Wednesday, May 24, 2023

பரிசுத்தாவியை புரிந்து கொள்வோம்

 பரிசுத்தாவியை புரிந்து கொள்வோம் -1


*பெந்தகோஸ்து நாள் திருச்சபை உருவாகின நாள்*. இயேசுநாதர் கூறியபடி உங்களை திக்கற்றவர்களாக விடேன் என்று சொன்னவர் பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார் என்ற அனுபவத்தை நாம் அப்போஸ்தலர் நடபடிக்கை இரண்டாம் அதிகாரத்தில் பார்க்கின்றோம். மேலும் சில கருத்துக்களை நாம் பார்ப்போம். 


இந்த நாளை *முழக்கத்தின் திருநாள், முன்னேற்றத்தின் திருநாள்,முழுமையின் திருநாள்* என்று அழைப்பது சிறப்பாகும். 


இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு பின்பு 40 நாட்கள் உலகத்தில் இருந்து பின்பு பரத்துக்கு ஏறினார். அவர் கூறினபடி 50 வது நாள் அன்று பரிசுத்த ஆவியை நமக்கு அனுப்பினார். பழைய ஏற்பாட்டில் பெந்தேகோஸ்தே என்னும் நாள் யூதர்களின் பஸ்கா பண்டிகைக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்கு பின்வரும் ஐம்பதாவது நாளில் கொண்டாடப்பட்டது.  


*லேவியராகமம் 23. 15* வாசித்து பாருங்கள். யூதர்கள் பெந்தகோஸ்து நாளை வாரங்களின் பண்டிகையாக கொண்டாடினார்கள். *யாத்திராகமம் 34. 22 உபாகமும் 16. 9 10*. யூதர்கள் அந்நாளில் நியாயப்பிரமாணத்தை அருளினதாக நம்பினார்கள். யாத்திரையகம் 34. 22 *கோதுமை அறுப்பின் முதற்பலனை செலுத்தும் வாரங்களில் பண்டிகைகளையும் வருச முடிவிலே சேர்ப்பின் படிப்புகளும் ஆசரிக்க வேண்டும். உபாகமம் 16. 9-10* வசனங்களை வாசிக்கவும். 


அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி பரிசுத்த ஆவியை பெற்றிருக்கிற இறை மக்களை அவருடைய வாழ்க்கையின் மூலம் எளிதாக அறிந்து கொள்ள முடியும். கோதுமையை அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதர்களின் திருவிழா.  பஸ்கா திருவிழாவுக்கு பின் ஐம்பதாவது நாள் கொண்டாடப்பட்டது.  ஏழு வாரங்களில் கழித்து இது கொண்டாடப்பட்டதால் இது *வாரங்களின் விழா* எனவும் அழைக்கப்பட்டது. 


இஸ்ரவேலின் மூன்று முக்கிய விழாக்களில் இதுவும் ஒன்று. பஸ்கா, பெந்தகோஸ்தே திருநாள். கூடார திருவிழா. உபாகமும் 16. 


*இது கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து சீனாய் மலையின் உடன்படிக்கை நாளாகவும் கொண்டாடப்பட்டது*. 

 இதற்காக பல நாடுகளிலிருந்து பரவியிருந்த யூதர்கள் ஒன்றாக கூடுவார்கள். இதைத்தான் *அப்போஸ்தலர் நடவடிக்கைகள் 2.1-11*  வாசிக்கின்றோம். 

இது உலக அளவில் ஆத்துமாவை அறுவடை செய்யும் நாளாகவும், மேலும் பேதுருவேன் அருளுரை வாயிலாகவும் மாறுகிறது. மேலும் *பரிசுத்த ஆவியை குறித்த உருவங்கள் உண்டு*


1. *காற்று* 


அப்போஸ்தல நடவடிக்கைகள் 2.2 அப்பொழுது வேகமாய் அடிக்கிற பலத்த காற்றை போல வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கம் உண்டாகி அவர்கள் உட்கார்ந்து இருந்த வீடு முழுவதையும் நிரப்பிட்டு. காற்று சுவாசிக்க மறந்தவர்கள் இறந்தவர்கள், பரிசுத்த ஆவியை பெறாதவர்கள் கிறிஸ்தவர்கள் இல்லை.  காற்றை பார்க்க முடியாது பரிசுத்த ஆவியை பார்க்க முடியாது. காற்றின் செயலை உணர முடியும் பரிசுத்த ஆவின் செயல்பாட்டை உணர முடியும். காற்று தான் விரும்பிய திசையின் வீசம் அதை தடுக்க முடியாது.  பரிசுத்த ஆவிக்கு தடை போட முடியாது . 



