பரவ வாய்ப்பும் இருக்கிறது. 


5. *கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரிடம் பேசினாலே அல்லது அவர் சென்ற அறைக்கு சென்றாலே அவர் தொட்ட பொருளை தொட்டாலே நாம் தொற்றுக்கு உள்ளாகி விடுவோமா ?* 


அமெரிக்காவின் CDC வெளியிட்ட தரவுகளின் படியும் உலக சுகாதார நிறுவனத்தின் கடந்த ஒரு வருட ஆய்வறிக்கையின் படி *99 சதவீதம் மூக்கு வழியாக தான்* இந்த கரோனா வைரஸ் பரவுகிறது. அதே நேரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட நபர் தொட்ட பொருள் மூலமாக இன்னொருவருக்கு பரவுவது என்பது 0.001 வாய்ப்பு தான் என்று உலக சுகாதார நிறுவனமே கூறி இருக்கிறது. அப்படி பரவி இருந்தால் இதற்குள் உலக மக்கள் தொகை பாதி அழிந்து இருக்கும். கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்முவதன் மூலமும் இருமுவதின் மூலமாக தான் அதிகம் பரவுகிறது. 


6. *பிறகு ஏன் கோலப்பொடி போல குளோரின் பொடியையும் மருந்தையும் கரோனா பாதிக்கப்பட்ட நபரின் வீட்டிலும் அலுவலகத்திலும் தெளித்து சுத்தம் செய்கிறார்கள்? அவ்வாறு செய்வதால் கரோனா அழிந்து விடுமா ?* 


கண்டிப்பாக இல்லை. கரோனா பரவிய நேரத்தில் அதாவது 2020 ஆம் ஆண்டு இந்த வைரஸ் பற்றிய தெளிவு உலக சுகாதார நிறுவனத்திடம் இல்லை.கடந்த ஆண்டே உலக சுகாதார நிறுவனம் கிருமிநாசினி வீட்டிலும் அலுவலகத்திலும் தெளிப்பதால் கரோனா வைரஸ் ஒழியாது என்று தெளிவாக  கூறிவிட்டது. இவ்வாறு தெளிப்பதால் பாக்டீரியா மற்றும் பிற கிருமிகள் சாகுமே தவிர கரோனா வைரஸ் அழியாது. 


7. *ஏன் சிலர் லேசான அறிகுறிகளாலும் சிலர் தீவிர அறிகுறிகளாலும் பாதிக்கப்படுகின்றனர் ?*


இதற்கு பல காரணங்கள் உள்ளன. வயது, ஏற்கனவே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டது என பல காரணங்கள் உள்ளன. ஆனாலும் முக்கிய காரணம் நீங்கள் எவ்வளவு அளவு வைரசால் (Viral Dose) பாதிக்கப் படுகிறீர்கள் என்பது முக்கிய பங்காற்றுகிறது. அதிக அளவு வைரஸ் க்கு நீங்கள் Expose ஆனால் தீவிர தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. குறைந்த அளவு Viral Dose க்கு நீங்கள் Expose ஆனால் குறைவான பாதிப்புக்கு உள்ளாகலாம். அதே நேரத்தில் உடலின் உச்ச பட்ச நோய் எதிர்ப்பு போராட்டமான *Cytokine Storm* அதாவது நம் உடல் சொந்த செல்லையே தாக்கி கொல்லும் நிலைக்கு உங்கள் உடல் சென்றாலும் உயிரிழப்பு ஏற்படும். 


8. *கரோனா Positive என்று அறிய வந்தால் என்ன செய்ய வேண்டும்* ? 


முதலில் பதறக் கூடாது. யாரிடமும் மறைக்க கூடாது. வீட்டில் உள்ளவரிடம் தெரியபடுத்தி 14 நாட்களுக்கு தனி அறையில் இருக்க வேண்டும். வெளியே வரவே கூடாது. முதல் நாளிலேயே உங்கள் நுரையீரலை CT Scan எடுத்து பார்த்து விடுவது நல்லது. தொடர்ந்து 5 நாட்கள் மேல் காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். பெரும்பாலனோருக்கு காய்ச்சல் முதல் மூன்று நாட்களிலேயே குணமாகி மற்ற அறிகுறிகளான இருமல் உடல் வலி தொடர்கிறது.ஆனால் தொடர் காய்ச்சல் என்பது நாம் கவலை கொள்ள வேண்டிய விஷயமாக கருத வேண்டும். 


