Sunday, November 1, 2020

All Saints Day

 சகல பரிசுத்தவான்களின் திருநாள் 

All Saints Day , November 1.


திருச்சபை ஆண்டின்படி( as per Church Year /Church Calendar /Liturgical Year ) இன்றைய நாள்  நவம்பர் 1 , சகல பரிசுத்தவான்களின் திருநாள் என்று அழைக்கப்படுகிறது. இரத்த சாட்சிகள் மரித்த தினத்தில் அவர்களை நினைவு கூறும் பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இரத்த சாட்சிகள் மரித்த இடங்களில் அல்லது அவர்களை அடக்கம் செய்த  இடங்களில் அவர்களுக்கு நினைவிடங்கள் /சிற்றாலயங்கள் கட்டப்பட்டு (Chapels) அவைகளில் அவர்கள் பயன்படுத்தின பொருட்கள் , அவர்களின் எஞ்சிய  எலும்புகள் அவர்களை நினைவுகூறும் பொருட்கள்  (relics) வைக்கப்பட்டன. திருச்சபையில் மொத்த  இரத்தசாட்சிகளுடைய எண்ணிக்கை ஒரு வருடத்தில் வரும் 365  நாட்களை விட அதிகமாக இருந்தபடியால் இரத்தசாட்சிகளை அவர்கள் மரித்த நாளில் ( heavenly birthday) மக்கள் அவர்களின் நினைவிடங்களுக்கு  சென்று  அவர்களை நினைவு கூறுதலுக்குப் பதிலாக ஒரு பொதுவான நாளில் நினைவுகூற தீர்மானிக் கப்பட்டது. கி.பி.609/610 ஆம் ஆண்டில் மே 13 அன்று முதல் சகல புனிதர்களின்/ பரிசுத்தவான்களின் திருநாள்  நினைவு கூறப்பட்டது. அதற்கு பிறகு பிற்காலத்தில்  அந்நாள்  நவம்பர் 1 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. கிழக்கத்திய வைதீக சபைகள் (Greek  /Eastern Orthodox Churches ) பெந்தேகொஸ்தே பண்டிகைக்குப் பின் வரும் முதல் ஞாயிற்றுக் கிழமையை  இரத்த சாட்சிகளின் நினைவு நாளாக /புனிதர்களின் அனுசரித்தனர். கத்தோலிக்க திருச்சபையும் வைதீக திருச்சபைகளும் இயேசுவின் தாயாகிய  மரியாளையும் மற்றும் இயேசுவுக்காக வாழ்ந்து இயற்கை யாக மரித்த புனிதர்களையும் இரத்த சாட்சிகளாக மரித்தவர்களையும்  "புனிதர்கள்" ( Saints) என்று அழைக்கின்றனர். புனிதர்கள் பட்டியலில்  முதலாமவர் இயேசுவின் தாயாகிய மரியாள் ஆவார். மரியாளை தொடர்ந்து  திருத்தூதர்கள் ( அப்போஸ்தலர்கள் ) இரத்தசாட்சிகளாய் மரித்தவர்கள்,  இயேசுவுக்காக வாழ்ந்து இயற்கையாக மரித்தவர்கள் மற்றும்  சில தேவதூதர்களும் புனிதர்களாகக்  கருதப்படுகின்றனர். புனிதர்கள் தற்போது பரலோகத்தில் இருப்பதால்( பிலிப்பியர் 1:23 ; திருவெளிப்பாடு 6:10)  அவர்களிடம் வேண்டுதல் செய்யும்  பழக்கம் தற்போது ரோமன் கத்தோலிக்க திருச்சபையிலும் வைதீக திருச்சபையிலும் உள்ளது.ஆனால்  புரோட்டஸ்டண்டு திருச்சபைகளில் திருச்சபை சீர்திருத்தத்தின் விளைவாக  இயேசுவின் தாயாகிய மரியாளிடமும்  புனிதர்களிடமும் அதிதூதர்களிடமும்-பிரதான தூதர்களிடம் -வேண்டுதல் செய்யும் பழக்கம் இல்லை ! அதனால் புரோட்டஸ்டண்டு திருச்சபைகளில் சகல பரிசுத்தவான்களின் திருநாள் என்ற பெயரில் இறைவழிபாடு நடத்தும் பழக்கம் இல்லை என்பதும்  உண்மையாகும் ! 