2 *நெருப்பு* 


அப்போஸ்தலர் நடவடிக்கைகள் 2.3 மேலும் நெருப்பு போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். நெருப்பானது அழுக்கான அனைத்தையும் சுட்டெரித்து கரைகளைப் போக்கும் அதுபோல நம்முடைய பாவ அழுக்குகளையும் தீமைகளையும் சுட்டெரித்து பரிசுத்தமாக்கும். *மத்தேயு 3.11* அவர் பரிசுத்த ஆவினாலும் அக்னி நாளும் உங்களுக்கு ஞானஸ்தானம் 


3. *வெண்புறா* 


பரிசுத்த ஆவி புறா வடிவில் தோன்றி அவர் மீது இறங்கியது. லூக்கா 3.22 மற்றும் மத்தேயு 3.16 ஏசு ஞானஸ்தானம் பெற்றவுடனே ஜலத்திலிருந்து கரையேறினார் வானம் திறவு உள்ளது தேவ ஆவி புறாவைப் போல இறங்கி தம் மேல் வருகிறதை கண்டார். புறாவின் உடலில் பித்தப்பை கிடையாது. பித்தப்பை கசக்கும். அதுபோல பரிசுத்த ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டவர்களுக்கு கசப்பு உணர்வு இருக்காது என்றும் இனிமையாக கடவுளுக்கு ஏற்றபடி வாழ்வார்கள். புறா அமைதி பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டவர்கள் அமைதியின் தூதராக மாற வேண்டும். 


4. *எண்ணெய்* 


 1 சாமுவேல் 16.13 சாமுவேல் எண்ணெய்.... எடுத்து அவனை திருப்பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. எண்ணெய் குணப்படுத்தக் கூடியது. பரிசுத்த ஆவி நம் மீது பொழிய படும்போது பழைய பாவங்களை இருந்து விடுதலை பெற்று குணமடைகிறோம். எண்ணெய் நமக்கு ஆற்றலையும் வல்லமையும் கொடுக்கிறது. அதுபோல பரிசுத்த ஆவியின் ஆற்றலையும் வளமையும் கொடுப்பார் 


5. *தண்ணீர்* . 


யோவான்7.38.39. என்னில் விசுவாசம் வைக்கிறவன் எவனோ அவன் உள்ளத்தில் இருந்து வேதவாக்கியம் சொல்லியபடி ஜீவ தண்ணீர் உள்ள நதிகள் பாய்ந்து ஓடும் என்றார். தம்மில் விசுவாசம் வைப்பவர்கள் பெற போகிற ஆவியானவரை குறித்து இப்படி சொன்னார்.. இந்த ஐந்து அடையாளங்களும் பொதுவாக கூறுவது உண்டு. *காற்று வீசுகிறது. தீ எரிகிறது புறா பறக்கிறது எண்ணெய் ஊடுருவுகிறது தண்ணீர் ஓடுகிறது*. எல்லாமே இயக்கம் ,சக்தி ,ஆற்றல் ,வல்லமை.  

 பரிசுத்த ஆவியானவர் வல்லமையாகவே சித்தரிக்கப்படுகிறார் .


இயேசுவின் பிறப்பை முன் அறிவித்த வான தூதர் மரியாளிடம். பரிசுத்த ஆவி உன் மீது வரும் உன்னத கடவுளின் வல்லமை உன் மேல் நிழலிடம் லூக்கா 1.35. 


காது இல்லாமல் கேட்க முடியுமா? பரிசுத்த ஆவி இல்லாமல் கிறிஸ்தவம் ஏது? கிறிஸ்தவ வாழ்க்கை எது? . ஆவியின் வரங்கள் குறித்து *ஏசாயா 11.2 சொல்வது ஞானம்'; மெய் உணர்வு. அறிவுரைத்திறன். ஆற்றல். நுண் மதி. ஆண்டவரைப் பற்றிய அச்சம்.*  


*பரிசுத்த ஆவியின் கனிகளோ 9 அன்பு மகிழ்ச்சி அமைதி பொறுமை பரிவு நன்னயம் நம்பிக்கை கனிவு தன்னடக்கம் கலாத்தியர் 5.22*

[23/05, 10:01 AM] Joshua gurukul poy: பரிசுத்த ஆவியை குறித்து மிக மிக முக்கியமானவர்கள் கூறின கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றேன்.


*மார்ட்டின் லூத்தர்* கடவுளின் பெயரில் நம்பிக்கையும் பற்று கொண்ட மக்களிடம் பரிசுத்த ஆவியானவர் இருப்பார். 


ஒருவரிடத்தில் பரிசுத்த ஆவியானவர் இருந்தால் தனிமையாக இருந்தாலும் வருத்தப்படாமலும் உபத்திரவத்தில் பொறுமையாய் இருப்பதற்கும் நன்றியோடு வாழ்வதற்கும் மனிதர்களுக்கு உதவி செய்வதற்கும் அவர்களை தூண்டிக்கொண்டே இருக்கும்.  


*பில்லி கிரகாம்* அவர்கள் நான் நற்செய்தி பணியாற்றுவதன் மூலம் பலர் கிறிஸ்துவுக்குள்ளாக வந்தார்கள் என்றால் இந்தப் பணியை செய்து முடித்தது நான் அல்ல பரிசுத்த ஆவியானவர் தான் என்று கூறுவது உண்மையாகும். 

 நம்மையும் பரிசுத்த ஆவியானவர் வல்லமையாக பயன்படுத்தலாம். 


*வில்லியம் ஆர்த்தர்* அவர் கூறுவது ஒரு சமயத்தில் புதிய ஏற்பாட்டில் சட்டங்களும் கோட்பாடுகளும் இருந்த போதிலும் பரிசுத்த ஆவியானவர் இல்லை என்றால் அது கிறிஸ்துமயமாக இருக்க முடியாது. 


