Monday, April 12, 2021

மகளிர் தினம் – 2021

 

மகளிர் தினம் – 2021

 

பெரும்பாலும் நாம் கொண்டாடுகின்ற தினங்கள் அனைத்துமே வெறும் சம்பிரதாயமாக  மாறிவிட்ட இன்றைய காலகட்டத்தில் , நூறு ஆண்டு கால போராட்ட வரலாற்றை தன்னகத்தே  கொண்ட இந்த மளிர் தினத்தின்  நிலைமையோ அதைவிட பரிதாபம். 

 கி.பி. 1800 களின் பிற்பகுதியில் தொடங்கி வளர்ச்சி அடைந்த நாடுகளில் உழைக்கும் வர்க்கத்தினரால் ஆங்காங்கே  போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த சூழ்நிலையில், 1908 இல் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 15000 பெண் தொழிலாளர்கள் குறைந்த வேலை நேரம், சரிவிகிதச் சம்பளம் மற்றும் ஓட்டுரிமை வேண்டி ஒரு மாபெரும் பேரணியை நடத்துகின்றனர்.

 அதனைத் தொடர்ந்து 1910 ஆம் ஆண்டு நடந்த உழைக்கும் மகளிரின் சர்வதேச மாநாட்டில் மிகச் சிறந்த சோஷலலிசப் பெண்மணியான கிளாரா சட்கின் இந்த நாளை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறார். அதனை ஏற்று 1911 ஆம் ஆண்டு  முதல்  சர்வதேச பெண்கள் தினம் ஆஸ்த்ரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிசர்லாந்திலும் கொண்டாடப்பட்டது. 

இது ஒருபுறம் இருக்க, 1917 இல் ரஷ்யாவில் நடந்த வரலாற்றுப் புகழ் பெற்ற “Bread and Peace” போராட்டம் தான் மார்ச் 8 ஐ சர்வதேச மகளிர் தினமாக தீர்மானிப்பதற்கான காரணியாக அமைந்தது.

 உலக அமைதியைப் புரட்டிப் போட்ட முதல் உலகப் போர் முடியும் தருவாய் அது. ஏராளமான உயிர்ச் சேதங்களையும், பஞ்சம் பட்டினியையும் மட்டுமே மிச்சம் வைத்தது முதல் உலகப் போர்.  இதில் அளவிட முடியாத இழப்பை அடைந்தது ரஷ்யா.  இதற்கு மேலும் போரில் ஈடுபட முடியாது - ரஷ்யப் படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று  ரஷ்ய மக்கள் எழுப்பிய முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.  ஆனால் மனாசாட்சியற்ற சார் (Tsar) மன்னனின் மனதை மட்டும் அவை ஏனோ தொடவே இல்லை.  

1917  -  மார்ச் 8  - மகளிர் தினத்திற்கான விதை  விதைக்கப்பட்ட திருநாள்.  பொறுத்தே பழகிய பெண்கள் கூட்டம் அன்று முதல் முறையாக மன்னன் சாரை (Tsaar) எதிர்த்து நின்றது .  அடக்க வந்த ராணுவமும் புரட்சி செய்த பெண்கள் பக்கம் நின்றுவிடுகின்றனர். இவர்களோடு போல்ஷ்விக்குகளும் இணைகின்றனர். இதில், பல உயிர்களைப் பலி வாங்கிய பிறகே சார் மன்னனின் முடியாட்சி முடிவிற்கு வந்தது. போராட்டம் வெற்றி பெற்றது.

