Friday, February 18, 2022

அம்மாவின் கை...

 அம்மாவின் கை...


சில வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.

 

அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகளை, ஞானிகளை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.

 

அவர் அந்தக் கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து ஆதங்கமான குரலில் அது என் அம்மாவின் கைகள் என்று சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது. "எதற்காக அம்மாவின் கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

 

"அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன. என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள்தான் இருக்கின்றன. அம்மாவின் முகத்தைவிட, அந்தக் கைகளைக் காணும்போதுதான் நான் அதிகம் நெகிழ்ந்துபோகிறேன்.

 

அம்மா இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை. ஆனால், இதே கைகளால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை.

 

அப்பா பொறுப்பற்ற முறையில், குடித்து, குடும்ப வருமானத்தை அழித்து 32 வயதில் செத்துப் போனார்.அம்மாதான் எங்களை வளர்த்தார். நாங்கள் மூன்று பிள்ளைகள். அம்மா படிக்காதவர். ஒரு டாக்டரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, நாய்களைப் பராமரிப்பதுபோன்ற வேலைகள். மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும் வேலைதான். எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்து இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது.

 

இரவு வீடு திரும்பிய பிறகு, சமைத்து எங்களைச் சாப்பிடவைத்து உறங்கச்செய்துவிட்டு அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருப்பார்கள். சமையல் அறையில்தான் உறக்கம். அப்போதும் கைகள் அசைந்தபடியேதான் இருக்கும். எங்கள் மூவரையும் பள்ளிக் கூடம் அழைத்துப் போகையில் யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும்.

 

அந்தக் கைகளைப் பிடித்துக்கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம், நம்பிக்கை கிடைக்கும். அதுபோலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி நெற்றியைத் தடவியபடியே இருக்கும். அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. தனது சகலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை வளர்த்தபடியே இருந்தார். மருத்துவரின் வீட்டில் அம்மா ஒருநாள் ஊறுகாய் ஜாடியை உடைத்துவிட்டார் என்று அடி வாங்குவதைப் பார்த்தேன். அம்மாவின் கன்னத்தில் மருத்துவரின் மனைவி மாறி மாறி அறைந்துகொண்டு இருந்தார். அம்மா அழவே இல்லை.

 

ஆனால், நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல், விடுவிடுவென எங்களை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். வழியில் பேசவே இல்லை. அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல்படுத்தவோ, அணைத்துக்கொள்ளவோ இல்லை. அவள் கடவுள் மீதுகூட அதிக நம்பிக்கைகொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை. வீட்டில் சாமி கும்பிடவோ, கோயிலுக்குப் போய் வழிபடவோ, அதிக ஈடுபாடு காட்டியதே இல்லை. வேலை... வேலை... அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும் என்று அலுப்பின்றி இயங்கிக்கொண்டு இருந்தார்.

 

சிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளவே இல்லை. ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன். கஷ்டப்பட்டுப் பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்கப் பிடிக்கவில்லை என்று போகாமல் இருந்திருக்கிறேன். கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன். மற்ற சிறுவர்களைப்போல சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்கிறாள் என்று கடுமையான வசைகளால் திட்டி இருக்கிறேன். அம்மா எதற்கும் கோபித்துக்கொண்டதே இல்லை. அம்மா கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தபோதும் யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது என்றுதான் அந்த நாளில் தோன்றியது. கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து சுற்றவும், புதுப் புது ஆடைகள் வாங்கவும் குடிக்கவும் எத்தனையோ பொய்கள் சொல்லி இருக்கிறேன். என் அண்ணனும் தங்கையும்கூட இப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால், அம்மா அதற்காக எவரையும் கோபித்துக் கொள்ளவே இல்லை.

 

கல்லூரி இறுதி ஆண்டில் மஞ்சள் காமாலை வந்து, நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா. அப்போதுதான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு, ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது. அதன் பிறகு, என்னைத் திருத்திக்கொண்டு தீவிரமாகப் படிக்கத் துவங்கி, ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து கடுமையாக உழைத்துப் பதவி-உயர்வு பெற்றேன். அம்மாவை என்னுடனே வைத்துக்கொண்டேன். நான் சம்பாதிக்கத் துவங்கியபோதும், அம்மா ஒருபோதும் எதையும் என்னிடம் கேட்டதே இல்லை. நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து, தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன்.

