Monday, June 1, 2020

THE PERILS OF PRAYERLESSNESS.

THE PERILS OF PRAYERLESSNESS.
 (1) Prayerlessness is: a sin (1Samuel 12:23).
 (2) Prayerlessness is: the fastest and surest way to become a sinner.
 (3) Prayerlessness is an outright/direct rebellion against God.
 (4) Prayerlessness is the fastest way to cooperate with the devil.
 (5) Prayerlessness is telling God to stop what He has started.
 (6) Prayerlessness is continuing in the flesh what began in the spirit.
 (7) Prayerlessness is asking God to do His worst. (Ezekiel 22:30,31)
 (8) Prayerlessness is taking over from God (John 15:14)
 (9) Prayerlessness is a symptom of backsliding
 (10) Prayerlessness withdraw the presence of God.
 (11) Prayerlessness limit the manifestation of the sons of God on earth (Matthew 18:18; 17:21)
 (12) Prayerlessness is conspiring to reduce the kingdom of God on earth (Matthew 9:37,38).
 (13) A Prayerless Christian will replace prayer with; Church attendance, giving to the poor, visitations, observance of rules and regulations, dos and don'ts.
 (14) The quickest way for a Christian to die is through Prayerlessness.
 (15) Talkativeness is a symptom of Prayerlessness.
 (16) Offerings tithing, giving to the poor, visitations, helping the poor; are all good Christian virtue but is not a substitute for Prayer.
 (17) A Prayerless Christian is not a holy Christian ( Luke 22:40)
 (18) To be Prayerless is to become sinful ( Matthew 26:41 Mark 14:38)
 (19) To be Prayerless is to become unworthy ( Luke 21:36)
 (20) To be Prayerless is to be unprepared for the rapture ( Mark 13:33)
 (21) Praying unscriptural prayers is  Prayerlessness ( 1John 5:14)
 (22) Praying without faith is Prayerlessness ( James 1:6-8)
 (23) Praying without concentration is Prayerlessness (Matthew 15:8)
 (24) Praying selfish prayers is Prayerlessness (James 4:3)
 (25) Prayer in sin is Prayerlessness (Psalm 66:18)
 (26) Failure to improve in your prayer life for years is Prayerlessness (Matthew 26:40-41)
 (27) The word of God is dull in the ears of a Prayerless Christian (Hebrews 4:2)
 Note: A day without prayer is a minus in your life. Therefore, Pray without ceasing”

Padithathil pidithathu #5

உலகில் உள்ள பெரிய பெரிய நாடுகள் எல்லாம் தங்கள் நாட்டுக்கு அருகில் உள்ள குட்டி குட்டி தீவுகள் மீது போர்தொடுத்து அவற்றை ஆக்கிரமிக்க தொடங்கிய காலகட்டம்!

ஒரு கப்பலில் 500 வீரர்களை அனுப்பி 500 பேர் மக்கள்தொகை கொண்ட ஆதிவாசிகள் வாழ்கின்ற ஒரு தீவை கைப்பற்ற அனுப்பினார்கள் கப்பல் தீவை சென்றடைந்தது, சிலநாட்களில் திரும்பிவந்தது, 500 வீரர்களும் கைகால் உடைந்த நிலையில் தொற்றுபோய் திரும்பிவந்தார்கள், ஆதிவாசிகள் பின்னி எடுத்துவிட்டார்கள்,

அடுத்த நாள் 1000 வீரர்களை கப்பலில் அனுப்பினார்கள் 1000 வீரர்களும் கைகால் இழந்த நிலையில் பயந்து ஓடிவந்தார்கள், மீண்டும் 2000 பேரை அனுப்பினார்கள் அவர்களுக்கும் அதே கதிதான், பின் 5000 பேர்! அவர்களுக்கும் அதே கதி!

இவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை வெறும் 500 ஆதிவாசிகள் ஆயுதங்களுடன் சென்ற 5000 பேரையும் தோற்கடித்து கைகால்களை உடைத்து திருப்பி அனுப்பிவிட்டார்களே எப்படி முடிந்தது என்று தீவிரமாக யோசித்தார்கள். பின் ஒரு முடிவுக்கு வந்தார்கள்,

இந்த முறை வெறும் 500 பேரை மட்டுமே கப்பலில் அனுப்பினார்கள் இரண்டு நாள் நடந்த தீவிர சண்டையில் ஆதிவாசிகளை தோற்கடித்துவிட்டார்கள் !

5000 பேர் சென்று தோற்ற இடத்தில் வெறும் 500 பேர் சென்று எப்படி ஜெயித்தார்கள்?!?!

இந்த முறை ஒரே ஒரு மாற்றத்தைதான் செய்திருந்தார்கள்,
500 பேரை தீவில் இறக்கியதும் கப்பல் திரும்பிவிட்டது. இனிமேல் இந்த தீவில் இருந்து திரும்பி செல்ல முடியாது, உயிருடன் வாழவேண்டும் என்றால் தீவை கைப்பற்றியே ஆகவேண்டும்! இந்த நெருக்கடிதான் அவர்களை ஜெயிக்கவைத்தது!

லட்சியத்தில் உறுதியாக இருப்பதைவிட அதை அடைவதற்கான முயற்சியில் மிகவும் உறுதியாக இருந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் படிக்கட்டில் இறங்கி நீச்சல் கற்றுக்கொள்பவனை விட மேலிருந்து குதிப்பவனே எளிதில் நீந்துகிறான்!