Pr.S.ஜான் மதியழகன்.

Saturday, October 31, 2020

Do penance

 லுத்தர் திருச்சபையில் சீர்திருத்தம்

ஏற்படுத்த உண்மையான  காரணமாக எது  இருந்தது  ? What was the real driving force behind Luther's Reformation ? It is the Greek  word " metanoia "

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Key word - Gk. metanoia - do penance Vs change of mind 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

16 -ஆம் நூற்றாண்டில் லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் 1582 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ரீம்ஸ் நகரில் ( Rheims ) புதிய ஏற்பாடு மொழி பெயர்க்கப்பட்டது. 


பிறகு 1609-1610 ஆம் ஆண்டில் டூயை நகரில் பழைய ஏற்பாடு மொழி பெயர்க்கப்பட்டது .


 இந்த மொழி பெயர்ப்பு   Douay - Rheims  Bible  என்றழைக்கப்படுகிறது. இதன் உச்சரிப்பு  du: ei - ri:mz ஆகும். இந்த மொழி பெயர்ப்பு சுருக்கமாக DRB என்று அழைக்கப்பட்டது. சில சமயம் இது DRA என்றும் அழைக்கப்பட்டது. A - என்பது Academic என்று பொருளாகும். 


இந்த DRB மொழி பெயர்ப்பு லத்தீன் வல்கேட் பைபிளின் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பு என்று கருதப்பட்டது. தமிழில் "மனந்திரும்புதல்" ஆங்கிலத்தில் " repentance" என்ற கிரேக்க மூல மொழியின் " மெட்டனோயா " - metanoia -  என்ற வார்த்தை இந்த DRB மொழிபெயர்ப்பில் do penance என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 


இந்த "பெனன்ஸ்" என்ற ஆங்கில வார்த்தை "பெனிடென்டிஷியா" - paenitentia என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாகும்.  பெனன்ஸ் -penance - என்ற வார்த்தை தவம் , நோன்புகள் ஆகியவைகளைக் குறிக்கும். எனவே மனந்திரும்பு என்பது தவம் செய் , நோன்புகளை கடைபிடி , போய் குருவானவரிடம் பாவ அறிக்கையை செய், தான தருமம் செய், உன்னை வருத்திக்கொள் என்ற பொருளில் வருவதாக do penance என்ற வார்த்தை யின் பொருளை கவனிக்கலாம். 


16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வாழ்ந்த மக்கள் தாங்கள் செய்த பாவங்களுக்காக தங்களுக்குத் தாங்களே தண்டனையைக் கொடுத்துக் கொள்ளுவார்கள். தங்களை சாட்டையால் அடித்துக் கொள்ளுவார்கள். பனியில் மழையில் குளிரில் போய் நிற்பார்கள். தங்களுடைய இல்லங்களிலிருந்து முழங்கால்/முட்டிக்கால் போட்டுக்கொண்டு அவர்கள் ஊரிலுள்ள ஆலயத்திற்கு முட்டிக்கால் மூலமாகவே  தவழ்ந்து அல்லது ஊர்ந்து செல்லுவார்கள். பல நாட்கள் சாப்பிடாமல் பட்டினி கிடந்து தங்களைத்தாங்களே வருத்திக் கொள்வார்கள். புனித யாத்திரை சென்று புனித இடங்களை தரிசித்து வந்தார்கள். மற்றும் தான தர்மங்களையும் செய்வார்கள். 


மார்ட்டின் லுத்தரும் தனது பாவங்களுக்காக தன்னை தானே  இவ்வாறு வருத்திக்கொள்ளும் பழக்கத்தை யுடையவராகயிருந்தார்.


