*எப்படி ஜெபிக்க வேண்டும்...? →*
1) பலத்த சத்தத்தோடு
- எபி 5:7
2) கண்ணீரோடு
- எபி 5:7
3) ஸ்தோத்திரத்துடன்
- பிலிப் 4:6
4) உபவாசத்துடன்
- அப் 13:3
5) பரிசுத்த ஆவிக்குள்
- எபேசி 6:18
6) பொருத்தனைகளை செலுத்தி
- சங் 50:14
7) இருதயத்தை ஊற்றி
- 1 சாமு 1:15
8) உறுதியாய்
- ரோம 12:12
9) வெகு நேரம்
- 1 சாமு 1:12
10) ஊக்கத்தோடு
- லூக் 22:44
11) வியாகுலப்பட்டு
- லூக் 22:44
12) விழித்திருந்து
- மத் 26:41
13) தாழ்மையுடன்
- 2 நாளா 7:14
14) இயேசுவின் நாமத்தில்
- யோவா 16:24
15) இடைவிடாமல்
- 1 தெச 5:17
16) விசுவாசத்துடன்
- மாற் 11:24
17) சுருக்கமான வார்த்தைகளால்
- மத் 6:7
18) சோர்ந்து போகாமல்
- லூக் 18:1
19) ஒரே இருதயத்துடன்
- அப்போ 4:32
20) முழங்கால்படியிட்டு
- அப்போ 20:36
21) நின்று கொண்டு
- மாற் 11:25
22) உட்கார்ந்து
- 2 சாமு 7:18
23) கைகளை உயர்த்தி
- 1 தீமோத் 2:8
24) கண்களை வானத்துக்கு ஏறெடுத்து
- யோவா 17:1
25) மார்பில் அடித்து
- லூக் 18:13
26) வானத்தை நோக்கி அபயமிட்டு
- 2 நாளா 32:20
27) முகங்குப்புற விழுந்து
- மத் 26:39
28) ஒன்றுக்கும் கவலைப்படாமல்
- பிலிப் 4:6
29) தேவ சித்தத்துக்கு ஒப்புக்கொடுத்து
- 1 யோவா 5:14.
*ஜெபமும், நமது தேவனும்...*
1) ஜெபத்தை கேட்கிறவர்
- சங் 65:2
2) ஜெபத்தை தள்ளாதவர்
- சங் 66:20
3) ஜெபத்தை அலட்சியம் பண்ணாதவர்
- சங் 102:16
4) ஜெபத்தை ஏற்றுக் கொள்பவர்
- சங் 6:9
5) ஜெபத்தைக் கேட்டு நியாயஞ் செய்கிறவர்
- லூக் 18:7
6) நாம் ஜெபிப்பதை தனது கண்களால் காண்கிறவர்
- 2 நாளா 7:15.
*ஜெப நேரங்கள்... →*
1) இடைவிடாமல்
- கொலோ 4:2
2) எப்பொழுதும்
- லூக் 21:36
3) தினமும் 3 வேளை
- தானி 6:10
4) இரவும் பகலும்
- லூக் 2:37
5) அதிகாலை (இருட்டோடு)
- மாற்கு 1:35
6) சாயங்காலம்
- மத் 14:23
7) அந்தி, சந்தி, மத்தியான வேளை
- சங் 55:17
8) நடு ராத்திரி
- அப் 16:25.
*ஜெபத்தில் பலவித நிலைகள்... →*
1) நீண்ட ஜெபம்
- லூக் 20:47
2) தனிமையாக
- மத் 14:23
3) சபையாக சேர்ந்து
- அப்போஸ் 12:5,12
4) உபவாசித்து
- அப்போஸ் 13:3
5) புருஷர்களும், மனைவிகளும், பிள்ளைகளும் சேர்ந்து
- அப்போஸ்
6) அழுது ஜெபிக்கலாம்
- ஓசியா 12:4
7) சத்தமாக
- அப்போஸ் 4:24
8) சத்தம் கேட்காமல் உதடுகள் மாத்திரம் அசைத்து
-1 சாமு 1:13
9) தியானித்து
- சங் 39:3
10) சுருக்கமாக
- மத் 6:7.
*ஏன் ஜெபிக்க வேண்டும்...?*
1) சோதனை வராமல் இருக்க
- மாற் 14:38
2) கலகம் இல்லாமல் அமைதல் உள்ள ஜீவியம் செய்ய
- 1 தீமோத் 2:1,2
3) நமது சந்தோஷம் நிறைவாய் இருக்க
- யோவா 16:24
4) நிந்தை நீங்க
- 1 சாமு 1:10
5) இருதயத்தில் தேவ சமாதானம் இருக்க
- பிலிப் 4:6,7
6) மனுஷ குமாரன் முன்னால் நிற்க (வருகையில் காணப்பட)
- லூக் 21:36.
