Tuesday, November 11, 2025

தீயோனிடமிருந்து என்னை விடுவியும்


தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை அறிந்துள்ளது.

அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது.

திருவெளிப்பாடு 12:12 


பிசாசு எனக்கு வலை விரிக்கிறது.

ஆனால் கிறிஸ்து என்னை விடுவிக்கிறார். 


பிசாசு நான் பொய்களை நம்பும்படி செய்கிறது;

ஆனால் கிறிஸ்து உண்மையை வெளிப்படுத்துகிறார். 


பிசாசு என்னைச் சோதிக்கிறது;

ஆனால் கிறிஸ்து அதனை வெற்றிபெற உதவுகிறார். 


பிசாசு என்னை அச்சுறுத்துகிறது;

ஆனால் கிறிஸ்து எனக்குத் துணிவைத் தருகிறார். 

 

பிசாசு என்னைப் பலவீனப்படுத்துகிறது;

ஆனால் கிறிஸ்து என்னை வலுப்படுத்துகிறார். 


பிசாசு என்னைக் கீழே தள்ளுகிறது;

ஆனால் கிறிஸ்து என்னை தூக்கி விடுகிறார். 


பிசாசு என் வீழ்ச்சியில் மகிழ்கிறது;

ஆனால் கிறிஸ்து என்னைத் தேற்றுகிறார். 


ஆண்டவராகிய இயேசுவே,

பல சமயங்களில் நான் உமக்கு அல்லாமல், பிசாசுக்கு கீழ்ப்படிகிறேன்.

பல சமயங்களில் நான் பிசாசின் பிரதிநிதியாகிவிட்டேன்.

சில சமயங்களில் நான் தெரிந்தோ, தெரியாமலோ அண்டைவீட்டார்களுக்கும் எனக்கும் வருத்தத்தை ஏற்படுத்துகிறேன். 

என்னை  பிசாசிடமிருந்தும், அவனுடைய தீவினைகளிலிருந்தும் விடுவியும்.

பிசாசுக்கு எதிராக நான் போராடும் போது எனக்கு வெற்றி அளியும். ஆமென். 


