Wednesday, June 30, 2021

எண்ணங்கள்

 *எண்ணங்கள்*

******************


ஒருவன் மனநிலை பாதிக்கப்பட்டு, 

தன்னை ஒரு பூனை என்று எண்ண ஆரம்பித்தான்.


தான் ஒரு பூனை என்று கூறி பூனையைப் போலே செயல்பட ஆரம்பித்தான். 


பாத்திரத்தில் உள்ள பாலை,நக்கி நக்கிச் சாப்பிட ஆரம்பித்தான்.


மனோ தத்துவ மருத்துவர் அவனைப் பரிசோதித்து அவனுக்கு சிகிச்சை அளித்தார்.


அவருடைய சிகிச்சையில் முன்னேற்றம் தெரிந்தது. 

மருத்துவருக்கு அவனுடைய வீட்டார் போன் செய்து நன்றி தெரிவித்தார்கள்.


மருத்துவர் அந்த நோயாளியிடம் போனைக் கொடுக்கச் சொல்லி பேசினார்.


அவனும் போனைவாங்கி,

தான் சரியாகி விட்டதாகவும், 

தன்னை மனிதன் என்று புரிந்து விட்டதாகவும், 

மனிதர்களைப் போல் நடப்பதாகவும் கூறினான்.


ஆனால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை என்ற ஒரே ஒரு குறையை மற்றும் கூறினான்.


ஏன் வெளியே போகமுடியவில்லை?என்று மருத்துவர் கேட்டார்.


நான் பூனையல்ல, 

மனிதன் தான் என்பது எனக்கு எந்த சந்தேகமும் இல்லாமல் தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது.


ஆனால் வீட்டுக்கு வெளியே தெருவெல்லாம் நிறைய நாய்கள் இருக்கின்றன.


அவைகளுக்கு நான் பூனையல்ல என்பது புரிந்து விட்டதா இல்லையா என்பது தான் எனக்கு தெரியவில்லை டாக்டர்! என்று அவன் பதில் கூறினான்.


நமது வெளி உலகுக்கு சரியானவனாக தெரிந்தாலும்  உள் மனதின் எண்ணங்களும், 

திட்டங்களும் வெளியுலகிற்கு தெரிவதில்லை. 

நமது வார்த்தைகளே அவைகளை வெளிபடுத்தும்.  


ஆம்! வார்த்தைகளை கவனியுங்கள்! எண்ணங்கள் வெளிப்படும்.

Tuesday, June 29, 2021

600th Year of Grace


 600th Year of Grace

Genre : Fiction

Category: Short Story

 

Grace - (in Christian belief) the free and unmerited favour of God.

 

The entrance of Chennai metro Egmore station is as bright as a LED. Aaron (19), tall-slim-little fair-dressed formal and David (20), medium-inbetween brown- dressed casual. They were moving towards platform no 7 for their metro train. As the train came on time they settled inside it within couple of minutes. As the electronic voice started to wish everyone inside the train. As the time and date were floating sideways, OCTOBER 31st 2117, 8:21 A.M. Is it possible to make it on time, asked Aaron . This is not like other cities. This is Chennai and that too its 22nd century, David consoled him. As Aaron came for his uncle’s house for a semester vacation. Aaron usually won’t go to big church thus excited to visit a big church where a special speaker is speaking today.

David cleared his throat by saying here we go. As the Anna Salai Metro station reached within 3 minutes.  “oh my God!” exclaimed Aaron. Is this the place which you go to church often.

Yes said David.  I usually come here to have a peaceful atmosphere. Just look around. You can feel the presence of God, Dude.  Yes, offcourse bro, confirmed Aaron.

Do you think there will be a great crowd. Huge, dude. Just look around. Its like a big deal when special preacher comes to this big church, people excited to see this type of occasions. 

As they entered that great big church on time, i.e 8:29 A.M. and the service began with a traditional hymn and went on smoothly.

As Rev. Sam Anbu (senior pastor) announced and introduced the special speaker.  The speciality of this geust speaker will be highlighted at the end cleared Reverend Sam Anbu.

The special speaker, attracted everyone’s attention by starting with Martin Luther’s quote and highlighting the 95 theses, precisely.  The sermon is short and direct towards the point, somehow highlighting Sola Scriptura, Sola Fide and Sola Gratia.

Somehow the speaker was tuned to highlight Martin Luthers 600th year of Reformation by entitling sermon as 600th Year of Grace.

This is a prime time for me to stand here and preach in this holistic, historic church. People came all over Chennai to witness my presence. In fact people from Germany also here as I scan they are happily sitting here in this auspicious occasion.  As we are in Chennai today, long ago, Martin Luther a very brave man did a very brave work which changed the whole history of Christianity.  

As I would like to say the meaning of Grace in your dictionary Grace - (in Christian belief) the free and unmerited favour of God. Whatever comes out of free is not valuable which people think but see today, Free of caste.

As the word caste was heard, Aaron  and David was blinking and seeing each other, as if they saw an alien in their hostel room.

As this word “caste” was said by me, many of the youngsters here were seeing each other as they were confused, Infact you people were unaware of this caste because 50 years back there was a great war in India where thousands of people including young students died because of the annihilation of caste system in India. In fact they itself never believed that caste will be annihilated in India. But at the end of the war, very strange instrument was found in order to delete the information of caste from People mind, Neuro Eraser was found out.  Neuro Eraser completely erased the details and emotions of caste from people’s mind and blood which automatically erased from their hearts. This was really an amazing moment for India as it was recorded by many People.  Even in this same Chennai 240 years back there was a great famine.  At that time Chennai is called as Madras Pattinam.  The so called caste drunk the People’s blood through the caste atrocities.  The humanity was tampered and off course they are none other than your ancestors, fore fathers and fore mothers.  But look today, in this super sonic, ultra fast world.  As a matter of fact, from Egmore to Anna salai, the time travel is 3 minutes but exactly 100 years back it was 30 minutes.  By that time Aaron and David smiled a little bit as they can never agitate a fact like that. Even they think that 30 to 3 as a myth.  Off course technology made this possible but do not forget his is received free from God.  Do not forget God’s presence.  I am not saying this blindly but life in Christianity is to be tasted rather than to be wasted.  In fact at a point where caste was made waste when technology hits the maximum level. You are tasting the equality today because of the Grace of God, so I name this year as 600th Year of Grace which wholly includes even the struggle made by people in Martin Luther’s time.

Let you all decide now that share your love with others by the way give importance to your scripture, faith and Grace as Luther highlighted.  Before reading your scripture wear lens for your clarity like equality and rationality with the same space not to destroy your faith root.  This showers you Grace of God through the rain of love.

Let us rethink in 600th year of Reformation what is to be Re formed in society today by meditating 600th year of Grace and do not forget to erase your bad thoughts like Neuro Eraser. Think.. Act… All the best, God bless you all ! signed off the Special speaker. 

As all stunned with this short and sweet preaching, Rev. Sam Anbu stepped in and introduced he special speaker.  As I am pleased and Glad to introduce the world’s first Robotic Preacher, Rev. Rob. Robert Sandler.  As Rob scans your faith level and gives sermon based on your level of spirituality.  We are all glad to receive his ideas which highlighted grace.  As he was saying I have few books and souvenirs about Grace, out of that one special book is “Sola Gratia” – a Souvenir released 100 years back by one of the greatest Theological college today in Chennai. It will be very useful for youths concluded Rev. Sam.

After service got over Aaron and David took a super selfi with Rev. Rob, uploaded in Internet as it is 100 G net speed.  Thanked and got blessing from Rev. Rob, Feeling blessed with Rev. Rob uploaded Aaron.

As they reach back to home, Aaron and David is carrying Sola Gratia, a Souvenir in their hand as Pastor insisted.  This day is very effective said Aaron happily.  Off course Dude (thumps up), Aaron.  As they came across clean, neat, wonderful, traffic less and zero polluted Smart Chennai.  They finally reached home.  Knock, Knock, Knock…

***

Knock… dad, wake up! Its Sunday, you are the pastor of this church, Remember ! said David.  Rev. Sam Anbu now only realized everything and said Oh my sweet God!

Don’t worry uncle! Early morning Dream will surely happen! Encouraged Aaron, who came for semester vacation. 

As they all left for Sunday church service the wall Post was bravely saying

I HAVE A DREAM by Martin Luther King Jr.

 

Isaac. H

BD IV

தந்திர நரி

 *தந்திர நரி*

******************


ஒரு காட்டில் பல ஆடுகளும்  சில கொடூர நரிகளும் வாழ்ந்து வந்தன.


ஆடுகளை கொடூர நரிகள் வேட்டையாடி உண்டு வந்தன. 


இதனால் பயந்தபோன ஆடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து "இனி நாம் ஜாக்கிரதயாக இருக்கவேண்டும். யாரும் தனித்து உணவு தேட போக கூடாது. ஒற்றுமையாக இருக்கவேண்டும்". என்று தீர்மானம் போட்டது. 


அப்படியே அவைகள் வாழ்ந்ததால் நரிகளால் அவைகளை உண்ண முடியவில்லை.


இதனால் ஆத்திரம் அடைந்த நரி கூட்டத்தின் தலைவன் தன் குள்ள நரி ஒற்றனை அனுப்பி "எப்படியாவது அந்த கூட்டத்தை கலைத்துவிட்டு ஒரு ஆட்டையாவது உண்ணவேண்டும். அதனால் கொழுத்த ஆடு ஒன்றையாவது கொண்டுவா" என உத்தரவு போட்டது.


ஒற்றன் குள்ளநரி தனது உடல் முழுவதும்  ஆடுபோல வேஷம் போட்டு சில ஆடுகளிடம் நடித்து நட்பு கொண்டது.


இதை தெரிந்து கொண்ட தலைவன் ஆடு அந்த ஏமாந்த ஆடுகளை எச்சரித்தன.


ஒருநாள் அந்த காட்டில் இடியும் மழையும் பெய்தது. அப்போது  நரியிடம் ஏமாந்த ஆடுகள் மழையில் ஆனந்த குளியல் போட்டன. 

அப்போது அவைகள் ஆடு வேஷம் போட்ட குள்ள நரியைிடம், "மழையில் நனைந்தால் சுகமாக இருக்கும் வா" என்று அழைத்தன.  

ஆனால் குள்ள நரியோ,  "ஐயயோ,  நனையாதே! உடம்பு சரியில்லாமல் போய்விடும். 

உங்களுக்கு உடம்பு சரியில்லாமல் போனால் என்னால் தாங்கமுடியாது." என்று கதறியது.


