Friday, April 9, 2021

Junnaid


ஜீனாய்டு (junnaid) ஒரு சுபி ஞானி.

அவரிடம் ஒரு பெரிய பணக்காரட் வந்து மனிதனின் வாழ்க்கை அவன் தலைவிதிப்படித்தான் நடக்கும். அவன் சுகந்திரமானவன் இல்லை என்று கருதுகிறேன். இதை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?  என்று கேட்டான்!


அவனை பார்த்த சுபி ஞானி, உன்னுடைய ஒரு காலை தூக்கு என கத்தினார்!


அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் கேட்ட கேள்விக்கும் ஒரு காலை தூக்குவதற்கும் என்ன சம்பந்தம்?  என திகைத்தான்!  அவன் தயக்கத்தை பார்த்த ஞானி மீண்டும் ஒரு காலை தூக்கு என வேகமாக கத்தினார்!


 வேறு வழியில்லாமல் அவன் தன்  வலது காலை தூக்கினான். அதை பார்த்த அந்த ஞானி,  இது போதாது இப்போது அடுத்த காலையும் தூக்கு என்றார்.


அவன் கோபம் கொண்டு, இதென்ன முட்டாள்தனம்?  ஒரு காலை தூக்கிய பிறகு மறு காலையும் எப்படி தூக்குவது? விழுந்து விட மாட்டேனா? என கேட்டான்.


கலகலவென சிரித்த ஞானி, சரி இப்போது உட்கார் என்று கூறினார்.

இதில் இருந்து நீ என்ன புரிந்து கொண்டாய்? என அவனை கேட்டார்.


எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்றான் அவன்.


நான் உன்னிடம் உன் ஒரு காலை தூக்கு என்று சொன்னதும் நீ ஏன் உன் இடது காலை தூக்காமல் வலது காலை தூக்கினாய்?  ஏனெனில் எந்த காலை தூக்குவது என்பது உன்னுடைய சுகந்திரத்தில் இருந்தது. அதனால் நீ உன் வலது காலை தூக்கினாய்.


பிறகு நான் மற்றொரு காலையும் தூக்கும்படி கூறினேன். அது உன்னால் முடியவில்லை. ஏனென்றால் முதலில் நீ உன் சுகந்திரத்தில் செயல்புரிந்தாய். ஆனால் அடுத்த செயல் உன் கையில் இல்லை. நீ அப்பொழுது கட்டுப்பட்டு இருக்கிறாய். உன் சுகந்திரம் இப்பொழுது வேலை செய்யவில்லை.


ஆகவே மனிதன் பாதி சுகந்திரத்தில் இருக்கிறான். மறுபாதி அந்த சுகந்திரத்தால் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறான் என்றார் சுபி ஞானி. 


முதலில் மனிதன் தன் சுகந்திரத்தில் ஒரு செயலை செய்கிறான். அதன் பின்விளைவு அதுவாகவே நடக்கிறது.


இதுதான் செயலும் விளைவும் கோட்பாடு!



No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...