Padithathil Pidithathu #4

ஒரு காட்டில் சிங்க ராஜாவின் பிறந்த நாள் . காடே அல்லோல கல்லோலப் பட்டது . எங்கும் அலங்காரங்கள் , விழாக்கோலமாய் அமர்க்களப் பட்டது .
                ஆடல் , பாடல் , கலை நிகழ்ச்சிகள் என்று எங்கு பார்த்தாலும் கேளிக்கைகள் . அதிகாலை முதலே விருந்து துவங்கி விட்டது . காட்டு மிருகங்கள் எல்லாமே குதூகலமாகத் திரிந்தன .
               வழக்கமாய் சிங்க ராஜாவின் பிறந்த நாளில் இவையெல்லாம் நடப்பது வழக்கந்தான் என்றாலும் , சிங்க ராஜா அதிகமாய் விரும்புவது அந்த நாளில் நடக்கும் ஓட்டப் பந்தயத்தைத்தான் . ஓட்டப் பந்தயம் என்றால் ராஜாவுக்குக் கொள்ளைப் பிரியம் . ஒவ்வொரு மிருகத்துக்குமே ஓடுகிற திறன் அவசியம் என்று சிங்க ராஜா வலியுறுத்தியது .
                 ஒவ்வொரு ஆண்டிலும் பல மிருகங்கள் கலந்து கொண்டாலும் , வழக்கமாய் முதல் பரிசு பெறுவது மான்தான் . மிகுந்த கவனத்துடன் புயல் காற்றைப் போல ஓடி முதல் பரிசை வென்றுவிடும் .
                 இந்த முறை போட்டியை இன்னும் சுவாரஸ்யமாக்க ராஜா ஒரு சிறப்புப் பரிசை அறிவித்தது . முதல் பரிசு பெறுகிற மிருகத்துக்கு ' ஓட்டத்தின் ராஜா ' என்ற சிறப்புப் பெயரும் சூட்டி ஒரு கிரீடத்தையும் அணிவிக்கப் போவதாக அறிவித்தது .
                இந்த அறிவிப்பைக் கேட்டதும் எல்லா மிருகங்களுக்குமே ஆசை வந்துவிட்டது . பின்னே ராஜாவால் சிறப்புப் பெயர் சூட்டப்பட்டு , முடிசூட்டப்பட வாய்ப்புக் கிடைப்பது எத்தனை பெரிய பாக்கியம் ?
               வருடா வருடம் மான் மட்டுமே ஜெயித்துக் கொண்டிருப்பதைக் கண்டு நரிக்கு வயிறெல்லாம் எரிந்தது . இந்த வருடமும் மான் ஜெயித்தால் கிரீடம் , பட்டம் எல்லாம் அதற்கே சொந்தமாகிவிடும் .
" நான் ஜெயிக்கிறோனோ இல்லையோ , மான் தோற்க வேண்டும் . அதற்கு இந்த ஆண்டில் ராஜா கொடுக்கும் பரிசு கிடைக்கவே கூடாது . ஏதாவது செய்து இம்முறை மானுக்கு வெற்றி கிடைக்காதபடி செய்துவிடவேண்டும் " என்று சதித்திட்டம் ஒன்றைத் தீட்டியது .
                 கடந்த ஆண்டில் மானைத் தோற்கடிக்க அதன் ஓடுபாதையில் முள்ளைப் போட்டு வைத்துப் பார்த்தது . ஆனால் மானின் உறுதியான குளம்புகள் முட்களையெல்லாம் நொறுக்கி விட்டன. ஒருமுறை கல்லை வீசி வைத்துப்பார்த்தது . மான் துள்ளி ஓடியதில் கல் எதுவும் அதன் கால்களில் கூடப் படவில்லை . ஒரு முறை ஒரு தேளை வழியில் காத்திருந்து கொட்டச் சொன்னது . மானின் கால் பட்டு அதுவும் கூழாகி விட்டது .
                 இப்படி எத்தனையோ சூழ்ச்சிகள் செய்தும் மானிடம் எடுபடவில்லை . ஒரு அளவுக்கு மேல் ஏதாவது செய்யப் போய் , மானுக்கு சந்தேகம் வந்து , அது ராஜாவிடம் புகார் சொல்லிப் பிடிபட்டு விட்டால் அவ்வளவுதான் . நரியின் கதை முடிந்து விடும் . எனவே இம்முறை வேறொரு வகையில் யோகித்தது .
                 போட்டிக்கான நேரம் நெருங்கிக் கொண்டு இருந்தது . திடீரென்று நரிக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது . உடனே ஓடிப்போய்த் தன் நண்பன் பாம்பை சந்தித்தது . பாம்பும் நரியைப் போலவே வஞ்சக புத்தி கொண்டதுதான் . நரி , பாம்பிடம் தனது திட்டத்தை விவரித்தது . பாம்பும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டது .
                மான் போட்டிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் இடத்துக்குப் பாம்பு சென்று மானிடம் பேச்சுக் கொடுத்தது .
" நண்பா .வழக்கம் போல  இந்த வருஷமும் நீதான் ஜெயிக்கப் போற . ராஜா கொடுக்கப் போற பரிசு இந்த வருஷமும் உனக்குத்தான் " என்றது தொடர்ச்சி நாளை

Padithathil Pidithathu #3

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான 28 வயதான சாடியோ மானே செனகல் (மேற்கு ஆப்பிரிக்கா), இந்திய ரூபாயில் வாரத்திற்கு ரூ. 14 கோடி சம்பாதிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வளவு சம்பாதிக்கும் அவர் டிஸ்பிளே  உடைந்த மொபைலுடன்   பல இடங்களில் காணப்பட்டார்.

ஒரு நேர்காணலில், அதைப் பற்றி கேட்கப்பட்டபோது..

"நான் அதை சரிசெய்வேன், டிஸ்பிளே மாற்றிவிடுவேன்" என்றார்.

நீங்கள் ஏன் டிஸ்பிளே மாற்றவேண்டும்..? பல கோடிகள் சம்பாதிக்கும் நீங்கள் புதிய மொபைலே வாங்கலாமே என்று கேட்கப்பட்டது.

"என்னால் ஆயிரம் மொபைல்கள், 10 ஃபெராரிஸ், 2 ஜெட் விமானங்கள், டயமண்ட் கடிகாரங்களை வாங்கமுடியும்.  ஆனால், இதையெல்லாம் நான் ஏன் வாங்கணும்..?