ஆனால் அந்த ஆடுகளோ வலுகட்டாயமாக ஆடு வேசம் போட்ட குள்ளநரியை மழையில் நனைய வைத்தன. 

மழையில் நனைந்ததால் குள்ள நரியின் சாயம் சுத்தமாக வெளுத்துபோனது. 

தன் வேசம் கலைந்துபோனதை அறியாத குள்ளநரி ஆடுகளுக்காக கவலைபட்டது.


வேசம் கலைந்த நரியை கண்ட முரட்டு ஆடுகள் நரியை முட்டி கொன்றதாம்.


இப்படிதான் நண்பர்களே! நம் அருகிலேயே  தந்திரமான குணம் கொண்டவர்கள் இருக்கலாம். 

நம்மை காத்துக்கொள்ள நாம்தான் பகுத்தறிவோடு இருக்கவேண்டும். 

இறைவன் ஏற்றநேரத்தில் அவர்களை வெளிகொண்டு வருவார்.

Sunday, June 27, 2021

விஷ்மயா_நாயர்

 #விஷ்மயா_நாயர்


🌠

A post by Kavi kavi Rk 

ஜாதிகள் பற்றிய சிந்தனை குறைந்து வரும் நிலையில் தன் பெயருடன் ஜாதியை சேர்த்துக் கொண்ட விஸ்மயா நாயர் இறப்பிற்கு ஜாதி மத பாகுபாடு இன்றி அனைத்து மக்களும் கண்டனம்


🔴கேரளாவில் 


வரதட்சணை கொடுமையால் கொலை(?) செய்யப்பட்ட விஸ்மயா நாயர் என்ற 23 வயது பெண் 


திருமணம் முடிந்து தன் அம்மா வீட்டை விட்டு கணவன் வீட்டுக்கு போகும் போது எடுக்கப்பட்ட போட்டோ இது. 


பல மாதங்களாகவே கணவனால் வரதட்சணை கொடுமையை அனுபவித்தாலும் குடும்பமும் சமூகமும் இவரை “அவரோடு அட்ஜஸ்ட் செய்து போ” என்றே திரும்ப திரும்ப சொல்லி இருக்கிறது. 


எல்லாவிதத்திலும் தன்னம்பிக்கையாய் வளர்ந்த விஸ்மயா தன் மேட்ரிமோனியலை தானே நிர்வகித்து தன் கணவனை கூட தானே செலக்ட் செய்த விஸ்மயாவால் இந்த இடத்தில் என்ன செய்ய என்று தெரியவில்லை. 


கணவன் அடிக்க அடிக்க திரும்ப திரும்ப அட்ஜஸ்ட் செய்தே வாழ்ந்துள்ளார். 


1. நாம் வீட்டுக்கு போனால் அப்பா அம்மாவின் கெளரவம் என்னவாகும்.


2. கஷ்டப்பட்டு திருமணம் செய்து கொடுத்தார்களே அவர்கள் “மகள் நன்றாய் வாழ்வாள்” என்ற எதிர்பார்ப்புகள் வீணாய் போய்விடுமே.


3. என்றாவது திருந்தி விட மாட்டாரா நம் கணவர்.


4. நண்பர்கள் சமூகத்திடம் அவர்கள் முன்  மிகப்பெரிய ஆர்பாட்டமாய் திருமணம் செய்து கொண்டோமே. இப்போது அது பெயிலியர் என்று எப்படி சொல்வது. கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் செய்து பார்ப்போமா ?


5. கணவரை பிரிந்து என்ன செய்வது. டைவோர்ஸ். மறுமணம். இதெல்லாம் என்னால் எப்படி செய்ய முடியும். அதை நினைத்தாலே அயர்ச்சியாக இருக்கிறதே. பயமாய் இருக்கிறதே.


என்று தயங்கி இருக்கலாம். பலர் இப்படி தயங்கிதான் அடி உதைகளை வாங்கி அமைதியாக இருக்கிறார்கள். 


விஸ்மயாவின் அப்பா அம்மா அண்ணன் அவரை கணவனை பிரிந்து வரும்படியாக சொன்னதாக செய்தி சொல்கிறது. 


ஆனால் ஒருவேளை விஸ்மயா வீட்டுக்கு வந்து தங்கி இருந்தாலும் அவர்கள் என்ன செய்திருப்பார்கள். 


1. விஸ்மயாவின் அம்மா பெண்ணின் வாழ்க்கை கெட்டு விட்டதே என்று அன்றாடம்  சோக கீதம் பாடி இருப்பார். புலம்பி கொண்டிருந்திருப்பார். 


2. அப்பாவும் அண்ணனும் மகள் தங்கையிடத்தில் அதிருப்தி பார்வையை வீசி இருப்பார்கள். 


3. சொந்த பந்தங்கள் எல்லாம் “ என்னம்மா இங்கதான் இருக்கியோ. சமாதானமா போ” என்று தொடர்ச்சியாக அட்வைஸ் செய்திருக்கும்.


பிறந்த வீட்டிலும் விஸ்மயாவுக்கு ஒரு இயல்பான வாழ்க்கை கிடைத்திருக்கவே செய்யாது. 


“விஸ்மயா விஸ்மயா உன் கணவனை விட்டு பிரிந்து விட்டாய். ஐயோ நீ தவறு செய்கிறாய். கணவன் தான் உன் வாழ்க்கை” என்ற செய்தியை அப்பா அம்மா அண்ணன் சமூகம் சொந்த பந்தங்கள் என்று அனைவருமே நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லி சொல்லி அவருக்கு பயத்தையும், பதட்டத்தையும் குற்ற உணர்வையும் ஏற்படுத்தி இருக்கும்.


”கணவன் உன்னை அடித்து துன்புறுத்துகிறானா. போய் புகார் கொடு. 


இல்லை பிரிந்து வாழவேண்டும் என்றால் இங்கே வீட்டில் வந்து இரு. 


அப்படி ஒரு ஆளே இல்லை என்று நினைத்து கொள். 


உனக்கு பிடித்ததை செய். உனக்கு பிடித்த வேலையை தேடி சம்பாதித்து கொள். 


இனிமேல் உன் திருமண வாழ்க்கையை பற்றியே யோசித்துக் கொண்டிருக்காதே. 


சொந்த பந்தங்கள் உன்னை விசாரிக்காமல் அப்பா அம்மா நாங்கள் பார்த்து கொள்கிறோம். 


நீ உன் மனதில் குற்ற உணர்வில்லாமல் பதட்டமில்லாமல் பயமில்லாமல் முதலில் ஆகு. அதுதான் இங்கே முக்கியம். உனக்கு எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இரு”


இப்படி ஒரு ஆதரவை பிறந்த வீட்டார் கொடுத்தால் பல பெண்கள் கணவன் செய்யும் கொடுமையை சொல்ல முன்வருவார்கள். 


இங்கே பிறந்த வீடுகளில் கொடுக்கப்படும் சப்போர்ட் புற அளவிலானதே. “வேறு வழியில்லை. இங்கே வந்து இரு. இப்ப என்ன பண்ண “ தொனி சப்போர்டுதான் இங்கே பெண்களுக்கு புகுந்த வீடுகள் கொடுப்பது. 


“நீ எதுவும் தவறு செய்யவில்லை. அடி உதையை எல்லாம் நீ பொறுத்துக் கொள்ள வேண்டியதே இல்லை. நீ பிரிந்து இருப்பதுதான் சரி. உனக்கு பிடித்ததை செய். நாங்கள் இருக்கிறோம்” என்ற மாரல், உளப்பூர்வமான, உளவியல் ரீதியான சப்போர்ட்டை நம் பிறந்த வீடுகள் கொடுப்பதில்லை. 


அதனாலேயே பல இளம் பெண்கள். பண வசதியுடைய குடும்பத்தில் பிறந்த விஸ்மயா போன்ற பெண்கள் கூட பிறந்த வீட்டுக்கு வர தயங்கி இருக்கிறார்கள். 


ஒரு பெண்ணுக்கான அந்தஸ்து, பாதுகாப்பு மற்றும் செக்ஸ் இந்த மூன்றையும் சமூக ஒப்புதலோடு கொடுக்கும் ஒரே ஜீவனாக அவள் கணவனை இந்திய சமூகம் அளவுக்கதிகமாக கொண்டாட்டமாக பார்க்கிறது.


இளம் பெண்களுக்கும் குடும்பமும் சமூகமும் அப்படித்தான் சொல்லி கொடுக்கிறது. 


“மகளே இதுதான் உன் கணவன். 


- இவன்தான் உன் கெளரவம். உனக்கான மதிப்பு இவனை வைத்துதான்.

- இவன்தான் உனக்கு பாதுகாப்பு

- இவன்தான் உனக்கு சாப்பாடு கொடுப்பவன்.

- இவன்தான் உனக்கு சுகம் கொடுக்கும் ஒரே ஜீவன். 

- வாழ்கையின் இறுதி வரை இவன்தான் உனக்கு


இதைத்தான் ஒரு இளம் பெண்ணின் மனதில் இப்போதும் உளவியல்ரீதியாக அனைவரும் புகுத்துகிறார்கள். 


இந்த பிரைன் வாஷ் முறைதான் இளம்பெண்களை கணவரோடு இந்த காலத்திலும் கூட அட்ஜஸ்ட் செய்து கொண்டு போக சொல்கிறது.


“அவருக்கு புக் படிக்கிறது பிடிக்காது. அவருக்கு வீட்ல பகல்ல நைட்டி போடுறது பிடிக்காது. இப்படி பல பிடிக்காதுகளை பெண்கள் ஈசியாக ஏற்றுக் கொண்டு அவர்கள் பிடித்தங்களை நிறுத்திக் கொள்வது இந்த 

“அவன் தான் எல்லாமும்” என்ற  உளவியல் காரணமாகத்தான். 


இன்னொரு செய்தி படித்தேன். 


விஸ்மயா தன் அம்மாவிடம் “அம்மா அவர் அடிக்கிறார். நான் காலேஜ் பீஸ் கட்டவேண்டும் எனக்கு ஐந்தாயிரம் (5000) ரூபாய் கொடுங்கள்” என்று கேட்டிருக்கிறார். 


அதற்கு விஸ்மயாவின் அம்மா “என்னிடம் பணம் இல்லையே. நீ உன் கணவனிடமே இன்னொருமுறை கேட்டுப்பார்” என்று சொல்லி இருக்கிறார். 


இதிலிருந்து விஸ்மயாவுக்கோ அவர் அம்மாவுக்கோ சாதரண தொகையான 5000 ரூபாயை ஹேண்டில் செய்யும் உரிமை இல்லை என்று தெரிகிறது.