*யாருடைய ஜெபம் கேட்கப்படுவதில்லை...? →*
1) அக்கிரம சிந்தை உள்ளோரின் ஜெபம்
- சங் 66:18
2) இச்சைகளை நிறைவேற்றும் ஜெபம்
- யாக் 4:3
3) மாயக்காரரின் ஜெபம்
- யோபு 27:8,9
4) வேதத்தை கேளாதவர்களின் ஜெபம்
- நீதி 28:9
5) பாவிகளின் ஜெபம்
- யோவா 9:31
6) துன்மார்க்கரின் ஜெபம்
- சங் 109:2,7
7) பெருமையுள்ளவர்களின் ஜெபம்
- லூக் 18:12/
யோபு 35:12
8) வீண் வார்த்தை உள்ள ஜெபம்
- யோபு 35:13
9) பகைமை குணமுள்ளோரின் ஜெபம்
- சங் 18:40,41
10) ஏழை கூக்குரலுக்கு தன் செவியை அடைத்துக் கொள்ளுகிறவன் ஜெபம்
- நீதி 21:13
11) கர்த்தருக்கு விரோதமாக துரோகம் செய்கிறவர்களின் ஜெபம்
- புலம் 3:42,44
12) தேவனுடைய பிரமாணங்களை மீறுகிறவர்களின் ஜெபம்
- எரே 11:10,11
13) சந்தேகப்படுகிறவர்களின் ஜெபம் (கிடைக்குமா - கிடைக்காதா)
- யாக் 1:6,7
14) அவிசுவாசமுள்ள ஜெபம்
- மாற் 9:23,24
15) அருவருப்புகளை செய்கிறவர்களின் ஜெபம்
- எசேக் 8:15,18
16) பொல்லாத கிரியைகளைச் செய்கிறவர்களின் ஜெபம்
- மீகா 3:14.
*வேதாகமத்தில் பரிசுத்தவான்கள் ஜெபித்த இடங்கள்...*
1) தேவனுடைய ஆலயம் → பவுல்
- அப் 22:17
2) வீடு → கொர்நேலியு
- அப் 10:30
3) மேல் வீட்டறை → பேதுரு -
அப் 10:9
4) ஆற்றின் அருகே → பவுல்
- அப் 16:13
5) வனாந்திரத்தில் → இயேசு
- லூக் 5:16
6) கடற்கரை → பவுல் -
- அப் 21:5
7) தோட்டத்தில் → இயேசு
- மாற் 14:32
8) மீன் வயிற்றில் → யோனா
- யோனா 2:7
9) மலையின் மேல் → இயேசு
- மத் 14:23
10) ஆலயத்துக்கு வெளியில் → ஆயக்காரன்
- லூக் 18:13
11) சிறைச்சாலையில் → பவுல், சீலா -
- அப்போ 16:25
12) கடலின் மேல் → பேதுரு
- மத் 14:30.
*ஜெபத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள் →*
1) நிந்தை நீங்கும்
- 1 சாமு 1-6
2) துக்க முகம் இல்லை
- 1 சாமு 1-18
3) ஆத்துமாவில் பெலன்
- சங் 138-3 /
லூக் 22:42-43.
4) தைரியம் கிடைக்கும்
- சங் 138-3
5) இருதயத்தில் தேவ சமாதானம்
- பிலிப் 4:6-7
6) சிந்தனைகள் கிறிஸ்துவுக்குள்ளாக காத்துக் கொள்ளப்படும்
- பிலிப் 4:6-7
7) எல்லா உபத்திரவத்தில் இருந்தும் விடுதலை
- சங் 34-17
9) சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்
- சங் 56-9
10) கிருபை கிடைக்கும்
- சங் 86-5
11) விசாலத்தில் வைப்பார்
- சங் 118-5
12) கர்த்தர் சமீபம்
- சங் 145-18
13) தேசத்துக்கு ஷேமம்
- 2 நாளா 7-14
14) நன்மையானவைகள் கிடைக்கும்
- மத் 7-11
15) மிகுந்த ஜலப்பிரவாகமும் (சோதனை) அணுகாது
- சங் 32-6,
மத்தேயு 26-41
16) சிங்கங்கள் (பிசாசு) வாய் அடைக்கப்படும்
- தானி 6-10,22
17) வருகையில் காணப்படுவோம்
- லூக் 21-36.
No comments:
Post a Comment