Tuesday, July 28, 2020

Finland Education system

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது  .....

அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?

👌பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத்
தொடங்குகிறது...

👏ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை,

 அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது.
 மீதி நாட்கள் விடுமுறை...

👌ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான்.

 அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம்

இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு...

👍 ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும்.

படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்...

👌முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது...

பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது...

👊தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால்,

தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்...

👌கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை...

💪சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை...

👏இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை...

👌மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்...

👍ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...

👌ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது...

👍முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...

👏கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும்,

ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும்...

‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது...

👍அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது...

👌அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்...

👊அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்... ‘டியூஷன்’என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை...

👍தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்...

😳"இது எப்படி?" என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்...

✅அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது...

😀உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது...

👌மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை...

👍பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர்...

👍உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர்...

👍நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது.

👍பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ் ., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது...

👌அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு...

👍மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம்...

அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!..

👌மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்...

👌ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும்...

👌பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி...

👌ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி...

👌ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட்...
குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது...

நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்...

தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்...

👍இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!...

👏👏👏👏👏👏👏👏

பின்லாந்தின் கல்விமுறையிலிருந்து நாம் கற்றுக் கொண்டு மாறுவோம்!.

குழந்தைகளின் எதிர்காலத்தைப் சிறப்பாக மாற்றுவோம்!.

Albert Einstein

(1) Albert Einstein's wife often suggested that he dress more professionally when he headed off to work. "Why should I?" he would invariably argue. "Everyone knows me there."

(2) When the time came for Einstein to attend his first major conference, she begged him to dress up a bit. "Why should I?" said Einstein. "No one knows me there!"

(3)Albert Einstein was often asked to explain the general theory of relativity. "Put your hand on a hot stove for a minute, and it seems like an hour," he once declared. "Sit with a pretty girl for an hour, and it seems like a minute. That's relativity!"

(4)When Albert Einstein was working in Princeton university, one day he was going back home he forgot his home address. The driver of the cab did not recognize him. Einstein asked the driver if he knows Einstein's home. The driver said "Who does not know Einstein's address? Everyone in Princeton knows.Do you want to meet him?. Einstein replied "I am Einstein. I forgot my home address, can you take me there? "The driver reached him to his home and did not even collect his fare from him.

(5)Einstein was once traveling from Princeton on a train when the conductor came down the aisle, punching the tickets of every passenger. When he came to Einstein, Einstein reached in his vest pocket. He couldn't find his ticket, so he reached in his trouser pockets. It wasn't there, so he looked in his briefcase but couldn't find it. Then he looked in the seat beside him. He still couldn't find it.

The conductor said, 'Dr. Einstein, I know who you are. We all know who you are. I'm sure you bought a ticket. Don't worry about it.' Einstein nodded appreciatively. The conductor continued down the aisle punching tickets. As he was ready to move to the next car, he turned around and saw the great physicist down on his hands and knees looking under his seat for his ticket.

The conductor rushed back and said, 'Dr. Einstein, Dr. Einstein, don't worry, I know who you are. No problem. You don't need a ticket. I'm sure you bought one.' Einstein looked at him and said, 'Young man, I too, know who I am. What I don't know is where I'm going.'

6) When Einstein met Charlie Chaplin:

Einstein said,
*"What I admire most about your art, is its universality. You do not say a word, and yet ... the world understands you."*

“It's true,” replied Charlie Chaplin,
*"But your fame is even greater: The world admires you, when nobody understands you.".*

*_Nice & refreshing are good old memories_*

Friday, July 24, 2020

Barber !!!

நாவிதரும்!!! பண்டிதரும் !!!

"என்னப்பா! முடி வெட்ட எவ்வளவு? சவரம் பண்ண எவ்வளவு?" என்றார்...

அவரும், "முடிவெட்ட நாலணா, சவரம் பண்ண ஒரணா சாமி!" என்று பணிவுடன் கூறினார்...