சட்டென்று கூகிள் பே, பே டி எம் மாதிரி ஆப்ஸ் மூலம் விஸ்மயாவுக்கு வெறும் 5000 ரூபாய் கடத்த முடியாத அளவுக்கு உரிமையில்லாமல் விஸ்மயாவின் அம்மா கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறார். 


அதாவது பணம் என்பது ஆண்களாலே கட்டுப்படுத்தப்படுகிறது. 


பெண்கள் வேலைக்கு போக வேண்டும். ஆனால் ஏடிஎம் கார்டு கணவரிடம் இருக்கும்.  


சாமி படத்தில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் விக்ரம் கல்லூரி மாணவியான த்ரிஷாவிடம் கேட்பார். 


”காலேஜ் படிக்கும் பொண்ணு கையில் 20 ரூபாய் வைச்சிருக்க மாட்டியா”


அதற்கு த்ரிஷா சொல்வார் “அவ்வளவு காசு எனக்கெதுக்கு. போக வர பஸ்பாஸ். ஒருவேளை அது தொலைஞ்சா போக 2.50 வர 2.50 அஞ்சு ரூபாய் இருக்கு. சாப்பிட தயிர்சாதம். தொட்டுக்க மாவடு. எனக்கு எதுக்கு அவ்வளவு காசு” 


என்பார். இந்த வசனம் குடும்பஸ்தர்களாக ஆண்களையும் பெண்களையும் கொண்ட தமிழ் சமூகத்து மக்களை அளவுக்கு அதிகமாய் மகிழ்ச்சிப்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. 


காரணம் அதில் தெரியும் பெண்ணடிமைத்தனம். ஒரு பெண் பணம் காசே செலவழிக்க கூடாது. அவளுக்கு கல்லூரி போகும் உரிமையை கொடுத்தது ஆண். அதை மட்டும் செய்ய வேண்டுமே தவிர அவள் கையில் கொஞ்சம் பணம் வைத்து அவளுக்கு பிடித்த மாதிரி செலவு செய்து விட கூடாது. காரணம் வீட்டு பணம் என்பது எப்போதும் ஆண்கள் கையிலேயே அவர்கள் கட்டுபபாட்டிலேயே இருக்க வேண்டும். 


சாமி விக்ரம் கேரக்டராக ஒரு சமூக அறிவுள்ள போலீஸ் அதிகாரியாக இருந்தால் த்ரிஷா வீட்டுக்கு சென்று அவரது கார்டியன் / பெற்றோர்களிடம் 


“ உங்க பொண்ண இப்படியா வளப்பீங்க. எப்பவுக் கையில ஒரு ஐநூறு ரூபாய் கொடுத்து வைச்சி அவங்க இஷ்டப் போல செலவு செய்துக்கலாம்னு சொல்லி வையுங்க. இப்படி காலேஜ் விட்டா வீடு. வீடு விட்டா காலேஜுனு இருந்தா அவளுக்கு உலகம் எப்படி தெரியும். நீங்க இப்படி செய்யும் போது காசுக்கும் பணத்துக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை. அதை தேவைப்படும் கேட்டாக்க அப்பா கொடுப்பாரு, அண்ணன் கொடுப்பான், ஹஸ்பண்ட் கொடுப்பாரு அப்படிங்கிற மனநிலைதான் வளரும். “ என்று சொல்லி இருப்பார். 


உளவியல்ரீதியாக குடும்பத்து இளம்பெண்கள் இன்னமும் முழுமையாக ஆண்களில் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறார்கள் என்பது விஸ்மயாவின் மரணம் தெளிவாக காட்டுகிறது. 


இந்த உளவியல் பிடியில் இருந்து பெண்கள் எப்படி விடுபடுவது என்பதான வாதங்கள், விவாதங்கள் மற்றும் சிந்தனைகளைதான் இப்போது அதிகம் விவாதிக்க வேண்டும். 


ஒரு பானையை களிமண்ணில் இருந்து தனக்கு பிடித்த வடிவமாக ஒரு பானை செய்பவர் செய்து எடுத்துக் கொள்வதுபோல இங்கே ஆணாதிக்க சமூகமும் பெற்றோரும் விஸ்மயா போன்ற ஏராளமான இளம்பெண்களின் மனதை தங்களுக்கு பிடித்தமாதிரி பெண்ணடிமைத்தனமான வடிவமாக செய்து வைக்கிறார்கள்.


அப்படியாக வளர்க்கப்படும் அப்பாவி பெண்கள் அதீதமாக ஏதாவது நடக்கும் போது என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போகின்றனர். திகைப்பு முடியுமுன்னே கொலைகாரர்களால் தங்கள் உயிரை இழக்கின்றனர். 


விஸ்மயாவின் கலங்கும் போட்டோ அதைத்தான் காட்டுகிறது.

Thursday, June 24, 2021

மமதை


*மமதை*


முன்னொரு காலத்தில் , ஒரு நாட்டின் இளவரசனுக்கு திடீரென்று பைத்தியம் பிடித்து விட்டது . அரசன் மிகவும் கவலைப்பட்டான்.  அவனுக்குள்ள ஒரே மகன், ஒரே வாரிசு, நாட்டை ஆளவேண்டியவன்  பைத்தியக்காரனாக ஆகி விட்டான்.


 நாட்டிலுள்ள எல்லா மந்திரவாதிகளும், மருத்துவர்களும் அழைக்கப்பட்டார்கள். எல்லா முயற்சிகளும் செய்து பார்த்தாகிவிட்டது. ஒன்றிலும் பயன் இல்லை.


 ஒருவராலும் இளவரசனின் பைத்தியத்தைக் குணமாக்க முடியவில்லை. அவன் பைத்தியமாகவே இருந்து வந்தான். அவன் பைத்தியமான தினம் முதல் அவனுடைய எல்லா ஆடைகளையும் அவிழ்த்து எறிந்து விட்டான். அவன் அம்மணமாக ஒரு மிகப் பெரிய மேஜையின் கீழ் அமர்ந்து கொண்டான்.  அவன் தன்னை ஒரு அடைகாக்கும் கோழியாக எண்ணிக் கொண்டான்.


அரசனும் தன் மகன் மீண்டும் பைத்தியம் தெளித்து வந்துவிடுவான் என்ற நம்பிக்கையை இழந்து விட்டான். இளவரசன் நிரந்தரமாக பைத்தியக்காரனாகி விட்டான்.


எவராலும் அவனுடைய பைத்தியத்தை தெளிய வைக்க ஏதும் செய்ய முடியவில்லை.


 ஒருநாள் ஒரு ஞானி அரண்மனையின் கதவைத் தட்டி அரசனிடம் சொன்னார்,   "இந்த இளவரசனை நான் குணப்படுத்த எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" .


 மன்னருக்கு சற்று சந்தேகம் ஏற்பட்டது .

ஏனெனில் இந்த ஞானியே பார்ப்பதற்கு இளவரசனைவிட பெரிய பைத்தியக்காரனைப் போல் இருந்தார் .


ஞானி மீண்டும் சொன்னார் : " என்னால் அவனைக் குணப்படுத்த முடியும்".


ஞானிக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது . 


ஞானிக்கு அனுமதி கொடுத்த அந்தக் கணமே  ஞானி தன்னுடைய ஆடைகளை முற்றிலுமாக கழற்றி எறிந்துவிட்டு இளவரசன் இருந்த பெரிய மேஜையின் அடியில் அடைகாக்கும் கோழிபோல் உட்கார்ந்து கொண்டார்.


இதைப் பார்த்த பைத்தியக்கார இளவரசனுக்கு குழப்பம் ஏற்பட்டது . 


அவன் கேட்டான் : " நீ யார் ? நீ என்ன செய்வதாக எண்ணிக்கொண்டு இங்கு இருக்கின்றாய்?".


 ஞானி சொன்னார் : " நான் ஒரு அடைகாக்கும் கோழி , உன்னை விட அனுபவம் அதிகமாக உடையவன்". 


இளவரசன் கேட்டான் " நீ அடைகாக்கும் கோழியாக இருந்தால் சரி , ஆனால் நீ பார்ப்பதற்கு மனிதனைப் போல் உடையுடன் இருக்கிறாயே?".


 ஞானி சொன்னார் : " தோற்றத்தை வைத்து மதிப்பிடாதே. என்னுடைய உணர்வை பார், என்னுடைய ஆன்மாவைப் பார், நான் உன்னைப் போன்று ஒரு அடை கோழிதான்".


அன்றிலிருந்து அவர்களிருவரும் நண்பர்களாகிவிட்டார்கள்.


சில நாட்கள் கழிந்தன.


திடீரென்று ஒருநாள் ஞானி உடை அணிய ஆரம்பித்தார். இளவரசன் கேட்டான் : " நீ என்ன செய்கிறாய்? உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா?.எங்கேயாவது அடைகோழி மனிதர்களைப் போல் உடை உடுத்திக் கொள்ளுமா?".


ஞானி சொன்னார் : " இந்த மனித முட்டாள்களை ஏமாற்றவே நான் இப்படிச் செய்தேன். உணர்வில் நான் ஆடை அணிந்தாலும் என்னில் எவ்வித மாற்றமுமில்லை . என்னுடைய அடைகாக்கும் தன்மை அப்படியே தானிருக்கிறது .மனிதர்களைப் போல் ஆடை அணிந்துள்ளதால் நான் மாறிவிட்டதாக நீ நினைக்காதே?".


இளவரசன் ஞானியின் பேச்சைக் கேட்டு அவர் ஆடைகள் அணிவதற்கு ஒத்துப் போனான். சில நாட்கள் கழித்து ஞானி இளவரசனையும் ஆடைகள் அணிய வற்புறுத்தினார். 


திடீரென்று ஒரு நாள் ஞானி தனக்கு அரண்மனையிலிருந்து உணவு வர ஏற்பாடு செய்தார். 


இப்பொழுது இளவரசன் மிகவும் உஷாராகி , " நீ என்ன மிகவும் கெட்டுப் போய் விட்டாயே , நீ இந்த மனிதர்கள் உண்பதைப் போன்றா உண்ணப் போகிறாய்? நாம் எல்லாம் அடைகோழிகள்! 

நாம் அடைகோழிகள் உண்பதைப் போலதான் உண்ண வேண்டும்."


ஞானி சொன்னார் : " இந்த அடைகோழியைப் பொறுத்தவரை எதுவும் வித்தியாசத்தை ஏற்படுத்தப் போவதில்லை. நீ எதையும் உண்ணலாம், நீ எல்லாவற்றையும் அனுபவிக்கலாம். நீ மனிதனைப் போல வாழ்ந்து கொண்டே உன்னுடைய அடைகோழித் தன்மைக்கு உண்மையானவனாக இருக்கலாம்."


