Wednesday, April 28, 2021

காரிருளில் நம் தீபம் இயேசு

 *காரிருளில் நம் தீபம் இயேசு* 

ஜான் ஹென்றி நியுமென் (Henry Newman) என்ற தேவ மனிதர் எழுதிய.. *காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன், வேறொளியில்லை, வீடும் தூரமே, நடத்துமேன்; நீர் தாங்கின், தூர காட்சி ஆசியேன்; ஓர் அடிமட்டும் என்முன் காட்டுமேன்..* என்ற  பாடலை எந்த சூழ்நிலையில் ஜான் ஹென்றி எழுதினார் என்று சுவாரசிய தகவலை காண்போம்.


1801-ல் பிறந்த இவர் தனது 15 ஆவது வயதில் கிறிஸ்துவை ஏற்று கொண்டு தன் வாழ்வை ஊழியத்திற்கு அர்ப்பணித்தார். சுமார் 10 ஆண்டுகள் தீவிரமாக ஊழியம் செய்தார். பின் ஓரு சரீர வியாதி அவரை தாக்கியது. இத்தாலியிலிருந்து தனது தாய்நாடான இங்கிலாந்தை நோக்கி கப்பலில் செல்ல வேண்டியதாயிற்று. அப்போது அவருக்கு இருந்த காய்ச்சலும் அதிகரித்தது. கடலில் மூடுபனி ஏற்பட்டு கப்பலில் இருள் சூழ்ந்தது. வெளிச்சமில்லாத அந்த குளிரில் மிகவும அவதிப்பட்டார். அப்பொழுதுதான் இந்த பாடலை இயற்றினார். அப்பாடலை பாடிக் கொண்டிருந்தபோதே பனி மூட்டம் குறைந்து வெளிச்சம் வர ஆரம்பித்தது, அந்த நாள் அவரது வாழ்வில் மறக்க முடியாத ஆவிக்குரிய அனுபவத்தை தந்தது.


அன்று அவர் எழுதிய இப்பாடல் இன்றுவரை அநேகருக்கு ஆசீர்வாதமாக உள்ளது. பின்பு 57 வருஷம் அவர் ஊழியம் செய்து தனது 89வது வயதில் கர்த்தருக்குள் நித்திரையானார். இப்பாமாலை பாடலின் மூலம் ஒவ்வொரு நாளும் இன்னுமதிகமாய் கர்த்தரை சார்ந்து கொள்ள நம்மை அர்ப்பணிப்போம். காரிருள்போல தோன்றும் வாழ்க்கiயின் பாதைகளிலே கர்த்தர் கூட இருக்கும்போது தூர காட்சி வேண்டாமென்றும், ஒரு அடி மட்டும் காண்பியும் என்றும் பக்தர் இங்கே பாடுகிறார். *தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார.(சங்கீதம் 18:28)* 


இந்த நாட்களிலும் கொரோனோ என்கிற பயங்கரமான ஒரு எதிரியை மேற்கொள்ள முடியாமல் இந்தியா மிகவும் தவிக்கிறது. இந்த இரண்டாவது அலை இந்தியாவை அப்படியே திருப்பிப் போட்டு விட்டது. மனிதன் சுவாசிக்கும் பிராண வாயு இல்லாமல் அல்லது ஆக்சிஜன் இல்லாமல் ஒரு நாளில் 26 பேர் மரித்திருக்கிறார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போய் கொண்டிருக்கும் இந்த நிலையிலும் நமக்கு வெளிச்சத்தை கொடுப்பவர் நம் இயேசு மாத்திரமே. அவரை நாம் சார்ந்து கொள்ளும்போதுஇ நம்மை சுற்றி இருள் இருந்தாலும் எல்லாம் வெளிச்சமாகும்..


கர்த்தரின் பாதுகாப்பு நம்மையும் நம்முடைய அன்பு உறவுகளையும் சுற்றி சூழ்ந்து பாதுகாத்துக் கொள்ளும். விக்கினங்கள் கடந்து போகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைவேன் என்று நாம் அவரையே சார்ந்து கொள்வோம். இந்த நிலைமையும் கடந்து போகும் ஆமென் அல்லேலூயா!

