பரிசுத்தாவியை புரிந்து கொள்வோம் -1
*பெந்தகோஸ்து நாள் திருச்சபை உருவாகின நாள்*. இயேசுநாதர் கூறியபடி உங்களை திக்கற்றவர்களாக விடேன் என்று சொன்னவர் பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார் என்ற அனுபவத்தை நாம் அப்போஸ்தலர் நடபடிக்கை இரண்டாம் அதிகாரத்தில் பார்க்கின்றோம். மேலும் சில கருத்துக்களை நாம் பார்ப்போம்.
இந்த நாளை *முழக்கத்தின் திருநாள், முன்னேற்றத்தின் திருநாள்,முழுமையின் திருநாள்* என்று அழைப்பது சிறப்பாகும்.
இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு பின்பு 40 நாட்கள் உலகத்தில் இருந்து பின்பு பரத்துக்கு ஏறினார். அவர் கூறினபடி 50 வது நாள் அன்று பரிசுத்த ஆவியை நமக்கு அனுப்பினார். பழைய ஏற்பாட்டில் பெந்தேகோஸ்தே என்னும் நாள் யூதர்களின் பஸ்கா பண்டிகைக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்கு பின்வரும் ஐம்பதாவது நாளில் கொண்டாடப்பட்டது.
*லேவியராகமம் 23. 15* வாசித்து பாருங்கள். யூதர்கள் பெந்தகோஸ்து நாளை வாரங்களின் பண்டிகையாக கொண்டாடினார்கள். *யாத்திராகமம் 34. 22 உபாகமும் 16. 9 10*. யூதர்கள் அந்நாளில் நியாயப்பிரமாணத்தை அருளினதாக நம்பினார்கள். யாத்திரையகம் 34. 22 *கோதுமை அறுப்பின் முதற்பலனை செலுத்தும் வாரங்களில் பண்டிகைகளையும் வருச முடிவிலே சேர்ப்பின் படிப்புகளும் ஆசரிக்க வேண்டும். உபாகமம் 16. 9-10* வசனங்களை வாசிக்கவும்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி பரிசுத்த ஆவியை பெற்றிருக்கிற இறை மக்களை அவருடைய வாழ்க்கையின் மூலம் எளிதாக அறிந்து கொள்ள முடியும். கோதுமையை அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதர்களின் திருவிழா. பஸ்கா திருவிழாவுக்கு பின் ஐம்பதாவது நாள் கொண்டாடப்பட்டது. ஏழு வாரங்களில் கழித்து இது கொண்டாடப்பட்டதால் இது *வாரங்களின் விழா* எனவும் அழைக்கப்பட்டது.
இஸ்ரவேலின் மூன்று முக்கிய விழாக்களில் இதுவும் ஒன்று. பஸ்கா, பெந்தகோஸ்தே திருநாள். கூடார திருவிழா. உபாகமும் 16.
*இது கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து சீனாய் மலையின் உடன்படிக்கை நாளாகவும் கொண்டாடப்பட்டது*.
இதற்காக பல நாடுகளிலிருந்து பரவியிருந்த யூதர்கள் ஒன்றாக கூடுவார்கள். இதைத்தான் *அப்போஸ்தலர் நடவடிக்கைகள் 2.1-11* வாசிக்கின்றோம்.
இது உலக அளவில் ஆத்துமாவை அறுவடை செய்யும் நாளாகவும், மேலும் பேதுருவேன் அருளுரை வாயிலாகவும் மாறுகிறது. மேலும் *பரிசுத்த ஆவியை குறித்த உருவங்கள் உண்டு*
1. *காற்று*
அப்போஸ்தல நடவடிக்கைகள் 2.2 அப்பொழுது வேகமாய் அடிக்கிற பலத்த காற்றை போல வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கம் உண்டாகி அவர்கள் உட்கார்ந்து இருந்த வீடு முழுவதையும் நிரப்பிட்டு. காற்று சுவாசிக்க மறந்தவர்கள் இறந்தவர்கள், பரிசுத்த ஆவியை பெறாதவர்கள் கிறிஸ்தவர்கள் இல்லை. காற்றை பார்க்க முடியாது பரிசுத்த ஆவியை பார்க்க முடியாது. காற்றின் செயலை உணர முடியும் பரிசுத்த ஆவின் செயல்பாட்டை உணர முடியும். காற்று தான் விரும்பிய திசையின் வீசம் அதை தடுக்க முடியாது. பரிசுத்த ஆவிக்கு தடை போட முடியாது .