இப்படிப் பல போராட்டங்களைப் பெண்கள் உலகெங்கிலும் முன்னெடுத்த நிலையில், 1975 ஆம் ஆண்டை ஐ நா சபை பெண்கள் ஆண்டாக அறிவித்தது. உலகெங்கிலும் பல்வேறு தினங்களில் மளிர் தினம் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் ஐ நா சபை ஏதாவது ஒரு நாளை சர்வதேச மகளிர் தினமாக தீர்மானிக்க உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்தது. எல்லா நாடுகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட மார்ச் 8 ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக அறிவித்து 1977 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த மாபெரும் வரலாறு புரியாமல், நாம், மகளிர் தினத்தை சமையல் போட்டிகளுக்கும் கோலப் போட்டிகளுக்குமான தினமாக மாற்றிவிட்டது தான் வேதனையின் உச்ச கட்டம்.  சமத்துவத்திற்கும் பெண் விடுதலைக்குமான இந்த நாளை நாம் மறுபடியும் நம் கொண்டாட்டங்களுக்கான திருநாளாக மாற்றி விட்டது நம் அறியாமையின் வெளிப்பாடு. பெண்களுக்கென்றே புனையப்பட்ட புனிதங்களில் இருந்து இம்மியளவு கூட நாம் பிசக விரும்பவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

இதில் பெண்களை மட்டுமே குறைசாட்டுவதில் பயனில்லை.  தெய்வத் திருமறை என்று போற்றப்படும் திருக்குறள் முதற்கொண்டு சங்ககாலப் பாடல்கள் பல பெண்களைச் சிறப்பிப்பதாக நினைத்துக் கொண்டு சமத்துவத்திற்கும் பெண்களின் சுயமரியாதைக்கும் சமாதி கட்டிவிட்டன என்பது தான் என் தாழ்மையான கருத்து.

“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை.” - திருக்குறள்

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்று திருவள்ளுவர் நினைக்கவில்லையோ என்று தோன்றுகிறது இத் திருக்குறளைப் படிக்கையில்.

“வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது

நீணில வேந்தர் கொற்றஞ் சிதையாது

பத்தினிப்பெண்டிர் இருந்த நாடு”  - சிலப்பதிகாரம்

ஏன் கற்புடை ஆண்கள் இருந்த நாடு என்று இளங்கோவடிகள் பாடவில்லை என்ற ஐயம் எழத்தான் செய்கிறது.

“கற்பு நிலை என்று சொல்ல வந்தால் அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் “ – என்று சொன்ன பாரதி என் கண்முன் இங்கே விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான். அவனையே ஒட்டு மொத்த பெண்களின் பிரதிநிதியாகப் பார்க்கிறேன்.

 

இவ்வளவு இடர்பாடுகளையும் தாண்டி பெண் சமுதாயம் இன்று பல்வேறு துறைகளில் சாதனை படைப்பதற்கு பாரதியின் துணை தேவைத்தான் படுகிறது.

“பெண்கள் எல்லாவிதமான அடக்கு முறைகளில் இருந்தும் விடுதலை பெறாமல் சுதந்திரம் என்பது சாத்தியமில்லை” -   என்ற நெல்சன் மன்டேலாவின் வரிகளை நன்றியோடு நினவு கூற கடமைப்பட்டு இருக்கிறோம்.

எத்தனை கரங்கள் பெண் விடுதலைக்காக நீண்டாலும், பெண்கள் முன்வராமல் பெண் விடுதலை என்பது சாத்தியமில்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை.  பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை என்று பெருமை பேசும் அதே வேளை பெண்களின் மனப்பாங்கு இன்னும் மாறவேண்டியது நிறையவே உள்ளது என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

“Generation equality” –   இந்த தலைப்பைத் தான் இந்த வருட மகளிர் தினத்தின் கருப் பொருளாக ஐ நா சபை தேர்ந்தெடுத்து இருக்கிறது.  Equality – சமத்துவம் – இருக்கிறாதா நம் நாட்டில்?  கொடுத்தாலும் மறுக்கின்ற மகளிர் இருக்கின்ற நாடுதான் நம் தாய்த் திருநாடு.  தந்தை சுமக்க, உடன் பிறந்தவர்கள் சுமக்க, கட்டிய கணவன் சுமக்க இறுதியில் நான்கு பேர் சுமக்க என்று பெரும்பாலான பெண்களின் பயணம் இப்படியாகவே முடிந்து விடுகிறது. படித்த பெண்கள் கூட இந்த நிலையில் இருந்து வெளிவர விரும்புவதில்லை.

