Wednesday, December 30, 2020

Waiting

 காத்திருக்குதல் தந்த மகத்துவம்


 1.ஆபிரகாம் காத்திருந்தார் இதனால் அவர் விசுவாசத்தின் பலனாகிய ஈசாக்கைப் பெற்றுக் கொண்டார்


2.நோவா காத்திருந்தார் இதனால் இரட்சிப்பின் பேழையை பெற்றுக் கொண்டார்


3.அன்னாள் காத்திருந்தாள் இதனால் இஸ்ரவேலை நியாயந்தீர்க்கிற சாமுவேல் தீர்க்கதரிசியை பெற்றாள்


4.மோசே காத்திருந்தார் இதனால் மகிமையின் ஊழியத்தை பெற்றார்


5.தாவீது காத்திருந்தார் இதனால் கர்த்தருடைய இருதயத்தில் இடம் பெற்றார்


6.யோசபாத் காத்திருந்தார் இதனால் கர்த்தர் அவருக்காக யுத்தம் செய்தார்


7.யோசுவாவும் அவனுடைய கூட்டத்தாரும் காத்திருந்தார்கள் இதனால் அவர்கள் முன் நின்ற எரிகோ வீழ்ந்தது.


8.யோசேப்பு காத்திருந்தார் இதனால் அவருடைய குடும்பமும் எகிப்தும் பஞ்சத்தினால் சாகாமல் காப்பாற்றப்பட்டனர்.


9.யோபு காத்திருந்தார் இதனால் இரட்டிப்பான நன்மை கிடைத்தது


10.சீஷர்கள் காத்திருந்தனர் இதனால் பரிசுத்த ஆவியை பெற்றனர்


11.சகரியாவும் எலிசபெத்தும் காத்திருந்தனர் இதனால் யோவான்ஸ்நானன் என்கிற வெளிப்பாட்டை பெற்றுக் கொண்டார்கள்


12.அப்.பவுல் காத்திருந்தார் இதனால் பட்டணங்களை பிடித்து அடக்குகிற வலிமையை [ சுவிசேஷம் ] பெற்றுக் கொண்டார்


இதேபோல நீங்களும் நானும் காத்திருக்கும் போது என்றென்றைக்கும் நம்மோடு இருக்கிற

இம்மானுவேல் கிடைப்பார்.


ஜான்சன் பாண்டியன் இராமநாதபுரம்.

Sunday, December 27, 2020

Osho

 *உணவை தான் உண்டேன் எப்படி. மலம் ஆனது?*

*உயிரோடுதானே இருந்தேன் எப்படி மாண்டு போனேன்?*

*மலம்தான் உணவாக இருந்ததா?*

*மரணம்தான் வாழ்வாய் இருந்ததா?*

.

*இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை சுகித்ததா?*

*இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை கண்கள் வட்டமிட்டது?*

*பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும் என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா?*


*இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே என்று மனைவியும் சுற்றமும் பேசியது.* *எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது.* *இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன் !*


*நான் விரும்பியவை எல்லாம் என்னைவெறுத்துகொண்டிருந்தது* .

*இளமையாய் இருக்கும்போதே முதுமையை பழகி இருக்கவேண்டும்* . *அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்கமாட்டேன்.* *அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனைப்போல் பதுக்கி இருக்கமாட்டேன்.*


*காலம் கடந்த ஞானம். பாயும் நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள்.* *இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்?*

*பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொள்ளவா முடியும்?* *சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவா போகிறது?*


*கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும், காதலா, என் உயிரே என்று சொன்ன மனைவியும் , பிணமானபின் சுடுகாட்டில் அல்லவா விட்டு செல்வார்கள் !*

*பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம்* *என்று வீசிசென்ற பிறகு , மண்* *என்னைப்பார்த்து ,*

*" மகனே !* *நானிருக்கிறேன்* . *என் மடியில் வந்து உறங்கு" என்று என்னை மார்போடு தழுவிக்கொண்டது.*


அருந்தின மலமாம்

பொருந்தின அழுக்காம் வெறுப்பன உவப்பாம்

உவப்பன வெறுப்பாம்

உலக பொய் வாழ்க்கை நீ_நீயாக_இரு...


*உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.*


*அதனால் வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்*


உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். *மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.*


எந்தப்பறவைகளும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் சாப்பாடு கேட்பதில்லை.


எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.


எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.


*மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.*


மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.


*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்*


முதுமை என்று எதுவும் இல்லை.


*நோய் என்று எதுவும் இல்லை.*


*இயலாமை என்று எதுவுமில்லை.*


*எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.*


சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.


நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.


*நான்... நான்... நான்...*


*நான்* சம்பாதித்தேன்,


*நான்* காப்பாற்றினேன்,


*நான்* தான் வீடு கட்டினேன்,


*நான்* தான் உதவி செய்தேன்,


*நான்* உதவி செய்யலனா? அவர் என்ன ஆகுறது!


*நான்* பெரியவன்,


*நான்* தான் வேலை வாங்கி கொடுத்தேன்,


*நான் நான் நான் நான்* என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!


*நான்* தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?


*நான்* தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?


*நான்* தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?


*நான்* தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா??


*நான்* தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?


இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே *"நான்"* என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..


ஆகையால் *நான்* என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் *அன்பாக* இருங்கள்.


*உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்*


*உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்.*


*உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு தன்னம்பிகை வரும்.....


*படித்ததில் பிடித்தது

Current Post

தீயோனிடமிருந்து என்னை விடுவியும்

தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை அறிந்துள்ளது. அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது. திருவெளிப்பாடு 12:12  பிசாச...