 ஒரு நாள் மார்ட்டின் லுத்தர் அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தை இறையியல் மாணவர்களுக்கு போதிக்கும் போது, " மனிதன் தான் செய்யும் நற்கிரியைகளினால் நீதிமானாகிறது இல்லை. கடவுள் , கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒரு மனிதனுடைய இதயத்திலே தனது நீதியை தந்து அவனை நீதிமானாக்குகிறார்.  மனிதர்களின் நற்கிரியைகளை கண்டு கடவுள் அவ்வாறு செய்வது  இல்லை. ஒருவன் நீதிமானாக கிறிஸ்துவை விசுவாசித்தாலே போதும். கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமாகவே கடவுளுடைய நீதி ஒரு மனிதனுடைய இருதயத்திற்குள் கடவுளால் அருளப்பட்டு அவனை நீதிமானாக்குகிறது . அதற்காக அவன் வேறு எந்த நற்செயல்களையும் செய்ய தேவை இல்லை  என்பதுவே லுத்தரின் கண்டுபிடிப்பு ஆகும். இது லுத்தரின் வாழ்க்கையில் நடைபெற்ற "லுத்தரின்  கோபுர அனுபவம் ( Tower Experience of Luther )" என்றழைக்கப்படுகிறது. 


லுத்தர் ரோமர் நிருபத்தையும்  கலாத்தியர் நிருபத்தையும் ஆய்வு செய்து தியானிக்கும் போது அவர் கண்டறிந்தது "மனந்திரும்புதல் " அல்லது "மனமாற்றம்" என்பது "தவமோ அல்லது நோன்போ அல்லது தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் ஒரு செயலோ அல்ல. அது சிந்தையில் ஏற்படும் மாற்றமே " என்று கண்டறிந்தார். எனவே மனந்திரும்புதல் என்பதற்கு do penance - தவம் செய் , நோன்பு யிரு , உன்னை நீயே வருத்திக்கொள் என்பதல்ல change of mind -மன மாற்றமே - சரியான கிரேக்க மொழியின் பொருள்  என்று கூறி அவர் காலத்திலிருந்த "நற்கிரியைகள் " மனிதனுக்கு இரட்சிப்பை தராது என்று அறிவித்தார்.  மனிதன் கிரியைகளினால் அல்ல இயேசு கிறிஸ்துவின் மீது வைக்கும் விசுவாசத்தின் மூலமே நீதிமானாக்கப்படுகிறான் என்று  லுத்தர் போதிக்க ஆரம்பித்தார். 


 Man is justified by faith alone not by works . திருச்சபை சீர்திருத்த வாசகங்களில் (Slogans of Reformation) முக்கியமான ஒரு வாசகத்திற்கு அடிப்படையான ஒரு வசனம் ரோமர் 1:17 . "விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் " என்பதாகும்.   Sola Fide - சோலா ஃபிடே (லத்தீன் )- Faith Alone - விசுவாசம் மாத்திரமே ! (கிரியைகள் அல்ல ) . சமீபத்தில்  மொழி பெயர்க்கப்பட்ட   -New Revised Standard Version (NRSV)/ New Jerusalem Bible (NJB)  / New American Bible (NAB) பொது மொழிபெயர்ப்பு  (CB) மற்றும் கத்தோலிக்க பைபிள்களின் மொழிபெயர்ப்பில்   பெனன்ஸ் ( penance )என்ற வார்த்தையை நீக்கி மனந்திரும்புதல் /மன மாற்றம் என்பதற்கான சரியான ஆங்கில வார்த்தையை repentance யை  பயன் படுத்தியுள்ளனர். 


நாம் இரட்சிக்கப்படுவதும்  நாம்  நீதிமானாக்கப்படுவதும் நாம் கடவுளிடம் பாவமன்னிப்பை பெறுவதும் நாம் செய்யும் நல்ல செயல்களால் அல்ல-  நமது நற்கிரியைகளால் அல்ல. மாறாக கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமாகவே நாம் இரட்சிக்கப் படுகிறோம்.  நீதிமான்களாக்கப் படுகிறோம். கிறிஸ்துவின் மீது நாம் விசுவாசத்தை வைக்கும் போது கடவுள் தனது நீதியை கிறிஸ்துவின் வழியாகத்தந்து நம்மை நீதிமானாக்குகிறார்.


 " நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்." தீத்து 3:5


DRB மொழிபெயர்ப்பில் மனந்திரும்புதல் /மன மாற்றம் என்பதற்கு தவம் /நோன்பு (do penance )என்று மொழி 

பெயர்க்கப்பட்ட சில இடங்கள் 

கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 


மனந்திரும்புதல் என்பது சிந்தையில் வரும் மாற்றம். அதை do penance என்று மொழிபெயர்க்கக்கூடாது. do penance என்பது இரட்சிப்புக்கு  நற்கிரியைகளை செய்ய மக்களை ஊக்குவித்தலாகும். லுத்தர் இதை தவறு என்றார்.


மார்ட்டின் லுத்தரின் சிந்தனையை மாற்றிய ஒரு சில திருமறை சொற்களில் ஒன்று இந்த "do penance " ஆகும். மனந்திரும்புதல் என்பது சிந்தையை மாற்றுதல் ஆகும் ( change of mind - metanoia ) . ஆனால் அது மார்ட்டின் லுத்தர் காலத்தில் தவம் செய் , நோன்பு யிரு , உன்னை நீயே வருத்திக்கொள் என்ற பொருளில் போதிக்கப்பட்டது. மார்ட்டின் லுத்தர் கிரேக்க மொழியின் அர்த்தத்தை உணர்ந்து கொண்டதால் மனந்திரும்புதல் ஒரு செயல் அல்ல அது மாறாக சிந்தையின் மாற்றம் என்று அவர் புரிந்து கொண்டு அவர் தனது  மனதில் மாற்றம் பெற்றார். திருச்சபையில் அவ்வாறே அதை போதித்தார். 


 do penance வரும் சில இடங்கள்( DRB மொழிபெயர்ப்பு): 


Matthew 3:2 " And saying: Do penance: for the kingdom of heaven is at hand."


 Mt. 3:11- I indeed baptize you in the water unto penance


Lk 24 :47 - And that penance and remission of sins should be preached in his name, unto all nations, beginning at Jerusalem.


Acts 2 :38 - But Peter said to them: Do penance, and be baptized every one of you in the name of Jesus Christ, for the remission of your sins: and you shall receive the gift of the Holy Ghost.


Acts 8 : 22 - Do penance therefore for this thy wickedness;


Rev.2:16 - In like manner do penance; 


Rev.2:21 - And I gave her a time that she might do penance


do penance என்பது லுத்தர் கால ஐரோப்பா வை நமக்கு நினைவுக்கு கொண்டுவருகிறது. do penance கு பதிலாக repentance என்று மொழி பெயர்ப்பது மிகவும் சரியான மொழிபெயர்ப்பாகும். லுத்தர் மூலமாக கர்த்தர் திருச்சபைக்குக்  கொடுத்த இந்த வசன வெளிச்சத்திற்காகவும் திருச்சபை சீர்திருத்தத்திற்காகவும்  கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம் ! ஆமென் !!

- பாஸ்டர் S. ஜான் மதியழகன்.

சென்னை -600076.

Wednesday, October 28, 2020

Cycle

 சைக்கிள்.........!


1985க்கு முன்பு முன்னூறு வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் ஐம்பது வீடுகளில்தான் சைக்கிள்கள் இருக்கும். மோட்டார் பைக்குளைப் பார்ப்பதே மிக மிக அரிது.


கிராமங்களில் யாரோ ஒருவர் SWEGA வண்டி வைத்திருப்பார். HERO MAJESTIC, TVS மொபெட்டுகளுக்கு முந்தினது SWEGA.....! அது மணிக்கு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் வேகத்தில்தான் போகும். 


இப்போது கார், மோட்டார் பைக் வாங்குவதற்கு கூட அவ்வளவு விசாரிப்பதில்லை. ஆனால், அப்போது பழைய சைக்கிள் (SECOND HAND) வாங்குவது என்றால் கூட அவ்வளவு எச்சரிக்கையோடு விசாரிப்பார்கள்.