*டி எல் மோடி* அவர்கள் நான் நிச்சயமாகவே நம்புகிறேன் நம்முடைய இருதயத்தில் பெருமையும் சுயநலமும் இல்லாமல் இருந்தால் நம்முடைய இருதயத்திலே பரிசுத்த ஆவி முழுமையாக இருப்பார். ஆனால் நம்முடைய குறிக்கோள் சுயத்தை நாடியும் சிற்றின்பத்தை தேடியும் காணப்பட்டாள் பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயத்தில் காணப்பட மாட்டார். நான் நிச்சயமாகவே நம்புகிறேன் பலர் இறைவனிடத்தில் வேண்டும் பொழுது அவருடைய இருதயம் பல்வேறு எண்ணங்களால் நிரம்பி இருக்கிறது. 


பரிசுத்த ஆவியானவரின் வேலை என்னவென்றால் வாழ்வளிப்பது நம்பிக்கை ஊட்டுவது விடுதலை கொடுப்பது கிறிஸ்துவுக்காக சோதனைக்குள்ளாவது உண்மைக்கு வழி நடத்துவது நம்பிக்கை உள்ளவர்களை ஆற்றுப்படுத்துவது உலக பாவத்தை கண்டிப்பது தான் பரிசுத்த ஆவியானவரின் வேலை. 


*ஜான் பால்* என்பவர் பண்பாடு நன்மையாக இருக்கும் மேதைகள் திறமைசாலியாக இருப்பார்கள் நாகரிகம் ஆசிர்வாதமாக இருக்கும் கல்வி சிறப்பு வல்லமை உடையதாக தரம் ஆனாலும் நாம் அறிவுடைய பாவிகளாக இருக்க முடிகின்றது. நாம் விரும்ப வேண்டிய சிறந்த பொருள் இந்த உலகத்தில் என்னவென்றால் கடவுளுடைய சிறப்பு மிகுந்த பரிசுத்த ஆவி தான். 


*வில்லியம் பிளேக்* கவிதையாளர் சிறந்த ஓவியர் அவர் கூறுவது நான் ஒன்றும் செய்யவில்லை எல்லாவற்றையும் என் உடலில் இருந்து செய்பவர் பரிசுத்த ஆவியானவர் தான். 


ஆவிலே புதுமை அடைவோம் அருள் ஆவியிலே மூழ்கிக் கிடப்போம் கிறிஸ்துவுக்கு சான்று பகர்வோம் அவர் சாட்சிகளாய் வாழ்வை அமைப்போம் என்கின்றார். 


திருத்தூதுவர்கள் ஆவியினால் ஒன்று இணைவது முன் நான் பெரியவன் நீ பெரியவன் யார் பெரியவர் போட்டி போட்டவர்கள் எங்கு அமர வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் உயிருக்கு பயந்து ஓடியவர்கள் ஆவியினால் ஒன்று இணைந்த நாள் தான் இந்த பரிசுத்த ஆவியானவரின் தான். வீட்டை பூட்டி கதவை அடைத்திருந்த மக்கள் பயந்திருந்த மக்கள் கோழையான இவர்களை வீரனாக மாற்றிய நாள் தான் இந்த பெந்தகோஸ்தே நாள். கடவுளுடைய ஆவி நம் மீது அசைவாடும் பொழுது இவற்றில் இருந்து விடுதலை பெற்று இருளில் இருந்து விடுதலை பெற்று வெளிச்சத்திற்கு உள்ளாக நாம் வாழ முடியும். 

பெந்தகோஸ்தே நாள் திருச்சபை பிறந்தநாள். திருச்சபை வரலாற்றுக்கு அடிக்கல் நாட்டியதோடு அநேகரை திருச்சபையில் சேர்த்த நாள். 

அந்நிய மொழிகளில் பேசிய நாள். ஒருமனப்பட்டு கூடிய நாள். 

விளிம்பு நிலையில் விசுவாசத்தை நடுவில் அல்லது மையத்தில் கொண்டு வந்த நாள். கோழையான மனிதர்களை வீரமாக மாற்றிய நாள். 

தங்கள் சொத்துக்களை விற்று பொதுநலனுக்கு பயன்படுத்த வேண்டும் என்று தோன்றிய நாள். அருள் மழை எங்கும் பெய்து ஆவியின் கனிகள் நிரம்ப காணப்பட்டது. சோலையாக மாறிய நாள். சந்தோஷ அலைகள் பரவியது சமாதானம் மின்னலிட்டு பளிச்சிட்டது மகிழ்ச்சியின் பெருவெள்ளம் பெருக ஓடியது. 

*டி எல் மோடி அவர்கள் பரிசுத்த ஆவியின் துணை இல்லாமல் கிறிஸ்தவ வாழ்வு வாழ்வது முயற்சிப்பது என்பது காது இல்லாமல் கேட்கவும் நுரையீரல் இல்லாமல் சுவாசிப்பதற்கும் முயற்சி செய்வதற்கு சமம்* என்கிறார். 