பண்டிதர் சிரித்தபடியே,
"அப்படின்னா, என் தலையை சவரம் பண்ணு..." என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்...

வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை...

வேலையை ஆரம்பித்தார்...

'நாவிதர் கோபப்படுவார்' என்று எதிர்பார்த்திருந்த
பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான்...

பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்...

"ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது...
உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே... அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க...?"

இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.

"நல்ல சந்தேகங்க சாமி...
நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.
முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க, நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனால தான் நாங்க நாவிதர்கள்...
எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா...?"

இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது.

அடுத்த முயற்சியைத் துவங்கினார்...
"இதென்னப்பா, கத்தரிக் கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டும்தானே இருக்கு... கோல் எங்கே போச்சு?''

இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுநம்தான் பதிலாக வந்தது நாவிதரிமிருந்து.

"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க..." என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்...

இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம்.
கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்...

"எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற...
ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..."

இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது...

அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம்...

இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார்.

கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்....

இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்... பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார்,
"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?"
பண்டிதர் உடனே, "ஆமாம்..." என்றார்...

கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து,
"மீசை வேணுமுன்னிங்களே சாமி! இந்தாங்க..."

பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய்...

அதிர்ச்சியில் உறைந்து போனார் பண்டிதர்...

நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்.

அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,
"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா...?"

இப்போது பண்டிதர் சுதாரித்தார்.
'வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்...' என்ற பயத்தில் உடனே சொன்னார்,
"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்... வேண்டவே வேண்டாம்...".

நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்...

"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது..." என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்...

நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்...

முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல்...

அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது...

கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு, விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் பண்டிதர்...

*"நம்முடைய அறிவும்...*
*புத்தியும்...*
*திறமையும்...*
*அதிகாரமும்...*
*அந்தஸ்தும்...*
*பொருளும்...*
*மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல..."*

இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்...

*இந்த பிரபஞ்சம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது...*

*அனைத்து உயிர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவைகளே...*

*நாம் பெற வேண்டியது நல்ல அனுபவங்களை தவிர வேறோன்றுமில்லை...*

Tuesday, July 21, 2020

God Bless

*கர்த்தர் எதை எல்லாம் ஆசிர்வதிக்கிறார் →*
1) ஆடுகளை - உபா 28-4
2) மாடுகள் - உபா 28-4
3) நமது வேலைகள்/தொழில்கள் எல்லாம் - உபா 28-12
4) எல்லா காரியங்களையும் - உபா 15-10
5) போக்கையும் & வரத்தையும் - உபா 28-6
6) சிறியவர்களை - சங் 115-13
7) பெரியவர்களை - சங் 115-13
8) நீதிமான்களுடைய வாசஸ்தலத்தை - நீதி 3-33
9) கைகளின் கிரியைகளை  -  யோபு 1-10
10) கூடை - உபா 28-5
11) மாவு பிசைகிற பாத்திரம் - உபா 28-5
12) கர்ப்பத்தின் கனி - உபா 28-4
13) நிலத்தின் கனி - உபா 28-4
14) சந்ததியை - சங் 37-26
15) வீட்டை - ஆதி 39-5
16) அப்பத்தை - யாத் 23-25
17) தண்ணிரை - யாத் 23-25

Apostle Paul

 நாளிலே அப்போஸ்தலனாகிய பவுலின் விசுவாசத்தை துச்சமாக எண்ணி யூதர்கள் பவுலுக்கு விரோதம் பாராட்டி பிராது பண்ணி பவுலை எப்படியெல்லாம் துன்புறச் செய்தனர் என்பதை அப்போஸ்தலர் நடபடிகள் 27 ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டள்ள சங்கதிகளின் அடிப்படையில் நாம் அறியப் போகிறோம்.