 

முதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன், 'எனக்கு ஒரே ஒரு வாட்ச் வேண்டும். சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவே இல்லை. அதன் பிறகு, எனக்குள் இருந்த கடிகாரம் ஓடு... ஓடு... என்று என்னை விரட்டத் துவங்கியது. அலாரம் இல்லாமலே எழுந்துகொள்ளப் பழகிவிட்டேன். இப்போது வயதாகிவிட்டது. சில நாட்கள் என்னை அறியாமல் ஆறு மணி வரை உறங்கிவிடுகிறேன். இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிடுகிறேன். ஒரு வாட்ச் வாங்கித் தருவாயா?' என்று கேட்டார்.

 

அம்மா விரும்பியபடி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன். ஒரு பள்ளிச் சிறுமியைப்போல அதை ஆசையாக அம்மா எல்லோரிடமும் காட்டினாள். அதை அணிந்துகொள்வதில் அம்மா காட்டிய ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது. அதன் பிறகு அம்மா, நான் திருமணம் செய்து டெல்லி, பெங்களூரு என்று வேலையாக அலைந்தபோது கூடவே இருந்தார். டெல்லியில் எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நான் கூடவே இருந்தேன்.

 

'நாங்கள் ஏமாற்றியபோது எல்லாம் ஏன் அம்மா எங்களை ஒரு வார்த்தைகூடத் திட்டவே இல்லை?' என்று கேட்டேன். அம்மா, 'அதற்காக நான் எவ்வளவு அழுதிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால், அன்று நான் கோபப்பட்டு இருந்தால், என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போயிருப்பார்கள்' என்று சொல்லி, தன் கையை என்னுடன் சேர்த்துவைத்துக்கொண்டார்.

 

அப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த்தேன். அது எவ்வளவு உழைத்திருக்கிறது. எவ்வளவு தூய்மைப்படுத்தி இருக்கிறது. எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது. அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பிறகு ஒருநாள், எனது கேமராவை எடுத்து வந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இன்று அம்மா என்னோடு இல்லை. ஆனால், இந்தக் கைகள் என்னை வழி நடத்துகின்றன. ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக் கைகள் நினைவுபடுத்துகின்றன. இதை வணங்குவதைத் தவிர, வேறு நான் என்ன செய்துவிட முடியும்?" என்றார்.

 

ராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன். அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை. உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள் யாவும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை. அணைத்துக்கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன. அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம். அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.

 

இலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கியிருக்கிறேன். சாப்பிட்டு இருக்கிறேன். எனது உடைகளைத் துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன். அந்தக் கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன். ஒரு நிமிடம் என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி, தீராத நன்றி சொன்னது.

 

'கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்துகொள்ளத்தான்' என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை. நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

 

முடிவு நம்மிடமே இருக்கிறது!


குறிப்பு: ஒரு அருமையான நண்பரால் எனக்கு  வந்த கதை. உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மிகவும் சந்தோஷம். நல்ல விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதில் தான் எத்தனை ஆனந்தம்.

Saturday, February 12, 2022

Be happy with what you have

 Recent 3 incidents which have shaken us & made us rethink where we are moving.


1. Man, who was owner of Rs 12000 crores empire *Raymonds* is now living in rented room on hand to mouth basis because his Son has shown him the Exit door.


2. A Billionaire Woman who died in her posh Flat in Mumbai , her body discovered a year later which had became skelton in one year and her millionaire son did not even bother to know about her, in the last one year.


3. An IAS level officer committed suicide because he was unable to cope up with the stress of his family issues.


Whatever you have in your life *TODAY*, please​ be happy with that.


Michael Schumacher, one of the greatest drivers of Formula 1, is forgotten and fighting for his life after a ski accident in 2013 when he sustained severe head injuries! He weighs a mere 40lbs today and is fighting for his life daily.


To think... he won 91 GP and was 7 (seven) times world champion. The speed was in his soul but on a day of relaxation in a ski resort, fate intervened and his life changed forever!


To-date, his medical bill is around 14million Euros


wife had to sell his properties to pay the medical expenses.


His tragedy could be a lesson in life for all of us. There is nothing permanent in this *short sojourn on earth*. Why bicker about race and religion when we all end up as skulls and skeletons without a difference!


You need money to survive but you need not be consumed by it.


Do not be unkind to yourself by saying you will enjoy tomorrow as tomorrow may never come.


*Do not give excuses to have a good time with  family and friends. For in the end, only they matter*.


All we have today is *today's time*. Let's do good & learn to live a *contented life*!


Have no grudges with any body,


we just have today..


