Monday, June 1, 2020

Padithathil Pidithathu #4

ஒரு காட்டில் சிங்க ராஜாவின் பிறந்த நாள் . காடே அல்லோல கல்லோலப் பட்டது . எங்கும் அலங்காரங்கள் , விழாக்கோலமாய் அமர்க்களப் பட்டது .
                ஆடல் , பாடல் , கலை நிகழ்ச்சிகள் என்று எங்கு பார்த்தாலும் கேளிக்கைகள் . அதிகாலை முதலே விருந்து துவங்கி விட்டது . காட்டு மிருகங்கள் எல்லாமே குதூகலமாகத் திரிந்தன .
               வழக்கமாய் சிங்க ராஜாவின் பிறந்த நாளில் இவையெல்லாம் நடப்பது வழக்கந்தான் என்றாலும் , சிங்க ராஜா அதிகமாய் விரும்புவது அந்த நாளில் நடக்கும் ஓட்டப் பந்தயத்தைத்தான் . ஓட்டப் பந்தயம் என்றால் ராஜாவுக்குக் கொள்ளைப் பிரியம் . ஒவ்வொரு மிருகத்துக்குமே ஓடுகிற திறன் அவசியம் என்று சிங்க ராஜா வலியுறுத்தியது .
                 ஒவ்வொரு ஆண்டிலும் பல மிருகங்கள் கலந்து கொண்டாலும் , வழக்கமாய் முதல் பரிசு பெறுவது மான்தான் . மிகுந்த கவனத்துடன் புயல் காற்றைப் போல ஓடி முதல் பரிசை வென்றுவிடும் .
                 இந்த முறை போட்டியை இன்னும் சுவாரஸ்யமாக்க ராஜா ஒரு சிறப்புப் பரிசை அறிவித்தது . முதல் பரிசு பெறுகிற மிருகத்துக்கு ' ஓட்டத்தின் ராஜா ' என்ற சிறப்புப் பெயரும் சூட்டி ஒரு கிரீடத்தையும் அணிவிக்கப் போவதாக அறிவித்தது .
                இந்த அறிவிப்பைக் கேட்டதும் எல்லா மிருகங்களுக்குமே ஆசை வந்துவிட்டது . பின்னே ராஜாவால் சிறப்புப் பெயர் சூட்டப்பட்டு , முடிசூட்டப்பட வாய்ப்புக் கிடைப்பது எத்தனை பெரிய பாக்கியம் ?
               வருடா வருடம் மான் மட்டுமே ஜெயித்துக் கொண்டிருப்பதைக் கண்டு நரிக்கு வயிறெல்லாம் எரிந்தது . இந்த வருடமும் மான் ஜெயித்தால் கிரீடம் , பட்டம் எல்லாம் அதற்கே சொந்தமாகிவிடும் .
" நான் ஜெயிக்கிறோனோ இல்லையோ , மான் தோற்க வேண்டும் . அதற்கு இந்த ஆண்டில் ராஜா கொடுக்கும் பரிசு கிடைக்கவே கூடாது . ஏதாவது செய்து இம்முறை மானுக்கு வெற்றி கிடைக்காதபடி செய்துவிடவேண்டும் " என்று சதித்திட்டம் ஒன்றைத் தீட்டியது .
                 கடந்த ஆண்டில் மானைத் தோற்கடிக்க அதன் ஓடுபாதையில் முள்ளைப் போட்டு வைத்துப் பார்த்தது . ஆனால் மானின் உறுதியான குளம்புகள் முட்களையெல்லாம் நொறுக்கி விட்டன. ஒருமுறை கல்லை வீசி வைத்துப்பார்த்தது . மான் துள்ளி ஓடியதில் கல் எதுவும் அதன் கால்களில் கூடப் படவில்லை . ஒரு முறை ஒரு தேளை வழியில் காத்திருந்து கொட்டச் சொன்னது . மானின் கால் பட்டு அதுவும் கூழாகி விட்டது .
                 இப்படி எத்தனையோ சூழ்ச்சிகள் செய்தும் மானிடம் எடுபடவில்லை . ஒரு அளவுக்கு மேல் ஏதாவது செய்யப் போய் , மானுக்கு சந்தேகம் வந்து , அது ராஜாவிடம் புகார் சொல்லிப் பிடிபட்டு விட்டால் அவ்வளவுதான் . நரியின் கதை முடிந்து விடும் . எனவே இம்முறை வேறொரு வகையில் யோகித்தது .
                 போட்டிக்கான நேரம் நெருங்கிக் கொண்டு இருந்தது . திடீரென்று நரிக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது . உடனே ஓடிப்போய்த் தன் நண்பன் பாம்பை சந்தித்தது . பாம்பும் நரியைப் போலவே வஞ்சக புத்தி கொண்டதுதான் . நரி , பாம்பிடம் தனது திட்டத்தை விவரித்தது . பாம்பும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டது .
                மான் போட்டிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் இடத்துக்குப் பாம்பு சென்று மானிடம் பேச்சுக் கொடுத்தது .
" நண்பா .வழக்கம் போல  இந்த வருஷமும் நீதான் ஜெயிக்கப் போற . ராஜா கொடுக்கப் போற பரிசு இந்த வருஷமும் உனக்குத்தான் " என்றது தொடர்ச்சி நாளை

No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...