Part- I

பிரதான ஆசிரியர்களும்,  யூதருடைய மூப்பர்களும் தங்கள் மார்க்கத்தைக் குறித்தும்,  அதற்கு எதிராக பவுல் சாதித்த காரியமான,  இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததைக் குறித்தும்,  மேலும் அதைப்பற்றி எழுந்த சில தர்க்கங்களைக் குறித்தும் பவுலின் மீது அந்த சமயம் எருசலேமிற்கு வந்த நாட்டின் அதிபதி பெஸ்துவிடம் , பிராது பண்ணி ,பவுலை செசரியாவிலிருந்து எருசலேமுக்கு அழைப்பித்து விசாரிக்க வேண்டும் என்ற பொய்யான முகாந்திரத்துடன் பவுலைக் கொன்றுப்போடும் படி சர்ப்பனையான யோசனையுள்ளவர்களாய்  பெஸ்துவைக் வேண்டிக் கொண்டார்கள்.  ஆனால்,  பெஸ்து அதற்கு சம்மதியாமல் பவுலின் மீது குறறம் சாட்டினவர்களைப் பாரத்து!  நீங்கள் செசரியா வந்து பவுலின் மீது குற்றஞ்சாட்டுங்கள் என்று சொன்னார். பின் பெஸ்து எருசலேமில் பத்து நாட்கள் சஞ்சரித்து, அதற்கு பிறகு செசரியாவிற்கு வந்து,  மறுநாளிலே நியாயாசானத்திலே உட்காரந்து பவுலை அழைத்து அவர்கள் கொடுத்தப் பிராதை,  பெஸ்து விசாரிக்கையில், அங்கு குழுமியிருந்த யூதர்கள், தங்களால் ரூபிக்க முடியாத கொடிய குற்றங்களை பவுலின் மீது சுமத்தினார்கள். அதற்கு பவுல் தன்னுடைய வாதத்தை ( defence version) எடுத்துரைத்த போது, பெஸ்து யூதருக்கு தயவு செய்ய மனதாய், பவுலை நோக்கி !எருசலேமிலே நியாயம் விசாரிக்கப்பட உனக்கு சம்மதமா? என்றுக்கேட்டார். அதற்கு பவுல் பிரதியுத்தரமாக,  நான் யூதருக்கு ஒன்றும் அநியாயம் செய்யவில்லை என்றும் இராயனுக்கு அபயமிடுகிறேன் என்று பவுல் பெஸ்துவிடம் கூறினார். இந்நிலையில்,  பெஸ்துவைக் காண செசரியா வந்த அகரிப்பா ராஜாவும் பெர்னிக்கேயாளும் பெஸ்துவின் முன்னிலையில் பவுலை நியாயஸ்தலத்தில் விசாரிக்கும் போது  They observed that,  Paul  did not committed any offence for capital punishment or any other punishment and he deserves acquittal. At that time,  Agrippa said to Festus that Paul could have been set free if he had not appealed to Caesar.  Then Paul and some other prisoners were handed over to a centurion named Julius to sail for Italy. பவுல் மற்றவர்களுடன் ஆசியத் துறைமுகத்துக்கு செல்லவிருநத அதிராமித்தியக் கப்பலில்  நூற்றுக்கதிபதி Julius பாதுகாப்பில் ஏற்றப்பட்டு, கடலில் எதிர்காற்று வீசியபடியால் பாதுகாப்பு கருதி சைபிரஸ் தீவு வழியாக சிலிசியா,  பம்பிலியா,  ஒட்டியுள்ள ஆழ்கடலைக்  கடந்து லீக்கியாவிலுள்ள மீரா நகரை வந்தடைந்தார்.  பின்,  Julius அவர்களை அலெக்சாந்திரியக் கப்பலில் ஏற்றி மெதுவாக  பயனித்து எதிர்காற்று வீசியபடியால், சல்மோன் முனையைக் கடந்து , கிரேத்தா தீவில் இலசயா பட்டணத்தருகில் நல்ல துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தார்கள். உபவாச காலமும் கழிந்தபடியால் நல்ல துறைமுகத்திலிருந்து கப்பல் யாத்திரை செய்வது கப்பற்ப் பிரயாணம் மேற்கொள்ளுகிறவர்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்தானது என்றும் நல்ல துறைமுகத்திலிருந்து கப்பலில் புறப்பட வேண்டாம் என்று பவுல் ஆலோசனை கூறியதை,   Julius கேட்காமல் கப்பல் மாலுமி பேச்சையும் நல்ல துறைமுகத்தில் குளிர் காலத்தில் தங்குவது உகந்தது அல்ல என்று கப்பலில் உள்ள  பெரும்பான்மையினர் ஆலோசனைப்படி,  கப்பல் புறப்பட்டு பெனிக்சு வந்து சேர்ந்து விட வேண்டும் என்று Julius எண்ணினார். தென்றலும் மெதுவாய் அடித்தது. Julius and others were thought that they had obtained what they wanted. கர்த்தருடைய ஊழியர் அப்போஸ்தலனாகிய பவுலின் ஆலோசனையை பொறுட்படுத்தாத Julius -க்கும் மற்றவர்களுக்கும் பவுலுக்கும் நல்ல துறைமுகத்திலிருந்து கிரேத்தா தீவுக்கு அருகே கப்பல் செல்லும் போது, நடந்தது என்ன?