ராலி, ஹெர்குலஸ், அட்லாஸ், ஹீரோ போன்ற கம்பெனிகளின் தயாரிப்புகள் இருந்தாலும் ராலி சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் "கெத்து" .


அடுத்து...... அதிக எடை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் ஹெர்குலஸ் சைக்கிள் வைத்திருப்பார்கள். குறைந்த பட்ஜெட்காரர்கள் ஹீரோ அல்லது அட்லஸ் சைக்கிள்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.


ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் பழுது பார்க்கும் கடையும் வாடகை சைக்கிள் கடைகளும் இருக்கும். வாடகை சைக்கிள்களில் பெரும்பாலும் கேரியர் இருக்காது. கேரியர் உள்ள சைக்கிள்களுக்கு கொஞ்சம் வாடகை அதிகம். சிறுவர்கள் சைக்கிள் பழக சிறிய சைஸ் சைக்கிள்களும் கிடைத்தது. விடுமுறை நாட்களில் இது மட்டுமே பொழுதுபோக்கு.


இப்போது கார்கள் , மோட்டார் பைக்குகளை "சர்வீஸுக்கு"விடுவது போல அப்போது சைக்கிள்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸுக்கு சைக்கிள் பழுது பார்க்கும் கடைகளில் விடுவார்கள். அதற்கு "ஓவராயில் " செய்வது என்பார்கள்.


அன்று சைக்கிள் ரிப்பேர் பார்ப்பவர்கள் பலர் கண்ணுக்கு ஹிரோவாக தெரிந்தார்கள்,, 


இப்போது கார்களுக்கு "WHEEL. ALIGNMENT, WHEEL BALANCING " செய்வதுபோல சைக்கிள்களுக்கும் செய்வார்கள். அதற்கு " வீல் கோட்டம் எடுப்பது" என்பார்கள்.


1979க்கு முன்பு சைக்கிள்களுக்கு பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் கட்டாயம் கட்டணம் செலுத்தி LICENSE எடுக்க வேண்டும். ஒரு வட்ட வடிவ தகரத்தில் முத்திரையிட்டுத் தருவார்கள். அதை சைக்கிளின் முன்புறம் HANDLE BAR க்கு கீழை நிரந்தரமாக இணைத்து வைத்துக் கொள்வார்கள். இது இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும்.


சைக்கிளில் டைனமோ இருக்கும். இரவு நேரங்களில் சைக்கிள் ஓட்டும்போது டைனமோ இல்லாவிட்டால் காவல்துறையினர் பிடித்து அபராதம் விதிப்பார்கள்.


சைக்கிளில் ஒருவர் செல்ல மட்டுமே அனுமதி இருந்தது. இருவர் சென்றால் அபராதம். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தான் இருவர் செல்ல அனுமதி கொடுக்கப் பட்டது. அந்த லைசென்ஸும் ஒழிக்கப் பட்டது.


அந்த சைக்கிள்களின் கைப்பிடிகளுக்கு பல நிறங்களில் கவர்கள் போட்டும், இரண்டு வீல்களிலும் தேங்காய் நார்களில் செய்யப்பட்ட பலவித நிறங்களில் அலங்காரப் பொருட்களை வாங்கிக் கட்டி "கெத்து" காட்டுவதுமே பெருமையாக இருந்தது.


இந்த தலைமுறையினர் சிறு சைக்கிள்களை வீட்டுக்குள் ஓட்டுவதோடு சரி..... இன்னும் ..... அது கூட இல்லாமல் சிறிய சைஸ் மோட்டார் பைக்குகள், கார்களை வாங்கிக் கொடுத்து வீட்டுக்குள்ளேயே ஓட்டச் செய்கிறோம்.


எப்படி ஆயினும் ......

 பழைய நினைவுகள் ஆனந்தத்தையும் வைராக்கியங்களையும் தான் தருகின்றன.

Monday, October 26, 2020

உக்கார்ந்து சாப்பிட

 ஊர் முழுவதும் ஓர் அறிவிப்பு!


400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.


இதைக் கண்டுப் பலர் வியந்தனர். 

இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது.


ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது.

வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் தின்பதென்றால் சும்மாவா.