9. *என்னென்ன மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்* ? 


Paracetamol காய்ச்சலை குறைப்பதற்கும் இருமல் என்பது பாக்டிரியாவல் ஏற்படுவது எனவே அதை குறைக்க Antibiotics ஆன Cefixime or Azithromycin or Amoxcyillin மாத்திரைகளை தவறமால் உட்கொள்ள வேண்டும். தொடர்ந்து காலை இரவு என உட்கொள்ளும் பட்சத்தில் ஐந்து நாட்களில் உங்களுக்கு உடல் முன்னேற்றம் தென்படும். 


10. *எப்போது நாம் அச்சம் கொள்ள வேண்டும்* ? 


கரோனா பாதித்து 5,6,7 ஆம் நாட்கள் மிக முக்கியமானது. அப்போது உங்களுக்கு நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. அப்படி அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்று விட வேண்டும் 


11. *என்ன சாப்பாடு சாப்பிட வேண்டும்* ? 


வழக்கமான சாப்பாடு சாப்பிட்டாலே போதுமானது. அதே நேரத்தில் அதிகமான நீர் குடிக்க வேண்டும். பழச்சாறு தவறாமல் பருக வேண்டும். புரதமே உடலின் கட்டுமான வீரர்கள். எனவே சைவம் என்றால் பருப்பு வகைகளையும் அசைவம் என்றால் சிக்கன் மீன் போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உங்களுக்கு சுவை மணம் போன்ற உணர்வுகளை இழந்து இருப்பீர்கள். சாப்பிட முடியாது, ஆனால் சாப்பிட்டே ஆக வேண்டும் தவறாமல். ஒன்றே ஒன்று தான். உங்கள் உடல் ஆற்றலை இழக்க கூடாது. இழக்கும் பட்சத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் அதிக தொற்றுக்கு அது வழி வகுக்கும். 


12. *Walking,Yoga போன்றவற்றை செய்யலாமா* ? 


தாராளமாக செய்யலாம். நீங்கள் அடைந்து இருக்கும் அறைக்குள் மட்டுமே. ஆனால் இதையெல்லாம் செய்ய உங்கள் மனம் ஒத்துழைக்காது என்பதே உண்மை. ஏனெனில் அதிக உளவியல் பாதிப்புக்கு உள்ளாகும் போது உங்களால் சகஜமாக இருக்க முடியாது. 


13. *ஏன் கரோனா வந்ததையே வெளியில் சொல்ல பலர் பயப்படுகின்றனர்* ? 


நோய் பற்றிய புரிதல் இல்லாததும் அறிவியல் விழிப்புணர்வும் இல்லாததுமே காரணம். இது ஒரு தொற்று. அதே நேரத்தில் அசிங்கப்பட கூடிய நோய் ஒன்றும் அல்ல. இது வல்லரசு நாடுகளின் அதிபர்கள் முதல் பாமர மக்கள் வரை யாரை வேண்டுமானாலும் பாதிக்க கூடிய தொற்று. எனவே பாதிப்பு வந்த உடன் நாம் சொல்லும் போது மட்டுமே மற்றவர்கள் நம்மிடம் வராமல் இருக்கவும் நம்மால் பிறருக்கு பரவாமல் இருக்கவும் நாம் செய்யும் சமூக கடமை. அதே நேரத்தில் உங்கள் அனுபவங்களை பகிர்வதன் மூலம் பலர் எச்சரிக்கையுடன் இருப்பர். வைரசின் சங்கிலியை அறுத்தாலே கரோனா பெருந்தொற்று விரைவில் முடிவுக்கு வந்துவிடும் 


14. *கரோனாவால் பாதிக்கபட்டால் நம் உடல் மீண்டும் தொற்றுக்கு உள்ளாக வாய்ப்புண்டா* ? 


இயற்கையாகவே நம் உடல் எல்லா விதமான வைரஸ் பாக்டீரியாவை எதிர்கொள்ளும் திறன் உடையது தான். ஒரு புதுவிதமான வைரஸ் உள்ளே வரும்போது தான் நம் உடல் திணறும். அந்த திணறலே காய்ச்சல் இருமல் உடல்வலியாக நமக்கு நம் உடல் நம்மிடம் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் வைரஸை முழுமையாக நம் உடல் போரிட்டு வென்ற உடன் நம் உடலில் Antibodiesஐ உற்பத்தி செய்துவிடும். இது அடுத்த நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும். 