நான் வறுமையைப் பார்த்திருக்கிறேன், சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டுள்ளேன். என்னால் படிக்க முடியவில்லை.

எனக்கு காலணிகள் இல்லை. காலணிகள் இல்லாமல் விளையாடினேன், நல்ல உடைகள் இல்லை, சாப்பிடவில்லை.

ஆனால், இன்று நான் நிறைய பணத்தை சம்பாதிக்கிறேன். அதனால்தான் சம்பாதித்த பணத்தில் மக்கள் படிக்கும்படி பள்ளிகளை உருவாக்கியுள்ளேன்.. என் நாட்டில் உள்ள ஏழை  குழந்தைகளுக்கு புதிய காலணிகளும், உடைகளும்,  உணவும் கொடுக்கிறேன்.

வசதியாக வாழ்வதற்கு பதிலாக  அதை என் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்"
என்றார் அந்த அற்புத மனிதன்..!

Padithathil Pidithathu #2

கொஞ்சம், சாமர்த்தியம், கொஞ்சம் நடிப்பு, கொஞ்சம் பொய், கொஞ்சம் உண்மை இருந்தாதான் இந்த உலகத்துல வாழமுடியும். முழுக்க முழுக்க
நேர்மை எல்லாம் ஒரு பைசாவுக்கும் உதவாது!

சில மனிதர்கள் பொறுமையை முட்டாள்தனமாக கருதுகிறார்கள்,
ஆனால் காத்த பொறுமைக்கான வெகுமதியை புத்திசாலிகள் மட்டுமே உணர முடியும், முட்டாள்களால் முடியாது !!

உங்களை புரிந்தவர்களுக்கு மட்டும் நல்ல புத்தகமாக இருந்தால் போதும்,
புரியாதவர்களுக்கு புதிராகவே இருந்து விடுங்கள்!!!

Padithathi Pidithathu #1

"ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே" என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்

இதோ அதற்கு ஓர் உதாரணம்:

அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான்.

ஒவ்வொரு அமைச்சருக்கும் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான்.

மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன்.

""ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள்.

"செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள்.

இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா? அல்லது விதிவிலக்குகள் ஏதாவது இருக்கிறதா? என்பதை அறிய வேண்டும்'' என்று நினைத்தான் மன்னன்.

அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.

இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள்.

""மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்கு களப்பயிற்சி தரப் போகிறேன்.

உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள்.

உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும்.

அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்.

நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம்.

அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்து விடுவோம்.

அவன் அதை உண்டு உங்களை வாழ்த்த வேண்டும்..

இந்தப் பயிற்சி திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் நலப் பணியாளர்களை இந்தப் பணியில் அமர்த்தி மக்களின் பசி போக்கலாம்.''

மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.

காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான்.

ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது.

மேலும் அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு.

மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள்.

அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.

முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார்.

 நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற நினைப்பே அவருக்கு உந்து சக்தியாக இருந்தது.

சாக்குப்பையை நிரப்ப அவருக்கு மூன்று, நான்கு நாட்கள் தேவைப்பட்டது.

ஆனால், உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.

இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார்.

பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார்.

சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள்.

மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? என்று எண்ணி அப்படியே செய்த அந்த நபர், ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்.

மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை.

பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள்? என்ற நினைப்பில் காய்ந்த இலைகளையும், சருகுகளையும் போட்டு பையை நிரப்பி அரண்மணையில் சேர்த்துவிட்டார்.

ஒரு நாழிகைப் பொழுதில் வேலையை முடித்துவிட்டுத் தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கிவிட்டார்.

மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான்.

அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான்.

""இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள்.

அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள்.

சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும்.

அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம்.

அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.''

மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை. ஐந்தே நாட்களில் அவர் பசி தாங்காமல் மாண்டுவிட்டார்.

இரண்டாமவரோ அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார்.

ஆனால், அவர் உடல்நலம் கெட்டுவிட்டது.

மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான்.

முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார்.

தான் சேகரித்த தரமான காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார்.

மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான்.

இந்தக் கதையில் உள்ள வாழ்வியல் தத்துவத்தை நச்சென்று விளக்குகிறது

அதன் உட்பொருள் இதுதான்.

ஒரு இடத்தில் ஆயிரம் பசுக்கள் இருக்கின்றன.

தன் தாயைத் தேடி வரும் ஒரு கன்று அந்த ஆயிரம் பசுக்களில் தன் தாயைச் சில நொடிகளில் கண்டுபிடித்து அதனிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது.

அதேபோல், ஒருவன் செய்யும் வினையின் பயனானது அவன் எங்கிருந்தாலும் அவனைக் கண்டுபிடித்து அவனைச் சென்றடைந்துவிடும்

நாம் அனைவரும் நன்மை செய்கிறோமா, தீமை செய்கிறோமா என்று இறைவன் கண்காணிப்புக் கேமரா வைத்துக் கொண்டு பார்ப்பதில்லை.

நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று நமக்குப் பூரண சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டான்.

ஆனால் உங்கள் செயலின் பலனை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும் என்ற நியதியையும் அழுத்தமாக வைத்துவிட்டான்.

நீங்கள் உங்கள் பையில் நல்ல பழங்களைப் போடுகிறீர்களா.. இல்லை.. சருகுகளையும் அழுகிய பழங்களையும் போடுகிறீர்களா என்று யாருமே கண்காணிப்பதில்லை..

 ஆனால் நீங்கள் சேகரித்ததை நீங்கள்தான் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

"ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே' என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்.

 அக்கிரமம் செய்பவன் இப்போதுதான் காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான்.

விரைவில் தனிமைச் சிறையில் அவற்றை உண்ண வேண்டிய காலம் வரும்.

அப்போது அவனுக்குப் பசியும் மரணமுமே பரிசாகக் கிடைக்கும்.

இது மனிதன் இயற்றிய சட்டம் இல்லை; இறைவன் வகுத்த நியதி. இதற்கு விதிவிலக்கு இல்லை💝🔔

-படித்ததில் பிடித்தது.

Infibulation

Ever heard of 'INFIBULATION' ???

This is the practice of excising the clitoris and labia of a girl or woman and stitching together the edges of the vulva to prevent sexual intercourse. It is the complete scraping of vagina and stitching it together to prevent the girl from having sex.

The vagina is sealed leaving a small hole for the girl to menstruate or urinate. 

The girl's legs are tied with rope for days so that the wound can heal.  It usually take 15 to 40 days for the wound to heal. During this period the girl's legs remain tied and she is prevented from moving. 

Basically, the stitches are meant to be reopen by her husband on the wedding night so he can have intimate with her.
Imagine someone opening stitches and immediately having sex with her. 
Just imagine the pains, I mean serious pains!! 

Imagine the traumatic experience, the pains the girl will pass through.

Is it not better to allow her decide if she will marry as a virgin or not than to do this? 
 
At birth many women have to be cut again because the vagina opening is too small for the passage of the baby. 
It also cause urinary tract infections in women, fistulae and infertility etc. 

FYI, this is still practiced in some part of Africa till date.

According to research, it was also practiced in North America,  Australia and New Zealand.

It's disheartening

Say No To INFIBULATION!
Girls do not deserve this ill treatment for being girls. 
It's not a crime to be a girl child.

#SayNoToInfibulation
#LetGirlsLive
#SayNoToChildAbuse
#SayNoToBodyAbuse
#StopAbusingTheGirlChild
#NoInfibulation
#VoicesAgainstViolence

Via: Vocabulary And Dawn News' Informative Articles

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...