திருமறை வசனங்கள் பரிசுத்த ஆவியானவரை குறித்து குறிப்பிடுகிறது அவைகள் எல்லாம் நீங்கள் அறிந்தவைகள் இறுதியாக ஒரு கதையை சொல்லி முடிக்கின்றேன். 


ஒரு பெண் தன்னுடைய வாட்ச் ஓடவில்லை என்று பழுது பார்க்கும் கடைக்கு சென்று பழுது பார்க்க கொடுத்தார் அவர் சில நிமிடங்களுக்குள் உள்ளே சென்று பின் வெளியே வந்து அப் பெண்ணிடம் கடிகாரத்தை ஓடும் வேலை செய்யும் நிலையில் தந்தார். அந்தப் பெண் அவரை கேட்டார் எப்படி இவ்வளவு துரிதமாக இதை பழுது பார்க்க செய்தீர்கள் ? அதற்கு கடைக்காரர் சொன்ன பதில் புதிய பேட்டரி போடப்பட்டது அவ்வளவுதான் அந்த பெண் திரும்பவும் பேட்டரி ஆ? நான் தினமும் பேட்டரியை திருகை கொண்டவனாக இருந்தேன். இப்படித்தான் கிறிஸ்தவர்களாகிய நாமும் நம்முடன் இருக்கும் பரிசுத்த ஆவியானவரை அவரின் வல்லமையை உணராமல் நம் வாழ்வில் அங்கும் இங்கும் அவரிடத்திலும் இவரிடத்திலும் பாய்ந்து அலைந்து திரிகின்றோம் . பரிசுத்த ஆவியானவர் நம்முடைய தத்துவத்தினால் அல்ல மாறாக வல்லமையினால் அனைத்தும் செய்ய முடியும். இரண்டு இரும்பு கம்பிகளை இணைக்க கருமான் ஒன்றின் மீது ஒன்று வைத்து நிரூபித்து அடிப்பான் இரண்டும் ஒன்றாகும் ஆவியானவர் அக்கினி போன்றவர் நெருப்பில் தகாததை சுட்டெரித்து அடித்து ஆவியானவருக்குள்ளாக இணைக்கப்பட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்த கூடியவர் ஆலோசனை சொல்லக்கூடியவர் பரிசுத்தமான வாழ்க்கையை வாழ்வதற்கு உதவியாக இருப்பவர் . இந்த பரிசுத்த ஆவியானவரை பெற்று வாழ ஆண்டவர் நம்மை அறிவுறுத்துகின்றார் . பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்த நம் அனைவருக்கும் அவசியம். நாம் நம்மை முழுமையாக ஆண்டவருக்கு ஒப்படைப்போம் கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக. 


ஆமென். 


இறைபணியில் . தே தானியேல் ஜெயராஜ்

அமைதி - Peace

 *அமைதி என்றால் என்ன*?


*ஒரு குட்டி கதை* .


நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.


ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். 


இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.


மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். 


அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். 


ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். 


ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. 


மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது.


மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். 


பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. 


இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர்.


ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. 


அதுமட்டுமா இடியுடன் 

மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. 


இது அமைதியே அல்ல. 


சற்று உற்று பார்க்கும்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது. 


இந்த ஓவியத்தை வரைந்தது யார்?


சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்படுகிறார். 


இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. 


ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை… கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை…. 


ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?.என்று மன்னன் கேட்டான்.


அதற்கு ஓவியத்தை வரைந்தவர் மன்னா சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல..., இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி! என்று கூறினார்.


அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் 

இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது!! என்றார்.


சபாஷ்… அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம் .


கைதட்டிய மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்.


அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித 

பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல.


அது ஒரு வாழ்க்கையும் அல்ல.


 ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, *நிச்சயம் ஒரு நாள் விடியும்,* என்று விடாமுயற்சியுடன் தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி.


எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும்,எனக்கு நேரும் மான அவமானங்களை விட நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்கு பெரிது என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி.


சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி.

Monday, May 1, 2023

Useful Tips

 🔴 வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்!!!


*கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.


*இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.


*தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும்.


*கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்துவிடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.


*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.


*கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.


*வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.


*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது


.*பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.


*கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது


*காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும்.


*மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.


*இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.


*உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்


*வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.


*சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.


*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். *ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும்.


*காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.


*முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். *காய்கறிகள் வறுக்கும்போது எண்ணெய் சூடாகும் போது சிறிது சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.


*இட்லி சுடும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் கெடாமலும் இருக்கும்


. *சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும


*கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.


*உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபுள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.


*சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ள பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.


*காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.


*அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.


*சேனைகிழங்கு சீக்கிரம் வேக வைப்பதற்கு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்


*புளிகுழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும்.


*இறைச்சியை வேக வைக்கும் போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். *எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.


*சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.


*தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்


*காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.


*ரவா உப்புமா அதிகமாகி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.


*ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.


*கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.


*தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.


*தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது.


*வாழைப்பூ வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கரையும் பிடிக்காது. அதில் உள்ள துவர்ப்பும் நீங்கி விடும்.


*மழைகாலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல் இருக்கும்.


*நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.