+ பேராயர் ஞானாபரணம் ஜான்சன்

~~~~~~~~~~~~~~~~~~

*Deliver me from the Evil* 


The Devil has come down to you in great fury, knowing that his time is short (Revelation 12:12, NEB). 


The devil spreads the net,

but Christ frees me again. 


The devil makes me believe the lies, 

but Christ reveals the truth. 


The devil tempts me constantly,

but Christ helps me not to yield. 


The devil threatens me,

but Christ encourages me. 


The devil exploits my weaknesses,

but Christ strengthens me. 


The devil pushes me down, 

but Christ lifts me up. 


The devil laughs at my fall, 

but Christ comforts me. 


Lord Jesus,

many times I have obeyed the devil and not you.

Many times I have become an agent of the devil.

Sometimes knowingly and sometimes unknowingly, I have brought misery both to my neighbours and to myself.

Deliver me from the devil and his evils.

Give me also victory in my fight against the devil. Amen. 


+ Bishop Gnanabaranam Johnson

தூய மார்ட்டின் திருநாள்


நவம்பர் 11ஆம் நாள் பல கிறிஸ்தவர்கள் தூய மார்ட்டின் திருநாளைக் கொண்டாடுகின்றனர். நவம்பர் 10ஆம் நாள் பிறந்த மார்ட்டின் லுத்தர் அடுத்த நாள் திருமுழுக்குப் பெற்றார். பல குழந்தைகள் வெகு சீக்கிரத்திலேயே மரித்துப் போனதால் பெற்றோர்கள் தங்களுடைய சிறு குழந்தைகள் விரைவிலேயே திருமுழுக்கு ஆசியைப் பெற்றுக் கொள்ள விரும்பினர். 11ஆம் நாள் தூய மார்ட்டினுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாக இருந்ததால், லுத்தருக்கு மார்ட்டின் என்ற பெயர் கொடுக்கப்பட்டது.    


               மார்ட்டின் யார்? கி.பி. 316 இல் ஹங்கேரியில் புற சமயத்தைச் சேர்ந்த ஒரு உரோமானிய அதிகாரிக்கு மகனாகப் பிறந்தார். அவர் உரோம படையில் சேர்ந்து ஒரு படை வீரரானார். குளிர்காலம் ஒன்றில் அவர் ஏமியன்ஸ் (பிரான்சு) நகருக்கு வெளியே குதிரையில் சவாரி செய்து கொண்டிருந்த போது, ஓர் ஏழை பிச்சைக்காரர் மேலங்கி இல்லாமல் நடுங்கி கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர் தன்னுடைய வாளை உருவி, தன்னுடைய மேலங்கியை இரண்டு துண்டுகளாகப் பிரித்து, ஒரு பாதியை பிச்சைக்காரரிடம் கொடுத்தார். மறுநாள் இரவில் கிறிஸ்து மார்ட்டினுடைய மேலங்கியை அணிந்து அவருக்கு தரிசனத்தில் தோன்றி கூறினார்: "இன்னும் திருமுழுக்குப் பெறாத மார்ட்டின் அவருடைய மேலங்கியின் ஒரு பகுதியை எனக்குக் கொடுத்துள்ளார்." விரைவில் மார்ட்டின் இராணுவத்தை விட்டு விலகினார். திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆயராகவும் பின்னர் தூர் (Tours) நகரத்தின் பேராயராகவும் ஆனார். அவரைப் பற்றிய பல வியத்தகு செயல்கள் பதிவாகி, அவர் புனிதர் பட்டம் பெற்றார். அவருடைய பல செயல்கள் மறந்து விட்டன. ஆனால் அவரது மேலங்கியைப் பிரித்து பிச்சைக்காரருடன் பகிர்ந்து கொண்ட இரக்கச் செயல் மறக்க முடியாத ஒரு கருணை செயலாகிவிட்டது. அவர் கிறிஸ்துவின் கட்டளையை நிறைவேற்றினார். "நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்." அன்பிற்கு ஓர் எடுத்துக்காட்டாக கலைஞர்கள் அந்தக் காட்சியை ஓவியமாக வரைவதும், சிற்பமாக செதுக்கியும் உள்ளனர். கிழக்கு ஜெர்மனியில் பல நகரங்களில் சிறு பிள்ளைகள் மாலையில் தாங்களே சுயமாக உருவாக்கிய விளக்குகளுடன் பாடல்களைப் பாடி சுற்றி வருவார்கள்.  


லுத்தர் மடலாயத்திற்குள் நுழைந்த எர்பர்ட் (Erfurt) என்ற இடத்தில் சிறு பிள்ளைகள் சந்தை கூடும் இடத்தில் கூடினர்.


அக்கூட்டத்தில் உரோமக் கத்தோலிக்கப் பேராயர் புனித மார்ட்டினைப் பற்றியும், லுத்தரன் பேராயர் மார்ட்டின் லுத்தரைப் பற்றியும், மாநகராட்சி மன்ற தலைவர் மார்ட்டின் லுத்தர் கிங்கைப் பற்றியும் பேசினார்கள் என்று உள்ளூர் ஆயர் என்னிடம் கூறினார். 


புனித மார்ட்டின்,மார்ட்டின் லுத்தர், மார்ட்டின் லுத்தர் கிங் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய மூவர். புனித மார்ட்டின் திருநாளன்று அவர்களை நினைவு கூருவது தகுதியானது. 


மறைதிரு.அறிவர்.சீபெர்ட் ஜான்சன்

Current Post

தீயோனிடமிருந்து என்னை விடுவியும்

தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை அறிந்துள்ளது. அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது. திருவெளிப்பாடு 12:12  பிசாச...