Part - II

கொஞ்ச நேரத்திலே  யூரோக்கிலியோன் என்ற கடுங்காற்று கப்பலை மோதிற்று. கப்பல் அதில் அகப்பட்டுக் கொண்டதால் காற்று வீசிய திசைக்கு கப்பலை செலுத்த முடியாமல் மாலுமி திணறினார்.  காற்று வீசிய திசையிலே கப்பலோடு பிரயாணித்தவர்களான பவலும் Julius Ship captain உள்பட 275 பேர்களும் அடித்துச் செல்லப்பட்டு,  பின்னர் கப்பலின் பின்னால் இணைக்கப்பட்ட படகை அவர்கள் அரும்பாடுபட்டு கட்டி அதைத் துக்கிக் கப்பலில் வைத்து பின்னர் வடத்தால் கப்பலை இறுகக்கட்டினர். கப்பல் புதை மணலில் விழுந்து விடாதபடி கப்பற் பாயை இயக்கினர். அதன் பின்பு, காற்று வீசிய திசையிலே கப்பல் அடித்துச் செல்லப்பட்டு கப்பலில் இருந்தவர்கள் தப்பிப் பிழைப்போம் என்னும் எதிர்நோக்கின்றி கதிரவனோ,  விண்மீன்கள் பல நாட்களாய் தென்படாமல் கடும் புயல் வீசிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் பல நாட்கள் உணவு உண்ணாமல் இருந்தனர்.  அப்போது பவுல் அவர்கள் நடுவில் எழுந்து நின்று! நண்பர்களே!  நான் சொலவதைக் கேட்டு கிரேத்தா தீவுக்கருகில் உள்ள நல்ல துறைமுகத்தை விட்டு புறப்படாமலிருந்திருக்கவேண்டும். அப்போது இந்த கேடும் இழப்பும் நேர்ந்திருக்காது என்றதோடு கவலைப்படாதீர்கள் கப்பற் சேதம் தவிர புராண சேதம் வராது அவர்களைத் திடப்படுத்தி கர்த்தருடைய வார்த்தையான " பவுலை,  பயப்படாதே,  நீ இராயனுக்கு முன்பாக நிற்க வேண்டும் இதோ,  உன்னுடனேகூட யாத்திரை பண்ணுகிற யாவரையும் தேவன் உனக்கு தயவுப்பண்ணினார் என்றார்.  என்பதை நினைவு படுத்தினார்.  தொடரும்!
ஜெபம் :-
அன்பின் ஆண்டவரே உம்முடைய ஆலோசனைகள் யாவும் உம்முடைய உண்மையான ஊழியர்கள் மூலமாய் எங்களுக்கு வரும்போது,  எங்கள் மாம்சத்தை நாங்கள் சாராமல் தெய்வேவுதலுக்கு எங்களை உட்படுத்தி உம்முடைய சகாயத்தை நாங்கள் பெற்றுக்கொள்ளனும் ஸ்வாமி ! எங்கள் சுயத்தை நாங்கள் முற்றிலுமாக அகற்ற உதவி செய்ங்கப்பா!  எங்களுக்கு அனுக்கிரகம் புரியுங்க ஆண்டவரே!  இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம எங்கள் பரமப்பிதாவே ஆமென்.  

