*நாம் பேசும் வார்த்தைகள் எப்படி பட்டதாக இருக்க வேண்டும்*
’''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''"'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
1) சுருக்கமான வார்த்தையாக இருக்க வேண்டும் (வளவள என்று பேச கூடாது) - பிரச 5:2
2) மற்றவர்களை பெலப்படுத்தும் வார்த்தைகளை பேச வேண்டும் - யோபு 4:4
3) நல்ல வார்த்தைகளை பேச வேண்டும் - எபேசி 4:29
4) மற்றவர்களுக்கு பிரயோஜனமான வார்த்தைகளை பேச வேண்டும் - எபேசி 4:29
5) ஜிவ வார்த்தைகளை பேச வேண்டும் (மற்றவர்களுக்கு ஜிவனை (உயிரை) கொடுக்கும் வார்த்தை) - நீதி 10:11
6) இன்பமான வார்த்தைகளை பேச வேண்டும் (மற்றவர்களுக்கு இன்பத்தை தரக்கூடிய வார்த்தைகளை) - ஆதி 49:21
7) கிருபை உள்ள வார்த்தைகளை பேச வேண்டும் - கொ 4:6
8) உப்பால் சாரம் ஏறிய வார்த்தைகளை பேச வேண்டும் (மற்றவர்களுக்கு ருசி கொடுக்கும் வார்த்தை) - கொ 4:6
9) அறிவுள்ள வார்த்தைகளை பேச வேண்டும் - நீதி 15:2
10) மற்றவர்களுக்கு பக்தி விருத்தி உண்டாக்கும் வார்த்தைகளை பேச வேண்டும் - எபேசி 4:29
11) மற்றவர்கள் துக்கத்தை மாற்றும் வார்த்தைகளை பேச வேண்டும் - யோபு 16:5
12) மற்றவர்களை திடப்படுத்துகிற (தைரியப்படுத்துகிற) வார்த்தைகளை பேச வேண்டும் - யோபு 16:5
13) செம்மையான வார்த்தைகளை பேச வேண்டும் - யோபு 6:25
14) தேவனுக்கு பிரியமானதை பேச வேண்டும் (நாம் பேசும் பேச்சு தேவனுக்கு பிரியமானதாக இருக்க வேண்டும்) - சங் 19:14
15) நலமானதை பேச வேண்டும் - மத் 12:34
16) ஆரோக்கியமான வார்த்தைகளை பேச வேண்டும் - நீதி 15:14
17) நன்மையே பேச வேண்டும் - ஆதி 31:24
18) மெதுவான பதில் - நீதி 15:1
No comments:
Post a Comment