ஆனால் கரோனவை பொறுத்தவரை இயற்கையாகவே நம் உடலில் Antibodies உற்பத்தி ஆனாலும் சுமார் 6-9 மாதங்களே அந்த பாதுகாப்பு இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. உங்கள் உடல் எந்த அளவிற்கு Antibodies உற்பத்தி செய்துள்ளது என்பதை கரோனா பாதித்த 21 நாட்களுக்கு பிறகு Covid Antibody Test எடுத்து பார்த்தால் நமக்கு தெரியவரும். அந்த சோதனையில் Antibodies கம்மியாக இருந்தால் நீங்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி அந்த Antibodies அளவை கூட்டிக் கொள்ளலாம். இது மீண்டும் தொற்றுக்கு உள்ளாவதில் இருந்து கூடுதல் பாதுகாப்பு தரும். 


15. *தொற்றில் இருந்து தப்பிக்க மிகச்சிறந்த வழி என்ன* ? 


Mask மட்டுமே. Mask ன் முன் பகுதியை நாம் தொடக்கூடாது. தொட்டுவிட்டு கழட்டி நம் முகத்தை துடைத்தால் தொற்றுக்கு உள்ளாக நேரிடும். அதே போல் கையுறை பயன்படுத்துவதால் எந்த பயனும் இல்லை. ஏற்கனவே சொன்னது போல மூக்கு தான் கரோனாவின் நுழைவு வாயில். 


16. *கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டுமா* ? 


கட்டாயம் எடுத்து கொள்வது நல்லது. இது தீவிர தொற்று நிலைக்கு கொண்டு செல்லாமல் உங்களை பாதுகாக்க உதவும். அதே நேரத்தில் தடுப்பூசி எடுத்து கொண்டாலே கரோனா தாக்காது என்று எண்ண கூடாது.




 *லாக் டவுன் 2 வது கட்டத்தை நாங்கள் எடுக்க  இயலாது* ... *


*COVID-19 முக்கியமான தகவல்*


 சுகாதார சீர்கேடு காரணமாக, சுகாதார நிபுணர்களான நாங்கள் இந்த செய்தியை மக்களுக்காக தயார் செய்துள்ளோம் என்று வலைதளத்தில் வந்த பதிவு இது...!


தேர்தல் நேரத்தில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருந்த ஆட்சியாளர்கள்.. இன்று வரிந்து கட்டிக்கொண்டு அபராத வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்....;




தடுப்பு முறைகள் ஒன்றும் அதிகம் இல்லை!


  15-20  நிமிடங்கள் வெயிலில் இருங்கள்

  

 குறைந்தது 7-8 மணி நேரம் ஓய்வெடுத்துத் தூங்குங்கள்.

  

ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்

  

 அனைத்து உணவுகளும் சூடாக இருக்க வேண்டும் (குளிர்ச்சியாக அல்ல).

  

 கொரோனா வைரஸின் pH 5.5 முதல் 8.5 வரை இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எனவே வைரஸை அகற்ற நாம் செய்ய வேண்டியதெல்லாம், வைரஸின் அமில அளவை விட அதிகமான கார உணவுகளை சாப்பிடுவதுதான்.

  வாழைப்பழங்கள், எலுமிச்சை → 9.9 pH

  மஞ்சள் எலுமிச்சை → 8.2 pH

  Avocada fruit - pH 15.6

  பூண்டு - pH 13.2

  மாம்பழம் - pH 8.7

  கமலா ஆரஞ்சு பழம் - pH 8.5

  அன்னாசிப்பழம் - 12.7 pH

  ◉ வல்லாரைக் கீரை - 22.7 pH


இந்த தகவலை உங்களுக்காக மட்டும் வைத்திருக்காமல் அதை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கு ம் தெரியப் படுத்துங்கள்.




 *அனைவருக்கும் முக்கியமான செய்தி*


நீங்கள் குடிக்கும் சூடான நீர் உங்கள் தொண்டைக்கு நல்லது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் உங்கள் மூக்கின் பரணசால் சைனஸின் பின்னால் 3 முதல் 4 நாட்கள் வரை மறைக்கப்படுகிறது. நாம் குடிக்கும் சுடு நீர் அங்கு செல்வதில்லை. 4 முதல் 5 நாட்களுக்குப் பிறகு, பரணசால் சைனஸின் பின்னால் மறைந்திருந்த இந்த வைரஸ் உங்கள் நுரையீரலை அடைகிறது. நீங்கள் சுவாசிப்பதில் சிக்கல் இருக்கும்.

