சகல பரிசுத்தவான்களின் திருநாள்
All Saints Day , November 1.
திருச்சபை ஆண்டின்படி( as per Church Year /Church Calendar /Liturgical Year ) இன்றைய நாள் நவம்பர் 1 , சகல பரிசுத்தவான்களின் திருநாள் என்று அழைக்கப்படுகிறது. இரத்த சாட்சிகள் மரித்த தினத்தில் அவர்களை நினைவு கூறும் பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இரத்த சாட்சிகள் மரித்த இடங்களில் அல்லது அவர்களை அடக்கம் செய்த இடங்களில் அவர்களுக்கு நினைவிடங்கள் /சிற்றாலயங்கள் கட்டப்பட்டு (Chapels) அவைகளில் அவர்கள் பயன்படுத்தின பொருட்கள் , அவர்களின் எஞ்சிய எலும்புகள் அவர்களை நினைவுகூறும் பொருட்கள் (relics) வைக்கப்பட்டன. திருச்சபையில் மொத்த இரத்தசாட்சிகளுடைய எண்ணிக்கை ஒரு வருடத்தில் வரும் 365 நாட்களை விட அதிகமாக இருந்தபடியால் இரத்தசாட்சிகளை அவர்கள் மரித்த நாளில் ( heavenly birthday) மக்கள் அவர்களின் நினைவிடங்களுக்கு சென்று அவர்களை நினைவு கூறுதலுக்குப் பதிலாக ஒரு பொதுவான நாளில் நினைவுகூற தீர்மானிக் கப்பட்டது. கி.பி.609/610 ஆம் ஆண்டில் மே 13 அன்று முதல் சகல புனிதர்களின்/ பரிசுத்தவான்களின் திருநாள் நினைவு கூறப்பட்டது. அதற்கு பிறகு பிற்காலத்தில் அந்நாள் நவம்பர் 1 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. கிழக்கத்திய வைதீக சபைகள் (Greek /Eastern Orthodox Churches ) பெந்தேகொஸ்தே பண்டிகைக்குப் பின் வரும் முதல் ஞாயிற்றுக் கிழமையை இரத்த சாட்சிகளின் நினைவு நாளாக /புனிதர்களின் அனுசரித்தனர். கத்தோலிக்க திருச்சபையும் வைதீக திருச்சபைகளும் இயேசுவின் தாயாகிய மரியாளையும் மற்றும் இயேசுவுக்காக வாழ்ந்து இயற்கை யாக மரித்த புனிதர்களையும் இரத்த சாட்சிகளாக மரித்தவர்களையும் "புனிதர்கள்" ( Saints) என்று அழைக்கின்றனர். புனிதர்கள் பட்டியலில் முதலாமவர் இயேசுவின் தாயாகிய மரியாள் ஆவார். மரியாளை தொடர்ந்து திருத்தூதர்கள் ( அப்போஸ்தலர்கள் ) இரத்தசாட்சிகளாய் மரித்தவர்கள், இயேசுவுக்காக வாழ்ந்து இயற்கையாக மரித்தவர்கள் மற்றும் சில தேவதூதர்களும் புனிதர்களாகக் கருதப்படுகின்றனர். புனிதர்கள் தற்போது பரலோகத்தில் இருப்பதால்( பிலிப்பியர் 1:23 ; திருவெளிப்பாடு 6:10) அவர்களிடம் வேண்டுதல் செய்யும் பழக்கம் தற்போது ரோமன் கத்தோலிக்க திருச்சபையிலும் வைதீக திருச்சபையிலும் உள்ளது.ஆனால் புரோட்டஸ்டண்டு திருச்சபைகளில் திருச்சபை சீர்திருத்தத்தின் விளைவாக இயேசுவின் தாயாகிய மரியாளிடமும் புனிதர்களிடமும் அதிதூதர்களிடமும்-பிரதான தூதர்களிடம் -வேண்டுதல் செய்யும் பழக்கம் இல்லை ! அதனால் புரோட்டஸ்டண்டு திருச்சபைகளில் சகல பரிசுத்தவான்களின் திருநாள் என்ற பெயரில் இறைவழிபாடு நடத்தும் பழக்கம் இல்லை என்பதும் உண்மையாகும் !
Pr.S.ஜான் மதியழகன்.
No comments:
Post a Comment