இப்படி கொஞ்சம் , கொஞ்சமாக ஞானி இளவரசனை மீண்டும் மனித உலகிற்கு அழைத்து வந்தார். இளவரசன் இப்பொழுது முற்றிலும் மனிதனாக மாறிவிட்டான் . 


உங்களுக்கும் எனக்கும் இதே கதைதான்.


ஞாபகத்தில் கொள்ளுங்கள் , நீங்கள்

உங்களை உடலால், மனதால், நான், என்னை சுற்றியுள்ளவர்களை விட ஞானம் சிறந்தவன், என்னை யாராலும் வெற்றிபெற முடியாது என்று மமதை கொண்டு வாழ்வது சாதாரண வெளியுலக மக்களுக்கு ஒரு  பைத்தியகாரனாய் மட்டுமே புலப்படும். 


இளவரசனை போன்ற பைத்தியகாரர்களை சரிசெய்ய முயன்று 

எல்லா வல்லுநர்களும் தோற்றுப் போய் விட்டார்கள்.  ஆனால் ஒருநாள் உங்கள் பைத்தியகாரதனத்திலிருந்து தெளிவடைவீர்கள்.  அன்று நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் மமதையின் வாழ்விலிருந்து விடுபடும்போது ஏதும் அற்றவர்கள் இருப்பதை உணர்வீர்கள்.  


மமதை எனும் பைத்தியத்திலிருந்து விடுபட்டு எதார்த்தம் எனும் மனித வாழ்கைக்குள் நுழைவோம்.


Monday, June 21, 2021

படித்ததில் பிடித்தது

 *சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது*


1.தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.


2.திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள். இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.


3. Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.


4.தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.

இன்னும் கல்யாணம் ஆகலயா? குழந்தைகள் இல்லையா? இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா? ஏன் இன்னும் Car வாங்கவில்லை? இது நமது பிரச்சினை இல்லைதானே!"


5.தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!


6. நண்பருடன் Taxiயில் சென்றால் இம்முறை இயலாவிட்டால் மறுமுறை நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.


7.மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள். மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.


8. அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள். அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.


9. நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள். அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.


10. யார் உதவினாலும் பாரபட்சமின்றி நன்றி சொல்லுங்கள்.


11. பொதுவில் புகழுங்கள். தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்.


12. உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.

"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.


13. யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள். அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.


14. யாரும் தனக்கு Doctor Appointment இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள். அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன்* என்று கூறலாம்.


15. நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்.


16. கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்.


17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள். அவர்களாகவே சொன்னால் தவிர.


18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், Style காக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள். கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.


19. யார் தனிப்பட்டப் பிரச்னையிலும் நேரடியாக வலிய போய் தலையிடாதீர்கள்.


20. இறுதியாக ஒன்று. இதுபோன்ற தகவல்கள் மற்றவர்களுக்கும்  பயன்தரும் என்றால் பகிரவும்.

நன்றி!

*படித்ததில் பிடித்தது*

🙏 🙏 🙏

Femi Otallo

 உலக பணக்காரர்கள் 1000 பேர் வரிசையில் ஆயிரத்தின் அருகில் இருப்பவர் நைஜீரியாவை சேர்ந்த பெமி ஓடெடோலா ஆனால் அவர் தான் மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர்... 


அவர் ஒரு நேர்காணலில் ஃபெமி ஓடெடோலாவை தொகுப்பாளர்  பேட்டி எடுத்தார்...


 "உங்களை 

வாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது என்ன?" என்ற கேள்விக்கு ..


ஃபெமி கூறினார்:

"நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4 நிலைகளை கடந்து விட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தை புரிந்துகொண்டேன்."


1.முதல் கட்டமாக செல்வத்தையும் வழிமுறைகளையும் குவிப்பதாக இருந்தது. ஆனால் இந்த கட்டத்தில் நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவில்லை.


2.பின்னர் மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் பொருட்களை சேகரிக்கும் இரண்டாம் கட்டம் வந்தது. ஆனால் இந்த விஷயத்தின் விளைவும் தற்காலிகமானது என்பதை நான் உணர்ந்தேன், மதிப்புமிக்க பொருட்களின் மீதான ஈர்ப்பு நீண்ட காலம் நீடிக்காது.


3.பின்னர் பெரிய திட்டங்களைப் பெறுவதற்கான மூன்றாம் கட்டம் வந்தது. நைஜீரியா மற்றும் ஆபிரிக்காவில் 95% டீசல் விநியோகத்தை நான் வைத்திருந்தேன். ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் நான் மிகப்பெரிய கப்பல் உரிமையாளராக இருந்தேன். ஆனால் இங்கே கூட நான் கற்பனை செய்த மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவே இல்லை.


4. இறுதிக்காலத்தில் தான் யதார்த்தமாக என் நண்பன் அவனுக்கு தெரிந்த பள்ளியில் ஊனமுற்ற  குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி வாங்கி கொடுக்க சொன்னான், சுமார் 200 குழந்தைகள்.


என் நண்பனே கேட்டதற்காக நானும் உடனடியாக சக்கர நாற்காலிகள் வாங்கினேன்.


ஆனால் நண்பனோ  நானும் அவனுடன் சென்று சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினான். சரி நானும் மனமாறுதலுக்காக அவருடன் சென்றேன்.


அங்கே நான் சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு என் சொந்த கைகளால் கொடுத்தேன். அப்போது அந்த குழந்தைகளின் முகங்களில்  விசித்திரமான பிரகாசத்தை நான் கண்டேன். அவர்கள் அனைவரும் சக்கர நாற்காலிகளில் உட்கார்ந்து, சுற்றி நகர்ந்து வேடிக்கை பார்த்தனர்.


அவர்களின் ஆனந்தத்தை என்னால் விவரிக்கவே முடியவில்லை... அது

எனக்குள் ஏதோ சொல்லமுடியாத அற்புதத்தை உணர்ந்தேன். எல்லாம் முடிந்து நான் வெளியேற முடிவு செய்த போது குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை என் கால்களை மிகசெல்லமாக பிடித்து கொண்டது,  நான் சிரித்து கொண்டே என் கால்களை மெதுவாக விடுவிக்க முயன்றேன், ஆனால் குழந்தை என் முகத்தை உற்றுப் பார்த்து கொண்டே விடாமல் இறுக பிடித்து கொண்டது


நான் குனிந்து குழந்தையிடம் கேட்டேன்: உனக்கு வேறு ஏதாவது வேணுமா?


இந்த குழந்தை எனக்கு அளித்த பதில் மிகுந்த திருப்தியை தந்து வாழ்க்கையைப் பற்றிய எனது அணுகு முறையையும் முற்றிலுமாக மாற்றியது.

 அந்த குழந்தை கூறியது  இது தான்: 

‌"நான் உங்கள் முகத்தை நினைவில் வைக்க விரும்புகிறேன், உங்களை  சொர்க்கத்தில் சந்திக்கும் போது, உங்களுக்காக கடவுளிடம் பேசி நான் உங்களுக்கு பிடித்ததை வாங்கி தருகிறேன் என்று சொல்லி அந்த சக்கர நாற்காலியில் ஏறி மற்ற குழந்தைகளுடன் விளையாட சென்று விட்டது... தெய்வத்தின் அருளை நான் அன்று தான் முழுமையாக உணர்ந்தேன்....

Saturday, June 12, 2021

GK

 👉 *Wonderful questions to  test your General Knowledge*👍


1. What does numero uno mean in English?


2. How many singers are they in a  duet?


3.  How many teaspoons make a Table spoon? 


4 . How many Vedas are there in Hindu Mythology?


6.  How many countries have larger area than India?


7.  What is the Ph value of water?


8.  How many planets are there in Solar System?


10. How many  Millimetres make a Centimetre?


11. How many players are there in a Football team?


12. How many inches make a feet?


15. One-time vehicle tax is valid for how many years?


16. How many feathers are there in a shuttle cock?


17. How many languages are printed in an Indian Currency?


18. How many Chapters are there in Mahabharatha?


19. Which Commonwealth Game was hosted in India in 2010?


20. How many overs per team are there in T-20 cricket?  


21. How many years did Mahatma Gandhi spend in South Africa?


23. How many chromosomes are there in human body?


24. How many spokes are there in an Ashoka Chakra?


25. What is the qualifying age for becoming a MLA?

.

.

.

.

.

.

.

.

.