Monday, April 26, 2021

Oscar Nominations and Where to Watch

 Oscar Nominations and Where to Watch as on April 26


The Father - NA

Judas and the Black Messiah - ₹499 on BMS Rent, Buy 4k at ₹920 on gplay, Buy at ₹790 on Apple tv +

Mank - Netflix

Minari - NA

Nomadland - Hotstar FROM Apr 30

Promising Young Woman - NA

Sound of Metal - Prime

The Trial of the Chicago 7 - Netflix

Another Round - ₹149 BMS rent, ₹269 BMS Buy

Ma Rainey’s Black Bottom - Netflix

The United States vs. Billie Holiday - NA

Pieces of a Woman - Netflix

One Night in Miami - Prime

Borat Subsequent Movie film - Prime

Hillbilly Elegy - Netflix

The White Tiger - Netflix

Onward - Hotstar

Over the Moon - Netlfix

Shaun the Sheep Movie: Farmageddon - Rent at ₹89 on BMS, Buy at ₹449 on BMS

Soul - Hotstar

Wolfwalkers - Apple tv +

Better Days (Chinese) - NA

Collective (Romanian Documentary Thriller) - NA

The Man Who Sold His Skin - NA

Quo Vadis, Aida? - NA

News of the World - Netflix

Mulan - Hotstar

Pinocchio - NA

Emma - NA

Da 5 Bloods - Netflix

Tenet - Apple Tv +

Greyhound - Netflix

Love and Monsters - Netflix

The Midnight Sky - Netflix

The One and Only Ivan - Hotstar

Saturday, April 24, 2021

150 korean movies

 பார்க்க வேண்டிய 150 கொரியன் திரைப்படங்கள்


1.No Mercy

2.Bedevilled

3.Montage

4.Memories of Murder

5.Old Boy

6.The Client

7.The Terror Live

8.Spring Summer Fall Winter and Spring

9.The Suspect

10.The Bow

11.Isle

12.The Handmaiden

13.The Brotherhood of war

14.71.in to the Fire

15.My Way

16.The Tiger

17.JSA

18.Secretly, Greatly

19.Blind

20.Wind Struck

21.A Dirty Carnival

22.New world

23.Nameless Gangster

24.Always

25.The classic

26.Sex is Zero

27.Welcome to Dongmakgal

28.Mother

29.Chaser

30.I saw the devil

31.My Sassy Girl

32.A Hard Day

33.Cold Eyes

34.The Man From Nowhere

35.Ode to My Father

36.The Admiral Roaring Currents

37.Green Fish

38.Daisy

39.A Moment to Remember

40.The Yellow Sea

41.Poetry

42.Miracle in cell No.7

43.Bitter Sweet Life

44.Oasis

45.A Millionaire's First Love

46.My Girl & I

47.Unforgettable

48.The Way Home

49.Silenced

50.Sad Movie

51.Im A Cyborg But that's ok

52.A were wolf Boy

53.Christmas in August

54.Hello Ghost

55.Lovers Concerto

56.Ing

57.Once in a Summer

58.Failan

59.My wife is a Gangster

60.Train To Busan

61.Moebius

62.Address Unknown

63.The Throne

64.The House Maid

65.My Little Bride

66.Children

67.Midnight Fm

68.Sunny

69.The Flu

70.The Merciless

71.The Con artists

72.The Battleship Island

73.Innocent Thing

74.The Classified file

75.A Day

76.The Mayor

77.The Outlaws

78.V.I.P

79.New Trail

80.A taxi Driver

81.Blue Beard

82.The Prison

83.Real

84.The King

85.Confidential Assignment

86.The Villainess

87.Okja

88.Fabricated City

89.One Day

90.The Harmonium in My Memory

91.Spell Bound

92.The Truth Beneath

93.A Bloody Aria

94.The Great Battle

95.Human Space Time

96.Parasite

97.Burning

98.The Wailing

99.Extreme Job

100.My Dear Desperado

101.Steel Rain

102.Forgotten

103.Tune in for love

104.The Age of Shadows

