Thursday, March 16, 2023

மறைத்திரு. அறிவர். அற்புதராஜ்

கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்தவர்களே உங்கள் யாவருக்கும் தோத்திரங்களை கூறிக் கொள்கின்றேன் அறிவர் மறைத்திரு அற்புதராஜ் ஐயா அவர்கள் மறைவை கேள்விப்பட்டு மிகுந்த வருத்தப்பட்டேன் ஆனாலும் கர்த்தர் அவரை 90 ஆண்டுகள் வரை நமக்கு ஆசீர்வாதமாக வைத்திருந்தார் அதற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகின்றேன் அற்புதராஜ் அண்ணன் அவர்கள் எங்கள் குடும்பத்திற்கு வேண்டியவர் என்னுடைய பெற்றோரையும் நன்றாக அறிந்தவர் என் உடன் பிறந்தவர்களை அறிந்தவர் என்னுடைய மாமனார் விவரங்கள் ஆல்பர்ட் ஜோயல் அவர்களையும் அவருடைய பிள்ளைகளையும் குடும்பத்தாரையும் நன்றாக அறிந்தவர் அனைத்து பேராயர்களோடும் நன்றாக தொடர்பு உடையவர் குறிப்பாக இவர் அரசு வேளையில் பணிபுரிந்தாலும் இறையலை கற்றறிந்து அவர் கவர்வ சபை குருவாக நம்முடைய பேராயர் மா மறைத்திரு ஜேக்கப் ஜெயசீலன் ஐயா அவர்களால் அபிஷேகம் பண்ணப்பட்டார் இந்த நாளிலும் அவர் ஒரு நல்ல சிறந்த பிரசங்கியார் உண்மையான கடவுளின் பணியாளர் ஊழியர்களை பயிற்றுவிக்கும் ஆசான் குறிப்பாக குருகுலம் கல்லூரியில் மாணவர்களை சிறப்பு பயிற்சியில் குறிப்பாக தொழில்துறையில் பயிற்சி அளித்தார் மேலும் நற்செய்தி பணி செய்திட நிறைய பேரை வைத்துவிட்டார் எப்படி கிறிஸ்துவ அறியாதவர்கள் மத்தியில் ஊழியம் செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு பயிற்றுவித்து அவர்களை ஊக்குவித்தார் இவர் மூலம் அநேக கிராமங்களில் சபையும் பெருக செய்தது உருவாகவும் உதவியாக இருந்தது இவருக்கு மிக சிறப்பான தன்னை தலைமைத்துவத்தை உருவாக்குகின்ற பயிற்சி அளிப்பது இவரை அனைத்து திருச்சபைகளும் பயன்படுத்தினார்கள் திருச்சபை அல்லாத மற்ற நிறுவனங்களும் இவர்களை பயன்படுத்தினார்கள் அதோடு கணக்கு வைத்துக் கொள்வதில் சிஎஸ்ஐ ஈசியை சி எல் எஸ் நிறுவனங்களுக்கும் சம்பள நிர்வகிப்பது குறித்து உதவி செய்திருக்கிறார் எப்படி வருமானத்தை பெருக்க வேண்டும் என்பதையும் ஆலோசனைகள் கொடுத்திருக்கின்றார் அது மட்டுமல்ல எல்லோரும் நன்றாக பழக்க கூடியவர் எல்லாருக்காக ஜெபிக்கக் கூடியவர் அன்புள்ளவர் பண்புள்ளவர் பாசம் உள்ளவர் எல்லாருக்கும் உதவி செய்யக் கூடியவர் ஏழை மாணவர்களை படிப்பதற்கு உதவி செய்யக்கூடியவர் நல்ல ஒரு தலைவராக இருந்து வழிநடத்தக் கூடியவர் இவர் ஆரம்பித்த மிக மிக முக்கியமானது லுத்தரன் உபவாச கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை நடைபெறும் இவரும் ஐசக் அதிசயம் அய்யாவும் சேர்ந்து ஆரம்பித்தது இன்றும் தொடர்ந்து அது நடந்து கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி இதனால் அநேக பயனடைகிறார்கள் இப்படி இவரைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் எல்லாருக்கும் ஒரு முன்மாதிரியாக வாழ்ந்தவர் முன்மாதிரி ஆனவர் மரணம் என்பது புரிந்து கொள்ள முடியாத தீர்க்கப்பட முடியாத மறைபொருள் காரணம் மரணத்தைப் பற்றியும் அதற்குப்பின் உள்ள