 *Don't panic, please.* 


*The question numbers are the answers.*😄

Monday, June 7, 2021

I recommend

 A beautiful write up... I love this...just flip through it


*WISE WORDS*


```In life, some may walk, others may run, but remember the Lord gave the tortoise and the horse the same days to reach Noah's ark. Your journey might be rough and tough but you will definitely get to your destination.

Jacob looked at Joseph and saw a good son! The ten brothers looked at Joseph and saw a useless dreamer! The travellers looked at Joseph and saw a slave!! Potiphar looked at Joseph and saw a fine servant!! Potiphar's wife looked at Joseph and saw a potential boyfriend! The prison officers saw in Joseph a prisoner! How wrong were all of them! God looked at Joseph and saw a Prime Minister of Egypt in waiting!! Don't be discouraged by what people see in you!! Be encouraged by what God sees in you!! Never underrate the person next to you because you never know what the Lord has deposited in that person. Your maid may be a Chief Executive Officer in waiting for a company which shall employ your child. Your garden-boy may be a president in waiting. (Remember David got the anointing of becoming a King while he was a simple child herding sheep. Esther was a simple orphaned girl yet she was a Queen in waiting). Let's share God's love and make the world a better place to live. Show that love by sharing this message with those you love.

IT DOESN'T MATTER HOW PEOPLE SEE YOU, IT MATTERS HOW GOD SEES YOU

God is God:

🏽He doesn't care about *age*, no wonder he blessed Abraham.

🏽He doesn't care about *experience*, no wonder he chose David.

🏽He doesn't care about *gender,* no wonder he lifted Esther.

🏽He doesn't care about *your past*, no wonder he called Paul.

🏽He doesn't care about *your physical appearance*, no wonder he chose Zacchaeus

(the shortest one).

🏽He doesn't care about *fluency in speech* , no wonder he chose Moses.

🏽He doesn't care about *your career*, no wonder he choose Mary Magdalene; a prostitute. 

All I know is that my God never changes

🏽He never made *a promise he wouldn't keep*👌🏾

He never saw *a person he wouldn't help*👌🏾

🏽He never heard *a prayer he wouldn't answer*👌🏾

🖼He never found *a soul he wouldn't love*👌🏾

🏽He never found *a sinner he wouldn't forgive*👌🏾

This is the kind of God I would like to commune with every day the moment I wake up. I strongly recommend Him to you.```

Saturday, June 5, 2021

Shawnshank redemption

 இது பத்து வருடங்கள் முன்பு கீதப்ப்ரியன் பளாக்கில் பாட்டாகவே படித்த பிரதி!!!


இப்போதும் இப்படத்துக்கு உள்ள வீச்சு அளவிடமுடியாதது.


முழுக்க ஸ்பாய்லர் படம் பாரத்தவர்களுக்கு மட்டுமானது.


த ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் The Shawshank Redemption[1994]


"Fear can hold you prisoner. Hope can set you free."

"பயம் உன்னை சிறைபிடிக்கும்,நம்பிக்கை உன்னை சிறை விடுவிக்கும்" இது தான் படத்தின் டேக் லைன்.

===============================

1994 ஆம் ஆண்டு,ஃப்ரான்க் டாரபான்ட் இயக்கத்தில் பிரபல ஆங்கில எழுத்தாளர் ஸ்டீபென் கிங்கின் “ரீட்டா ஹேவொர்த் அண்ட் ஷஷான்க் ரிடெம்ப்ஷன்” என்னும் அற்புதமான நாவலைத் தழுவி,வெளிவந்த “டிராமா” வகை உணர்ச்சி காவியம்.வாழ்வில் உத்வேகம் தரும் படங்களின் வரிசையில் இப்படத்துக்கே முதலிடம்.வல்லவன் வாழ்வான் என்பதை உரக்க சொன்ன படம்.IMDB ல் இது பெற்றுள்ள மதிப்பெண்=9.2/10


இந்த படம் வெளியாகி பதினைந்து வருடம் கழித்துப் பார்த்ததை எண்ணி ஆறாத வேதனைப்பட்டேன். மிகப்பெரிய இழப்பே. "த ஷஷாங்க் ரெடேம்ப்ஷன் "(ஷஷாங்கில் தண்டனைக்காலம்) வட அமெரிக்காவின் 180 வருட பழமை வாய்ந்த ஆறடி கனமுள்ள,சுவர் கொண்ட காற்று கூட புக முடியாத ஒரு கொடுஞ்சிறை. உள்ளே வந்தால் நரகம் தான்.அரக்கத்தனமான சிறை அதிகாரிகள்.உள்ளே உலவும் இன வன்முறையாளர்கள். ஓரினச் சேர்க்கையாளர்கள்.என்று.சாமானியனால் தாக்கு பிடிக்க முடியாத கொடும் சூழல்...


இந்த கதை 1947 ஆம் ஆண்டு துவங்குகிறது:-


”ஆண்டி டூப்ரேன்” (tim robbins)என்ற வங்கி அதிகாரி தன மனைவியை கள்ளக் காதலனுடன் உல்லாசமாய் இருக்கும் போது இருவரையும் சுட்டுக்கொன்றதாக வழக்கு நடந்து,அவருக்கு எதிரான சந்தர்ப்ப சாட்சியங்கள் வலுவாக , இருந்தமையால் செய்யாத குற்றத்திற்கு இரண்டு ஆயுள் தண்டனைகளை அடுத்தடுத்து அனுபவிக்க ஷஷாங்க் சிறைச்சாலைக்கு வருகிறார்.உள்ளுக்குள் குடைச்சல். தனக்கு துரோகம் செய்த மனைவியை கொல்ல நினைத்தது உண்மை,ஆனால் கொலையை தான் செய்யவில்லை, யார் செய்திருப்பார்? தெரியாது. மனதுக்குள் குமைகிறார்.


 சிறைக்கு வந்தவர் "ரெட்"(morghan freeman)என்னும் 20 வருட தண்டனையை அங்கு கழித்த சக கைதியுடன் நண்பனாகிறார். ரெட்டுக்கு சிறையில் உள்ள சந்து பொந்து அனைத்தும் அத்துப்படி,கைதிகள் என்ன பொருள் கேட்டாலும் வெளியில் இருந்து வரவழைத்து தன் கமிஷன் 20 சதம் மேலே வைத்து விற்கும் தந்திரமும் அத்துப்படி.இவரிடம் டூப்ரேன் பத்து டாலர் தந்து ஆறு அங்குலம் உயரமுள்ள சிறிய "ஜாக்ஹாம்மர்" கேட்டு வரவழைக்கிறார். தனது சிற்பம் குடையும் வடிக்கும் பொழுது போக்கிற்கு என்று சொல்லுகிறார். அதைக்கொண்டு பல அறிய கல்லால் ஆன பொக்கிஷங்களை வடிக்கிறார்.


பின்னர் அப்போது ஹாலிவூட்டில் மிக பிரபலமான கவர்ச்சிக்கன்னி "rita hayworth" நடித்த கில்டா என்னும் படம் காட்டப்பட, அவளின் மேல் மையலுற்றவர் ரீட்டாஹேவொர்தின் "a0" அளவு போஸ்டரும் ரெட் மூலம் வரவழைக்கிறார்.அதை தன் அறை சுவற்றில் ஒட்டிக்கொள்கிறார்.ஓய்வு நேரங்களில் சிறையில் தரப்பட்ட பைபிளை படிக்கிறார். பைபிளும் கையுமாகவே காணப்படும் இவரை சிறை அதிகாரிகளுக்கும் நிரம்ப பிடிக்கிறது.இவரிடம் சிறை வார்டன் நார்ட்டன் பைபிளில் இருந்து கேள்விகள் கேட்க ,இவர் அருமையாய் அதற்கு பதிலுறைக்க,நார்ட்டன் இவரை மெச்சுகிறார். 


1949 ஆம் வருடம் சிறைக்கு உள்ளேயே இருக்கும் ஒரு தொழிற்சாலைக்கு கூரையில் தார் பூசும் வேலைக்கு போகையில்,சிறை அதிகாரி "ஹாட்லீ" நாட்டின் வருமான வரியை குறை கூறி அங்கலாய்த்து பேசுவதை காண நேரிடுகிறது.இவருக்கு வரி ஏய்ப்பு கைவந்த கலை ஆதலால் இலவசமாக வலிய போய் வரி ஏய்ப்பு ஐடியா கொடுத்து,மயிரிழையில் உயிர் பிழைக்கிறார்.இதற்கு பலனாக அவர்கள் சகா அனைவருக்கும் பீரும் ,சிறிது சுதந்திரமும் கிடைக்க வழி செய்கிறார்.இதன் மூலம் இவரின் நட்பு வட்டம் மேம்படுகிறது.இவர் தான் வாழ்வில் பட்ட பாடத்தால் குடிப்பதை விட்டு விட்டதால் தன பங்கு பீரையும் சகாக்களுகே கொடுக்கிறார்.

 ஆனால் சிறை வாழ்வில் ஒரு அவமானமாக அங்கு உலவும் ஒரு "ஓரின சேர்க்கையாளர் "குழுவான "சிஸ்டேர்ஸ் கேங் கிடம் அவ்வபொழுது மாட்டி குதப் புணர்ச்சிக்கு ஆளாகிறார்.


வாய்ப் புணர்ச்சிக்கும் ஆளாக்கப்படுகிறார்.


(இது பாக் என்பவனும் ரூஸ்டர் என்பவனும் ஆண்டி டூப்ரேனை மிரட்டுகையில் ஆண்டி   சொல்லும் வசனம், 

