Tuesday, September 3, 2024

கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று

 கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று

~~~~~~~~~~~~~


1 இராஜாக்கள் 8ம் அதிகாரம்.


1. சாலொமோன் கட்டின ஆலயத்தில்  ஆசாரியரும்,  லேவியரும் உடன்படிக்கை பெட்டியையும், ஆசரிப்பு கூடாரத்தையும்  சுமந்து கொண்டு வந்தார்கள். 8:4


பெட்டிக்கு முன் சாலொமோனும், சபையாரும் எண்ணிக்கையும், கணக்குமில்லாத  ஆடுகளையும், மாடுகளையும் பலியிட்டார்கள்.

பெட்டியை மகா பரிசுத்த ஸ்தலத்திலே கேரூபீன்களின் செட்டைகளின் கீழ் வைத்தார்கள்.‌ அந்த பெட்டியிலே  கர்த்தர்   ஓரேபிலே எழுதி கொடுத்த இரண்டு கற்பலகைகள் இருந்தன.

அப்பொழுது மேகம், மகிமை ஆலயத்தை நிரப்பிற்று.


ஆம், நம்முடைய  சரீரமாகிய ஆலயத்தில்  நாமும் வேத வசனமாகிய பெட்டியை சுமந்து,  நம்மையே ஜீவ பலியாக செலுத்தி, ஸ்தோத்திர பலிகளை ஏறெடுத்து நம் வாழ்க்கையின் முதலிடத்தில் வைத்து ஒவ்வொரு வசனத்திற்கும் கீழ்ப்படியும் போது தேவ மகிமை நமக்குள் இறங்கும்.


2. ஆலயத்திலிருந்து சாலொமோன் சபையாரை ஆசீர்வதிக்கிறான்.  8:14. ஆம், நாம் அவருடைய ஆலயமாக மாறும் போது, பிறரை ஆசீர்வதிக்க வேண்டும். 


3. சாலொமோன் கர்த்தரிடம்  நன்றி செலுத்தி, அவரை போற்றி, புகழ்ந்து விண்ணப்பம் பண்ணுகிறான். தேவரீர்  என் தகப்பனுக்கு வாக்கினால் சொன்னதை கரத்தினால் நிறைவேற்றினீர் என்றான். 


ஆம், கர்த்தர் நம்  கடந்த கால வாழ்க்கையில் செய்தவற்றை நினைவு கூர்ந்து நன்றி சொல்வோமாக.


4. பலிபீடத்தின் முன், சபையார் முன்னிலையில்  சாலொமோன் வானத்திற்கு நேராய் தன் கைகளை விரித்து விண்ணப்பம் பண்ணுகிறான்.   வானம் கர்த்தருடைய சிங்காசனம். அப்படியானால், சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பிதாவை நோக்கி, நான் ஒன்றுமில்லை, என்னால் ஒன்றும் இயலாது என கரங்களை விரித்து விண்ணப்பம் பண்ணுகிறான்.


நாமும் கூட நம் பிதாவை நோக்கி, நம்மை தாழ்த்தி, என்னால் ஒன்றும் இயலாது, உம் சித்தம் போல் என்னை நடத்தும் என ஒப்புக் கொடுத்து ஜெபிப்போம்.


5. வானாதி வானங்களும்  உம்மை  கொள்ளாதே ! என  கர்த்தரை புகழுகிறான்.  இந்த ஆலயத்திலே செய்யும் விண்ணப்பங்களுக்கெல்லாம் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக என  ஜெபிக்கிறான். 


 ஆலயமாகிய நம்மிலிருந்து கர்த்தரை புகழ்ந்து , இவ்விதமாய் ஜெபங்கள் ஏறெடுக்கப்படுவதாக.


6. இப்போது தன் விண்ணப்பங்களை எல்லாம் ஒவ்வொன்றாக ஒழுங்கு படுத்தி சாலொமோன்  ஜெபிக்கிறான்.


கர்த்தருடைய ஆலயமாகிய நாமும் கூட இவ்விதமாக வசனத்திற்கு முதலிடம் கொடுத்து,  கீழ்ப்படிந்து, பலி செலுத்தி,  அவரை  போற்றி, புகழ்ந்து, ஒவ்வொன்றாக ஜெபிக்கும் போது  கர்த்தருடைய மகிமை நமக்குள்  இறங்குவது மட்டுமல்ல, நம் விண்ணப்ங்களுக்கு நிச்சயமாகவே பதில் கிடைக்கும்.


7. நம் பிள்ளைகள் நம் வார்த்தைகளுக்கெல்லாம் கீழ்ப்படிந்து, அப்பா, அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், நீங்கள் ரொம்ப நல்லவர்கள் என புகழ்ந்து விட்டு, எனக்கு இது வேண்டும் என கேட்டால், அது நம் பிள்ளைகளுக்கு தேவையானதென்றால் நிச்சயமாக கொடுப்போம் அல்லவா?  ஆம், அவர் நம் பரம தகப்பன். நாம் அவர் பிள்ளைகள்.  ஆகவே அவர் வார்த்தைகளுக்கு, வசனங்களுக்கு நாம் முதலிடம் கொடுப்போம். பதிலை பெற்றுக் கொள்வோம். ஆமென். அல்லேலூயா.

No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...