இடத்தை அடைந்த ஒருவன் சக நபரிடம் 400 ரூபாயா? அல்லது 4000, 40,000 ... அப்படி ஏதாவதா? என்று...


400 ரூபாய் மட்டுமே என்றான்.


வரிசையில் உள்ள ஒவ்வொருவரும் உள்ளே சென்றனர்.

.

.

.சார் நீங்க, 


நானும் காலம் புரா உக்கார்ந்து சாப்பிட போரேன். 

.

.நானும் வரேன். 

.

.

.சார் நானும் 

.

.

.ஐயா வாங்க 

.

.

.அம்மா வாங்க 

.

.

.

.அக்கா நீயுமா 

.

'

'வா வா, உக்கார்ந்து. 

..400, ரூவா, 

.

.

.வாவா 

.

.

.

.


அங்கே ஒருவன் நாற்காலி விற்றுக் கொண்டு இருந்தான்.


"வாங்க சார்... வாங்க சார்...

ஸ்டராங்கான நாற்காலி சார்...

இது சீக்கிரத்துல உடையாது சார்...


400 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போய் காலம் முழுவதும் இதில் உட்கார்ந்து சாப்பிடலாம் சார்" என்று கூவினான்.


நீதி :

வாக்குறுதிகளை உடனே நம்பிவிடக் கூடாது. 


நல்லா யோசிக்கணும்.


சாத்தியமான்னு பார்க்கணும்.


ரொம்ப அநியாயத்துக்கு ஆசைப்படக் கூடாது.


 இது தேர்தல் காலம் 


 தேர்தல் அறிக்கைகள் இவ்வாறுதான் இருக்கும்


 நாம தான் சிந்தித்து செயல்படணும் 👍🙏


 படித்ததில் ரசித்தது..

6 questions that always makes us to think ?!!!

 விடை தெரியாத ஆறு கேள்விகள் :


1.எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாதவர்கள் திடீரென அகால மரணம் அடைவது ஏன் ?


2. யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்று கவனமாக இருப்பவர்கள் அதிகமாக காயப்படுத்தப்படுவது ஏன் ?


3. சுற்றமும் நட்பும் ஏராளமாக வேண்டும் என்று நினைப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவது ஏன்?


4. இளகிய மனதுடன் பிறருக்கு உதவியவர்கள் ஏமாற்றப்படுவது ஏன்?


5. எந்தவித வீண் செலவும் செய்யாதவர்கள் சிலர் பொருளாதாரத்தில் நலிவுற்று இருப்பது ஏன்?


6. அகம்பாவமும் ஆணவமும் அலட்சிய மனோபாவமும் கொண்ட சிலர் செலவந்தராக இருப்பது ஏன் ?

Aalavandhan

Why #Aalavandhan movie was special..!


ஒரு அறிவியல் பார்வை🔥🔥🔥


ஆளவந்தான் படம் பிடிக்காதவர்கள் பொதுவாக சொல்லும் காரணம். அந்த நந்து கேரக்டர் செய்யும் சில அல்லது பல செயல்கள் கோர்வையாக இல்லை. புரியும்படி இல்லை. மனிஷா கேரக்டர் தேவை இல்லை. என்பது போல பதில்கள் வரும்.


ஆனால் ஆளவந்தான் அப்படி ஏனோ தானோ என்று எழுதப்பட்ட படம் என்று நினைப்பது நம் அறியாமையைத்தான் குறிக்கும். அதில் உள்ள நுட்பங்களைக் கொஞ்சம் பேசலாம் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.


நந்து schizophrenia என்ற நோயினால் தாக்கப்பட்டவன். இந்த நோய் மன நோய்களில் மிகக் கொடூரமானதும், மிக அதிக ஆராய்ச்சி செய்யப்படுவதுமாகும். இந்த நோயை முதலில் புரிந்து கொள்வதே நந்துவின் செயல்களை புரிந்து கொள்ள உதவும். 


