*தந்திர நரி*
******************
ஒரு காட்டில் பல ஆடுகளும் சில கொடூர நரிகளும் வாழ்ந்து வந்தன.
ஆடுகளை கொடூர நரிகள் வேட்டையாடி உண்டு வந்தன.
இதனால் பயந்தபோன ஆடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து "இனி நாம் ஜாக்கிரதயாக இருக்கவேண்டும். யாரும் தனித்து உணவு தேட போக கூடாது. ஒற்றுமையாக இருக்கவேண்டும்". என்று தீர்மானம் போட்டது.
அப்படியே அவைகள் வாழ்ந்ததால் நரிகளால் அவைகளை உண்ண முடியவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த நரி கூட்டத்தின் தலைவன் தன் குள்ள நரி ஒற்றனை அனுப்பி "எப்படியாவது அந்த கூட்டத்தை கலைத்துவிட்டு ஒரு ஆட்டையாவது உண்ணவேண்டும். அதனால் கொழுத்த ஆடு ஒன்றையாவது கொண்டுவா" என உத்தரவு போட்டது.
ஒற்றன் குள்ளநரி தனது உடல் முழுவதும் ஆடுபோல வேஷம் போட்டு சில ஆடுகளிடம் நடித்து நட்பு கொண்டது.
இதை தெரிந்து கொண்ட தலைவன் ஆடு அந்த ஏமாந்த ஆடுகளை எச்சரித்தன.
ஒருநாள் அந்த காட்டில் இடியும் மழையும் பெய்தது. அப்போது நரியிடம் ஏமாந்த ஆடுகள் மழையில் ஆனந்த குளியல் போட்டன.
அப்போது அவைகள் ஆடு வேஷம் போட்ட குள்ள நரியைிடம், "மழையில் நனைந்தால் சுகமாக இருக்கும் வா" என்று அழைத்தன.
ஆனால் குள்ள நரியோ, "ஐயயோ, நனையாதே! உடம்பு சரியில்லாமல் போய்விடும்.
உங்களுக்கு உடம்பு சரியில்லாமல் போனால் என்னால் தாங்கமுடியாது." என்று கதறியது.
ஆனால் அந்த ஆடுகளோ வலுகட்டாயமாக ஆடு வேசம் போட்ட குள்ளநரியை மழையில் நனைய வைத்தன.
மழையில் நனைந்ததால் குள்ள நரியின் சாயம் சுத்தமாக வெளுத்துபோனது.
தன் வேசம் கலைந்துபோனதை அறியாத குள்ளநரி ஆடுகளுக்காக கவலைபட்டது.
வேசம் கலைந்த நரியை கண்ட முரட்டு ஆடுகள் நரியை முட்டி கொன்றதாம்.
இப்படிதான் நண்பர்களே! நம் அருகிலேயே தந்திரமான குணம் கொண்டவர்கள் இருக்கலாம்.
நம்மை காத்துக்கொள்ள நாம்தான் பகுத்தறிவோடு இருக்கவேண்டும்.
இறைவன் ஏற்றநேரத்தில் அவர்களை வெளிகொண்டு வருவார்.
No comments:
Post a Comment