2 *நெருப்பு*
அப்போஸ்தலர் நடவடிக்கைகள் 2.3 மேலும் நெருப்பு போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். நெருப்பானது அழுக்கான அனைத்தையும் சுட்டெரித்து கரைகளைப் போக்கும் அதுபோல நம்முடைய பாவ அழுக்குகளையும் தீமைகளையும் சுட்டெரித்து பரிசுத்தமாக்கும். *மத்தேயு 3.11* அவர் பரிசுத்த ஆவினாலும் அக்னி நாளும் உங்களுக்கு ஞானஸ்தானம்
3. *வெண்புறா*
பரிசுத்த ஆவி புறா வடிவில் தோன்றி அவர் மீது இறங்கியது. லூக்கா 3.22 மற்றும் மத்தேயு 3.16 ஏசு ஞானஸ்தானம் பெற்றவுடனே ஜலத்திலிருந்து கரையேறினார் வானம் திறவு உள்ளது தேவ ஆவி புறாவைப் போல இறங்கி தம் மேல் வருகிறதை கண்டார். புறாவின் உடலில் பித்தப்பை கிடையாது. பித்தப்பை கசக்கும். அதுபோல பரிசுத்த ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டவர்களுக்கு கசப்பு உணர்வு இருக்காது என்றும் இனிமையாக கடவுளுக்கு ஏற்றபடி வாழ்வார்கள். புறா அமைதி பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டவர்கள் அமைதியின் தூதராக மாற வேண்டும்.
4. *எண்ணெய்*
1 சாமுவேல் 16.13 சாமுவேல் எண்ணெய்.... எடுத்து அவனை திருப்பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. எண்ணெய் குணப்படுத்தக் கூடியது. பரிசுத்த ஆவி நம் மீது பொழிய படும்போது பழைய பாவங்களை இருந்து விடுதலை பெற்று குணமடைகிறோம். எண்ணெய் நமக்கு ஆற்றலையும் வல்லமையும் கொடுக்கிறது. அதுபோல பரிசுத்த ஆவியின் ஆற்றலையும் வளமையும் கொடுப்பார்
5. *தண்ணீர்* .
யோவான்7.38.39. என்னில் விசுவாசம் வைக்கிறவன் எவனோ அவன் உள்ளத்தில் இருந்து வேதவாக்கியம் சொல்லியபடி ஜீவ தண்ணீர் உள்ள நதிகள் பாய்ந்து ஓடும் என்றார். தம்மில் விசுவாசம் வைப்பவர்கள் பெற போகிற ஆவியானவரை குறித்து இப்படி சொன்னார்.. இந்த ஐந்து அடையாளங்களும் பொதுவாக கூறுவது உண்டு. *காற்று வீசுகிறது. தீ எரிகிறது புறா பறக்கிறது எண்ணெய் ஊடுருவுகிறது தண்ணீர் ஓடுகிறது*. எல்லாமே இயக்கம் ,சக்தி ,ஆற்றல் ,வல்லமை.
பரிசுத்த ஆவியானவர் வல்லமையாகவே சித்தரிக்கப்படுகிறார் .
இயேசுவின் பிறப்பை முன் அறிவித்த வான தூதர் மரியாளிடம். பரிசுத்த ஆவி உன் மீது வரும் உன்னத கடவுளின் வல்லமை உன் மேல் நிழலிடம் லூக்கா 1.35.
காது இல்லாமல் கேட்க முடியுமா? பரிசுத்த ஆவி இல்லாமல் கிறிஸ்தவம் ஏது? கிறிஸ்தவ வாழ்க்கை எது? . ஆவியின் வரங்கள் குறித்து *ஏசாயா 11.2 சொல்வது ஞானம்'; மெய் உணர்வு. அறிவுரைத்திறன். ஆற்றல். நுண் மதி. ஆண்டவரைப் பற்றிய அச்சம்.*
*பரிசுத்த ஆவியின் கனிகளோ 9 அன்பு மகிழ்ச்சி அமைதி பொறுமை பரிவு நன்னயம் நம்பிக்கை கனிவு தன்னடக்கம் கலாத்தியர் 5.22*
[23/05, 10:01 AM] Joshua gurukul poy: பரிசுத்த ஆவியை குறித்து மிக மிக முக்கியமானவர்கள் கூறின கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றேன்.
*மார்ட்டின் லூத்தர்* கடவுளின் பெயரில் நம்பிக்கையும் பற்று கொண்ட மக்களிடம் பரிசுத்த ஆவியானவர் இருப்பார்.