 இப்படிப் பட்ட பெண்கள் இருக்கும் இதே மண்ணில் தான் நாட்டிற்காகத் தன் இன்னுயிரையும் நீத்த கமலேஷ் குமாரியும் பிறந்தார் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. 2001 டெல்லி பாராளுமன்ற தாக்குதலை யாரும் மறந்து இருக்க முடியாது.  தீவிரவாதிகளை முதலில் அடயாளம் கண்டு தன் உயிரை துச்சமென மதித்து நாட்டின் தன்மானத்தை நிலைநிறுத்திய சிங்கப் பெண். அசோக் சக்ரா விருதின் சொந்தக்காரி.  இறந்த பிறகு கிடைத்த விருது. தாயின் கையிலே ஒப்படைக்கப்படுகிறது.  கையில் விருதுடன் அந்தத் தாய் பேசியது இன்னமும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.  தன்னுடைய இரண்டவது மகளையும் அதே பணியில் அமர்த்துவேன் என்ற அவருடைய தீரம் நமக்கெல்லாம் சிறந்ததொரு  பாடம்.

பெண்கள் கல்வி அறிவு பெற தன் மீது வீசப்பட்ட சாணங்களையும் கற்களையும் சாவித்ரி பாய் பொறுத்துக் கொள்ளாமல் இருந்து இருந்தால் இன்று பெண் கல்வி என்பது கானல் நீராகத்தான் இருந்திருக்கும். அவரின் தன்னம்பிக்கையும் துணிச்சலும்  நமக்கெல்லாம் வேண்டும்.

ஒவ்வொரு துறையிலும் முதலில் காலடி எடுத்து வைத்த முதல் பெண்களின் வீர வரலாற்றை நாம் தேடித் தேடிக் கற்க வேண்டும். இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.  ஆனால், அதற்காக அவர் பட்ட இன்னல்களை அறிந்தவர் வெகு சிலரே. அவர் கல்லூரியில் பயின்ற போது பெண் என்ற காரணத்தினால் அமர்ந்து படிக்க அனுமதி இல்லையாம். எந்த துறைத் தலைவர் தன்னை      நிற்க வைத்துப் பாடம் நடத்தினாரோ அவரே தன்னைப் பாராட்டும்படி தங்கப் பதக்கம் வென்றவர் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார். நின்றே படித்த அந்தப் பெருந்தகையால் தான் இன்று பெண் இனம் தலை நிமிர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

தேவதாசி ஒழிப்புச் சட்டம் தமிழகத்திலே   நிறைவேறியதும் அம்மையார் அவர்களால் தான் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. அதற்காக அவர் பட்ட இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல.  இது தேவையில்லாத சட்டம் என்று மறுத்தவர் பலர் உண்டு. ஆனாலும் கலங்கவில்லை. அவரின் விடா முயற்சியே இன்றைய பெண் சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்குக் காரணம்.

இன்றைய பெண்களின் இத்துனை உயர்வுக்கும் யாரோ ஒரு சிலரின் தியாக வாழ்க்கையே அடித்தளமாக இருக்கிறது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.  இத்தகு மாற்றங்கள் ஓர் இரவில் ஏற்பட்டது அல்ல என்பதையும் கடந்து வந்த பாதையின் காய வடுக்களையும்  நம் அடுத்த தலைமுறையினருக்கு நாம் கடத்தியே ஆகவேண்டும். இறந்த காலத்தின் வலிகள் மறந்துவிட்டாலோ அல்லது மறைக்கப் பட்டு விட்டாலோ எதிர்காலம் என்பது இருண்டு விடும்.

அறியாமை என்னும் இருள் பெண் இனத்தை அழிக்காமல் இருக்க வேண்டுமானால் கல்வி என்ற தீபம் எப்போதும் அணையாமல் இருக்க வேண்டும்.

கல்வி, வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியம், உணவு, குடும்ப வேலை இப்படி அனைத்திலும் என்று சமத்துவம் வருகிறதோ அன்றே உண்மையான மகளிர் தினம் நம் வசப்படும்.

 

கு.பச்சையம்மாள்

அரசு பள்ளி ஆசிரியை

புதுச்சேரி.