Stay Healthy Forever🙏🌹💕

மிகவும் சக்தி வாய்ந்த செய்தி. "

 மிகவும் சக்தி வாய்ந்த செய்தி. "


 ஒரு பதினைந்து வயது சிறுவன்.... கடையில் ரொட்டி திருடும் போது பிடிபட்டான்.  காவலாளியின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற போது, ​​கடையின் அலமாரியும் உடைந்தது.


நீதிபதி குற்றத்தை விசாரித்து அந்த சிறுவனிடம், “உண்மையில் நீங்கள் ஏதாவது ரொட்டி மற்றும் பாலாடைக்கட்டி திருடினீர்களா?”என்று கேட்டார்.


 சிறுவன் கீழே பார்த்து பதிலளித்தான் ;"ஆம்."


 நீதிபதி:- "ஏன்?"


 பையன்: - "எனக்கு அது தேவைப்பட்டது."


 நீதிபதி: - "நீங்கள் வாங்கியிருக்க முடியாதா?"


 பையன்: - "பணம் இல்லை."


 நீதிபதி: - "குடும்பத்திடம் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள்."


 பையன்:- “வீட்டில் அம்மா மட்டும் தான் இருக்காங்க.  நோய்வாய்ப்பட்ட மற்றும் வேலையில்லாத.


 நீதிபதி: - "நீங்கள் எதுவும் செய்யவில்லையா?".


 பையன்: - “கார் கழுவுவது வழக்கம்.  என் அம்மாவைக் கவனித்துக் கொள்ள ஒரு நாள் விடுமுறை எடுத்தபோது, ​​நான் வேலையிலிருந்து நீக்கப்பட்டேன்.


 நீதிபதி: - "நீங்கள் யாரிடமும் உதவி கேட்கவில்லையா?".


 சிறுவன்: - “காலையிலிருந்து வீட்டை விட்டு வெளியேறி, சுமார் ஐம்பது (50) பேரிடம் சென்றேன், ஆனால் உதவி இல்லை;  எனவே, இந்த நடவடிக்கையை நான் கடைசியாக எடுக்க முடிவு செய்தேன்.


 வாதங்கள் முடிந்ததும், நீதிபதி தீர்ப்பை சொல்லத் தொடங்கினார்.


 "திருட்டு மற்றும் குறிப்பாக பசியுள்ள சிறுவன் ரொட்டி திருடுவது மிகவும் வெட்கக்கேடான குற்றமாகும், இந்த குற்றத்திற்கு நாம் அனைவரும் பொறுப்பு."


 நான் உட்பட நீதிமன்றத்தில் உள்ள ஒவ்வொரு நபரும்  குற்றவாளிகள், எனவே இங்கு இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் தலா பத்து டாலர்கள் அபராதம். 


பத்து டாலர் கொடுக்காமல் யாரும் இங்கிருந்து வெளியேற முடியாது”.


இவ்வாறு கூறி, நீதிபதி தனது பாக்கெட்டிலிருந்து பத்து டாலரை எடுத்து, பேனாவை எடுத்து அதன்படி பெயரை எழுதத் தொடங்கினார்.


 ‘மேலும், பசித்த குழந்தையை போலீசிடம் ஒப்படைத்ததற்காக கடைக்கு ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கிறேன்.


 ‘24 மணி நேரத்திற்குள் அபராதத் தொகையை டெபாசிட் செய்யாவிட்டால், கடைக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிடும்.’ மேலும், பட்டினி கிடக்கும் சிறுவனிடம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததற்காக காவல் துறைக்கு அதே தொகை அபராதம் விதிக்கப் படுகிறது.


 'இந்தச் சிறுவனுக்கு அபராதத் தொகை முழுவதையும் கொடுத்து, அந்தச் சிறுவனிடம் நீதிமன்றம் மன்னிப்பு கேட்கிறது.


 தீர்ப்பைக் கேட்டதும், நீதிமன்றத்தில் இருந்தவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது, அந்த சிறுவனின் கைவிலங்குகளும் அவிழ்க்கப் பட்டன.


கண்ணீரை மறைத்துக் கொண்டு வெளியே வந்த நீதிபதியை சிறுவன் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தான்.


 நமது சமூகமும், அமைப்புகளும், நீதி மன்றங்களும் அத்தகைய முடிவை எடுக்கத் தயாரா?.


  பசியால் வாடும் ஒருவன் ரொட்டி திருடினால் பிடிபட்டால் அந்த நாட்டு மக்கள் வெட்கப்பட வேண்டும்.


  இது உங்கள் இதயத்தைத் தொட்டால் உங்களைச் சுற்றி உள்ளவர்கள் உணவில்லாமல் தூங்கக் கூடாது.