105.Along with the Gods

106.The Host

107.Pandora

108.Secret Sunshine

109.The Thieves

110.Lady Vengeance

111.3.Iron

112.Peppermint Candy

113.Innocent Witness

114.The Witch

115.Thirst

116.The Spy Gone North

117.A Tale of Two Sisters

118.Ayla 

119.The good the bad the weird

120.1987 when the Day comes

121.Bad Guy

122.Be with You

123.Little Forest

124.Confession of Murder

125.The Dude in me

126.The Beauty Inside

127.No Tears for the Dead

128.On Your Wedding Day

129.Hope

130.Midnight Runners

131.200 Pounds Beauty

132.Miss Granny

133.The king and the Clown

134.Addicted

135.The face Reader

136.Inside men

137.Pieta

138.Painted Fire

139.On the Beach at Night Alone

140.The Table

141.ll.Mare

142.Castaway on the moon

143.The Front Line

144.War of the Arrows

145.Operation Chromite

146.Northern limit line

147.Masquerade

148.The Divine Move

149.Love Forecast

150.The Man Standing Next


*ரமேஷ் ராம்

Wednesday, April 14, 2021

Uses of Ginger

 *🩺நூறு டாக்டர்கள் இருக்காங்க  

கால் கிலோ இஞ்சில.


*🌵இஞ்சியை கறிக்கு டீக்கு

*🌵மட்டுமே யூஸ் பண்றோம்.


*🌵பாருங்க இஞ்சி இருந்தால்


*உங்களுக்கு எவ்வளவு


*வெட்டி


*செலவு மிச்சம் என்று!


*நோய்களை  நீக்குவதில்

*🌵இஞ்சி  சமையலறை மருத்துவர்!


*1. 🌵இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.


*2. 🌵இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.


*3. 🌵இஞ்சியை சுட்டு சிறிது உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.


*4. 🌵இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.


*5. 🌵இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.


*6. 🌵இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.


*7. 🌵காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.


*8. 🌵பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.


*9. 🌵இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.


*10. 🌵இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.


*11. 🌵இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.


*12. 🌵இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.


*13. 🌵இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.


*14. 🌵இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.


*15. 🌵இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.


*16. 🌵இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

Tuesday, April 13, 2021

How we have to speak ?!

 *நாம் பேசும் வார்த்தைகள் எப்படி பட்டதாக இருக்க வேண்டும்*

’''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''"'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

1) சுருக்கமான வார்த்தையாக இருக்க வேண்டும் (வளவள என்று பேச கூடாது) - பிரச 5:2


2) மற்றவர்களை பெலப்படுத்தும் வார்த்தைகளை பேச வேண்டும் - யோபு 4:4


3) நல்ல வார்த்தைகளை பேச வேண்டும் - எபேசி 4:29


4) மற்றவர்களுக்கு பிரயோஜனமான வார்த்தைகளை பேச வேண்டும் - எபேசி 4:29


5) ஜிவ  வார்த்தைகளை பேச வேண்டும் (மற்றவர்களுக்கு ஜிவனை (உயிரை) கொடுக்கும் வார்த்தை) - நீதி  10:11


6) இன்பமான வார்த்தைகளை பேச வேண்டும் (மற்றவர்களுக்கு இன்பத்தை தரக்கூடிய வார்த்தைகளை) - ஆதி 49:21


7) கிருபை உள்ள வார்த்தைகளை பேச வேண்டும் - கொ 4:6


8) உப்பால் சாரம் ஏறிய வார்த்தைகளை பேச வேண்டும் (மற்றவர்களுக்கு ருசி கொடுக்கும் வார்த்தை) - கொ 4:6