 

Sunday, April 11, 2021

Three stages of COVID


    Covid Three stages:


1. Covid only in nose - recovery  time is half a day. (Steam inhaling), vitamin C. Usually no fever. Asymptomatic. 


2. Covid in throat - sore throat, recovery time 1 day (hot water gargle, warm water to drink, if temp then paracetamol. Vitamin C, Bcomplex. If severe than antibiotic. 


3. Covid in lungs- coughing and breathlessness 4 to 5 days. (Vitamin C, B complex, hot water gargle, oximeter, paracetamol, cylinder if severe, lot of liquid required, deep breathing exercise.


Stage when to approach hospital : 

Monitor the oxygen level. 

If it goes near 93 (normal 98-100) then you need oxygen cylinder. 

If available at home, then no hospital else admit.


*Stay healthy, Stay Safe!*


Tata Group has started good initiative, they are providing free doctors consultation online through chats. This facility is started for you so that you need not to go out for doctors and you will be safe at home.


Below is the link, I reqest everyone to take benefit of this facility.

https://www.tatahealth.com/online-doctor-consultation/general-physician

+91 74069 28123: 


Advice from inside isolation hospitals, we can do at home

Medicines that are taken in isolation hospitals ; 


1. Vitamin C-1000

2. Vitamin E

3. sitting in the sunshine for 15-20 minutes.

4. Egg meal once ..

5. take a rest / sleep a minimum of 7-8 hours

6. drink 1.5 liters of water daily

7. All meals should be warm (not cold).

And that's all we do in the hospital to strengthen the immune system


Note that the pH of coronavirus varies from 5.5 to 8.5


Therefore, all we have to do to eliminate the virus is to consume more alkaline foods above the acidity level of the virus.

Such as  ; 

Bananas 

Green lemon - 9.9 pH

Yellow Lemon - 8.2 pH

Avocado - 15.6 pH

* Garlic - 13.2 pH

* Mango - 8.7 pH

* Tangerine - 8.5 pH

* Pineapple - 12.7 pH

* Watercress - 22.7 pH

* Oranges - 9.2 pH


How to know that you are infected with corona virus ? 


1. Itchy throat

2. Dry throat

3. Dry cough

4. High temperature

5. Shortness of breath

6. Loss of smell ....

And lemon with warm water eliminates the virus at the beginning before reaching the lungs ...


Do not keep this information to yourself. Provide it to all. .

♦️

Friday, April 9, 2021

Junnaid


ஜீனாய்டு (junnaid) ஒரு சுபி ஞானி.

அவரிடம் ஒரு பெரிய பணக்காரட் வந்து மனிதனின் வாழ்க்கை அவன் தலைவிதிப்படித்தான் நடக்கும். அவன் சுகந்திரமானவன் இல்லை என்று கருதுகிறேன். இதை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?  என்று கேட்டான்!


அவனை பார்த்த சுபி ஞானி, உன்னுடைய ஒரு காலை தூக்கு என கத்தினார்!


அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் கேட்ட கேள்விக்கும் ஒரு காலை தூக்குவதற்கும் என்ன சம்பந்தம்?  என திகைத்தான்!  அவன் தயக்கத்தை பார்த்த ஞானி மீண்டும் ஒரு காலை தூக்கு என வேகமாக கத்தினார்!


 வேறு வழியில்லாமல் அவன் தன்  வலது காலை தூக்கினான். அதை பார்த்த அந்த ஞானி,  இது போதாது இப்போது அடுத்த காலையும் தூக்கு என்றார்.


அவன் கோபம் கொண்டு, இதென்ன முட்டாள்தனம்?  ஒரு காலை தூக்கிய பிறகு மறு காலையும் எப்படி தூக்குவது? விழுந்து விட மாட்டேனா? என கேட்டான்.


கலகலவென சிரித்த ஞானி, சரி இப்போது உட்கார் என்று கூறினார்.

இதில் இருந்து நீ என்ன புரிந்து கொண்டாய்? என அவனை கேட்டார்.


எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்றான் அவன்.


