Wednesday, June 30, 2021

எண்ணங்கள்

 *எண்ணங்கள்*

******************


ஒருவன் மனநிலை பாதிக்கப்பட்டு, 

தன்னை ஒரு பூனை என்று எண்ண ஆரம்பித்தான்.


தான் ஒரு பூனை என்று கூறி பூனையைப் போலே செயல்பட ஆரம்பித்தான். 


பாத்திரத்தில் உள்ள பாலை,நக்கி நக்கிச் சாப்பிட ஆரம்பித்தான்.


மனோ தத்துவ மருத்துவர் அவனைப் பரிசோதித்து அவனுக்கு சிகிச்சை அளித்தார்.


அவருடைய சிகிச்சையில் முன்னேற்றம் தெரிந்தது. 

மருத்துவருக்கு அவனுடைய வீட்டார் போன் செய்து நன்றி தெரிவித்தார்கள்.


மருத்துவர் அந்த நோயாளியிடம் போனைக் கொடுக்கச் சொல்லி பேசினார்.


அவனும் போனைவாங்கி,

தான் சரியாகி விட்டதாகவும், 

தன்னை மனிதன் என்று புரிந்து விட்டதாகவும், 

மனிதர்களைப் போல் நடப்பதாகவும் கூறினான்.


ஆனால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை என்ற ஒரே ஒரு குறையை மற்றும் கூறினான்.


ஏன் வெளியே போகமுடியவில்லை?என்று மருத்துவர் கேட்டார்.


நான் பூனையல்ல, 

மனிதன் தான் என்பது எனக்கு எந்த சந்தேகமும் இல்லாமல் தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது.


ஆனால் வீட்டுக்கு வெளியே தெருவெல்லாம் நிறைய நாய்கள் இருக்கின்றன.


அவைகளுக்கு நான் பூனையல்ல என்பது புரிந்து விட்டதா இல்லையா என்பது தான் எனக்கு தெரியவில்லை டாக்டர்! என்று அவன் பதில் கூறினான்.


நமது வெளி உலகுக்கு சரியானவனாக தெரிந்தாலும்  உள் மனதின் எண்ணங்களும், 

திட்டங்களும் வெளியுலகிற்கு தெரிவதில்லை. 

நமது வார்த்தைகளே அவைகளை வெளிபடுத்தும்.  


ஆம்! வார்த்தைகளை கவனியுங்கள்! எண்ணங்கள் வெளிப்படும்.

No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...