அதனால்தான் நீராவி பிடிப்பது  மிகவும் முக்கியம், இது உங்கள் பரணசால் சைனஸின் பின்புறத்தை அடைகிறது. இந்த வைரஸை மூக்கில் இருக்கும்போதே  நீராவியால் கொல்லப் பட வேண்டும்.

50 ° C இல், இந்த வைரஸ் முடக்கப்பட்டுள்ளது, அதாவது முடங்கிப்போகிறது. 60 ° C வெப்பநிலையில் இந்த வைரஸ் மிகவும் பலவீனமாகி எந்த மனித நோய் எதிர்ப்பு சக்தியும் அதற்கு எதிராக போராட முடியும். 70 ° C க்கு இந்த வைரஸ் முற்றிலும் இறந்துவிடுகிறது.

நீராவி இதைத்தான் செய்கிறது.


வீட்டில் தங்கியிருப்பவர் ஒரு நாளைக்கு ஒரு முறை நீராவி பிடிக்க வேண்டும்.


 காய்கறிகளை வாங்க சந்தைக்குச் சென்றால், ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளுங்கள். சிலரைச் சந்திக்கும் போதோ அல்லது அலுவலகத்திற்குச் செல்பவர்களோ ஒரு நாளைக்கு 3 முறை நீராவி எடுக்க வேண்டும்.


இதை உங்கள் அன்புக்குரிய அனைவருக்கும் அனுப்புங்கள்.



 *நீராவி வாரம்*


மருத்துவர்கள் கருத்துப்படி, கோவிட் -19 மூக்கு மற்றும் வாயிலிருந்து நீராவியை உள்ளிழுத்து கொரோனா வைரஸை நீக்குகிறது. * *மக்கள் அனைவரும் ஒரு வாரம் நீராவி இயக்கி பிரச்சாரத்தைத் தொடங்கினால்,  தொற்றுநோய் விரைவில் முடிவுக்கு வரும்*. 

எனவே இதோ  ஒரு பரிந்துரை :

*ஒவ்வொரு வாரமும் வெறும் 5 நிமிடங்கள் நீராவியை உள்ளிழுக்க, ஒரு வாரம் காலை மற்றும் மாலை செயல்முறையைத் தொடங்கவும்.        

அனைவரும் ஒரு வாரத்திற்கு இந்த நடைமுறையைப் பின்பற்றினால் கொடிய கோவிட் -19 அழிக்கப்படும்*.

இந்த நடைமுறைக்கு பக்க விளைவுகளும் இல்லை.

எனவே இந்த செய்தியை உங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும்  அனைவருக்கும் அனுப்புங்கள், இதன் மூலம் நாம் அனைவரும் இந்த கொரோனா வைரஸைக் கொன்று இந்த அழகான உலகில் சுதந்திரமாக வாழ முடியும்...!

காரிருளில் நம் தீபம் இயேசு

 *காரிருளில் நம் தீபம் இயேசு* 

ஜான் ஹென்றி நியுமென் (Henry Newman) என்ற தேவ மனிதர் எழுதிய.. *காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன், வேறொளியில்லை, வீடும் தூரமே, நடத்துமேன்; நீர் தாங்கின், தூர காட்சி ஆசியேன்; ஓர் அடிமட்டும் என்முன் காட்டுமேன்..* என்ற  பாடலை எந்த சூழ்நிலையில் ஜான் ஹென்றி எழுதினார் என்று சுவாரசிய தகவலை காண்போம்.


1801-ல் பிறந்த இவர் தனது 15 ஆவது வயதில் கிறிஸ்துவை ஏற்று கொண்டு தன் வாழ்வை ஊழியத்திற்கு அர்ப்பணித்தார். சுமார் 10 ஆண்டுகள் தீவிரமாக ஊழியம் செய்தார். பின் ஓரு சரீர வியாதி அவரை தாக்கியது. இத்தாலியிலிருந்து தனது தாய்நாடான இங்கிலாந்தை நோக்கி கப்பலில் செல்ல வேண்டியதாயிற்று. அப்போது அவருக்கு இருந்த காய்ச்சலும் அதிகரித்தது. கடலில் மூடுபனி ஏற்பட்டு கப்பலில் இருள் சூழ்ந்தது. வெளிச்சமில்லாத அந்த குளிரில் மிகவும அவதிப்பட்டார். அப்பொழுதுதான் இந்த பாடலை இயற்றினார். அப்பாடலை பாடிக் கொண்டிருந்தபோதே பனி மூட்டம் குறைந்து வெளிச்சம் வர ஆரம்பித்தது, அந்த நாள் அவரது வாழ்வில் மறக்க முடியாத ஆவிக்குரிய அனுபவத்தை தந்தது.