இந்தச் செய்தியால் நீங்கள் ஈர்க்கப்பட்டால், நான் உங்களைக்  கேட்டுக் கொள்கிறேன், நீங்கள் வேறு எதையும் செய்யும் முன், உங்களைச் சுற்றிப் பார்த்து ஒருவரை மகிழ்ச்சியடையச் செய்யுங்கள், நீங்கள் எவ்வளவு சிறியவராக இருந்தாலும் சரி, நீங்கள் இன்னும் சிறப்பாக இருக்கிறீர்கள்.  உங்களிடம் உள்ள சிறியவற்றிலிருந்து கொடுங்கள்.


நன்றி.

Friday, February 11, 2022

Lata Mangeshkar last words

 லதா மங்கேஷ்கர் கடைசியாக பேசிய வார்த்தைகள்..

மரணத்தை_விட_உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. !

இந்த உலகத்தில் விலை உயர்ந்த பிராண்டட் கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது.  ஆனால் நான் சக்கரநாற்காலியில் அழைத்து செல்லப் படுகிறேன்.!

இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது.  ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய சிறிய_கவுனில் இருக்கிறேன்.!

என் வங்கி கணக்கில் ஏராளமான பணம் கிடக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே.!!

என் வீடு அரண்மனை போன்று கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில்  ஒரு சிறு படுக்கையில் கிடக்கிறேன்.

இந்த உலகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன்.  ஆனால் மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்களுக்கு  மற்றொரு லேபிற்க்கும்  மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.!

அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள்.  ஆனால் இன்று என் தலையில்_முடியே இல்லை .

உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர ஓட்டல்கள் உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு. !

தனியார் ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன்.  ஆனால் இன்று மருத்துவமனை வராந்தா விற்கு வருவதற்கு இரண்டு_நபர்கள் உதவுகிறார்கள். ?

எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை.  எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை. ! ஆனால்

சில அன்பானவர்களின்   முகங்களும்

அவர்களது தொழுதல்களும்  என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. !

இவ்வளவு தாங்க வாழ்க்கை...

யாருக்கும் உதவாத...

வெறும் பணம் பதவி அதிகாரம் என்று இருக்கும் மனிதர்களை மதிப்பதை தவிருங்கள்....

நல்ல மனித நேயமுள்ள மனிதர்களை நேசியுங்கள்..

Saturday, February 5, 2022

94-year-old man

 A 94-year-old man was thrown out of a rented house by the landlord for not paying the rent. The old man had hardly any belongings except an old bed, some aluminum utensils, a plastic bucket and a mug etc. The old man requested the owner to give him some time to pay the rent. The neighbors also took pity on the old man, and they convinced the landlord to give him some time to pay the rent. The landlord reluctantly gave him some time to pay the rent.


The old man took his belongings inside.


A journalist passing by stopped and saw the whole scene. He thought it would be useful to publish the matter in his newspaper. He even thought up a headline, "Cruel landlord kicks old man out of rented house for money." Then he took some pictures of the old tenant and also took some pictures of the rented house.


The journalist went and told his press owner about the incident. The owner of the press looked at the pictures and was shocked. He asked the journalist, did he know the old man? The journalist said no.


The next day the big news appeared on the front page of the newspaper. The title was "Gulzarilal Nanda, the former Prime Minister of India, leading a miserable life". It was further written in the news that how the former Prime Minister was unable to pay the rent and how he was thrown out of the house. It was commented that nowadays freshers also earn a lot of money. Whereas a person who has been a former Prime Minister twice and has also been a Union Minister for a long time, does not even have a house of his own.


Actually Gulzarilal Nanda got Rs. 500/- per month allowance was available. But he had rejected this money saying that he did not fight for the allowance of freedom fighters. Later friends forced him to accept saying that he had no other source of origin. With this money, he used to live by paying his rent.


The next day the current Prime Minister sent ministers and officials with a fleet of vehicles to their homes. The landlord was stunned to see the fleet of so many VIP vehicles. It was then that he came to know that his tenant, Mr. Gulzarilal Nanda was the former Prime Minister of India. The landlord immediately bowed down at the feet of Gulzarilal Nanda for his misbehavior.


Officials and VIPs requested Gulzarilal Nanda to accept government accommodation and other facilities. Mr. Gulzarilal Nanda did not accept his offer by saying that what is the use of such facilities in this old age. Till his last breath, he lived as a true Gandhian, like an ordinary citizen. In 1997, the government honored him with the Bharat Ratna.


Just compare his life with the politicians of the present times.

*(On the 23rd anniversary of his death, courtesy)*

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...