Saturday, October 4, 2025

IAS - IPS

 நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.


ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-


01. IAS - Indian Administrative Service


02. IPS - Indian Police Service


03. IFS - Indian Foreign Service


04. IFS - Indian Forest Service


O5. IRS -Indian Revenue Service (Income Tax )


06. IRS- Indian Revenue Service ( Customs & Central Excise )


07. IAAS-Indian Audit and Accounts Service


08. ICAS-Indian Civil Accounts Service


09. ICLS-Indian Corporate Law Service


10. IDAS-Indian Defence Accounts Service


11. IDES-Indian Defence Estate Service


12. IIS  - Indian Information Service


13. IPTAS - Indian Post & Telecom Accounts Service


14. IPS - Indian Postal Service


15] IRAS - Indian Railway Accounts Service


16. IRPS - Indian Railway Personal Service


17. IRTS - Indian Railway Traffics Service


18. ITS - Indian Trade Service


19. IRPFS - Indian Railway Protection Force Service


20. IES - Indian Engineering Services


21. IIOFS  -   Indian Ordinance Factory Service


22. IDSE  -  Indian defence engineering services


23.  IES  - Indian Economics Services


24. ISS  - Indian Statistics Service


25. IRES - Indian railway engg service 


26. IREES -  Indian railway elec engg service


இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும்.


இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே...


பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம்.


இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை நம் தமிழக இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம், VAO பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே.


இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.


எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான். எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி தான் முக்கியம். 


இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள்.

Wednesday, October 1, 2025

மனநிறைவுடன் நிலைத்திரு

 

மாதப்பிறப்பு ஆராதனை

அக்டோபர் மாதத்தின் வாக்குத்தத்தம் - சங்கீதம் 147:14

அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.

சங்கீதம் 147:14

தலைப்பு:மனநிறைவுடன் நிலைத்திரு

அறிமுகம்

சங்கீதம் 147 என்பது “அல்லேலூயா சங்கீதங்களில்” (Psalm 146–150) ஒன்றாகும்.

“அல்லேலூயா” (கர்த்தரைத் துதியுங்கள்) எனத் தொடங்கியும், “அல்லேலூயா” என முடிவடையும் மகிழ்ச்சியான சங்கீதம்.

பின்னணி

பாபிலோனிய சிறைவாசத்திலிருந்து இஸ்ரவேலர் திரும்பி, எருசலேம் சுவர்களையும் ஆலயத்தையும் மீண்டும் எழுப்பிய காலம்.

அவர்கள் சந்தித்த கஷ்டங்களில், கடவுளே சமாதானத்தையும் வளத்தையும் வழங்குபவர் என்பதை மக்களிடம் நினைவூட்டும் சங்கீதம் இது.

வசனத்தின் முக்கியத்துவம்

 அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார் – இந்த வசனம் மூன்று ஆசீர்வாதங்களை வாக்குத்தத்தமாக அறிவிக்கிறது:

    1. எல்லைகளில் சமாதானம்,

    2. உசிதமான கோதுமையால்

        திருப்தி,

    3. மனநிறைவு கொண்ட

        நிலையான வாழ்க்கை.

I. கடவுள் நம் எல்லைகளில் சமாதானத்தை நிறுவுகிறார்

“அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி”* (சங். 147:14a).

எல்லைகள் என்பது: குடும்பம், சமூகம், தேசம், நம் வாழ்வு அனைத்தையும் குறிக்கிறது.

சமாதானம் (Shalom) = முழுமையான நலனும், பாதுகாப்பும் (ஏசாயா 26:3).

 “அமைதியான மனம் உடம்புக்கு ஜீவம்” (நீதி 14:30).

இயேசு சொன்னார்:

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.

யோவான் 14:27

“அவர் எங்கள் சமாதானம்” (எபே. 2:14).

குடும்பங்களில் பிளவு, சண்டை, போர் – இதற்கு தீர்வு கிறிஸ்துவின் சமாதானம் மட்டுமே.

கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம் “சமாதானக்காரர்கள்” ஆக இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம் (மத். 5:9).

II. கடவுள் நம்மை உசிதமான கோதுமையால் திருப்தி படுத்துகிறார்

உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்” (சங். 147:14b).

உயர்தர கோதுமை

உசிதமான கோதுமை என்றால் என்ன?