மனித நிலைமை பற்றியும் தெளிவான பார்வை நம்மிடம் கிடையாது மரணத்தை வென்றவர் நம்முடைய ஆண்டவர் அண்ணன் அவர்கள் அவருடைய நண்பர் திருவாளர் கிளைமேட் அவருடைய மரணத்தின் பொழுது மிக அருமையான செய்தியை கொடுத்தார் நான் இயேசுவோடு இருப்பேன் என்ற செய்தியை வாழ்வு கொடுத்தால் ஊழியம் செய்வேன் மறுத்தால் ஆண்டவரோடு வாழ்வேன் சந்திப்பேன் என்ற ஒரு செய்தியை அவர் கொடுத்தார் சாவு என்பது நம்முடைய வாழ்வின் ஒரு அங்கம் என் பிறக்கின்ற எல்லா மனிதர்களுமே மரித்து தான் ஆக வேண்டும் அதை நாம ஏற்றுக்கொள்ள வேண்டும் என் வார்த்தையை கடைபிடிப்போம் என்றுமே சாக மாட்டார் என்று கூறுவதின் பொருள் சரீரம் அடைந்தாலும் அவருடைய வாழ்க்கையில் பேசின காரியங்கள் போதித்த காரியங்கள் அவருடைய நல்ல சிந்தனைகள் எல்லாம் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன அற்புதராஜ் அண்ணன் மரித்தார் என்றாலும் அவர் இன்னும் அவருடைய பிரசங்கங்கள் அவருடைய செயல்பாடுகள் அவரை அன்பான பேச்சுகள் அவருடைய தலைமைத்துவ பயிற்சிகள் எல்லாம் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன இப்படிப்பட்டவர் இந்த உலகத்தில் வாழ்ந்தார் என்பது மகிழ்ச்சி ஆண்டவரோடு அவர் வாழ சென்றிருக்கிறார் என்பதும் மகிழ்ச்சி ஆனாலும் இது பெரிய இழப்பு நம்முடைய திருச்சபைக்கும் குடும்பத்திற்கும் ஒன்று மட்டும் நான் சொல்லிக் கொண்டு விரும்புகிறேன் உலகத்தில் எத்தனை பேர் வாழ்ந்தாலும் அந்த உலகத்துல ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்ய வில்லை என்றால் நல்லவர்களாக வாழ வில்லை என்றால் பயணம் ஒன்றுமே இல்லை இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் இதைத்தான் ஒரு அன்பான ஒரு மனிதன் சொல்லும் பொழுது அழகாக சொல்கின்றார் இந்த பூமியை சற்று அழகாகவும் நல்லதாகவும் மாற்றுவதற்கு உன்னால் இயன்றதை செய் ஏனெனில் நீ இந்த பூமியில் வாழ்ந்து இருக்கிறாய் என்று எழுத சொன்னார் எட்வர்ட் பேக் என்ற டென்மார்க் அறிஞர் எவ்வளவோ உண்மையானது நம்முடைய அண்ணன் அவர்களும் அற்புதமாகவே வாழ்ந்து ஆண்டவருடைய அழைப்பை ஏற்று கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் என்று சொல்லி ஆண்டவரிடம் சென்றிருக்கின்றார் அது மட்டுமல்ல லூக்கா எழுதின சுவிசேஷம் 17 ஆம் அதிகாரம் 10 ஆம் வசனம் நான் பிரயோஜனமற்ற அடிமைகள் செய்ய கடமைப்பட்டிருந்ததையே செய்தோம் என்று சொல்வதைப் போல அவரும் செய்ய கடமைப்பட்டதே செய்து முடித்தார் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தம் விலை தெரிவித்துக் கொள்கின்றேன் உங்களுக்கு மட்டும் இழப்பல்ல இது திருச்சபைக்கும் மாபெரும் இழப்பு ஜெபிக்கின்றேன் நேரடியாக வர முடியாமைக்கு வருந்துகின்றேன் வரவேண்டும் என்று ஆசை நான் நேசித்த அன்பு கூர்ந்த நெருங்கிய அண்ணன் அவர்கள் ஆண்டவருடைய வருகை உண்டு அதற்காக காத்திருப்போம் இறை ஆசை உங்கள் அனைவரோடும் இருப்பதாக இறைபணியில் உங்கள் ஊழியன் தானியேல் ஜெயராஜ் 13 ஆம் தரங்கை பேராயர்.

No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...