ஒருவரிடத்தில் பரிசுத்த ஆவியானவர் இருந்தால் தனிமையாக இருந்தாலும் வருத்தப்படாமலும் உபத்திரவத்தில் பொறுமையாய் இருப்பதற்கும் நன்றியோடு வாழ்வதற்கும் மனிதர்களுக்கு உதவி செய்வதற்கும் அவர்களை தூண்டிக்கொண்டே இருக்கும்.
*பில்லி கிரகாம்* அவர்கள் நான் நற்செய்தி பணியாற்றுவதன் மூலம் பலர் கிறிஸ்துவுக்குள்ளாக வந்தார்கள் என்றால் இந்தப் பணியை செய்து முடித்தது நான் அல்ல பரிசுத்த ஆவியானவர் தான் என்று கூறுவது உண்மையாகும்.
நம்மையும் பரிசுத்த ஆவியானவர் வல்லமையாக பயன்படுத்தலாம்.
*வில்லியம் ஆர்த்தர்* அவர் கூறுவது ஒரு சமயத்தில் புதிய ஏற்பாட்டில் சட்டங்களும் கோட்பாடுகளும் இருந்த போதிலும் பரிசுத்த ஆவியானவர் இல்லை என்றால் அது கிறிஸ்துமயமாக இருக்க முடியாது.
*டி எல் மோடி* அவர்கள் நான் நிச்சயமாகவே நம்புகிறேன் நம்முடைய இருதயத்தில் பெருமையும் சுயநலமும் இல்லாமல் இருந்தால் நம்முடைய இருதயத்திலே பரிசுத்த ஆவி முழுமையாக இருப்பார். ஆனால் நம்முடைய குறிக்கோள் சுயத்தை நாடியும் சிற்றின்பத்தை தேடியும் காணப்பட்டாள் பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயத்தில் காணப்பட மாட்டார். நான் நிச்சயமாகவே நம்புகிறேன் பலர் இறைவனிடத்தில் வேண்டும் பொழுது அவருடைய இருதயம் பல்வேறு எண்ணங்களால் நிரம்பி இருக்கிறது.
பரிசுத்த ஆவியானவரின் வேலை என்னவென்றால் வாழ்வளிப்பது நம்பிக்கை ஊட்டுவது விடுதலை கொடுப்பது கிறிஸ்துவுக்காக சோதனைக்குள்ளாவது உண்மைக்கு வழி நடத்துவது நம்பிக்கை உள்ளவர்களை ஆற்றுப்படுத்துவது உலக பாவத்தை கண்டிப்பது தான் பரிசுத்த ஆவியானவரின் வேலை.
*ஜான் பால்* என்பவர் பண்பாடு நன்மையாக இருக்கும் மேதைகள் திறமைசாலியாக இருப்பார்கள் நாகரிகம் ஆசிர்வாதமாக இருக்கும் கல்வி சிறப்பு வல்லமை உடையதாக தரம் ஆனாலும் நாம் அறிவுடைய பாவிகளாக இருக்க முடிகின்றது. நாம் விரும்ப வேண்டிய சிறந்த பொருள் இந்த உலகத்தில் என்னவென்றால் கடவுளுடைய சிறப்பு மிகுந்த பரிசுத்த ஆவி தான்.
*வில்லியம் பிளேக்* கவிதையாளர் சிறந்த ஓவியர் அவர் கூறுவது நான் ஒன்றும் செய்யவில்லை எல்லாவற்றையும் என் உடலில் இருந்து செய்பவர் பரிசுத்த ஆவியானவர் தான்.
ஆவிலே புதுமை அடைவோம் அருள் ஆவியிலே மூழ்கிக் கிடப்போம் கிறிஸ்துவுக்கு சான்று பகர்வோம் அவர் சாட்சிகளாய் வாழ்வை அமைப்போம் என்கின்றார்.
திருத்தூதுவர்கள் ஆவியினால் ஒன்று இணைவது முன் நான் பெரியவன் நீ பெரியவன் யார் பெரியவர் போட்டி போட்டவர்கள் எங்கு அமர வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் உயிருக்கு பயந்து ஓடியவர்கள் ஆவியினால் ஒன்று இணைந்த நாள் தான் இந்த பரிசுத்த ஆவியானவரின் தான். வீட்டை பூட்டி கதவை அடைத்திருந்த மக்கள் பயந்திருந்த மக்கள் கோழையான இவர்களை வீரனாக மாற்றிய நாள் தான் இந்த பெந்தகோஸ்தே நாள். கடவுளுடைய ஆவி நம் மீது அசைவாடும் பொழுது இவற்றில் இருந்து விடுதலை பெற்று இருளில் இருந்து விடுதலை பெற்று வெளிச்சத்திற்கு உள்ளாக நாம் வாழ முடியும்.