எபிரெயர் மூலத்தில் “Chelev Chittim” என்று உள்ளது; அதாவது சிறந்த தரமான கோதுமை, மிகச் சுத்தமானதும், மிகச் சிறந்ததும்.

தேவன் தனது ஜனங்களுக்கு மிகச் சிறந்ததைத் தருகிறார்; குறைவானதை அல்ல.

சங்கீதம் 81:16: “உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார், கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.”

சங்கீதம் 81:16

சங்கீதம் 103:5: “அவர் உன்னை நன்மைகளினால் திருப்தி படுத்துகிறார்.”

மனிதனுக்கு வாழ்வதற்குத் தேவையான உணவு, உடை, குடியிருப்பு போன்ற அடிப்படை தேவைகளை கடவுள் நிறைவாக தருகிறார்.

மத்தேயு 6:11: “எங்கள் அன்றாட அப்பத்தை இன்றைக்கு எங்களுக்கு அருளும்.”

கானான் தேசத்தில் பால் தேன் ஓடும் வளம் கொடுக்கப்பட்டது (யாத்திரி 3:8).

உபாகமம் 8:7–9: “நீங்கள் குறைவற்ற தேசத்தில் அப்பம் உண்ணுவீர்கள்.”

கடவுள் தம் ஜனங்களைத் தவிர்க்காமல், வளமாய் கொடுப்பவர்.

“நானே ஜீவ அப்பம்; என்னிடத்தில் வருகிறவன் பசியடைய மாட்டான்” (யோவான் 6:35).

“நான் உயிரோடிருக்கும் அப்பமாகியிருக்கிறேன்; யாராவது இந்த அப்பத்தை உண்டு வாழ்ந்தால் அவன் என்றைக்கும் உயிரோடிருப்பான்” (யோவான் 6:51).

சங்கீதம் 103:5: “அவர் உன்னை நன்மைகளினால் திருப்தி படுத்துகிறார்.”

உலக ஆசைகள் நம்மை பசியோடு வைக்கின்றன; ஆனால் கிறிஸ்துவில் தான் உண்மையான திருப்தி/நிறைவு கிடைக்கிறது.

பொருள் செல்வம், புகழ், அதிகாரம் எதுவும் நம்மை நிறைவுறச் செய்ய முடியாது; கிறிஸ்து மட்டுமே நம் உள்ளத்தைக் நிறைவடைய செய்வார்.

III. கடவுள் நம்மை மனநிறைவுடன் நிலைத்தவர்களாக மாற்றுகிறார்

“மனநிறைவுடன் நிலைத்திரு.”

மனநிறைவு = கடவுளுடைய கிருபையில் நம்பிக்கை வைக்கும் நிலை.

பவுல் கூறுகிறார்: *“எனக்கு இருக்கிற நிலையிலே திருப்தியாயிருக்க கற்றுக்கொண்டேன்” (பிலி. 4:11).

கடவுளில் நிலைப்பவர்களை ஒருபோதும் அசைக்கமுடியாது கற்பாறை மீது கட்டின வீடை போல (மத். 7:24–25).

“போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.

1 தீமோத்தேயு 6:6

 இன்றைய உலகம் எப்போதும் “மேலும், மேலும்” என்று குரல் கொடுக்கிறது.

ஆனால் கிறிஸ்துவில் உள்ளவர்:

“கிடைத்ததிலே திருப்தியாய்” வாழ்கிறார்

நீங்கள் பணஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணங்கள். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

எபிரேயர் 13:5

மனநிறைவு கொண்டவர்களுக்கு மன அமைதியும், ஆன்மீக நிலைத்தன்மையும் கிடைக்கிறது.

முடிவு

சங்கீதம் 147:14 நமக்குக் கொடுக்கும் மூன்று பெரிய வாக்குத்தத்தங்கள்:

 I.எல்லைகளில் சமாதானம் – குடும்பம், சமூகம், நாடு அனைத்திலும் கிறிஸ்துவின் சமாதானம் நம்மை காக்கிறது (யோவான் 14:27).

II. உசிதமான கோதுமையால் திருப்தி – கடவுள் நம்முடைய அடிப்படை தேவைகளையும் ஆன்மீக பசியையும் கிறிஸ்துவில் நிறைவாகத் தருகிறார் (யோவான் 6:35).

III. மனநிறைவுடன் நிலைத்திரு – எந்த நிலையிலும் தேவபக்தியோடும் திருப்தியோடும் நிலைத்து வாழும் வாழ்க்கை உண்மையான ஆசீர்வாதமாகும் (பிலி. 4:11; 1 தீமோ 6:6).

