Monday, February 22, 2021

Bufallo Business

 தந்தையின் எருமைப் பண்ணை தொழிலை நடத்தி, இன்று மாதத்துக்கு 6 லட்சம் ஈட்டும் 22 வயது இளம்பெண்!

"எனது குடும்பத்திற்காக இந்த பொறுப்பை சுமக்க மறுத்திருந்தால்தான் வெட்கப்பட்டிருப்பேன். வெட்கப்படுவதும், பின்வாங்குவதும் என் தந்தைக்குப் பிடிக்காத ஒன்று...'' மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகரிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது நிகோஜ் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்ரத்தா தவான். 1998ம் ஆண்டு ஒரே ஒரு எருமை மாடு மட்டுமே அவரது வீட்டில் இருந்ததாகவும், தற்போது 80 எருமை மாடுகளுடன் 450 லிட்டர் பால் விற்பனை செய்வதாகவும் கூறுகிறார். அந்த காலக்கட்டத்தில் அவரது தந்தை சத்யவன், எருமைகளைக்கொண்டு பிழைப்பை நடத்தி வந்தார். எருமை மாட்டு பாலை விற்பனை செய்தார். மாற்றுத்திறனாளியான அவரால் உடல் பிரச்னைகள் காரணமாக ஒரு கட்டத்துக்கு மேல் பால் விற்பனை செய்ய முடியவில்லை.


இந்நிலையில் தான் 2011ம் ஆண்டு எருமைகளிடமிருந்து பால் கறக்கவும், அதனை விற்கும் பொறுப்பையும் தனது மகளிடம் ஒப்படைத்தார். அப்போது எல்லாமுமே தலைகீழாக மாறியது. “என் தந்தையால் பைக் ஓட்ட முடியவில்லை. எனது சகோதரர் எந்தவொரு பொறுப்பையும் ஏற்க முடியாத அளவுக்கு இளமையாக இருந்தார். ஆகவே, நான் என்னுடைய 11 வயதில் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். இருப்பினும் இது மிகவும் விசித்திரமாகவும், தனித்துவமாகவும் இருந்தது. ஏனென்றால் எங்கள் கிராமத்தில் எந்தப் பெண்ணும் இதற்கு முன்பு அத்தகைய பணியை மேற்கொள்ளவில்லை,” என்கிறார் ஷ்ரத்தா. காலையில், ஷ்ரத்தாவின் வகுப்பு தோழர்கள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவர் கிராமத்தைச் சுற்றி பைக்கில் பால் பண்ணைகளுக்கு பால் வழங்கிக் சென்றுகொண்டிருப்பார். அவருடைய இந்தப் பொறுப்பு கல்வி கற்பதை கடினமாக்கியது என்றாலும், வகுப்பு தோழர்கள் பார்த்துவிடுவார்கள் என அவர் வெட்கப்படவில்லை. இரண்டு மாடி கட்டிடத்தில் இருந்து 80க்கும் மேற்பட்ட எருமைகளுடன், ஷ்ரத்தா தனது தந்தையின் தொழிலை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார்.


No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...