*இடியாப்பம் செய்து மீந்து விட்டால் அதனை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்


. *பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்...

Thursday, April 13, 2023

தமிழில் உள்ள 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு

 #தமிழில் உள்ள 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு!!


தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன.


 அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்.

 

அ -----> எட்டு

ஆ -----> பசு

ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி

உ -----> சிவன்

ஊ -----> தசை, இறைச்சி

ஏ -----> அம்பு

ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு

ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை

கா -----> சோலை, காத்தல்

கூ -----> பூமி, கூவுதல்

கை -----> கரம், உறுப்பு

கோ -----> அரசன், தலைவன், இறைவன்

சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்

சீ -----> இகழ்ச்சி, திருமகள்

சே -----> எருது, அழிஞ்சில் மரம்

சோ -----> மதில்

தா -----> கொடு, கேட்பது

தீ -----> நெருப்பு

து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு

தூ -----> வெண்மை, தூய்மை

தே -----> நாயகன், தெய்வம்

தை -----> மாதம்

நா -----> நாக்கு

நீ -----> நின்னை

நே -----> அன்பு, நேயம்

நை -----> வருந்து, நைதல்

நொ -----> நொண்டி, துன்பம்

நோ -----> நோவு, வருத்தம்

நௌ -----> மரக்கலம்

பா -----> பாட்டு, நிழல், அழகு

பூ -----> மலர்

பே -----> மேகம், நுரை, அழகு

பை -----> பாம்புப் படம், பசுமை, உறை

போ -----> செல்

மா -----> மாமரம், பெரிய, விலங்கு

மீ -----> ஆகாயம், மேலே, உயரம்

மு -----> மூப்பு

மூ -----> மூன்று

மே -----> மேன்மை, மேல்

மை -----> அஞ்சனம், கண்மை, இருள்

மோ -----> முகர்தல், மோதல்

யா -----> அகலம், மரம்

வா -----> அழைத்தல்

வீ -----> பறவை, பூ, அழகு

வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்

வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

Tuesday, March 28, 2023

குருக்கள் ஏன்? திருமணம் செய்ய கூடாது?

 குருக்கள் ஏன்? திருமணம் செய்ய கூடாது… 

அண்மையில் வெளிவந்த ஒரு செய்தியானது தமிழ்நாட்டில் வாழும் கத்தோலிக்க மதத்தினரை தலைகுனிய வைத்தது. 


கத்தோலிக்கர் அல்லாத தமிழர்கள் கத்தோலிக்க குருக்கள் குறித்தும் நம் மதத்தின் அருட்சாதனமான ஒப்புரவு (பாவசங்கீர்த்தனம்) குறித்து நக்கலாகவும் பேசுகின்றனர். 


ஏன் கத்தோலிக்கர்கள் பலருமே ஒப்புரவு அருட்சாதனம் குறித்து, ஐயப்பாடு கொண்டிருக்கலாம். அதிலும் குறிப்பாக கத்தோலிக்க குருக்கள் அனைவருமே தவறானவர்கள் என்பது போன்ற பொதுப்புத்தியும் கட்டமைக்கப்பட்டு வருகிறது.


இது குறித்து எனது கருத்தினைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.


முதலில் ஒன்றைக் கூற விரும்புகிறேன். தவறிழைக்கும் குருக்கள் எண்ணிக்கையில் குறைவே. தமிழ்நாட்டில் உண்மையான ஆன்மீக உணர்வோடு, இறைப்பணி செய்யும் பல குருக்களும், கன்னியர்களும் உள்ளனர். அவர்களை தமிழ்நாட்டிற்கு எடுத்துரைப்போம். 


அவர்கள் செய்யும் பணிகளை ஊடகங்களில் வரச் செய்வோம். அவர்களால் பலனடைந்த மக்களை (ஏதிலிகள்/நோயாளிகள்/கைவிடப்பட்ட முதியவர்கள்/ஒடுக்கப்பட்டவர்கள்/பழங்குடியினர்) மக்களுக்கு காட்டுவோம். 


நல்ல குருக்களுக்கு‌ விருதுகள்‌, பாராட்டுகள் வழங்குவோம்.‌ அவர்களை உற்சாகப்படுத்துவோம். கடந்த 500 ஆண்டுகளாக கத்தோலிக்க குருக்கள் தமிழர்களுக்குச் செய்துள்ள தொண்டினை கட்டுரையாக எழுதுவோம்.‌


குறிப்பாக இயேசு சபைக் குருக்கள் உயிரைப் பணயம் வைத்து செய்துள்ள பணிகளை விவிரிப்போம். அவர்களால் இந்த உலகமே பயனடைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.‌ இது நாம் செய்ய‌ வேண்டிய முதல் பணி.


இரண்டாவதாக நான் கூறவிரும்புவது இதுவே.


முதலில் நமது மதம் கத்தோலிக்கம் என்பதை நாம் உணர வேண்டும். நாம் கத்தோலிக்க திருச்சபைக்கு கட்டுப்பட்டவர்கள். நமது கத்தோலிக்கத் திருச்சபையானது, விவிலியம் மற்றும் மரபு என்கிற இரு தூண்களில் நிற்கிறது. இதன் வயது ஈராயிரம் ஆண்டுகள்.