"I hear the bite reflex is so strong they have to pry the victims jaws open with a crowbar".

பாக் தனக்கும்  ரூஸ்டரின் ஆணுறுப்புக்கும் ஆண்டி வாய்புணர்ச்சி தரா விட்டால், அவன் காதில் எட்டங்குல திருப்புளியை சொருகுவேன் என்கிறான், அதற்கு ஆண்டி , நான் அந்த சூழலில் உன் ஆண்குறியை கடித்துவிடுவேன், அப்படி கடித்தபடி என் உயிர் போய்விட்டால் , என் மண்டையை கடப்பாறையால் பிளந்தால் தான் உன் ஆண்குறியை மீட்க முடியும், இதுவே அறிவியல் ரீதியான உண்மை  என்கிறான் , அது தான் crow bar ன் பதம். )

ஒரு சமயம் இவர் அவர்களை எதிர் தாக்குதல் செய்தும் பயனின்றி கடுமையாக தாக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற.இவர் மேல் மட்டும் மனிதாபிமானம் கொண்ட சிறை அதிகாரி "ஹாட்லீ" அந்த "சிஸ்டேர்ஸ் கேங் " தலைவன் "பாப்" ஐ அவன் இருக்கும் வெளிச்சமில்லா சிறைக்கு சென்று இரும்புத்தடியால்.அடித்து நொறுக்கி அவன் மொத்த உடம்பையே செயலிழக்க செய்து நடை பிணமாக்கி மாநில மருத்துவமனைக்கு அனுப்புகிறார்,


அதன் பின்னர் சிறையில் இவருக்கு செல்வாக்கு கூடுகிறது.அனைவருக்கும் நிம்மதி பிறக்கிறது.இவர் தொடர்ந்து சிறை அதிகாரிகளுக்கு வருமான வரி கணக்கு தாக்கல்,இதர விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தல்,இலவச வரி ஏய்ப்பு சட்ட உதவி என்று இரவு பகல் பாராமல் பணி செய்து தர,இவருக்கு தனி அறை,நூலகர் பதவி.சிறையின் வார்டன் "norton"இன் கணக்கு வழக்கை பார்க்கும் வேலை,மற்றும் அளவுக்கு அதிகமான சேமிப்பு பொருட்கள் (personnel items)வைத்துக்கொள்ள அனுமதி என கிடைக்கிறது.

காலம் உருண்டோடுகிறது. இப்போது ஹாலிவூட்டில் மிக பிரபலமான கவர்ச்சிக்கன்னி "மர்லின் மன்றோவின் " "a0" அளவு போஸ்டரும் வரவழைக்கிறார்.அதை சுவற்றில் ஒட்டிக்கொள்கிறார்.இவர் சிறை நூலகத்திற்கு உதவி கேட்டு அரசு மற்றும் இதர மாகான நூலகங்களுக்கு சிறை அதிகாரியின் அனுமதியுடன் வாரத்திற்கு ஆறு கடிதங்களாவது எழுத ,அவருக்கு மலை போல பழைய புத்தகங்கள் இசைத்தட்டுகள் மற்றும் பண உதவிகள் வந்துசேர்கின்றன.சிறையில் நூலகத்தை அருமையாக நிர்மாணித்து பாராட்டுக்களும் விருதுகளும் பெறுகிறார்.

 அப்படி இவருக்கு ஒரு நாள் ”The Marriage of Figaro,” என்னும் ஒபேரா இசைத்தொகுப்பு தபாலில் வர ,அதை ஒலிபரப்ப கிராமபோன் நார்ட்டன் ரூமில் மட்டுமே இருக்க அங்கே சென்ற இவர். சிறை அதிகாரிகள் கழிவறை செல்ல கதவை மூடி தாழிடுகிறார்.பின்னர்  அதை ஓடவிட்டு மெய்மறந்து கேட்கிறார்.அதை சக சிறைக்கைதிகளும் கேட்டு மெய்மறக்கவேண்டும் என விரும்பியவர் அதை ஒலிபெருக்கியில் ஒலிபரப்ப,எல்லா சிறைக்கைதிகளும் உற்சாகமடைந்து நிலைகுத்தி நின்றுவிடுகின்றனர். ரெட்டிற்க்கோ மிகவும் கவலை,சிறை அதிகாரிகள் கோபமடைந்து இவரின் வார்டனின்  அறைக்கதவை தட்ட, இவர் துணிந்து அதை திறக்கவில்லை,வாங்கப்போகும் அடியை பற்றியும் கவலைப்படாமல் அந்த இசைத்தொகுப்பு முடிந்தவுடன் கதவை திறக்க இரும்புத்தடியால விளாசி எடுக்கப்படுகிறார். அந்த சம்பவம் மூலம் இவர் மாபெரும் நெஞ்சுறுதி கொண்டவர் என அனைவருக்கும் புலப்படுகிறது.


இதற்கிடையில் சிறை வார்டன் "norton" சிறைக்கைதிகளை அரசு பொதுப்பணித்துறையில் வேலைக்கு அனுப்பி,அதில் பெரும் பங்கை ஒப்பந்த தாரர்களிடமிருந்து லஞ்சமாக பெறுகிறார்.


அதற்கும் இவரே கணக்கர்."randel stephens" என்னும் பெயரில் தானே கையொப்பமிட்டு ஒரு பொய்க் கணக்கை ஆரம்பித்து (அதற்க்கு போலி ஓட்டுனர் உரிமம் ,போலி பிறப்பு சான்று தரப்படுகிறது)அதில் வரி ஏய்ப்பு செய்து லஞ்சப் பணத்தை கணக்கு வைத்து தினமும் டெபாசிட் செய்யப்படுகிறது.வார்டனுக்கு இவனின்றி ஒரு அணுவும் அசையாமல் போகிறது.இருந்தும் அந்த கொடுங்கோல் வார்டன் இவரிடம் தன் ஷூவுக்கு கூட பாலீஷ் போட்டு வாங்கிக்கொள்கிறார்.அவ்வப்பொழுது தன் கோட்டு சூட்டுகளையும் துவைத்து அயன் செய்து வாங்கிக் கொள்கிறார்.


நாட்கள் உருண்டோட 1965 ஆம் வருடம் ,


இப்போது ஹாலிவூட்டில் மிக பிரபலமான கவர்ச்சிக்கன்னி ""raquel welch"இன் "a0" அளவு போஸ்டரும் வரவழைக்கிறார்.அதை சுவற்றில் ஒட்டிக்கொள்கிறார்.துடிப்பான இளம் திருட்டு குற்றவாளி "tommy williams" என்பவன் சிறைக்கு வருகிறான்.இவரிடம் நட்புடன் பழகுகிறான்.தன் கர்ப்பிணியான காதலியை விட்டு வந்தவன் இனி திருந்தி வாழ்வது என்ற முடிவில் ,இவரிடம் தனக்கு கல்வி கற்றுத்தரச் சொல்லும் படி கேட்டு ஆர்வமாக படித்து பரிட்சையும் எழுதுகிறான்.


ஒரு நாள் சக சிறைக்கைதிகளுடன் பேசிக்கொண்டிருக்கையில் டூப்ரேன் சிறைக்கு வந்த காரணத்தை கேட்க ,ரெட் சொன்னவுடன் கேட்டு அதிர்கிறான்.தன் முன்னாள் சக சிறைக்கைதி "எல்மோ ப்ளாட்ச்" என்பவன் தன்னிடம் குடித்து விட்டு தான் செய்த கொலை ,கொள்ளை கற்பழிப்புகளை பற்றி பெருமை பொங்க விவரிப்பான் என்றும்,அவன் கிளப் காவலாளியாக இருந்த போது அறைகதவை உடைத்து உள்ளே சென்று அங்கே சல்லாபம் செய்து கொண்டிருந்த கள்ளக் காதலர் இருவரை பணத்திற்க்காக சுட்டுக் கொன்றதையும்,அதில் ஒரு வங்கி அதிகாரி மாட்டிக்கொண்டதையும் விவரித்ததை சொல்கிறான்.டூப்ரேன் குற்றமற்றவர் என்று சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறான்.இதை அனைவரும் டூப்ரேன் வந்ததும் சொல்ல இவருக்கு தலை சுற்றுகிறது. பத்தொன்பது வருடங்கள் கழிந்த பின்னா?இந்த செய்தி வர வேண்டும் என்று கண்ணீர் விடுகிறார்.


நம்பிக்கையுடன் சிறை வார்டன் "நார்டனிடம்"  சென்று உண்மைகளை விளக்கி தனக்காக பரிந்துரை செய்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உதவுங்கள் என்று கெஞ்சுகிறார்,அவரோ சிறிதும் ஆர்வமில்லாமல்,அவன் சின்ன பையன் எதோ உளருகின்றான்.அதை நம்பாதே.இன்றைய கணக்கை எழுது. என்று ஏவ,இவர் ஆத்திரமாகி கத்த,அவர் உன் நிலைமை மறந்து பேசாதே என்று மிரட்டுகிறார்.இவன் மேலும் அவரிடம் என்னை வெளியே விட்டால் உங்களைபற்றியும் உங்கள் பினாமி பணம் பற்றியும் மூச்சு கூட விட மாட்டேன் என்று சத்தியம் செய்து கெஞ்சுகிறார்.


நார்டன் கடும் சினத்துக்கு உள்ளாகி,பணம் என்னும் சொல்லை இனி ஒரு முறை உச்சரித்தால் டூப்ரேனை தான் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார் ,டூப்ரேனை ஒரு மாதம் தனிமையான இருட்டு சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார்.இதற்கிடையில் இளம் சிறைக்கைதி "tommy williams" க்கு பரீட்சை முடிவுகள் வருகிறது,தொலை தூர பள்ளி இறுதியில் மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற சான்றிதழும் வருகிறது.இவருக்கு இருட்டு சிறைக்கு சாப்பாடு வருகையில் இந்த செய்தியும் வர இவர் மகிழ்ச்சியில் உயரே பறக்கிறார்.


வாழ்வில் தான் கூட ஒரு நல்ல விஷயம் சாதித்து விட்டதாக பெருமை கொள்கிறார்.அன்று இரவே டாம்மி வில்லியம்ஸை வார்டன் தனிமையில் சந்திக்க வேண்டும் என்று கூறி ,சிறை காம்பவுண்டுக்கு வெளியே கூட்டிவரச் செய்து அவனுக்கு அன்பான வார்த்தைகளை பேசி ,இவனுக்கு சிகரட் கொடுத்து பற்ற வைத்து ,இவன் டூப்ரேன் குற்றமற்றவர் என்று சொன்னது உண்மையா?அதை எங்கு எந்த கோர்ட்டில் கேட்டாலும்,எந்த நீதி பதி முன் கேட்டாலும் சொல்ல முடியுமா?பின் வாங்க மாட்டாயே?என்று கேட்க,இவன் அவ்வளவும் கடவுள் மேல் ஆணையாக உண்மையே!!,

அதை எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்ல தயாராக இருக்கிறேன் என்று சொல்ல,இவர் ஆர்வமாக அவனை தட்டிகொடுத்து ரொம்ப மகிழ்ச்சி என்று சொல்லிக்கொண்டே மேலே பாதுகாப்பு கோபுரத்தில் நின்ற சிறை காவலாளிக்கு கண்ணைக் காட்ட,இவனை அவர்கள் சரமாரியாக சுட்டு கொல்கின்றனர்.