Schizophrenia என்ற சொல்லின் மொழியாக்கம் `இரட்டை மனம்` Split mind' என்பதாகும். இவர்களுக்கு அடிக்கடி நிஜத்தோடு தொடர்பு அறுந்துபோகும். Hallucinations என்ற நிஜத்திற்கு சம்பந்தமில்லாத காட்சிகளைப் பார்ப்பதும், Delusion என்ற பொய் யோசனைகளும் இவர்களை ஆட்சி செய்யும்.(இது ஒரு நோயளிக்கு வரும் ப்ரச்சனையை அவர் வரைந்தது http://upload.wikimedia.org/wikipedia/commons/2/2f/Artistic_view_of_how_the_world_feels_like_with_schizophrenia_-_journal.pmed.0020146.g001.jpg)


நந்து அடிக்கடி கார்டூன் உலகிற்குச் செல்ல இதுவே காரணமாகும். அவன் ஒரு காட்சியில் தன் டாக்டரின் பிம்பத்திடம் சொல்வான் `எல்லா குழந்தங்களையும் மாறி கார்டூன்லேர்ந்துதான் (வன்முறையை) கத்துக்கிட்டேன்` என்று. எனவே அவனது Hallucination என்னும் மாய உலகில் கார்டூன்களுக்கு முக்கியத்தும் அதிகமாகிறது. அதை கமல்ஹாசன் வன்முறைக் காட்சிகளுக்கு சென்சார் போலவும் பயன்படுத்தித் தன் ஆளுமையை உணர்த்தியுள்ளார்.

இந்த காட்சிகளைத் kill bill voi I ல் டராண்டினோ பயன்படுத்தியது ஒரு தனிச்செய்தி.


ஒரு பஜார் காட்சியில் மட்டும் அவர் எல்லை தாண்டி நடந்து கொள்வார். பையை எட்டி உதைப்பார். பச்சையாக தெரிவார். கடிகாரத்தின் உள்ளிருந்து வருவார். கம்பத்தில் முட்டிக்கொள்வார்.அது பார்வையாளர்களுக்கு பெரும் குழப்பம் தரும். 


ஆனால் கூர்ந்து கவனித்தால் அவர் சொல்வார். டாக்டர் தப்பு மருந்து ஏத்திட்டாங்க. அதாவது அவர் வழக்கமாக எடுக்கும் மருந்துக்கு பதிலாக அவரது நோயைத் தீவிரப்படுத்தும் வஸ்துக்களைத் தவறாக ஒருவன் ஊசியிடுவான். அதனால் வந்த வினை தான் அந்த காட்சி.


அந்த தொடர்ச்சியில் நான் மிகவும் ரசித்தது. ஒரு உயரமான ஆள் பொம்மையினைப் பார்த்து சிர்ப்பான் நந்து. 

அந்த ஆள்-:`டைம் என்ன ஆச்சி?

நந்து : நான் ஒரு கேள்வி கேக்கவா?

அந்த ஆள் : ம்

நந்து : டைமுக்கு என்ன ஆச்சி?


ஒரு குழந்தையின் கேள்வி மாடர்ன் ஆர்டைப் போல என்பதற்கு இதுவே உதாரணம்.


க்ளைமேக்ஸில் விஜய் நந்து கேரக்டர்களுக்கு நடுவே ஒரு ஸ்டண்ட் சீன். அதில் சம்பந்தமில்லாமல் கால்களை ஆட்டி நந்து டான்ஸ் ஆடுவார். இது கேடடோனியா catatonia என்ற ப்ரச்சனை. இது Schizophrenic களுக்கு வரும் ஒரு ப்ரச்சனை ஆகும். 


இதை எல்லாம் தாண்டி மாத்திரைகளால் குறைக்க வேண்டிய ஒரு நோயை தானே சொந்த முயற்சியால் குறைக்க நினைத்து அதில் தோற்று தனக்குத் தானே தீமை செய்து கொள்வதுதான் நந்து அல்லது எந்த Schizophrenic களின் நிலை.


இப்போது உணர்ந்து கேளுங்கள் இந்த விளக்கத்தை....


கடவுள் (குழந்தை) பாதி மிருகம் (நோயாளி) பாதி 

கலந்து செய்த கலவை நான்

வெளியே (நோயாளி) மிருகம் உள்ளே கடவுள் (குழந்தை) 

விளங்க முடியா கவிதை நான்.


