🏵40 நாட்களின் 🏵நன்மை
🙏🏻40 நாட்கள் காலப்பகுதியை ஆவிக்குரிய முக்கியத்துவம் வாய்ந்த காலமாகத் தேவன் கருதுகிறார் என்பதனை வேதாகமம் தெளிவுபடுத்துகின்றது.
🙏🏻எப்பொழுதெல்லாம் தேவன் யாதொருவரை தன்னுடைய நோக்கத்திற்காக ஆயத்தப்படுத்த விரும்பினாரோ அப்பொழுதெல்லாம் அவர் 40 நாட்களையே தெரிந்துக்கொண்டார்.
🌧40 நாட்கள் மழையினால் நோவாவின் வாழ்க்கை மாற்றமடைந்தது.
⛰40 நாட்கள் சீனாய் மலையில் மோசே தரித்திருந்ததினால் மாற்றமடைந்தான்.
🏝40 நாட்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டில் இருந்தபோது வேவுகாரர் மாற்றமடைந்தனர்.
💪40 நாட்கள் கோலியாத்தின் சவாலினால் தாவீது மாற்றமடைந்தான்.
🍪40 நாட்கள் எலியா ஒருவேளை உணவு மட்டும் சாப்பிட்டு தேவ பெலத்தால் நடந்து மாற்றமடைந்தான்.
🏜40 நாட்கள் கால கெடு கொடுக்கப்பட்டதால் நினிவே மக்கள் மாற்றமடைந்தனர்.
🙇🏻40 நாட்கள் இயேசு வனாந்திரத்தில் உபவாசம் இருந்ததால் வல்லமை பெற்றார்.
⛪இயேசுவின் உயிர்தெழுதலின் பிறகு அவரின் சீஷர்கள் அவருடன் 40 நாட்கள் இருந்து மாற்றமடைந்தனர்.
📚 ரிச் வர்ரென் எழுதிய நோக்கத்தால் நடத்தப்படும் வாழ்க்கை என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
🧾 நாளையிலிருந்து லெந்து நாட்கள் ஆரம்பமாகிறது பாரம்பரியத்துக்காகவும் துக்க நாட்கள் அநுசரிப்புக்காவும் இதை செய்யாமல் நமது ஆவிக்குரிய வளர்ச்சிகாகவும் ஆண்டவரோடு இன்னும் ஒரு படி முன்னேறி செல்வதற்காகவும் இதை செய்யலாமே!
🙇🏻வருடத்திற்கு ஒரு முறையேனும் 40 நாட்கள் ஒருவேளை உணவை (அ) இருவேளை உணவை தவிர்த்து ஆண்டவர் சமூகத்தில் அமரலாமே!
💒📖 வேதாகமம் முழுவதையும் வாசித்து முடிக்கலாமே.!!!
🍲சாப்பிட்டு சாதித்தவர்களை விட சாப்பிடாமல் சாதித்தவர்கள் அதிகம்.
🧾நாட்களை விஷேசித்துக் கொள்ளுகிறவன் அதை கர்த்தருக்கென்றே விஷேசித்துக் கொள்ளுகிறான் என வேதம் சொல்கிறது.
🙏🏻எனவே ஏதாவது ஒரு விதத்தில் உங்களின் 40 நாளை தேவனுக்கு கொடுப்பீர்களா?
🛐ஆண்டவர் உங்களின் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர ஒரு 40 நாள் அர்ப்பணிப்பீர்களா?
🙏🏻🙏🏻🙏🏻
No comments:
Post a Comment