நான் உன்னிடம் உன் ஒரு காலை தூக்கு என்று சொன்னதும் நீ ஏன் உன் இடது காலை தூக்காமல் வலது காலை தூக்கினாய்?  ஏனெனில் எந்த காலை தூக்குவது என்பது உன்னுடைய சுகந்திரத்தில் இருந்தது. அதனால் நீ உன் வலது காலை தூக்கினாய்.


பிறகு நான் மற்றொரு காலையும் தூக்கும்படி கூறினேன். அது உன்னால் முடியவில்லை. ஏனென்றால் முதலில் நீ உன் சுகந்திரத்தில் செயல்புரிந்தாய். ஆனால் அடுத்த செயல் உன் கையில் இல்லை. நீ அப்பொழுது கட்டுப்பட்டு இருக்கிறாய். உன் சுகந்திரம் இப்பொழுது வேலை செய்யவில்லை.


ஆகவே மனிதன் பாதி சுகந்திரத்தில் இருக்கிறான். மறுபாதி அந்த சுகந்திரத்தால் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறான் என்றார் சுபி ஞானி. 


முதலில் மனிதன் தன் சுகந்திரத்தில் ஒரு செயலை செய்கிறான். அதன் பின்விளைவு அதுவாகவே நடக்கிறது.


இதுதான் செயலும் விளைவும் கோட்பாடு!



Friday, March 26, 2021

Easter Egg

 கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளும் " முட்டைகளும் முயல்களும் ".

Easter and the " Easter egg and Easter Bunny / Hare ".


அண்மையில் ஈஸ்டர் வாழ்த்துப் படம்  ஒன்று பார்த்தேன். அதில் ஈஸ்டர் வாழ்துக்காக ஈஸ்டர் முட்டைகள் அடங்கிய கூடைப் படம் அச்சிடப்பட்டிருந்தது.


எவ்வாறு கிறிஸ்மஸ் பண்டிகையை Santa Claus, Christmas tree, Star போன்றவை மனுக்குலத்தை மீட்பதற்காக மானிடரான கிறிஸ்து பிறப்பின் உன்னதமான நோக்கத்தை மறைத்துவிட்டனவோ, அவ்வாறு இன்று ஈஸ்டர் பண்டிகையின் " உயிர்தெழுதல் " என்ற சிறப்பான நோக்கத்தை " ஈஸ்டர் முட்டைகளும் ஈஸ்டர் முயல்களும் " மறைத்துவிட்டன. இந்த முயலை Bunny என்று செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்க நாடுகளில் தீக்கோழி முட்டைகளை வர்ணம் தீட்டி அலங்கரிப்பது வழக்கமாக இருந்தது. இப்பழக்கம் மேலை நாடுகளிலும் பரவியது. 20 ஆம் நூற்றாண்டில் அங்கு கோழி முட்டைகளையே அலங்கரித்தனர். இப்பழக்கம் சமயச் சார்புடையதாகத் திருச்சபையில் ஏற்க்கப்பட்டது. அதாவது " உயிர்த்தெழுதலுக்கு " அடையாளமாக கோழி முட்டை ஏற்க்கப்பட்டது. வெறும் உயிரற்ற திரவ நிலையிலுள்ள முட்டையிலிருந்து உயிருள்ள குஞ்சு வெளிவருவது உயிர்த்தெழுதலுக்கு அடையாளமாகியது. ஆகவே  ஈஸ்டர் அன்று அலங்கரிக்கப்பட்ட முட்டைகளைப் பரிமாறுவது வழக்கமாகியது.


அத்துடன் மேலை நாடுகளில் செழுமைக்கு அடையாளமாக ( பலுகிப் பெருகும் நிலை )முயல் ஏற்கப்பட்டிருந்தது. அதிலும் இவை நாட்டுப்புறக் கதைகளின் உறுவகமாகவே ( folkloric figure ) இவை உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த முயலையும் ஈஸ்டருக்கு அடையாளமாகத் திருச்சபை ஏற்றது. அது " ஈஸ்டர் முயல்"  ( Easter Rabbit / Hare ) எனப்பட்டது.