9) அறிவுள்ள வார்த்தைகளை பேச வேண்டும் - நீதி 15:2


10) மற்றவர்களுக்கு பக்தி விருத்தி உண்டாக்கும் வார்த்தைகளை பேச வேண்டும் - எபேசி 4:29


11) மற்றவர்கள் துக்கத்தை மாற்றும் வார்த்தைகளை பேச வேண்டும் - யோபு 16:5


12) மற்றவர்களை திடப்படுத்துகிற (தைரியப்படுத்துகிற)  வார்த்தைகளை பேச வேண்டும் - யோபு 16:5


13) செம்மையான வார்த்தைகளை பேச வேண்டும் - யோபு 6:25


14) தேவனுக்கு பிரியமானதை பேச வேண்டும் (நாம் பேசும் பேச்சு தேவனுக்கு பிரியமானதாக இருக்க வேண்டும்) - சங் 19:14


15) நலமானதை பேச வேண்டும் - மத் 12:34


16) ஆரோக்கியமான வார்த்தைகளை பேச வேண்டும் - நீதி 15:14


17) நன்மையே பேச வேண்டும் - ஆதி 31:24


18) மெதுவான பதில் - நீதி 15:1

Honour ur Father and Mother

 ஒரு மகன் ஒரு முறை தன் தாயிடம் கேட்டான். எங்களை வளர்ப்பதற்காக அதிகமாக கஷ்டப்பட்டு தியாகம் செய்தது நீங்களா...? அல்லது  அப்பாவா...?


அதற்குத் தாய் இந்தக் கேள்வியை நீ என்னிடம் கேட்டிருக்க கூடாது, குழந்தைகளை வளர்ப்பதில் ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் எவ்வித கஷ்டமும் இல்லை. இருந்தாலும் சொல்கிறேன். உங்க அப்பா என்னை திருமணம் செய்துகொண்டபோது சொந்த விருப்பங்களுக்கும் நலன்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். நீ பிறந்த பின்னர் தன் விருப்பு வெறுப்புகளை மாற்றி உங்களுக்காக உங்கள் நலனுக்காக,  உணவு, உடை, மருந்து மற்றும் உங்கள் கல்விக்கு என பல தேவைகளுக்காக சம்பாதித்தார். நீங்களும் நானும் இந்த குடும்பமும் உன் தந்தையின் வியர்வை உருவானவர்கள்.

 ,

 மகன் இதே கேள்வியை தன் தந்தையிடம் கேட்டார்.


அவரின் பதில் வேறு மாதிரி இருந்தது. உங்கள் தாயார் எவ்வளவு தியாகம் செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. உன்னை வளர்ப்பதற்காக அவள் எவ்வளவு கஷ்டப்பட்டாள் என்றுகூட எனக்குத் தெரியவில்லை. அவளுடைய பொறுமையும் விடாமுயற்சியும் தான் இந்த குடும்பத்தை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்தது. என்னுடைய வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை செய்தாள். தனக்கு தேவையான எதையும் அவள் இதுவரை என்னிடம் கேட்டதில்லை. உங்களுக்காக தான் என்னுடன் சண்டையிட்டிருக்கிறாள். அவளது தியாகத்தை விட நான் ஒன்றும் பெரிதாக செய்யவில்லை என்றார்.


மகன் தனது சகோதரர்களிடம் சொன்னான்.  நம்மைவிட இந்த உலகில் அதிர்ஷ்டசாலிகள் யாரும் இருக்க முடியாது. தந்தையின் தியாகத்தைப் புரிந்துகொள்ளும் தாயும், தாயின் தியாகத்தைப் புரிந்துகொள்ளும் தந்தையும் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் சொர்க்கம்தான்.


பெற்றோர்கள் இருவர் அல்ல, ஒரு கிரீடத்தில் இருக்கும் இரண்டு வைரக்கற்கள். அவர்களை நம்முடனேயே வைத்து அவர்களது ஆயுட்காலம் முழுவதும் காப்போம்.


உங்களில் ஒருவன்.....