Self discipline

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது

1. *தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள்*. அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.

2. *திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்*. இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.

3. *Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள்.* அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.

4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.
*இன்னும் கல்யாணம் ஆகலயா?*
*குழந்தைகள் இல்லையா?*
*இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?*
*ஏன் இன்னும் Car வாங்கவில்லை?*
இது நமது பிரச்சினை இல்லைதானே!"

5. *தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது* அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!

6. நண்பருடன் Taxiயில் சென்றால. *இம்முறை இயலாவிட்டால் மறுமுறை* நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.

7. *மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள்*. மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.

8. *அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள்*. அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

9. *நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள்*. அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.

10. யார் உதவினாலும் பாரபட்சமின்றி *நன்றி சொல்லுங்கள்*.

11. பொதுவில் புகழுங்கள். *தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்*.

12. *உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.*
"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

13. *யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள்*. அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

14. *யாரும் தனக்கு Doctor Appointment இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள்*. அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். *விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன்* என்று கூறலாம்.

15. *நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்*.

16. *கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்*.

17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் *சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள்*. அவர்களாகவே சொன்னால் தவிர.

18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், *Styleகாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள்*. கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.

25 different angles for BIBLE Study

25 different angles for BIBLE Study
1. Context of the chapter
2. Purpose and overview of the chapter
3. Key actors
4. Key places
5. Commandments
6. Prayer points
7. Spiritual growth principles
8. Life principles
9. Revelation of god
10. Warnings
11. Do's and don'ts
12. Confession of sin
13. Praise and worship points
14. Leadership points
15. Guidelines for family life
16. Guidelines for parents and children
17. Guidelines for youth
18. Guidelines for old people
19. Guidelines for social life
20. Prophecy
21. Guidelines for church life
22. Guidelines for students
23. Judgement
24. Promises
25. Miracles

Thief in circus !!!

ஒரு திருடன் சர்கஸ் பார்க்கப் போனான்.
 வட்டமான நெருப்பு வளையத்துக்குள் சர்கஸ் வீரன் ஒருவன் பாய்கின்ற காட்சி.
நிகழ்ச்சி முடிந்ததும் திருடன் அந்த சர்கஸ் வீரனிடம் சென்று இந்த பணிக்கு உனக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள் என கேட்டான். அதற்கு அந்த வீரன்
‘ஆயிரம் ரூபாய் தருகிறார்கள்’
என்றபோது ‘என்னுடன் வா, உனக்கு ஐயாயிரம் தருகிறேன்’
எனக் கூறி அழைத்துச் சென்றான்.
அடுத்தநாள் அந்தத் திருடன் ஒரு வீட்டில் திருடச் செல்லும்போது சர்கஸ் வீரனையும் அழைத்துச் சென்றான்.
அந்த வீட்டின் சுவரின் மேல்பக்கம் ஒரு துளை இருந்தது. அதை ஒரு ஆள் நுழையும் அளவுக்கு பெரிதுபடுத்திக்கொடுத்த பிறகு சர்கஸ் வீரனிடம்,
‘இந்தத் துளை வழியாக வீட்டுக்குள் நுழைந்து நகைகளை திருடி எடுத்து வா’
 என்று சொன்னான். அதற்கு சர்கஸ் வீரன் கொஞ்சமும் தாமதிக்காமல்,
 ‘அப்படிச் செய்ய வேண்டுமானால் பத்தாயிரம் பேரைக் கொண்டு வா’
என சொல்ல திருடனுக்கு பேரதிர்ச்சி. ‘ஏன்’ என கேட்கிறான்.
சர்கஸ் வீரன், ‘நான் சர்கஸில் நெருப்பு வளையத்துக்குள் நானாக நுழைந்து செல்வதில்லை.
சர்கஸ் பார்க்க வருகிற பத்தாயிரம் மக்கள் கை தட்டுவதினாலும் விசில் அடித்து உற்சாகப்படுத்துவதினாலும் எனக்குள் பொங்குகின்ற உற்சாகத்தினால்தான் நெருப்பு வளையத்துக்குள் அத்தனை லாவகமாக நுழைகிறேன்.
நெருப்பு வளையத்துக்குள் நுழைவதைப்போல இந்த சுவரின் பெரிய ஓட்டைக்குள் நுழைந்து உள்ளே சென்று வர வேண்டுமானால் எனக்கு பத்தாயிரம் பேர் கை தட்ட வேண்டும்’ என்று சொல்ல திருடன் தலைசுற்றி மயக்கமடைந்தான்.
இந்தக் கதையை *புலவர் கீரன்* அவர்கள் ஒரு சொற்பொழிவில் சொல்லியுள்ளார்.

