பரபாஸ் - Barabas
•••••••••••••••••••••••••••••••••••••••
இயேசுவின் காலத்தில் யூதர்கள் ரோம ஆட்சிக்குட்பட்ட அடிமைகளாகவே இருந்தனர். சனெகரிம் என்ற பெறு மன்றம் யூதர்களின் சமயக் காரியங்களில் மட்டும் மக்களை விசாரிக்கும் உரிமை பெற்றிருந்தது . மற்றப்படி யூதர்கள் வாழ்ந்த நாட்டிற்கு பிலாத்து என்பவர்தான் மாநில ஆட்சியாளராக இருந்தார்.
இக்காலத்தில் இயேசு கைது பண்ணப்பட்டு சனகெரிம் சங்கத்தின் முன் நிறுத்தப்பட்டார். அச்சங்கத்தினர் “ இயேசு தம்மைக் கடவுளின் மகன் “ என்கிறார்.; இது “ இறை நிந்தை “ ! இதற்கு மரணதண்டனைதான் விதிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போதையச் சூழலில் நமக்கு அந்த அதிகாரமில்லை . ஆகவே இவரை ஆளுநர் பிலிப்புவிடம் கொண்டு போவோம் என்ற கூறி அவரைப் பிலிப்புவினிடம் கொண்டு வந்தார்கள்..
குற்றச்சாட்டைக் கூறினார்கள். பிலாத்து விசாரித்துப் பார்த்தார். இயேசுவோ ஒரு நீதிமானைப்போல் இருக்கிறார்,
மக்களிடம் வந்து நான் அவரிடம் ஒரு குற்றச் செயலையும் காணவில்லை என்றார்.
மக்களோ , இல்லை அவர் “ அரசருக்கு வரி கொடுக்க. வேண்டாம் “ என்கிறார். ஆகவே மரண தண்டனை விதிக்க வேண்டும் என்கிறார்கள் .
இந்நேரம் பிலாத்துவின் மனைவி “ நீர் அந்த நீதிமனை ஒன்றும் செய்யாதீர் “ என்று கடிதம் கொடுத்து அனுப்பினாள் .
அப்பொழுது பிலாத்து ஒரு தந்திரச் செயல்மூலம் இயேசுவை விடுவித்துவிடலாம் என்று எண்ணினார்.
பஸ்கா பண்டிகை தோறும் ஒரு யூதக் கைதியை விடுவிப்பது வழக்கம். அவ்வாறு செய்வதற்காக பரபாஸ் என்கிற ஒரு கலகக்காரனை அவர்கள் முன்நிறுத்தி “ நான் இன்று உங்களுக்கு “ ஒரு குற்றமுமில்லத இயேசுவை விடுவிக்கவா “ ?
அல்லது “ கலக்க்காரனும் கொலைகரனுமாகிய பரபாசை விடுவிக்கவா ?” என்று கேட்டார்.
இந்த பரபாஸ் பிலிப்பு ஆளுநர் எருசலேம் திருக்கோவிலிலிருந்த பெரும் செல்வத்தை எடுத்து, நகரில் ஒரு தொட்டிப்பாலம் கட்ட விரும்பினார். இவர் இப்படித்தங்கள் கடவுளின் காணிக்கைகளைக் களவு செய்கிறார் என்று கூறி யூதர்கள் கலகம் செய்தனர். அந்தக் கலகத்தைப் பரபாஸ்தான் முன்னின்று நடத்தினார். இதில் சில கொலைகளும் விழுந்தன. அத்தனை குற்றங்களும் பரபாஸ்தான் காரணம் என்று கூறி அவரைச் சிறைப்பிடித்துக் காவலில் வைத்திருந்தார்கள்.
இத்தகைய கொலைகாரனை, கலகக்காரனை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று அவ்வாறு கேட்டார்.
இக்கேள்வி மக்களுக்குள் எதிர்வினைச் செயலைச் செய்துவிட்டது ! இந்தப் பரபாஸ் நம் கோவில் பணத்தைக் கொள்ளையடித்துப் பாலம் கட்ட முனைந்த பிலாத்துவை - ரோமப் பேரரசை எதிர்த்துப் போராடிய மாவீரன் ! இவன்தான் நமக்கு வேண்டும். இந்தச் “ சாது “ இயேசு வேண்டாம் என்று தீர்மாணித்து , பிலத்துவிடம் “ பரபாஸை விடுதலை செய்யுங்கள் “ என்று கூறினார்கள்.
இந்தப் பரபாஸ் :
மத்:27:16 - பேர்போன கைதி
மாற்:15:7 - கலகத்தில் கொலை செய்தவன்
லூக்: 23:19 - நகரில் நடந்த கொலைக் குற்றவாளி
யோவா:18:50 - கள்ளன்
அப்:3:14 - கொலையாளி
பரபாஸ் என்ற அரமேயப் பெயருக்கு “ தந்தையின் மகன் - Son of the Father “ என்று பொருள் !
இயேசுவும் தந்தையாம் கடவுளின் மகன் ! பெயர்கள் பொருத்தமாகத்தான் உள்ளன.
மக்கள் விருப்பப்படி பிலாத்து பரபாஸை விடுதலை செய்து. இயேசுவைச் சிலுவையில் அறைய ஒப்புக் கொடுத்தார்.
வெளியே வந்த பரபாஸ் இயேசுவைப் பற்றி அறிந்தான். அந்த நீதிமானால்தான் மரணதண்டனையிலிருந்து விடுபட்டேன் என மனம் வருத்தித் தன் தீவிரவாதப் போக்கை விட்டுவிட்டு , இயேசுவை ஏற்றுக்கொண்டுக் , கிறிஸ்தவரானார். ரோமப் பேரரசு அவரையும் சிலுவையில் அறைந்து. கொலை செய்தது.
எபி:6:6
இவர்கள் இறை மகனைத் தாங்களே சிலுவையில் அறைந்து,
வெளிப்படையாக இழிவு படுத்துகிறார்கள் !
( இன்று அந்த எபிரேய மடலின் ஆக்கியோர் நம்மைப் பார்த்துத்தான் இவ்வாறு கூறுகிறார் )
• யூதாஸ் : நான் அவரை விற்றுப்போடுவேன் !
• பேதுரு : நான் அவரை மறுதலிப்பேன் !
• சனெகரீம் சங்கத்தார் : நாங்கள் அவரைப் புறக்கணிப்போம் !
• ஏரோது : நான் ஆர்வமாக மட்டும் இருப்பேன் !
• மக்கள் : நாங்கள் அவரைச் சிலுவையில் அறைவோம் !
• பிலாத்து : நான் நடுநிலையாய் இருப்பேன் !
* நாம் எப்படி இருக்கிறோம் ?
********************************
Rev. J. Augustine Jeevakani
( Tamilnadu Theological Seminary )
Pasumalai
*********************************
No comments:
Post a Comment