  👍

Monday, April 12, 2021

இன்றைய சமூகத்தில் சாவித்ரிபாயின் பங்கு

 

இன்றைய சமூகத்தில் சாவித்ரிபாயின் பங்கு

 

“என் மேல் கற்களையும் மாட்டுச் சானத்தையும் வீசுகிறார்கள்.  அதையும் மீறி கல்வி கற்பிக்க செல்கிறேன்.  ஏனெனில், கல்வியின் மகத்துவம் எனக்குத் தெரியும்.”

“விஷப் பாம்புகளைத் தொடும் நமக்கு சக மனிதர்களிடம் மட்டும் தீண்டாமை ஏன்?”

“இச் சமூகத்தில் பெண்களுக்கான கல்வி மிகாவசியமானது. ஆனால், பெண்கள் கல்வி கற்பதையே பலர் பாவமாக கருதுகிறார்கள்.”

“கடவுளுக்குச் சேவகம் செய்வதைவிட, கடவுளைப் போன்ற மனிதர்களுக்கு சேவகம் செய்வது சிறந்தது; பிறருக்கு கல்வி கற்றுத் தருவது அப்படியானது.”

இவர்கள் ஜதிக்காக உயிரைக்  கொல்கிறார்கள். ஒரு மனிதனின் உயிரை விட ஜாதி பெரியதா?

“ கல்வி அறிவினால் மட்டுமே ஒருவர் தன் தாழ்ந்த நிலையை அழித்து உயர்ந்த நிலையை அடைகிறார் என்பதை நான் ஆழமாக நம்புகிறேன்”

“அறிவுடமை இல்லையேல் எதுவுமில்லை”

-        இவையெல்லாம் சாவித்ரிபாயின் சிந்தனைகள்.

இந்த சிந்தனைகள் உதித்த காலம் 19 ஆம் நூற்றாண்டு.   கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலேயே சாவித்ரிபாய் இவற்றையெல்லாம் சிந்தித்து இருக்கிறார். இவற்றில் ஒன்றைக் கூட நாம் இன்னும் கடந்து போனதாகத் தெரியவில்லை.

சாவித்ரியின் வாழ்க்கை ஏட்டினை சற்றே புரட்டிப் பார்த்தோமேயானால், டிஜிட்டல் உலகம் என மார்தட்டிக் கொள்ளும் நாம், சிந்தனையில் எவ்வளவு பின் தங்கி இருக்கிறோம் என்பதனை உணர முடியும்.

பெண்கள் மீதான அடக்கு முறையும், தீண்டாமைக் கொடுமையும், மூட நம்பிக்கைகளும் இந்த சமூகத்தில் புரையோடிப் போயிருந்த காலம்தான் சாவித்ரியின் காலம்.

பெண்கள் படித்தாலே பாவம் என்ற எண்ணம் கொண்ட மனிதர்கள் மத்தியிலே, பெண் சமுதாயத்திற்கே கல்வி விளக்கு ஏற்றிய கருணைக் கடல் சாவித்ரி.  கல்வியே ஒரு சமுதாயத்தை கரைசேர்க்கக் கூடிய கலம் என்று உறுதியாக நம்பிய சாவித்ரி எதிர் கொண்ட சோதனைகள் ஏராளம். 

ஆனால், இன்றைய சமுதாயத்திலே, சாவித்ரிபாய் இன்னும் அதிக உத்வேகத்துடன் செயல்பட வேண்டியுள்ளது.  ஏனென்றால் அன்று சாவித்ரி சந்தித்த அத்துனை பிரச்சனைகளும் இன்று நவீன வடிவத்திலே கண்ணுக்குப் புலப்படாத எதிரிகளாக உருவெடுத்துள்ளன.