கத்தோலிக்க திருச்சபைக்கு வேறோரு பெயரும் உண்டு. அது "கிறிஸ்துவின் மறையுடல்" என்பதாகும்.


கத்தோலிக்க மதத்தின் கொடை என்னவென்றால், திருப்பலியே. இதனை ஒவ்வொரு கத்தோலிக்கர்களும் உணர வேண்டும்.


பாஸ்கா என்பது இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு என்ற மூன்று நிகழ்வுகளையும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவது. இந்த பாஸ்கா மறைபொருளின் கொண்டாட்டமே திருப்பலிக் கொண்டாட்டம் எனப்படும். 


ஒவ்வொரு திருப்பலியிலும் இயேசு வெறும் அப்பத்தை தனது உடலாகவும், வெறும் இரசத்தை தனது அரத்தமாகவும் மாற்றுகிறார். இது ஒரு அதிசய நிகழ்வு. இது ஒவ்வொரு நாளும் உலகில் உள்ள அனைத்து கத்தோலிக்க கோயில்களிலும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.


திருப்பலி என்பது கிறிஸ்துவின் குருத்துவப்பணியின் தொடர்ச்சி. ஆகையால் ஒரு குருவின் தலையாயப் பணி என்பது தினமும் திருப்பலி நிறைவேற்றுவது ஆகும்.‌ அவரது இரண்டாவது பணியே மக்கள் தொண்டு ஆகும். 


அனைத்து நாள்களிலோ அல்லது ஞாயிற்றுக்கிழமையாவது திருப்பலியில் பங்கேற்பது ஒவ்வொரு கத்தோலிக்கரின் கடமை.


இது கிறித்துவின் இரண்டாம் வருகை வரையிலும் நடைபெற வேண்டும்.


இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்பலியை தனது வாழ்நாள் முழுமையும் ஒப்புக்கொடுக்க ஒருவர் முன்வருகிறார் என்றால் அவர் இல்லற வாழ்வில் தன்னை இணைத்துக் கொள்ள இயலாது. ஒரு உறையில் இரு வாள்கள் வைக்க முடியாது.


அதிலும் ஒரு குருவானவர், தனது பங்கிலுள்ள மக்களையும் வழிநடத்திச் செல்லும் பொறுப்பினை ஏற்கிறார். 


அத்தகைய குரு திருமணம் செய்து குடும்பத்தைக் கொண்டிருந்தால், அவர் குடும்பத்தைப் பார்ப்பாரா? திருச்சபையைப் பார்ப்பாரா?


கண்டிப்பாக குடும்ப நலனே ஒங்கும். தனது குடும்பத்திற்கு பணம் சம்பாதிக்க, திருச்சபையில் பிரிவினைகளை ஏற்படுத்துவர். 


புதிய புதிய இறையியல் கோட்பாடுகளை உருவாக்குவர். ஈராயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் கத்தோலிக்க மதம், சுக்கு நூறாக உடையும். 


இது ஏதோ எனது கற்பனை என்று கருத வேண்டாம். லூத்தரும், எட்டாம் ஹென்றியும் உருவாக்கிய மதங்கள் இன்று ஆயிரக்கணக்கில் உடைபட்டுக் கொண்டே போகிறதே? அதற்கு காரணம், அங்குள்ள போதகர்களுக்கு குடும்பம் என்பது இருப்பதாலேயே. (விவிலியம் மட்டுமே என்கிற அவர்களின் கோட்பாடும் ஒரு காரணம்).


அப்படி என்றால் கத்தோலிக்க மதம் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் துறவறம் என்கிற அமைப்பு வேண்டும். திருச்சபையின் அதிகாரங்கள் அவர்களிடமே இருக்க வேண்டும்.‌ 


அவர்களே நமது ஏழு அருட்சாதனங்களையும் நிறைவேற்ற வேண்டும். நமது ஞானத்தந்தையர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும். இதுவரையில் இந்நிலையே உள்ளது. இது இன்னும் தொடர வேண்டும்.


அப்படி என்றால் குருக்களில் சிலர் தவறு செய்கின்றனரே? அவர்களால் நமது கத்தோலிக்க மதம் இழிவுபடுத்தப்படுகிறதே என்று கேட்கலாம். 


குருக்களோ, கன்னியர்களோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்லர். அவர்கள் நம்மிடமிருந்து சென்றவர்களே. அவர்கள் பாவ வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றால், அதற்கு நாமே பொறுப்பு. நாமே அவர்களை உருவாக்குகிறோம். அவர்களைக் குற்றச்சாட்டும் முன், நம்மை ஒரு முறை பார்ப்போம்.


நாம் பணத்தின் பின் அலைகிறோமோ? நாம் பிறர் மீது பொறாமை கொள்கிறோமா? நாம் சினிமா, நாடகம், கிரிக்கெட், மொபைல் என்று நேரத்தை வீணடிக்கிறோமோ? நாம் அடுத்த பெண்களை/ஆண்களை தவறான பார்வையில் பார்க்கிறோமா? 