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் காட்டுகின்ற அன்பிலும், ஆதரவிலும், ஊக்கத்திலும் உண்டாகும் உற்சாகமே நம் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது.
 உற்சாகமாக இருக்கும்போதுதான் மனமும் சுறுசுறுப்புடன் செயல்படும்.
துறுதுறுவென எதையாவது செய்ய வைத்து நம்மை உயிர்ப்புடன் இயங்க வைக்கும்.
உற்சாகம் குறையும்போது நம்மீது ஒட்டிக்கொண்டிருக்கும் சிறு தூசியைக்கூட நம்மால் தன்னிச்சையாக தட்டிவிட்டுக்கொள்ள முடியாது.
நம்முடைய வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் நாம் மட்டுமே காரணமில்லை.
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மை சுற்றி உள்ளவர்களை பெருமகிழ்ச்சியோடு வைத்திருப்போம்.
*மகிழ்வித்து மகிழ்வோம், மகிழ்ந்து மகிழ்விப்போம் வாங்க!*

Monday, July 20, 2020

Corona Laughs



Corona Laughs

YouTube videos show coronavirus jumping! It looks like they're laughing! These viruses have curtailed our pomp celebrations and parties! Our glorious shopping malls and  mandapa are reduced to hospitals.We're afraid to go out for jolly journeys! Masks cover our make-ups and lipsticks!

Corona laughs! Virus has humbled us! Our wrong priorities of selfishness and image building excercises are exposed! We're compelled to look toward God! Let's humble before Him and ask His forgiveness!

Friday, July 10, 2020

Interesting facts #1

குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள்.  குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.

  பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.

  புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.

  பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.

  முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.

பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.

  பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

  அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.

  மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.

  அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.

  நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.

Five Finger prayer

ஐந்து விரல் ஜெபம்

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும். - (லூக்கா 18:1ன் முதல் பகுதி)

நாம் அனைவரும் ஜெபிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் எப்படி ஜெபிப்பது என்று ஒரு சிலருக்கு தெரிவதில்லை. சோர்ந்து போகாமல் ஜெபிக்க வேண்டும் என்பது தேவனுடைய கட்டளையாதலால் நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இங்கு நாம் மனதில் வைத்து கொண்டு ஜெபிக்க தக்கதாக எளிதான முறையில் ஞாபகம் வைக்க சில குறிப்புகளை தருகிறோம். அதை பின்பற்றி நாம் எளிதாக ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் ஜெபித்துவிடலாம். நாம் கார் ஓட்டும் போது சிக்னலுக்காக காத்திருக்கும்போதோ, வேலையிடத்தில் சிறிது ஓய்வெடுக்கும்போதோ, இந்த சிறிய ஜெபத்தை நாம் செய்யலாம். நமது கரத்தை எடுத்து கொள்வோம். அதை ஜெபிக்க கூப்பும்போது,