ஸ்டேட் போர்ட், சிபிஎஸ்இ , இன்டெர்னேஷனல் என்று வெவ்வேறு கல்வி முறைகளில் இங்கே தீண்டாமை தலைவிரித்தாடிக் கொண்டு இருக்கிறது.  ஜதிக்கொரு கல்வி முறையாகிப் போய்விட்டது. அடித்தட்டு வர்க்கத்தினருக்கு ஒரு கல்வி முறை.  ஆதிக்க வர்க்கத்தினருக்கு ஒரு கல்வி முறை என்று இங்கே தீண்டாமை நவீனமயமாக்கப் பட்டுள்ளது.  இந்தச் சூழலில் சாவித்ரிபாய் இன்னும் வீறு கொண்டு எழ வேண்டியுள்ளது.

இத்தனையும் சமாளித்து ஒரு அடித்தட்டு வர்க்கத்து மாணவன் முனைவர் பட்டத்திற்கு முன்னேறி விட்டால், அங்கே அவனுக்கு காத்திருப்பதோ தூக்குக் கயிறுதான்.  ஆம், 2016, சனவரி 17,  ரோஹித் வெமுலாவின் தற்கொலையைத்தான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.  சாவித்ரியின் அத்துனை போராட்டங்களும் தவிடுபொடியாகிவிட்டதே என்ற வலியும் வேதனையுமே மிச்சம் நமக்கு. இப்படிப்பட்ட நிறுவனக் கொலைகள் சமீபத்திய JNU இஸ்லாமிய மாணவி தற்கொலை வரை தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்களையோ அல்லது பெண்களை மட்டுமோ குறிவைப்பதில்லை இன்றைய அரசியல்.  ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும்.  பொருளாதார ரீதியில் பின் தங்கிய, முதல் தலைமுறையாக கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு NEET என்ற பெயரிலே இங்கே கல்வி கேள்விக் குறியாகிவிட்டது.  அது புரியாமல், ஆதிக்க வர்க்கத்தினர் மட்டுமே வாழ வேண்டும் என்ற அடாங்காத வெறியினால் உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையை நம்மில் சிலரே கையில் ஏந்திக் கொண்டு அலைந்து கொண்டு இருக்கிறோம். 

இது மட்டுமா? ஜாதியின் பெயரில் நடந்தேறும் ஆணவக் கொலைகளை எந்தக் கணக்கில் பட்டியலிடுவது?  அம்ருதாவின் காதல் கணவன் ப்ரணய் கொலை வழக்கு, உடுமலை சங்கர் கொலை வழக்கு, தர்மபுரி சம்பவம் என நாட்டை உலுக்கிய ஆணவக் கொலைகளுக்கு யார் நீதி கேட்பது?

உலக அரங்கிலே அறிவியல் தொழில் நுட்பத்தில், விண்வெளி விஞ்ஞானத்தில் இந்தியாவைக் கண்டு மிரளுகிறது நாசா.  அதே இந்தியாவில் தான் மேட்டுப் பாளையம், நடூரில் , தீண்டாமைச் சுவர் இடிந்து 17  பேர் உயிர் இழக்கின்றனர். இப்படி முரண்பாடுகளைக் கொண்ட நம் தேசத்தை எந்த இடத்தில் பொருத்துவது? முன்னேறிய நாடுகள் வரிசையிலா? பின் தங்கிய நாடுகள் வரிசையிலா?

இவற்றையெல்லாம் சீர்படுத்த சாவித்ரி சாதாரணமாக வந்து விடக் கூடாது.  விஸ்வரூபம் அல்லவா எடுக்க வேண்டியுள்ளது.

சாவித்ரியின் தைரியமும் மனவலிமையும் சமுதாயத்தின் மீது பற்று கொண்ட நம்மைப் போன்றவர்களுக்கு அருமருந்து.  நிகழ்கால சமுதாயத்தைப் புரட்டிப்போட முடியுமா? என்பது தெரியவில்லை.  ஆனால் எதிர்கால இந்தியாவின் தூண்களை உளி கொண்டு செதுக்க நம்மைப் போன்றவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதே என் தார்மீக எண்ணமாகும்.

சக மனிதர்களின் கேலிப் பேச்சுக்கும் , கல் எறிதலுக்கும் தலை வணங்காமல் இருந்ததால்தான் சாவித்ரியால் பெண் கல்வி சாத்தியமானது.  சமூகக் கொடுமைகளுக்கு சமாதி கட்ட முடிந்தது.