இவ்வாறு ஏற்கப்பட்ட பின் இந்த முயலே அலங்கரிக்கப்பட்ட முட்டைகளைக் கொண்டுவருவதுபோல் அலங்கரித்து மகிழ்கின்றனர்.


இன்று அலங்கரிக்கப்பட்ட கோழி முட்டைகளுக்குப் பதிலாக அலங்கரிக்கப்பட்ட சாக்கலேட்டுக்கள் செய்யப்படுகின்றன. மேலை நாடுகளில் ஈஸ்டர் பண்டிகைச் சமயம் இவை அதிகமாக விற்பனையாகுகின்றன. 


இன்று மேலை நாடுகளில் ஈஸ்டர் என்றால் " ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் " என்கிற உண்மை மறைக்கப்பட்டு, ஈஸ்டர் என்றால் " முயலும் முட்டையும் " ( Bunny and egg ) என்கிற நிலை உருவாகிவிட்டது. 

இதை நமது திருச்சபைகளும் பின்பற்றுவது நல்லதல்ல.

+++++++++++++++++++++++

அருள்திரு. ஜே . அகஸ்டின் 

( Tamilnadu Theological Seminary )

Pasumalai 

+++++++++++++++++++++++++

Friday, March 19, 2021

How precious is our Body & soul

 1. The *STOMACH* is injured when you do not have breakfast in the morning.


2. The *KIDNEYS*  are injured when you do not even drink 10 glasses  of water in 24  hours.


3. *GALLBLADDR*  is injured when  you do not even sleep until 11 o'clock and do not wake up to the sunrise.


4.  The *SMALL* *INTESTINE* is injured when you eat cold and stale food.


5.  The *LARGE* *INTESTINES* are  injured when you eat more fried and spicy food.


6.  The *LUNGS* are injured when you breathe in smoke and stay in polluted environment of cigarettes.


7. The *LIVER* is  injured when you  eat heavy fried food, junk, and fast food.


8. The *HEART* is  injured when you eat your meal with  more salt and   cholesterol.


9. The *PANCREAS*  is injured when you eat sweet things because they are tasty and  freely available.


10. The *Eyes* are injured when you work in the light of mobile phone and computer  screen in the  dark.


11. The *Brain* is  injured when you start thinking negative thoughts.


12. The *SOUL* gets injured when you  don't have family  and friends to care and share with you in life their love, affection, happiness, sorrow and joy. 


     *All these body*

      *parts are NOT*

      *available in the*

      *market*. 


      So take good

      care and keep

      your body parts

      healthy.


     *Wish You all a*

      *very Happy &*

      *Healthy Life*

Tuesday, March 16, 2021

Barabas

 பரபாஸ்  -  Barabas

•••••••••••••••••••••••••••••••••••••••


இயேசுவின் காலத்தில் யூதர்கள் ரோம ஆட்சிக்குட்பட்ட  அடிமைகளாகவே இருந்தனர். சனெகரிம்  என்ற பெறு மன்றம் யூதர்களின் சமயக் காரியங்களில் மட்டும் மக்களை விசாரிக்கும் உரிமை பெற்றிருந்தது . மற்றப்படி யூதர்கள் வாழ்ந்த நாட்டிற்கு பிலாத்து என்பவர்தான் மாநில ஆட்சியாளராக இருந்தார்.


இக்காலத்தில் இயேசு கைது பண்ணப்பட்டு சனகெரிம் சங்கத்தின் முன் நிறுத்தப்பட்டார். அச்சங்கத்தினர் “ இயேசு தம்மைக் கடவுளின்  மகன் “ என்கிறார்.; இது “ இறை நிந்தை “ ! இதற்கு மரணதண்டனைதான் விதிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போதையச் சூழலில் நமக்கு அந்த அதிகாரமில்லை . ஆகவே இவரை ஆளுநர் பிலிப்புவிடம் கொண்டு போவோம் என்ற கூறி அவரைப் பிலிப்புவினிடம் கொண்டு வந்தார்கள்..