நாம் தனியாக இருக்கும் போது, அசிங்கமான படங்களைப் பார்க்கிறோமா? நாம் பழி உணர்ச்சியில் வாழ்கிறோமா? நாம் மிதமிஞ்சிய அளவு உணவு உண்கிறோமா? நாக்கை கட்டுப்படுத்தி வாழ்கிறோமா? வீடு, கார், ஆடைகள், திருமணம் என்று அடுத்தவரோடு போட்டி போட்டு செலவு செய்கிறோமா? மொத்தத்தில் நமது ஊனியல்பின் நாட்டங்களுக்கு அடிமையாக வாழ்கிறோமா? 


இப்படி நாமே பெரும்பாவத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம்! அப்படி இருக்கையில் நம்மால் எப்படி துறவற சபையினரை நோக்கி குற்றம் சுமத்த முடியும்? நம்மைப் போல் தானே அவர்களும் இருப்பர்.


முன்பெல்லாம் சாமியார்கள் ஒழுக்கமான வாழ்வு வாழ்ந்தார்கள் என்றால், அன்றைய கத்தோலிக்கர்களும் ஒழுக்கமான வாழ்வு வாழ்ந்தனர். இன்று சாமியார்கள் ஒழுக்கமான வாழ்வு வாழவில்லை என்றால்,‌ நாம் ஒழுங்கான வாழ்வு வாழவில்லை என்பதுதானே காரணம்?


ஆகையால் குருக்களை குற்றஞ்சாட்டுவதை விடுத்து, நாம் திருந்தி வாழ முயல்வோம். இல்லறத்தில் துறவற வாழ்வை வாழ்வதே நமக்கான ஒரே வழி. அளவோடு உண்போம். எளிமையான‌ வாழ்வு வாழ்வோம். 


கற்போடு இல்லறத்தைப் பேணுவோம்.‌சினம் தவிர்ப்போம். பொறாமை, பாலியல் எண்ணங்கள், பழி உணர்வு தவிர்ப்போம். பணத்தின் பின் ஒட வேண்டாம். பிறரன்புப் பணிகள் செய்வோம்.  


கோயிலுக்குச் செல்லும் போது, கண்ணியமான ஆடைகளை அணிவோம். குருக்களோடு‌ பெண்கள் பேசும் போது, தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்போம். அவர்களை நாம் நமது தந்தையாகவே பார்க்கிறோம் என்பதை குருக்களுக்கு உணர்த்துவோம். குருக்களுக்கு தகுந்த மரியாதையை அளிப்போம். 


இதுவே நமது மதத்திற்கு நல்ல குருக்களையும், கன்னியர்களையும் பெற்றுத் தரும். ஒரு குருவோ, கன்னியரோ தவறு செய்தால், அவர்களுக்காக செபம் செய்வோம்.


இறை அழைத்தல் மிகவும் குறைந்து போய்விட்ட காலம் இது. இன்றையச் சூழலில் எந்த இளைஞரும் துறவற அழைப்பிற்கு செவி கொடுப்பதில்லை. குருக்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது. இதுதான் இன்றைய நிலை.


இப்படயானச் சூழலில் இருக்கும் குருக்களையும் விரட்டி விட்டால், நமது கத்தோலிக்கச் சமையம் அழிந்து விடும். நமது கத்தோலிக்க மதத்தைத் தாங்குவது குருக்களே என்பதை‌ மனதில் நிறுத்துவோம். அவர்களுக்காகச் செபிப்போம்.

செபமாலை என்றுமே கத்தோலிக்க மதத்தைக் காத்து வந்துள்ளது.‌ ஆகையால் நாம் தினமும் செபமாலை செய்வோம். அதில் ஒரு பத்து மணியை துறவிகளுக்காக ஒப்புக் கொடுப்போம்.


இதுவே கத்தோலிக்க மதம் தழைத்தோங்க நமக்கு உள்ள ஒரே வழி...👌❤️


- Frantony David

Friday, March 24, 2023

Middle Class family

ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு,


 மகனுக்கு வீட்டில் இருக்கவே

பிடிக்கவில்லை.


‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய்,


 ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை,


 பேனாவை

ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.


இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது

அவனுக்குப் பிடிக்கவில்லை.


நேற்று வரை வீட்டில் இருந்ததால்

அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி

இருந்தது. 


இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது.


 ”வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும்” 


என்று எண்ணிக் கொண்டான்.


நேர்காணலுக்கு கிளம்பினான்.


 “கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல்” தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா.


 நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன்.


கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை. 


கதவு சற்றே திறந்திருந்த தாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக்

கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது.


அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.


 நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன.


 தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற் காக

குழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தான். தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக்

கொண்டிருந்தது.


 குழாயை கையில்

எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.


வரவேற்பறை யில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார் கள். மெதுவாக

மாடிப்படியில் ஏறினான்.


நேற்று இரவில் போடப்பட்ட

விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது.


 “விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?” என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான். 


மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர் கள் இருக்கையில் அமர்ந்திருந்தார் கள். கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே

திகைப்பு. 

“நமக்கு இங்கு வேலை

கிடைக்குமா?”

 என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது.


 பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான்.


அதையும் வருத்தத் துடனேயே அதை காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான்.


 அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சும்மா சுற்றிக் கொண்டிருந்தன.


”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி

ஓடுகிறது?” என்ற அம்மாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின் விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர் களுடன் சென்று அமர்ந்தான்.


இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர்.


 இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்கு தெரியவில்லை.


 கலக்கத்துடனே

நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான்.


 சர்டிபிகேட்டுகளை வாங்கிப் பார்த்த அதிகாரி, அதைப் பிரித்து பார்க்காமலே


“நீங்கள் எப்போது வேலைக்கு

சேருகிறீர்கள்?” என்று கேட்டார்.


“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக் கூர்மை கேள்வியா, இல்லை

வேலை கிடைத்து விட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்” குழம்பி நின்றான் மகன். 


”என்ன யோசிக்கிறீர்கள்? என்று பாஸ் கேட்டார், 


நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை.


 கேள்வி பதிலில் ஒருவனின்

மேலாண்மையை தெரிந்து கொள்வது

கடினம்.


 அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா

மூலம் கண்காணித் தோம். 


இங்கு வந்த எந்த இளைஞனுமே

தேவையில்லா மல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் ஒருவர் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள்.


 நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கி றோம்” என்றார்.


அப்பாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது. 


அப்பாவின் மீதுள்ள எரிச்சல் சுத்தமாக தணிந்தது.


 வேலைக்குச் செல்லும் இடத்திற்கு

அப்பாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் சந்தோஷமாக வீடு திரும்பினான்

மகன்.


அப்பா நமக்காக எது செய்தாலும்

சொன்னாலும் ஒரு சிறந்த எதிர்காலத்திறாக மட்டுமே இருக்கும் !!!


உளி விழுகையில் வலி என நினைக்கும் எந்த பாறையும் சிலையாவ தில்லை, 

வலி பொறுத்த சில பாறைகளே சிலையாகி ஒளி கூட்டுகின்றன.


நாம் அழகிய சிலையாக உருவாக நமக்குள் இருக்கும் வேண்டாத சில தீய குணங்களை கண்டிப்பால், தண்டிப்பால், சில நேரம் வில்லனாக நமக்கு தெரியும் தந்தை, உளி போன்று வார்த்தைகளால், 

கட்டுப்படுத்துவதால் தான்,


 நாம் காலரை தூக்கிக்கொண்டுகண்ணாடி முன் நின்று,


 அவர்கள் உருவாக்கிய சிலையாகிய நம்மை அழகனாக, அழகியாக பார்த்துக் கொள்வது அந்த தந்தை என்ற உளி செதுக்கிய கைங்கர்யமே. 


தாய் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தான் பாலூட்டுவாள், தாலாட்டுவாள், கதை சொல்லி தூங்க வைப்பாள்.


" ஆனால் தந்தை அப்படி அல்ல "


தான் காணாத உலகையும், தன் மகன் காணவேண்டும் என தோள் மீது அமரவைத்து தூக்கி காட்டிக் கொண்டு போவார்.


ஒரு சொல் கவிதை அம்மா !


அதே ஒரு சொல்

சரித்திரம் அப்பா !!


தாய் கஷ்டப்படுவதை கண்டுபிடித்து விடலாம். 


தந்தை கஷ்டபடுவதை பிறர் சொல்லி தான் கண்டுபிடிக்க முடியும்.


நமக்கு ஐந்து வயதில் ஆசானாகவும், இருபது வயதில் வில்லனாகவும், தெரியும் தந்தை இறந்தவுடன் மட்டுமே நல்ல நண்பனாக பாதுக்காவலராக தெரிகிறார்.


தாய் முதுமையில் மகனிடமோ, மகளிடமோ புகுந்து காலத்தை கடத்தி விடுவாள்.


அந்த வித்தை தந்தைக்கு தெரியாது. கடைசி வரை தனி மனிதன் தான்.


எனவே தாயோ, தந்தையோ உயிருடன் இருக்கும் போது உதாசினப்படுத்திவிட்டு, இறந்தபின் அழுவதால் அவர்களுக்கு எந்த பிரயோஜனமுமில்லை


பிடித்திருந்தால் பகிருங்கள்...🙏

Wednesday, March 22, 2023

NO STORM TOO STRONG

 


Mark 4:39 - Then He arose and rebuked the wind, and said to the sea, "Peace, be still!" And the wind ceased and there was a great calm.

 

In Mark 5, Jesus cast an impure spirit out of a deranged man who had been living among the tombs and cutting himself with stones. People had given up on him; he was beyond their helping or controlling, but God hadn't given up on him. Afterward, it says, "The people saw the man sitting, fully clothed and in his right mind." What's interesting is that on the previous night when Jesus was on the boat and headed toward that man, the huge storm that arose wasn't just a random act of nature. It was the enemy trying to stop Jesus. This man still had greatness in him, and Jesus was determined to restore him.


Remember that the storms the enemy sends to stop your future can't withstand God's rebuke and "Peace, be still!" The storm around you may be darker than ever, but there's no storm so strong that He can't calm. God is fighting for you, pushing through forces of darkness, calming the storms, and crossing lakes just to get to you, so you will fulfill your destiny.

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...