சாவித்ரியின் சாதனைகளில் முக்கியமாக நாம் எண்ணிப் பார்க்க வேண்டியது விதவைப் பெண்களின் நல்வாழ்விற்காக அவர் மேற்கொண்ட  பணிகள். 

1800 – களில் அவர் ஆரம்பித்த போராட்டம், விதவைகளின் வாழ்வில் விளக்கேற்றி இருக்கிறதா? என்றால் வெளிச்சத்தின் கதிர்கள் அவர்கள் வாழ்வில் பாய வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கிறது என்பதைத்தான் நமக்கு காட்டுகிறது.

இன்றளவும் விதவை மறுமணம் என்பது, பாதிக்கப்பட்ட பெண்களாலேயே ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்ற நிலைமைதான் நீடிக்கிறது.  குடும்ப கௌரவம் விதவைகளின் வாழ்க்கையைக் குட்டிச் சுவராக்குகிறது.  கற்பு என்ற பெயரில்   நேர்மையான திருமண வாழ்க்கையை வழங்க மறுக்கும் இந்த சமுதாயம் அவளின் தலைமறைவு வாழ்க்கையை, பவம் தனியாக இருப்பவள் தானே என தட்டிக் கொடுத்துச் செல்கிறது.  சில வெறி கொண்ட ஆண்களின் வசதிக்காக!  சுய கௌரவத்தை பெண் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில்தான் நாம் இன்னமும் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. முதலில் நாம் நம்மை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.  எந்த இடத்திலும் பெண்மை தலை குனியக் கூடாது என்பதை பசு மரத்து ஆணி போல நம் பிள்ளைகளின் மனதில் பதிய வைக்க வேண்டியது நம் தலையாய  கடமையாகும்.

சமத்துவ சமுதாயம் படைக்க வேண்டும் என்பதிலே சாவித்ரியின் பங்கு அளவிட முடியாதது.  1890 – ல் மகாத்மா ஜோதிராவ் பூலே இறந்து விடுகிறார்.  அவர்களின் வளர்ப்பு மகன் யஷ்வந்த் ஈமச் சடங்கினைச் செய்வதற்கு பூலே உறவினர்கள் எதிர்ப்பு  தெரிவிக்கின்றனர்.  அந்த சமயத்தில் துணிச்சலாக முடிஉவெடுக்கின்றார் சாவித்ரி.  ஈமச் சடங்கினைத் தானே செய்து முடிக்கின்றார். தன் கணவரின் உடலுக்கு அவரே தீயும் வைக்கிறார்.

இந்த இடத்திலே இன்னொரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விருப்பப் படுகிறேன்.  சமீபத்திலே நம் நாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தபோது அவரின் வளர்ப்பு மகள்தான் வாஜ்பாய் உடலுக்குத் தீ வைக்கிறார். இந்த சம்பவத்தை ஊடகங்கள் பெரிய அளவிலே பேசிற்று.

 

சற்றே சிந்தித்துப் பாருங்கள்.  கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்னரே இது போன்ற துணிச்சல் ஒரு பெண்ணுக்கு வரவேண்டுமானால் எவ்வளவு மனவலிமை படைத்தவராக இருக்க வேண்டும்? 

இத்தனை கொடுமைகளையும் புறந்தள்ளி, புதியதொரு சமுதாயம் படைக்க, சமூகப் புரட்சி  செய்த சமூகப் போராளி , இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்ரிபாய் பூலேவின்வழினின்று , அவரின் பங்காற்ற ஆயிரம் ஆயிரம் சாவித்ரிபாய்கள் ஒன்று திரள வேண்டும்.  ஒன்று படுவோம்!

 

விழித்திடு! எழுந்திடு! கற்பித்திடு!

பழமையை எதிர்த்திடு – விடுதலையடைந்திடு!

-        சாவித்ரிபாய் பூலே.

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...