குற்றச்சாட்டைக் கூறினார்கள். பிலாத்து விசாரித்துப் பார்த்தார். இயேசுவோ ஒரு நீதிமானைப்போல் இருக்கிறார்,


மக்களிடம் வந்து நான் அவரிடம் ஒரு குற்றச் செயலையும் காணவில்லை என்றார். 


மக்களோ , இல்லை அவர் “ அரசருக்கு வரி கொடுக்க. வேண்டாம் “ என்கிறார். ஆகவே மரண தண்டனை விதிக்க வேண்டும் என்கிறார்கள் .


இந்நேரம் பிலாத்துவின் மனைவி “ நீர் அந்த நீதிமனை ஒன்றும் செய்யாதீர் “ என்று கடிதம் கொடுத்து அனுப்பினாள் .


அப்பொழுது பிலாத்து ஒரு தந்திரச் செயல்மூலம் இயேசுவை விடுவித்துவிடலாம் என்று எண்ணினார்.


பஸ்கா பண்டிகை தோறும் ஒரு யூதக் கைதியை விடுவிப்பது வழக்கம். அவ்வாறு செய்வதற்காக பரபாஸ் என்கிற ஒரு கலகக்காரனை அவர்கள் முன்நிறுத்தி “ நான் இன்று உங்களுக்கு “ ஒரு குற்றமுமில்லத இயேசுவை விடுவிக்கவா “ ? 

அல்லது “ கலக்க்காரனும் கொலைகரனுமாகிய பரபாசை விடுவிக்கவா ?” என்று கேட்டார்.


இந்த பரபாஸ் பிலிப்பு ஆளுநர் எருசலேம் திருக்கோவிலிலிருந்த பெரும் செல்வத்தை எடுத்து, நகரில் ஒரு தொட்டிப்பாலம் கட்ட விரும்பினார். இவர் இப்படித்தங்கள் கடவுளின் காணிக்கைகளைக் களவு செய்கிறார் என்று கூறி யூதர்கள் கலகம் செய்தனர். அந்தக் கலகத்தைப் பரபாஸ்தான் முன்னின்று நடத்தினார். இதில் சில கொலைகளும் விழுந்தன. அத்தனை குற்றங்களும் பரபாஸ்தான் காரணம் என்று கூறி அவரைச் சிறைப்பிடித்துக் காவலில் வைத்திருந்தார்கள்.


இத்தகைய கொலைகாரனை, கலகக்காரனை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று அவ்வாறு கேட்டார்.


இக்கேள்வி மக்களுக்குள் எதிர்வினைச் செயலைச் செய்துவிட்டது ! இந்தப் பரபாஸ் நம் கோவில் பணத்தைக் கொள்ளையடித்துப் பாலம் கட்ட முனைந்த பிலாத்துவை - ரோமப் பேரரசை எதிர்த்துப் போராடிய மாவீரன் ! இவன்தான் நமக்கு வேண்டும். இந்தச் “ சாது “ இயேசு வேண்டாம் என்று தீர்மாணித்து , பிலத்துவிடம் “ பரபாஸை விடுதலை செய்யுங்கள் “ என்று கூறினார்கள்.


இந்தப் பரபாஸ் :


மத்:27:16 - பேர்போன கைதி

மாற்:15:7 - கலகத்தில் கொலை செய்தவன்

லூக்: 23:19 - நகரில் நடந்த கொலைக் குற்றவாளி

யோவா:18:50 - கள்ளன்

அப்:3:14 - கொலையாளி


பரபாஸ் என்ற அரமேயப் பெயருக்கு “ தந்தையின் மகன் - Son of the Father “ என்று பொருள் !


இயேசுவும் தந்தையாம் கடவுளின் மகன் ! பெயர்கள் பொருத்தமாகத்தான் உள்ளன.


மக்கள் விருப்பப்படி பிலாத்து பரபாஸை விடுதலை செய்து.  இயேசுவைச் சிலுவையில் அறைய ஒப்புக் கொடுத்தார்.