மிருகம் (நோய்) கொன்று மிருகம் (நோய்) கொன்று

கடவுள் (குழந்தை) வளர்க்கப் பார்க்கின்றேன்

கடவுள்(குழந்தை) கொன்று உணவாய்த் தின்று

மிருகம் (நோய்) மட்டும் வளர்கிறதே.


நந்த குமாரா நந்த குமாரா

நாளை மிருகம் ( நோயைக்) கொல்வாயா

மிருகம் ( நோயைக்) கொன்ற எச்சம்(அனுபவம்) கொண்டு

மீண்டும் கடவுள் (குழந்தை) செய்வாயா?


இந்த கட்டூரையை நான் எழுதியதற்குக் காரணம் Psychiatric Disorders ஐத் தெரிந்தவனாக கமல்ஹாசனது எழுத்து மிக ஆழமானது. மேம் போக்காக மீன் பிடிப்பவர்களுக்கு உள்ளிருக்கும் முத்துக்கள் தெரியாது. அந்த உலகிற்கு அவர்களை அழைத்துச் செல்வதே நோக்கம்....💯🙏🏻

----தொடரும்💥


Credits :Kamalakannan

IPL

 IPL Special :- 😁😁😁👍🏻 *ஆவிக்குரிய  விளையாட்டுச் செய்திகள்* 🏆


பரலோக அணி மற்றும் சாத்தான் அணிகளுக்கிடையே கல்வாரியில்   நடந்த ஒரு யுகக் கிரிக்கெட் போட்டி...🏏 


🍓துவக்க ஆட்டக்காரரான ஆதாம் 🏏, *கீழ்ப்படியாமையினால்* ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்...


🍓ஆபிரகாம் 🏏 *விசுவாசமாக* விளையாடி 25 ரன்கள் எடுத்தார்...


🍓ஈசாக்கு 🏏 *பயபக்தியாக* விளையாடி ரன்களைக் குவித்தார்...


🍓யாக்கோபு 🏏 *தந்திரமாய்* விளையாடி 20 ரன்கள் எடுத்தார்...


🍓மோசே 🏏 *சாந்தமாய்* விளையாடி 35 ரன்கள் எடுத்தார்...


🍓 மிக *சிறப்பாக* விளையாட ஆரம்பித்த சிம்சோன் 🏏 , தெலீலாள் 👩‍🔧 வீசிய பந்தில்🎾 *கிளீன்* *போல்டு* ஆனார்...


🍓 அடுத்து களமிறங்கிய தாவீது 🏏 தலைவரின் இருதயத்துக்கு ஏற்றப்படி *உண்மையாக* விளையாடி 65 ரன்கள் குவித்தார்...

 அவர் அடித்த பந்தை🎾 *பத்சேபாள்* 💁🏻 பிடித்ததால் அவுட் ஆனார்...!


🍓 எலியா 🏏 *வைராக்கியமாய்* விளையாடி 25 ரன்கள் எடுத்தபோதிலும் , யேசபேல்👩🏻 வீசிய *மூர்க்கமான* பந்தினால் சூரைச் செடியின்🌴 அருகில் *சுருண்டு* விழுந்தார்.


🍓தானியேல் 🏏 *ஜெபத்தோடும்* ,👏 *உபவாசத்தோடும்* 🛐 விளையாடி அரை சதம் அடித்தார்...!


🍓 *பரலோக* அணி 🏏 *தோல்வியை* தழுவிடுமோ என்ற நிலையில் ,


களமிறங்கிய *இயேசு* *கிறிஸ்து* 🏏அதிக ரன்களைக் குவித்தார்...

💯ரன் வித்தியாசத்தில்*

 பரலோக அணி *அமோக வெற்றிப் பெற்றது...!*


பரலோக அணியை சேர்ந்தவர்கள் *வெற்றிக்கொடியை*  அசைத்து ஆரவாரம் செய்தனர்....!


 இயேசு கிறிஸ்து ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்...!

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...