காதல் கல்யாணம் பண்ணி , ரெண்டு கொழந்தை பெத்துட்டு , கல்யாண வாழ்க்கைல ஒண்ணுமே இல்லைனு சொல்றவன்...
கைநிறைய காச வைச்சுக்கிட்டு பணம் நிம்மதி தராதுனு சொல்றவன்...
அமெரிக்கா-லண்டன்/கனடால செட்டில் ஆகிட்டு.. கூழோ கஞ்சியோ குடிச்சி ஊர்லயே இருந்து இருக்கலாம்னு சொல்றவன்...
3 மாசத்துக்கு ஒருக்கா மெடிக்கல் செக்கப் எடுத்துட்டு உடம்ப ஆரோக்கியமா வச்சுக்க பணம் தேவயில்லனு சொல்றவன்...
பணத்த குமிச்சு வச்சுக்கிட்டு ஆன்மீகம் தான் மன அமைதிய தருதுனு சொல்றவன்...
சொந்தக்காரனுக்கு ஒரு உதவி செய்யாம, சொத்து சேத்து வச்சுட்டு, சொத்து எல்லாம் முக்கியம் இல்ல சொந்தம் தான் எல்லாம்னு சொல்றவன்...
இப்படி சொல்லிட்டே போகலாம்...
இக்கரைக்கு அக்கறை பச்சை!!!
No comments:
Post a Comment