1. முதலாவது நமக்கு அருகில் இருப்பது பெருவிரல்: பெருவிரல் நமக்கு அருகில் இருப்பதால், நமக்கு நெருங்கிய உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், நமக்கு நெருங்கிய ஊழியர்கள் என்று நெருங்கியவர்களுக்காக ஜெபிக்கலாம். நமது ஞாபகத்தில் அவர்கள் இருப்பதால் அவர்களை நினைத்து எளிதாக ஜெபிக்கலாம். மற்றும் பெருவிரல் முதல் விரலாக இருப்பதால், தேவன் ஏற்ப்படுத்திய ஊழிய முறைப்படி முதல் ஊழியமாகிய அப்போஸ்தல ஊழியத்தை செயபவர்களுக்காக  ஜெபிக்க வேண்டும்.

2. இரண்டாவதாக இருப்பது சுட்டிகாட்டும் விரல்: நமக்கு போதிக்கும் ஆசிரியர்கள், நமக்கு உடல் நிலையை சுட்டிகாட்டி வழிகாட்டும் வைத்தியர்கள் என்று இவர்களுக்காக ஜெபிக்கலாம். மற்றும் சுட்டி காட்டும் விரல் நீ செய்வது தவறு என்று ஒருவரை சுட்டி காட்டி திருத்துவதால், திருத்தும் ஊழயித்தை செய்யும் கிறிஸ்துவுக்குள் உண்மையான தீர்க்கதரிசிகளுக்காக ஜெபிக்க வேண்டும்.

3. மூன்றாவது இருப்பது உயரமான விரல்: அது நம்மை ஆள்பவர்களையும், நமக்கு மேலான யாவரையும் குறிக்கிறது. நமது ஜனாதிபதி, பிரதம மந்திரி, மற்ற மந்திரிகள், முதன் மந்திரி, நமது வேலையிடத்தில் நமக்கு மேலாக இருப்பவர்கள், இவர்களை ஞாபகத்தில் கொண்டு வந்து ஜெபிக்கலாம். சுவிசேஷ வேலை செய்பவர்கள் பிரதான வேலையை செய்வதால் அவர்களை இந்த நேரத்தில் நினைவில் கொண்டு வந்து ஜெபிக்க வேண்டும்.

4. நான்காவது இருப்பது மோதிர விரல்: இதை பெலவீன விரல் என்றும் சொல்வார்கள். பியானோ கற்று கொடுப்பவர்களுக்கு தெரியும். இந்த விரல் பெலவீனமானது என்று. ஆகவே நமது சமுதாயத்தில் பெலவீனமானவர்களை, வியாதியில் இருப்பவர்களை, கஷ்டத்தில் இருப்பவர்களை நினைத்து ஜெபிக்க வேண்டும். அதை போல, மோதிர விரல் மேய்ப்பர்களை குறிக்கிறது. சபைகளை மேய்க்கின்ற பாஸ்டர்களை நினைத்து நாம் ஜெபிக்க வேண்டும்.

5. கடைசியில் இருப்பது சுண்டு விரல்: சுண்டு விரல் நம்முடைய தேவைகளை குறிக்கிறதாக இருக்கிறது. இப்போது நமது தேவைகளை கர்த்தரிடம் சொல்லி கடைசியாக நமக்காக ஜெபிக்க வேண்டும். நமக்கு காதில் ஏதாவது குடையும்போது, இந்த சுண்டு விரலே நம் காதிற்குள் சென்று குடைய வைக்க முடியும். அதுப்போல சுண்டு விரல் போதகர்களை குறிக்கிறது. அவர்களின் போதகமே நமது காதிற்குள் செல்லுகிறபடியால், நாம் இந்த சமயத்தில் போதகர்களை நினைத்து ஜெபிக்க வேண்டும்.

'பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்' (எபேசியர் 4:12-13) என்று கர்த்தர் கொடுத்த ஊழிய முறையை நாம் இந்த இடத்தில் பார்க்கிறோம். இவைகளை நாம் ஒவ்வொரு விரலுக்கு ஈடாக நினைத்து, அந்த ஊழியம் செய்பவர்களுக்காக ஜெபிக்கும்போது, கர்த்தருடைய இராஜ்யம் பரவுவதற்கும், பரிசுத்தவான்கள் சீர் பொருந்தும் பொருட்டும் நாம் தொடர்ந்து ஜெபிப்பதற்கு ஏதுவாகும். அதினால் கர்த்தருடைய நாமம் மகிமைப்படும்.

நாம் தினமும் இத்தகைய ஜெபத்தை ஒரு ஐந்து நிமிடங்கள், அல்லது பத்து நிமிடங்கள் ஜெபிக்கும்போது அது எத்தனை பெரிய மாற்றத்தை சபைகளில் ஏற்படுத்தும்! நமது தேசத்தில் ஏற்படுத்தும்! தினமும் நமது விரல்களை நினைவு கூர்ந்து ஜெபித்து, தேசத்தையும் சபைகளையும் ஜெபத்தால் அசைப்போமாக! தேவனின் நாமம் மகிமைப்படுவதாக! ஆமென் அல்லேலூயா!

தேசத்தை ஆள்பவர்க்காய் மறவாமல் ஜெபித்திடுவோம்
அதிகாரம் உடையவர்க்காய் அவசியம் ஜெபித்திடுவோம்
ஏழைகள் எளியவர்க்காய் உருக்கமாய் ஜெபித்திடுவோம்
நியாயங்கள் நிலைத்திடவே விண்ணப்பம் செய்திடுவோம்

Sunday, July 5, 2020

Wise words


*WISE WORDS*

```In life, some may walk, others may run, but remember the Lord gave the tortoise and the horse the same days to reach Noah's ark. Your journey might be rough and tough but you will definitely get to your destination.
Jacob looked at Joseph and saw a good son! The ten brothers looked at Joseph and saw a useless dreamer! The travellers looked at Joseph and saw a slave!! Potiphar looked at Joseph and saw a fine servant!! Potiphar's wife looked at Joseph and saw a potential boyfriend! The prison officers saw in Joseph a prisoner! How wrong were all of them! God looked at Joseph and saw a Prime Minister of Egypt in waiting!! Don't be discouraged by what people see in you!! Be encouraged by what God sees in you!! Never underrate the person next to you because you never know what the Lord has deposited in that person. Your maid may be a Chief Executive Officer in waiting for a company which shall employ your child. Your garden-boy may be a president in waiting. (Remember David got the anointing of becoming a King while he was a simple child herding sheep. Esther was a simple orphaned girl yet she was a Queen in waiting). Let's share God's love and make the world a better place to live. Show that love by sharing this message with those you love.
IT DOESN'T MATTER HOW PEOPLE SEE YOU, IT MATTERS HOW GOD SEES YOU
God is God:
🏽He doesn't care about *age*, no wonder he blessed Abraham.
🏽He doesn't care about *experience*, no wonder he chose David.
🏽He doesn't care about *gender,* no wonder he lifted Esther.
🏽He doesn't care about *your past*, no wonder he called Paul.
🏽He doesn't care about *your physical appearance*, no wonder he chose Zacchaeus
(the shortest one).
🏽He doesn't care about *fluency in speech* , no wonder he chose Moses.
🏽He doesn't care about *your career*, no wonder he choose Mary Magdalene; a prostitute.
All I know is that my God never changes
🏽He never made *a promise he wouldn't keep*👌🏾
He never saw *a person he wouldn't help*👌🏾
🏽He never heard *a prayer he wouldn't answer*👌🏾
🖼He never found *a soul he wouldn't love*👌🏾
🏽He never found *a sinner he wouldn't forgive*👌🏾
This is the kind of God I would like to commune with every day the moment I wake up. I strongly recommend Him to you.```

Current Post

தீயோனிடமிருந்து என்னை விடுவியும்

தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை அறிந்துள்ளது. அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது. திருவெளிப்பாடு 12:12  பிசாச...