அன்று அவர் எழுதிய இப்பாடல் இன்றுவரை அநேகருக்கு ஆசீர்வாதமாக உள்ளது. பின்பு 57 வருஷம் அவர் ஊழியம் செய்து தனது 89வது வயதில் கர்த்தருக்குள் நித்திரையானார். இப்பாமாலை பாடலின் மூலம் ஒவ்வொரு நாளும் இன்னுமதிகமாய் கர்த்தரை சார்ந்து கொள்ள நம்மை அர்ப்பணிப்போம். காரிருள்போல தோன்றும் வாழ்க்கiயின் பாதைகளிலே கர்த்தர் கூட இருக்கும்போது தூர காட்சி வேண்டாமென்றும், ஒரு அடி மட்டும் காண்பியும் என்றும் பக்தர் இங்கே பாடுகிறார். *தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார.(சங்கீதம் 18:28)* 


இந்த நாட்களிலும் கொரோனோ என்கிற பயங்கரமான ஒரு எதிரியை மேற்கொள்ள முடியாமல் இந்தியா மிகவும் தவிக்கிறது. இந்த இரண்டாவது அலை இந்தியாவை அப்படியே திருப்பிப் போட்டு விட்டது. மனிதன் சுவாசிக்கும் பிராண வாயு இல்லாமல் அல்லது ஆக்சிஜன் இல்லாமல் ஒரு நாளில் 26 பேர் மரித்திருக்கிறார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போய் கொண்டிருக்கும் இந்த நிலையிலும் நமக்கு வெளிச்சத்தை கொடுப்பவர் நம் இயேசு மாத்திரமே. அவரை நாம் சார்ந்து கொள்ளும்போதுஇ நம்மை சுற்றி இருள் இருந்தாலும் எல்லாம் வெளிச்சமாகும்..


கர்த்தரின் பாதுகாப்பு நம்மையும் நம்முடைய அன்பு உறவுகளையும் சுற்றி சூழ்ந்து பாதுகாத்துக் கொள்ளும். விக்கினங்கள் கடந்து போகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைவேன் என்று நாம் அவரையே சார்ந்து கொள்வோம். இந்த நிலைமையும் கடந்து போகும் ஆமென் அல்லேலூயா!

Monday, April 26, 2021

Oscar Nominations and Where to Watch

 Oscar Nominations and Where to Watch as on April 26


The Father - NA

Judas and the Black Messiah - ₹499 on BMS Rent, Buy 4k at ₹920 on gplay, Buy at ₹790 on Apple tv +

Mank - Netflix

Minari - NA

Nomadland - Hotstar FROM Apr 30

Promising Young Woman - NA

Sound of Metal - Prime

The Trial of the Chicago 7 - Netflix

Another Round - ₹149 BMS rent, ₹269 BMS Buy

Ma Rainey’s Black Bottom - Netflix

The United States vs. Billie Holiday - NA

Pieces of a Woman - Netflix

One Night in Miami - Prime

Borat Subsequent Movie film - Prime

Hillbilly Elegy - Netflix

The White Tiger - Netflix

Onward - Hotstar

Over the Moon - Netlfix

Shaun the Sheep Movie: Farmageddon - Rent at ₹89 on BMS, Buy at ₹449 on BMS

Soul - Hotstar

Wolfwalkers - Apple tv +

Better Days (Chinese) - NA

Collective (Romanian Documentary Thriller) - NA

The Man Who Sold His Skin - NA

Quo Vadis, Aida? - NA

News of the World - Netflix

Mulan - Hotstar

Pinocchio - NA

Emma - NA

Da 5 Bloods - Netflix

Tenet - Apple Tv +

Greyhound - Netflix

Love and Monsters - Netflix

The Midnight Sky - Netflix

The One and Only Ivan - Hotstar

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...