மறுநாள் டூப்ரேன் இருட்டு சிறைக்கு வார்டன் வந்து "tommy williams" சிறையில் இருந்து தப்பிக்கும் போது காவலர்கள் சுட்டதில் இறந்து விட்டான்,என்று சொல்ல ,மேலும் இவன் தன்னிடம் பழையபடி வந்து கணக்கு எழுதினால் தொடர்ந்து தனி அறை,பாதுகாப்பு, நூலகர் பதவி,கிடைக்கும்,இல்லையேல் மரண அடி,குதப்புணர்ச்சி, கக்கூசு கழுவும் வேலை,இவன் நூலகம் கொளுத்தப்படும் ,என்று மிரட்ட ,இவர் பூனையாக பதுங்குகிறார்.பாய சந்தர்ப்பம் பார்க்கிறார்.

பழையபடி நார்ட்டனிடம் கணக்கு எழுதும் வேலை செய்கிறார் ,நாற்பது வருடங்களை சிறையில் கழித்த தன் நண்பன் ரெட்டிடம் பேசுகையில் தான்

இந்த சிறையை விட்டு வெளியேறினால் மெக்சிகோவின் அருகே உள்ள "zihuantanejo"என்னும் கடற்கரை கிராமத்தில் போய் நிரந்தரமாக தங்கி உல்லாசக்கப்பலுடன் ஓட்டல் வைத்து பிழைக்க திட்டமிட்டிருக்கிறேன். என்று சொல்ல ,ரெட் சிரிக்கிறார், அது ஒரு போதும் நடவாது,நம்பிக்கைகளே வீண். அது ஒரு மணல் கோட்டை எளிதில் தகர்ந்து விடும் என்று சொல்கிறார்.இவர் பயம் மனிதனை சிறை வைக்கும் , வாழும் போதே கொன்று விடும்.ஆனால் நம்பிக்கை ஒருவனை சிறையில் இருந்து விடுதலை ஆக்கிவிடும் என்று கூறுகிறார் .


மேலும் நீ எப்போது விடுதலை ஆனாலும் "பக்ஸ்டன்"என்னும் ஒரு ஊர் நீ சென்றிருக்கிறாயா? அந்த சிற்றூரில் வடக்கே சென்றால் ஒரு வயல் வரும்,அதில் உள்ளே நடந்து போனால் தனியாக ஒரு பெரிய மரம் காணப்படும்,அங்கே பலவித கற்களானால் ஆன ஒரு குட்டிச் சுவர் உண்டு ,அங்கே மரத்தினருகே "எரிமலை"கல் ஒன்று இருக்கும்,பளபளப்பை வைத்து நீ அதை உணர்வாய்.

அதை தூக்கி பார்த்தால்,ஒரு சிறிய பெட்டி இருக்கும்.அதை திறந்து பார், உனக்கு எல்லாம் புரியும் அதன் பின் நீ "zihuantanejo" அவசியம் வரவேண்டும். வந்து விடுவேன் என்று இந்த நண்பனுக்கு சத்தியம் செய் என்று ,சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.இவர் அதை ஏற்கவில்லை, ஏமாற்றத்திலும் விரக்தியிலும் இருக்கும் ஒருவனின் வார்த்தைகளின் வெளிப்படாகேவே கருதி விட்டு நகர. அன்று வழக்கம் போல சிறை வார்டனுக்கு கள்ளக்கணக்கு எழுதுகிறார்.


இவரிடன் வார்டன் தன் ஷூவிற்கு நன்கு பாலீஷ் போட்டு வைக்கும் படியும்,தன் கோட்டு சூட்டுகளை நன்கு அயன் செய்து வைக்கும் படியும் சொல்லிவிட்டு ,இவரிடமிருந்து கணக்கு புத்தகத்தை (அது ஒரு பைபிளின் அட்டையைக் கொண்டிருக்கும்)வாங்கி கூடவே இவர் தந்த சில காகிதங்களுடன் இவரை தன் முன்னாலே பெட்டகத்துக்கு உள்ளே வைக்க விட்டு பூட்டிவிட்டு தன் மனைவி வரைந்த பெயிண்டிங்கை பெட்டக கதவை மறைத்து பழைய படி மாட்டிவிட்டு வீட்டுக்கு கிளம்புகிறார்.

டூப்ரேன் நினைத்தபடி விடுதலையானாரா?

நாட்ட்டனுக்கும் ஏனைய கொடுங்கோல் சிறைஅதிகாரிகளுக்கும் என்ன ஆனது?

40 வருடங்களை சிறையில் கழித்த ரெட் விடுதலை ஆனாரா? 


போன்றவற்றை படத்தில் பாருங்கள்,முழுதும் படிக்க எண்ணுபவர் தொடர்ந்து படியுங்கள்


=============0000==============

டூப்ரேன் ஷூவுக்கு ரொம்ப நேரம் பாலீஷ் போட்டு மெருகேற்றுகிறார். வார்டுரோபை திறந்து கோட்டு சூட்டுகளை தடவிப் பார்க்கிறார்.ரெட் இரவு உணவு நேரத்தில் சக கைதிகளுடன் உணவருந்த டூப்ரேன் மட்டும் காணவில்லை,அதில் சக கைதி டூப்ரேன் தன்னிடம் ஆறடி நீளமுள்ள தாம்புக்கயிறு கேட்டதாகவும் தான் தந்ததாகவும்,ஏன்? என்று தெரியாது என்றும் சொல்ல ,ரெட்டிற்கு எங்கோ பொறி தட்டுகிறது.தன் மனதில் டூப்ரேன் தூக்கு மாட்டிக்கொள்வாரோ என பயப்படுகிறார்.ஆனால் இவரால் என்ன செய்துவிடமுடியும்?இந்த கொடிய நரகத்திலிருந்து விடுதலையா தரமுடியும்?


இரவு எல்லோரும் அவர்கள் அவர்களின் சிறை கூடங்களுக்கு திரும்ப பெயர் வாசிக்கப்படுகிறது,இவர் பெயர் பதிவாகிறது,இரவு ரோந்து அதிகாரி வந்து ஒவ்வொரு அறையை சோதனையிட்டு பெயர் பட்டியல் சரிபார்க்கின்றனர் ,இடியுடன் கூடிய பலத்த மழை பெய்கிறது. மறுநாள் இவரின் சிறை அதிகாரிகள் கைதிகளின் பெயர் படிக்க அனைவரும் வெளியே வந்து அட்டன்டன்ஸ் கொடுக்கின்றனர். இவர் பெயர் படிக்க,இவரின் அறையிலிருந்து குரலே இல்லை.அதிகாரிகள் கீழிருந்த படி மிரட்டி வெளியேறுமாறு சொல்ல ,இவர் வரவில்லை,


பொறுமை இழந்த அதிகாரிகள் சிறை கதவை திறந்து பார்க்க அதிர்கின்றனர்.ஒரு ஆள் வெளியே போனதற்க்குறிய எந்தஒரு சுவடும் இல்லாமல் தப்பித்திருக்கிறார். எப்படி? யாருக்கும் எதுவும் விளங்கவில்லை. விஷயம் கேள்விப்பட்டவுடன் வார்டனுக்கு பேதியே ஆகி விட்டது .தம் காதுகளையே நம்பாமல் நேரில் வந்து இவரது அறைக்கு வந்து வியர்த்துப்போய் ஒவ்வொரு பொருளாக துருவிப் பார்க்கிறார்,அங்கே சில கருங்கல் வேலைபாடுகளும்,அழகிகள் போஸ்டரும்,சில புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன.கருவுகிறார்,துடிக்கிறார்.குய்யோ முறையோ என  கத்துகிறார். எல்லா போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் பறக்க டூப்ரேன் எனக்கு உயிருடன் வேண்டும் என்று கருவுகிறார்.


எப்படியடா?ஒரு மனிதன் ஒரு ”குசு” போல காற்றில் கரைய முடியும்? என்று ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றவர்,அங்கு இருந்த அழகியின் போஸ்டரைப் பார்த்து உனக்கு ஏதேனும் தெரியுமா?என்று கேட்டு,கல் சிற்பத்தை எடுத்து அந்த போஸ்டரை அடிக்க ,அது போஸ்டரைக் கிழித்துக்கொண்டு உள்ளே சென்று விடுகிறது,இவர் அரண்டு போய் அந்த போஸ்டரை கிழித்து ஏறிய,அங்கே ஒரு ஆள் மட்டுமே நுழையக்குடிய 2அடி விட்டத்தும் குறைவான ஒரு துளை,அந்த ஆறு அடி கணம் கொண்ட சுவற்றில் இருக்க இவர் ஆடிப்போகிறார். இந்த டூப்ரேன் என்னும் பூனையா இதையெல்லாம் செய்தது? அடக்கடவுளே, இயேசப்பா என்கிறார்.


அங்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ரெட் டூப்ரேன் எப்படி தப்பியிருக்கக்கூடும்? என்று மனக் கண்ணிலேயே காண்கிறார்.ஐயோ அற்புதம்,விவரிக்க வார்த்தை போதவில்லை.என்ன நெஞ்சுரம்.?என்ன விவேகம்,? பத்தொன்பது வருடம் சுவற்றை சிறிது சிறிதாய் குடைந்திருக்கிறார், அன்றாடம் அந்த குடைந்த மண்ணை தன் ஜீன்ஸ் பேண்டின் கால் மடிப்புகளில் கொட்டி அதை வெளியே கொண்டு போய் தள்ளி இருக்கிறார். வார்டனின் அறைக்கு சென்று கணக்கெழுதும் போது,வங்கி பாஸ் புக்கிற்கு பதில் வேறு ஒரு வெற்று அட்டையும் (தோல் உறை இட்டது) தடித்த கணக்கு புத்தகத்திற்கு பதிலாக தான் உபயோகிக்கும் பைபிள் ,ஆறு வங்கி காசோலைகளுக்கு பதிலாக,வேறு சில காகிதங்கள் என்று.லாவகமாக வார்டன் அவசரமாக பெட்டகத்தை பூட்ட எத்தனிக்கும் போது, அசல் புத்தகங்களை தன் முதுகுப் பக்கம் பேன்ட்டில் சொருகிக்கொண்டு ,போலி புத்தகங்களை அவர் கண் முன்னே வைப்பது போல பாவனை செய்து..அடடா.?


அதன் பின்னர்,பாலீஷ் போட்ட ஷூவை அணிந்துகொண்டு,அவரை வெறுப்பேற்ற தன் ஷூவை அந்த ஷூ அலமாரியில் வைத்துவிட்டு ,தன் சிறை கைதி உடைக்குள் கோட் ,சூட்டுகளை அணிந்து கொண்டு தன் அறைக்கு பூனை போல வந்து தூங்கிய டூப்ரேன்,


பலத்த இடியுடன் மழை வரும் போது எழுந்து,ஆறடி கயிறும் பிளாஸ்டிக் பையும் கொண்டு,தன் பாஸ் புக்,மற்றும் காசோலைகள்,தான் வடித்த செஸ் போர்டும் ,காய்களும் ,எடுத்துக் கொண்டு காலில் கட்டிக் கொண்டு ,திறம்பட அந்த மிகச்சிறு துளைக்குள் பாப்புபோல ஊர்ந்து.நான்கு மாடிகள் சுமார் 60 அடிகள் உயரம் வழுக்குகின்ற கழிவுநீர்குழாய் பிடித்து இறங்கியவர் ,கீழே ஆற்றில் போய் கலக்கும் இரண்டடி விட்டம் கொண்ட ஸ்டோன் வார் கழிவுநீர் குழாயை அடைந்து, மழையில் இடி இடிக்க காத்திருந்து பலத்த இடி இடிக்க, டூப்ரேன் பெரிய கல்லை கொண்டு கழிவுநீர் குழாயை உடைக்க அது உடையாமல் போக. ஆசுவாசப்படுத்திக்கொண்டு, மீண்டும் இடிக்க ஆரம்பிக்க.


