கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளும் " முட்டைகளும் முயல்களும் ".
Easter and the " Easter egg and Easter Bunny / Hare ".
அண்மையில் ஈஸ்டர் வாழ்த்துப் படம் ஒன்று பார்த்தேன். அதில் ஈஸ்டர் வாழ்துக்காக ஈஸ்டர் முட்டைகள் அடங்கிய கூடைப் படம் அச்சிடப்பட்டிருந்தது.
எவ்வாறு கிறிஸ்மஸ் பண்டிகையை Santa Claus, Christmas tree, Star போன்றவை மனுக்குலத்தை மீட்பதற்காக மானிடரான கிறிஸ்து பிறப்பின் உன்னதமான நோக்கத்தை மறைத்துவிட்டனவோ, அவ்வாறு இன்று ஈஸ்டர் பண்டிகையின் " உயிர்தெழுதல் " என்ற சிறப்பான நோக்கத்தை " ஈஸ்டர் முட்டைகளும் ஈஸ்டர் முயல்களும் " மறைத்துவிட்டன. இந்த முயலை Bunny என்று செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்க நாடுகளில் தீக்கோழி முட்டைகளை வர்ணம் தீட்டி அலங்கரிப்பது வழக்கமாக இருந்தது. இப்பழக்கம் மேலை நாடுகளிலும் பரவியது. 20 ஆம் நூற்றாண்டில் அங்கு கோழி முட்டைகளையே அலங்கரித்தனர். இப்பழக்கம் சமயச் சார்புடையதாகத் திருச்சபையில் ஏற்க்கப்பட்டது. அதாவது " உயிர்த்தெழுதலுக்கு " அடையாளமாக கோழி முட்டை ஏற்க்கப்பட்டது. வெறும் உயிரற்ற திரவ நிலையிலுள்ள முட்டையிலிருந்து உயிருள்ள குஞ்சு வெளிவருவது உயிர்த்தெழுதலுக்கு அடையாளமாகியது. ஆகவே ஈஸ்டர் அன்று அலங்கரிக்கப்பட்ட முட்டைகளைப் பரிமாறுவது வழக்கமாகியது.
அத்துடன் மேலை நாடுகளில் செழுமைக்கு அடையாளமாக ( பலுகிப் பெருகும் நிலை )முயல் ஏற்கப்பட்டிருந்தது. அதிலும் இவை நாட்டுப்புறக் கதைகளின் உறுவகமாகவே ( folkloric figure ) இவை உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த முயலையும் ஈஸ்டருக்கு அடையாளமாகத் திருச்சபை ஏற்றது. அது " ஈஸ்டர் முயல்" ( Easter Rabbit / Hare ) எனப்பட்டது.
இவ்வாறு ஏற்கப்பட்ட பின் இந்த முயலே அலங்கரிக்கப்பட்ட முட்டைகளைக் கொண்டுவருவதுபோல் அலங்கரித்து மகிழ்கின்றனர்.
இன்று அலங்கரிக்கப்பட்ட கோழி முட்டைகளுக்குப் பதிலாக அலங்கரிக்கப்பட்ட சாக்கலேட்டுக்கள் செய்யப்படுகின்றன. மேலை நாடுகளில் ஈஸ்டர் பண்டிகைச் சமயம் இவை அதிகமாக விற்பனையாகுகின்றன.
இன்று மேலை நாடுகளில் ஈஸ்டர் என்றால் " ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் " என்கிற உண்மை மறைக்கப்பட்டு, ஈஸ்டர் என்றால் " முயலும் முட்டையும் " ( Bunny and egg ) என்கிற நிலை உருவாகிவிட்டது.
இதை நமது திருச்சபைகளும் பின்பற்றுவது நல்லதல்ல.
+++++++++++++++++++++++
அருள்திரு. ஜே . அகஸ்டின்
( Tamilnadu Theological Seminary )
Pasumalai
+++++++++++++++++++++++++