இவை அனைத்தும் கிறிஸ்துவில் நிறைவேறுகின்றன.

ஆகையால் நாம், மனநிறைவுடன் நிலைத்திரு; கிறிஸ்துவின் சமாதானத்தில் வாழ்ந்து, அவருடைய அப்பத்தில் திருப்தி பெற்று, அவரது கிருபையில் நிலைத்திருப்போம், ஆமென்.

Written by : Rev. Dr. William Charles

Tuesday, September 30, 2025

விழுப்புரம்

 விழுப்புரம் மாவட்டத்தின் வரலாறு, முன்னர் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியாக இருந்ததில் தொடங்கி, 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று தனி மாவட்டமாக உருவானதுடன் தொடங்குகிறது. இங்குள்ள செஞ்சிக் கோட்டை போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் சோழர்கள் காலத்திலிருந்தே இந்த பகுதியின் முக்கியத்துவத்தை காட்டுகின்றன. 

ஆரம்பகால வரலாறு: விழுப்புரம் பகுதியின் வரலாறு சோழர்கள் காலத்திலிருந்து தொடங்குகிறது. 

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் 

மாவட்ட உருவாக்கம்: விழுப்புரம், 1993 ஆம் ஆண்டில் தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது

இது 1993 மாவட்டமாக பிரிக்கப்பட்டாலும் 100 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1919 அநேக தொழில் பட்டறைகள் பள்ளிக்கூடங்கள் நிறைந்த மாவட்டமாக குறிப்பாக விவசாயத்தில் முதன்மையான ஒரு மாவட்டமாக இருந்தது 

அநேக கோயில்கள் மசூதிகள் வீரமாமுனிவர் கட்டிய வரலாற்று சிறப்புமிக்க தேவ ஆலயங்கள் என பல இடங்கள் இதன் சிறப்பை கூறுகிறது

வந்தவரை விழாது காக்கும்‌ 

 விழுப்புரத்தினால் நன்மை பெற்றவன் என் முத்தரையர் அநேகர் நன்மை பெற்றார்கள் 

எனவே இன்று விழுப்புரத்தில் நினைவுகூறுவோம் 

Written by : J. Jino Curtis Joseph

Sunday, September 28, 2025

உடல் காத்தேன் உயிர் காத்தேன்

 மனம் கெட்டால் உடல் கெடும்,

 உடல் கெட்டால் மனம் கெடும்.


👍 அதனால் மனதுக்கும், உடலுக்குமான, முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.


👍 சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்..

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று 

எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.


👍 உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.


 

👍 உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.


👍 குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.


👍 இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.


👍 பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?


👍 வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?


👍 மூக்கு ஒழுகுதல்,

சளி பிடித்தல்,

இருமல்,

காய்ச்சல்,

இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!


👍 இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!


👍 இவைகள் நம் உடல் முழு ஆரோக்கிய நிலையில் உள்ளதை காட்டுகிறது!


👍 இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!


👍 மருத்துவம்,

உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,

கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,

நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்


#fblifestyle

Tuesday, September 23, 2025

டாக்டர் ஐடாவின் கிராமப்புறப் பயணம்

டாக்டர் ஐடா ஸ்கடர், மருத்துவப் பட்டத்துடன் இந்தியா திரும்பியபோது, அவரது நோக்கம் தெளிவாக இருந்தது: மருத்துவமனைக் கதவுகளைத் தாண்டி, உதவி தேவைப்படும் கிராமப்புற மக்களைத் தேடிச் செல்ல வேண்டும். ஆனால், அவரது இந்த உன்னத முயற்சிக்கு தொழில்நுட்பமும், அறியாமையும் உருவாக்கிய ஒரு விசித்திரமான தடை காத்திருந்தது.


"பிசாசு வருகிறது!": மோட்டார் காரைக் கண்டு மிரண்ட கிராமங்கள்


20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தென்னிந்தியாவின் கிராமப்புறச் சாலைகளில் குதிரை வண்டிகளும், மாட்டு வண்டிகளுமே பிரதான வாகனங்களாக இருந்தன. அந்தச் சூழலில், டாக்டர் ஐடா தனது மருத்துவப் பயணங்களுக்காக ஒரு "பியூஜியோ" (Peugeot) மோட்டார் காரை வாங்கினார். அது அக்காலத்தில் ஒரு பெரும் தொழில்நுட்ப அதிசயமாகக் கருதப்பட்டது. ஆனால், அந்த அதிசயம், கிராம மக்களுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.