பெந்தகோஸ்தே நாள் திருச்சபை பிறந்தநாள். திருச்சபை வரலாற்றுக்கு அடிக்கல் நாட்டியதோடு அநேகரை திருச்சபையில் சேர்த்த நாள்.
அந்நிய மொழிகளில் பேசிய நாள். ஒருமனப்பட்டு கூடிய நாள்.
விளிம்பு நிலையில் விசுவாசத்தை நடுவில் அல்லது மையத்தில் கொண்டு வந்த நாள். கோழையான மனிதர்களை வீரமாக மாற்றிய நாள்.
தங்கள் சொத்துக்களை விற்று பொதுநலனுக்கு பயன்படுத்த வேண்டும் என்று தோன்றிய நாள். அருள் மழை எங்கும் பெய்து ஆவியின் கனிகள் நிரம்ப காணப்பட்டது. சோலையாக மாறிய நாள். சந்தோஷ அலைகள் பரவியது சமாதானம் மின்னலிட்டு பளிச்சிட்டது மகிழ்ச்சியின் பெருவெள்ளம் பெருக ஓடியது.
*டி எல் மோடி அவர்கள் பரிசுத்த ஆவியின் துணை இல்லாமல் கிறிஸ்தவ வாழ்வு வாழ்வது முயற்சிப்பது என்பது காது இல்லாமல் கேட்கவும் நுரையீரல் இல்லாமல் சுவாசிப்பதற்கும் முயற்சி செய்வதற்கு சமம்* என்கிறார்.
திருமறை வசனங்கள் பரிசுத்த ஆவியானவரை குறித்து குறிப்பிடுகிறது அவைகள் எல்லாம் நீங்கள் அறிந்தவைகள் இறுதியாக ஒரு கதையை சொல்லி முடிக்கின்றேன்.
ஒரு பெண் தன்னுடைய வாட்ச் ஓடவில்லை என்று பழுது பார்க்கும் கடைக்கு சென்று பழுது பார்க்க கொடுத்தார் அவர் சில நிமிடங்களுக்குள் உள்ளே சென்று பின் வெளியே வந்து அப் பெண்ணிடம் கடிகாரத்தை ஓடும் வேலை செய்யும் நிலையில் தந்தார். அந்தப் பெண் அவரை கேட்டார் எப்படி இவ்வளவு துரிதமாக இதை பழுது பார்க்க செய்தீர்கள் ? அதற்கு கடைக்காரர் சொன்ன பதில் புதிய பேட்டரி போடப்பட்டது அவ்வளவுதான் அந்த பெண் திரும்பவும் பேட்டரி ஆ? நான் தினமும் பேட்டரியை திருகை கொண்டவனாக இருந்தேன். இப்படித்தான் கிறிஸ்தவர்களாகிய நாமும் நம்முடன் இருக்கும் பரிசுத்த ஆவியானவரை அவரின் வல்லமையை உணராமல் நம் வாழ்வில் அங்கும் இங்கும் அவரிடத்திலும் இவரிடத்திலும் பாய்ந்து அலைந்து திரிகின்றோம் . பரிசுத்த ஆவியானவர் நம்முடைய தத்துவத்தினால் அல்ல மாறாக வல்லமையினால் அனைத்தும் செய்ய முடியும். இரண்டு இரும்பு கம்பிகளை இணைக்க கருமான் ஒன்றின் மீது ஒன்று வைத்து நிரூபித்து அடிப்பான் இரண்டும் ஒன்றாகும் ஆவியானவர் அக்கினி போன்றவர் நெருப்பில் தகாததை சுட்டெரித்து அடித்து ஆவியானவருக்குள்ளாக இணைக்கப்பட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்த கூடியவர் ஆலோசனை சொல்லக்கூடியவர் பரிசுத்தமான வாழ்க்கையை வாழ்வதற்கு உதவியாக இருப்பவர் . இந்த பரிசுத்த ஆவியானவரை பெற்று வாழ ஆண்டவர் நம்மை அறிவுறுத்துகின்றார் . பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்த நம் அனைவருக்கும் அவசியம். நாம் நம்மை முழுமையாக ஆண்டவருக்கு ஒப்படைப்போம் கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக.
ஆமென்.
இறைபணியில் . தே தானியேல் ஜெயராஜ்