மூன்றாவது இடிக்கு காத்திருந்து பலம் கொண்டு கழிவுநீர் குழாயை உடைக்க ,அது உடைந்து கழிவு நீர் இவர் முகத்தில் கொப்பளிக்கிறது,பின்னர் அந்த கொடிய துர்நாற்றம் கொண்ட சாக்கடை குழாய்க்குள் இறங்கி மலம் நாற்றம்,சேறு,அருவருப்பு எதை பற்றியும் கவலை படாமல்,ஒரு மைல் தூரம் ஒரு பெருச்சாளி,கரப்பாம் பூச்சியைப்போல ஊர்ந்தவர்.கழிவுநீர் ஆற்றில் கலக்குமிடம் வந்ததும் ஆற்றில் குதித்து , கொட்டும் மழையில் நனைந்து சுதந்திர தாகம் தீர மழை நீரை குடிக்கிறார்.அங்கேயே சிறை சீருடையை அவிழ்த்து வீசிவிட்டு அகல்கிறார்.


மறுநாள் போலீஸ் தேடும் முன்னரே ஆறு வங்கிகளிலும் சென்று கணக்கை முடித்துக் கொண்டு ,பணம் சுமார் 3,70,000 டாலர்களை எடுத்துக் கொண்டு ,ஒரு வங்கியில் ,ஜெயில் அதிகாரியின் கள்ளக் கணக்கு பேரேடு புத்தகத்தை "the portland"என்னும் நாளிதழுக்கு அனுப்பி விட சொல்லி விட்டு அகல்கிறார்.

வங்கி ஊழியர்களும் உடனே அதை அனுப்ப போர்லாண்ட் அதை தலைப்பு செய்தியாக்கி மறுநாளே வெளியிடுகின்றனர்,


அது "irs"மற்றும் "fbi" வசம் வலுவான குற்றமாக விசாரிக்க சொல்லி முடுக்கிவிடப்பட்டு காவல்துறை,வருவாய் துறை அதிகாரிகள் சிறையை நோக்கி புறப்பட்டு வந்து,சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் ஹாட்லி மற்றும் ஏனையோரை கையோடு கைது செய்கின்றனர்,பின்னர் வார்டன் நார்ட்டனின் அறையை நோக்கி அவர்கள் வர.வார்டன் முன்பே நாழிதழில் வெளியான செய்தியை படித்திருந்த படியால்,தயாராக இருந்தார்.தன் கைத்துப்பாக்கியை லோடு செய்தார்.கடைசி ஆசையாக அந்த லாக்கரில் என்ன தான்? உள்ளது என பார்க்க திறக்கிறார்,டூப்ரென் அந்த லாக்கரில் தான் உபயோகித்த பைபிளில் அந்த ஜாக் ஹாம்மரை புதைத்து பாதுகாத்து வந்திருக்கிறார்.


பைபிளின் அட்டையில் இனி இது நீங்கள் உங்கள் தவறுகளை உணர்ந்து கம்பிக்கு பின்னே படிக்க உதவும்,என்று டூப்ரேன் எழுதியிருக்கிறார்.தன் வேலை முடிந்ததும் டூப்ரேன் அதை வார்டனுக்கே கொடுத்து வெறுப்பேற்ற  நினைத்திருக்கிறார். வார்டனுக்கோ அவமானத்தால். முகம் கருத்தது. வார்டன் நார்ட்டன் ஒரு நிமிடம் கூட தாமதிக்கவில்லை. நாற்காலியில் வந்து அமர்ந்தார்.தான் எடுத்த பெயரை கவுரவத்தை இனி ஒரு போதும் திரும்ப வாங்க முடியாதென்று தெரிந்து கொண்டார்.வெளியே அதிகாரிகள் கதவை தட்டஇவரின் பேரை சொல்லி மிரட்ட.நார்ட்டன் துப்பாக்கியை தன் தாடைக்கு கீழே அழுத்தி ட்ரிக்கரை அழுத்த மூளை வெடித்து கண்ணாடி சன்னலையும் உடைத்து தோட்டா வெளியேறுகிறது. ரெட் வாய்ஸ் ஓவரில் சொல்லுகிறார். துளைத்து வெளியேறியது தோட்டா அல்ல ..ஆண்டி டூப்ரேன் என்னும் மாமனிதனின் நம்பிக்கை தான்.


சிலநாட்களில் ரெட் பத்து வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் விடுதலை கவுன்சிலிங்கில் கலந்து கொண்டவர். விரக்தியுடனும் திமிராகவும் தான் சிறையில் அனுபவித்த தண்டனை தனக்கு திருந்த வாய்ப்பு அளித்தது என்னும் உண்மையை வஞ்சப்புகழ்ச்சியாய் உரைக்க ,அரண்டு போன அந்த பரிசீலனைக் குழு இவருக்கு நிபந்தனையுடன் கூடிய பரோல் அளிக்கிறது.


இவர் மிக மகிழ்ச்சியுடன் சிறையை விட்டு வெளியேறுகிறார்,வழக்கமாக சிறை தண்டனை கைதிகள் வேலைக்கு அமர்த்தப்படும் சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்கிறார்,அனுதினமும் முன்னாள் கைதி என்பதால் சூபர்வைசரால் அவமானப்படுகிறார்.சிறுநீர் கழிக்க கூட அனுமதியும் ஏச்சு பேச்சும் வாங்க வேண்டியிருக்க.தன் சிறை சகா தூக்கு மாட்டி செத்துப்போன அறையே தனக்கும் ஒதுக்கப்பட்டிருப்பதை நினைக்கிறார்..வெகுண்டு எழுகிறார்.தான் வாழ வேண்டும் என்று ஆசை கொள்கிறார்,அச்சம் தவிர்த்து எல்லை தாண்டுகிறார்.(பரோலில் வெளிவரும் கைதி எக்காரணம் கொண்டும் எல்லை தாண்டக்கூடாது என்பது சட்டமாம் )டூப்ரேன் அப்போது தன்னிடம் சொன்னதும் தான் அவருக்கு செய்த சத்தியமும் நினைவுக்கு வர ஒரு திசை காட்டும் கருவியை பார்க்கிறார்,அதை வாங்கியவர்.நல்ல வேளை எனக்கு தூக்கு கயிறு வாங்க அவசியம் நேரவில்லை என சொல்லிக் கொள்கிறார்.டூப்ரேனின் நட்பு இவருக்கு கலங்கரை விளக்கம் போல தெரிகிறது.


பேருந்து பிடித்து டூப்ரேன் சொன்ன அந்த "பக்ஸ்டன்"என்னும் ஒரு சிற்றூர் சென்றவர்,வடக்கே செல்ல ஒரு வயல் வர ,அதில் உள்ளே நடந்து போக ,தனியாக ஒரு பெரிய மரம் காணப்பட ,மகிழ்ச்சியில் துள்ளியவர்.அங்கே பலவித கற்களானால் ஆன ஒரு குட்டி சுவர் இருக்க ,அங்கே மரத்தினருகே "எரிமலை"கல் ஒன்று தனித்துத் தெரிய ,பளபளப்பை வைத்து அதை எரிமலைக்கல் என ரெட் உணர,.அதை தூக்கி பார்த்தால்,ஒரு தகர பெட்டியும்,அதில் பிளாஸ்டிக் பையில் உள்ளே இவர் ரெட்டுக்கு எழுதிய கடிதமும்,இருநூறு டாலர் பணமும் இருக்கிறது ,தர தரவென கண்களில் ஆனந்த கண்ணீருடன் தன்னை ஆஸ்வாசப்படுத்திக் கொள்ள சுவரில் சாய்ந்து கொண்டவர் நாதழுதழுக்க கடித்தத்தை படிக்க,எல்லையில்லா ஆனந்தம் பீறிடுகிறது.


பணத்தை எடுத்துக் கொண்டவர் ஆவலுடன் நெடுந்தூர பயணமாக "zihuantanejo" செல்ல பயணச்சீட்டு எடுத்து பஸ் ஏறியவர். அந்த அழகிய கடற்கரை கிராமம் வருகிறார்.அங்கு ஒரு மைல் நடந்ததும் டூப்ரேன் தன் உல்லாச படகை நிர்மாணிக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து இவர் பொறுமையிழந்து கையசத்துக்கொண்டே மகிழ்ச்சிப்பெருக்கில் குரல் கொடுக்க,டூப்ரேன் உற்சாகமாகி ஓடி வந்து கட்டி தழுவிக் கொள்கிறார் ..ஆகா என்ன ஒரு படம்? என்ன ஒரு கதை,மிகவும் மெதுவாய் செல்லும் இந்த படம் எந்த புள்ளியில் படம் பார்க்கும் ஒவ்வொருவரையும்,டூப்ரேனின்,ரெட்டின் கதாபாத்திரத்துடன் ஒன்ற வைக்கிறது? உற்சாகம் கொள்ளச்செய்கிறது? சொல்ல முடியவில்லை.


இதை உலகின் சாகும் முன் நிச்சயம் பார்க்க வேண்டிய நூறு படங்களில் ஒன்றாக குறிப்பிட்டதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை என்றே தோன்றியது. மிகவும் அற்புதம்..இவர்களின் நடிப்புக்கு இணை என்று எதை அளவுகோலாய் காண்பிப்பது?உலகத்தரம்...இதில் குருதிப்புனலில் வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் உண்டு என்னும் வசனத்தை கேட்டேன். (சிறை அதிகாரி நார்டன் டூப்ரேனை தேட ஆளை அனுப்பும் போது சொல்லுவார்) நம் கமல் ஹாசன் அதை தன் குருதிப்புனல் படத்தில் அருமையாக பயன்படுத்தியிருப்பார்.


இப்படம் வெளியான 1994 ஆம் ஆண்டு ஹாலிவுட் திரை ரசிகர்களுக்கு விருந்தாக பல அருமையான படங்கள் வெளியானமையால் இப்படம் திரையில் வசூல் சாதனை செய்யாமல் போனது,ஆயினும் வீடியோ, சிடி, டிவிடி ப்ளூ ரே டிஸ்க் விற்பனையில் இப்படம் செய்த சாதனை அளவிடமுடியாதது. சிறந்த நடிகருக்காக மார்கன் ஃப்ரீமேன் அற்புதமான ஒளிப்பதிவுக்காக ரோஜர் டீக்கென்ஸ்,அழகான எடிட்டிங்கிற்காக ரிச்சர்ட் ஃப்ரான்ஸிஸ் ப்ரூஸ்,மனதை உருக்கும் இசைக்காக தாமஸ் ந்யூமேன், தயாரிப்பாளர் நிக்கி மார்வின்,சிறப்பு ஒலிப்பதிவுக்காக , சிறந்த திரைக்கதைக்காக ஃப்ரான்க் டாரபாண்ட் என எழு ஆஸ்கர்  நாமினேஷன்கள் வாங்கியபோதும். ஒன்றிலும் விருது  பெறவில்லை.நல்ல படங்கள் விருது பெறாமல் போவது அதிசயமில்லை என்பதற்கு இந்த படமும் சான்று!

Current Post

தீயோனிடமிருந்து என்னை விடுவியும்

தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை அறிந்துள்ளது. அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது. திருவெளிப்பாடு 12:12  பிசாச...