ஐடா தனது காரில் மருத்துவ உபகரணங்களுடன் ஒரு கிராமத்தை நோக்கிச் செல்லும்போது, ஒரு விசித்திரமான காட்சி அரங்கேறும். காரின் எஞ்சின் சத்தத்தைக் கேட்டதும், சாலையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் அலறியடித்து ஓடுவார்கள். வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், தங்கள் கருவிகளைப் போட்டுவிட்டு ஓட்டம் பிடிப்பார்கள். வீடுகளில் இருந்தவர்கள் கதவுகளை இறுகச் சாத்திக்கொள்வார்கள். கிராமமே ஒருவித பீதியில் மூழ்கிவிடும்.


அவர்களின் அச்சத்திற்குக் காரணம், அந்த "மிருகங்கள் இல்லாத வண்டி". குதிரையோ, மாடோ இல்லாமல் ஒரு வண்டி தானாகவே எப்படி ஓட முடியும்? அது நிச்சயம் ஏதோ ஒரு கெட்ட சக்தியாகவோ அல்லது "பிசாசாகவோ"தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் நம்பினார்கள். "பிசாசு வருகிறது! பிசாசு வருகிறது!" என்ற கூக்குரல்கள் கிராமம் முழுவதும் எதிரொலிக்கும்.


அச்சத்தை அன்பால் வென்ற ஐடா


இந்த எதிர்பாராத கலாச்சார எதிர்ப்பைக் கண்டு ஐடா திகைத்துப் போனாலும், அவர் மனம் தளரவில்லை. மக்களின் அறியாமையையும், பயத்தையும் அன்பாலும், பொறுமையாலும் வெல்ல முடியும் என்று அவர் நம்பினார்.


ஒவ்வொரு கிராமத்திற்குச் செல்லும்போதும், மக்கள் பயந்து ஓடுவதைக் கண்டால், அவர் உடனடியாகக் காரை நிறுத்திவிடுவார். காரிலிருந்து இறங்கி, அவர்களை நோக்கிப் புன்னகையுடன் நடந்து செல்வார். தனது உதவியாளர்களின் துணையுடன், "பயப்படாதீர்கள்! நாங்கள் உங்களுக்கு உதவவே வந்திருக்கிறோம். நாங்கள் எந்தத் தீங்கும் செய்ய மாட்டோம்," என்று அவர்களின் மொழியில் பேசுவார்.


முதலில், மக்கள் அவரை சந்தேகத்துடனேயே பார்த்தனர். ஆனால், அவரது கனிவான பேச்சும், உண்மையான அக்கறையும் மெல்ல மெல்ல அவர்களின் மனதை மாற்றியது. அவர் அவர்களுக்குச் சிகிச்சை அளித்து, நோய்களிலிருந்து குணப்படுத்தியபோது, அந்த "பிசாசின் வண்டி" உண்மையில் ஒரு "தேவதையின் வாகனம்" என்பதை அவர்கள் உணரத் தொடங்கினார்கள். காலப்போக்கில், காரின் சத்தம் கேட்டால், மக்கள் பயந்து ஓடுவதற்குப் பதிலாக, நம்பிக்கையுடன் அவரை நோக்கி வரத் தொடங்கினார்கள். அந்த மோட்டார் கார், அச்சத்தின் சின்னமாக இருந்து, ஆரோக்கியத்தின் அடையாளமாக மாறியது.


"ரோட்சைட்ஸ்": சாலையோரங்களில் மலர்ந்த மருத்துவ சேவை


தொலைதூர கிராமங்களில் உள்ள மக்கள், மருத்துவமனைக்கு வரத் தயங்குவதையும், அதற்கான வசதிகள் இல்லாததையும் ஐடா உணர்ந்தார். நோயாளிகள் மருத்துவமனையைத் தேடி வருவதற்குக் காத்திருக்காமல், மருத்துவமே அவர்களைத் தேடிச் செல்ல வேண்டும் என்ற புதுமையான சிந்தனையின் விளைவாகப் பிறந்ததுதான் "சாலையோரங்கள் " (Roadsides) நடமாடும் மருத்துவமனைத் திட்டம்.


• ஒரு நடமாடும் மருத்துவமனை: ஐடாவின் மோட்டார் கார், ஒரு சிறிய நடமாடும் மருத்துவமனையாக மாறியது. அதில் அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், மற்றும் ஒரு சிறிய பரிசோதனை மேசை ஆகியவை இருந்தன.

• சாலையோர சிகிச்சை: ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு மரத்தடியிலோ அல்லது ஒரு பொது இடத்திலோ, அவரது நடமாடும் மருத்துவமனை செயல்படும். நோயாளிகள் வரிசையில் நின்று சிகிச்சை பெறுவார்கள்.

• சுகாதாரக் கல்வி: "ரோட்சைட்ஸ்" திட்டம், வெறும் சிகிச்சை அளிக்கும் மையமாக மட்டும் இருக்கவில்லை. அது ஒரு சுகாதாரக் கல்வி மையமாகவும் விளங்கியது. சுத்தமான குடிநீரின் அவசியம், கைகளைக் கழுவுவதன் முக்கியத்துவம், மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் குறித்து ஐடாவும் அவரது குழுவினரும் கிராம மக்களுக்கு எளிய மொழியில் விளக்கினார்கள்.


இந்த "ரோட்சைட்ஸ்" திட்டம், அக்காலத்தில் ஒரு புரட்சிகரமான முயற்சியாக இருந்தது. இது கிராமப்புற சுகாதாரத்தில் ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம், ஆயிரக்கணக்கான மக்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள், தங்களின் வீடுகளுக்கு அருகிலேயே மருத்துவ சேவையைப் பெற்றனர்.


முடிவுரை


டாக்டர் ஐடா ஸ்கடரின் பியூஜியோ மோட்டார் காரும், "ரோட்சைட்ஸ்" திட்டமும், அவரது தொலைநோக்குப் பார்வைக்கும், சவால்களை எதிர்கொள்ளும் துணிவுக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகள். மக்களின் அறியாமை என்ற தடையை அவர் தனது விடாமுயற்சியாலும், இரக்க குணத்தாலும் தகர்த்தெறிந்தார். தொழில்நுட்பத்தை, மக்களின் நன்மைக்காக எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதற்கு அவரது பயணம் ஒரு சிறந்த பாடம். அந்த "மிருகங்கள் இல்லாத வண்டி" அன்று தென்னிந்தியாவின் கிராமப்புறச் சாலைகளில் உருவாக்கிய ஆரோக்கியப் புரட்சியின் தாக்கம், இன்றும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவமனையின் சேவைகளில் எதிரொலிக்கிறது.

ஆதாரத் தகவல்:

திரு. மன்னா செல்வகுமார்

கிறிஸ்தவ மரபு ஆய்வாளர் 

Sunday, September 21, 2025

Tubarial Glands

 ✅🔥 மருத்துவ உலகையே அதிர்ச்சியடைய வைத்த புதிய கண்டுபிடிப்பு!


💡 நூற்றாண்டுகளாக நம்மை ஆராய்ந்து கொண்டே இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்… ஆனாலும் இன்னும் மனித உடலில் மறைந்த ரகசியங்கள் இருக்கின்றன!


👉 சமீபத்தில், விஞ்ஞானிகள் மனிதக் கழுத்தின் ஆழத்தில் மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

இது சாதாரணமல்ல – 🧬 முன்னேற்றமான இமேஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்திக் கொண்டு, புற்றுநோயாளிகளின் சிகிச்சையை ஆய்வு செய்யும் போது இந்த அதிசய ரகசியம் வெளிச்சத்திற்கு வந்தது.


🔬 இதுவரை புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது மூன்று முக்கிய நாவிறப்பு சுரப்பிகள் (Salivary glands):


பாரோடைட் (Parotid)


சப்மாண்டிபுலர் (Submandibular)


சப்லிங்வல் (Sublingual)


ஆனால் இப்போது நான்காவது – "Tubarial Glands" எனப்படும் புதிய சுரப்பி ஜோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! 🤯

இது மூக்கின் பின்புறம், மேல்கழுத்துப் பகுதியில் உள்ளது.


💧 இந்த புதிய சுரப்பிகளின் பணி:


மேல்கழுத்தையும் மூக்குப் பாச்சியையும் ஈரப்பதமாக வைத்தல்


பாதுகாப்பு அளித்தல்


விழுங்கும் செயல்பாட்டை எளிதாக்குதல்


⚠️ மருத்துவ ரீதியாக இதன் தாக்கம் மிகப்பெரியது:


தலை மற்றும் கழுத்து புற்றுநோய் சிகிச்சையின் போது இச்சுரப்பிகள் சேதமடையாமல் பார்த்துக் கொள்ளலாம்.


இதனால் நோயாளிகளில் நீண்டநாள் வாயின் உலர்ச்சி (Dry Mouth) மற்றும் விழுங்கும் சிரமம் (Swallowing Issues) குறையும்.


சிகிச்சைக்குப் பிறகு வாழ்க்கைத் தரம் மேம்படும்.


🌍 21ஆம் நூற்றாண்டில்கூட மனித உடல் இன்னும் எத்தனை ரகசியங்களை வைத்திருக்கிறது என்பதற்கான உயிரோட்டமான சான்று இதுதான்! ✨


🙏 மனித உடல் எவ்வளவு சிக்கலானது, அதிசயமானது என்பதை நினைவூட்டும் கண்டுபிடிப்பு இது.


#HumanBodySecrets #MedicalDiscovery #TubarialGlands #ScienceNews #FunAsiaNetwork

Friday, September 19, 2025

Reviewing our lives

Reviewing our lives and _being willing to ring in_ positive transformations!


*(Based on 1 Tim 1:1-2, 12-14 and Lk 6:39-42 - _Friday of the 23rd Week in Ordinary Time, Year 1)_*


In a particular town, there lived a cobbler, who was unable to make a living by his trade.

>> Driven to despair by his poverty, he accommodated himself in another far-away town, and began to practise medicine.


He sold a drug which he claimed to be an antidote for all sorts of poisons.

>> Towards this end, he also created a great popularity campaign through advertisements and boastful proclamations.


Unfortunately, in a short period of time, the cobbler himself happened to fall sick to a serious illness.

>> The ruler of the town sought this as a nice chance to test his medicine's capability and the man's genuineness.


For this, the ruler called for a cup, and filling it with water, pretended to mix poison with the cobbler's antidote…

… commanding him to drink, with a promise of a handsome reward.


The sick cobbler, overcome with much fear and trembling, confessed that he had no knowledge of medicine!


The ruler then called the people of the town and addressed them:

"Oh how foolish are you!

>> You have not hesitated to entrust your heads to a man, whom no one could employ to even make shoes for their feet!"



Often times, perhaps, it so happens that we too…

… get fooled in life

… get led by people who are incapable

… get ourselves to be a slave to things which are unbecoming


We become blind…

… and perhaps, we also lead others to stumble!



Our Blessed Lord in today's Gospel invites us to deep examination of the quality of our lives and our credibility in being a leader.

>> Jesus says, "Can a blind person guide a blind person? Will not both fall into a pit?" (Lk 6:39)



This verse is a reference to two sets of people: one, the guide.. second, the one who is led.


We could find ourselves in either of these categories or sometimes even both.

>> We could be a guide or one who is guided or both - a guide as well as one who is guided.



In any of the cases, one needs to examine one's quality of life.


Am I shrouded in the darkness of being in ignorance and apathy…

… disinterested to learn and be willing to know more…?

… causing others to be misled and creating confusions and misunderstandings…?


Am I a person who is sunk into the dark abyss of being prejudiced and unforgiving….

… unwilling to be open to the truth and adamant in considering to even review or re-examine my own viewpoints…?

… blinded to accept differences and failing to cherish diversity and thus constantly being at loggerheads with others…?


Am I constantly veiled under the dark shades of being unjustly critical and judgemental…

… full of pride and being unable to let go of my own selfish interests and self-centred wants…?

… enamoured by a pleasure in looking for opportunities and means to put down others or find faults with others…?



Our Blessed Lord invites us to make an honest review of our lives…

… and to be constantly willing to ring in positive transformations.


Let us seek to put into the practise the beautiful saying:

"If you use the head with which you reprove others to reprove yourself, there will be fewer faults;

>> If you use the heart with which you forgive yourself to forgive others, there will be perfect friendship"



Today we celebrate the Holy Name of Mary...

... a feast that reminds us of Her closeness to our lives.

>> Her name - as Her life - speaks of humility, faith...

... and a life wholly open to God’s plan.


Let us always realise that "Her name never rivals Christ...

... it always leads us to Him!"



Let us call upon the name of Mary

... imitate her trust, her courage, and her willingness to be transformed! 

... and find strength to live anew in Christ! 


Whisper the name "Mary!" 

>> Walk with Her

>> Meet Christ! 



*God Bless! _Live Jesus!_*



*-- Fr Jijo Jose Manjackal MSFS*

*_Rome, Italy_*

*Email:* reflectioncapsules@gmail.com

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...