வெளியே வந்த பரபாஸ் இயேசுவைப் பற்றி அறிந்தான். அந்த நீதிமானால்தான்  மரணதண்டனையிலிருந்து விடுபட்டேன் என மனம் வருத்தித் தன் தீவிரவாதப் போக்கை விட்டுவிட்டு , இயேசுவை ஏற்றுக்கொண்டுக் , கிறிஸ்தவரானார். ரோமப் பேரரசு அவரையும்  சிலுவையில் அறைந்து. கொலை செய்தது.


எபி:6:6


இவர்கள் இறை மகனைத் தாங்களே சிலுவையில் அறைந்து, 

வெளிப்படையாக இழிவு படுத்துகிறார்கள் !


(  இன்று அந்த எபிரேய மடலின் ஆக்கியோர் நம்மைப் பார்த்துத்தான் இவ்வாறு கூறுகிறார் ) 


• யூதாஸ் : நான் அவரை விற்றுப்போடுவேன் !


• பேதுரு : நான் அவரை  மறுதலிப்பேன் !


• சனெகரீம் சங்கத்தார் : நாங்கள் அவரைப் புறக்கணிப்போம் ! 


• ஏரோது : நான் ஆர்வமாக மட்டும் இருப்பேன் !


• மக்கள் : நாங்கள் அவரைச் சிலுவையில் அறைவோம் !


• பிலாத்து : நான் நடுநிலையாய் இருப்பேன் !


* நாம் எப்படி இருக்கிறோம் ?


********************************

Rev. J. Augustine Jeevakani

( Tamilnadu Theological Seminary )

Pasumalai 

*********************************

Tuesday, March 9, 2021

Chennai

 #சென்னை


இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின்  இணைவு தான். அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்ளுங்கள்.


Ø  108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர் ஆகையால் ‘ஐம்பத்து ஒன்றாம் ஊர்’ என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் #அம்பத்தூர் என மாறியது.


Ø  Armed Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே #ஆவடி (AVADI)


Ø  1912ம் ஆண்டில் 25 ஏக்கர் பரப்பளவில் ஒரு ஆங்கிலேயரால்  Chrome Leather Factory என்ற ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையை தொடங்கியதால் அப்பகுதிக்கு #குரோம்பேட்டை என்ற பெயர் உருவானது


Ø 17,18 ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், கோடா பக் (பொருள் - Garden of horses) என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே #கோடம்பாக்கம் ஆக மாறியது.


Ø  தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது #தேனாம்பேட்டை ஆக மாறிப்போனது.


Ø  சையத்ஷா என்ற இஸ்லாமிய முக்கிய  பிரமுகர் வைத்திருந்த நிலப்பகுதியின் அடிப்படையில், சையத்ஷாபேட்டை என்றிருந்த பெயர், #சைதாப்பேட்டை என்றாகியது. 


Ø  உருது வார்த்தையான சே பேக் (பொருள்- Six gardens) என்பதிலிருந்து உருவானது தான் #சேப்பாக்கம்.


Ø  சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே #பாண்டி_பஜார்


Ø  சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ #மாம்பலம் ஆகி விட்டது.


Ø  பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் #பல்லாவரம்.


Ø  சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் #பனகல்_பார்க் என அழைக்கப்படுகிறது.


Ø  நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தி.நகர் (#தியாகராய_நகர்) என அழைக்கபடுகிறது


Ø  கடற்கரைப்பகுதியான இங்கு புரசை மரங்கள் அதிகமாக இருந்ததால், இப்பகுதி #புரசைவாக்கம் ஆனது.


Ø  அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் #பூவிருந்தவல்லி என்றும்

அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லி யாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.


Ø   17 ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய #தண்டயார்பேட்டை.


Ø  முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே #மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.


Ø  மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே #மயிலாப்பூர் என மாறிப்போனது.


Ø  பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி #போரூர் எனப்படுகிறது.


Ø  சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே #பெரம்பூர் எனப்படுகிறது.


Ø  திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா #திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது.


Ø  பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் (கேணி) நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் உருவாக்கி, பின்பு #திருவல்லிக்கேணி யாகி, தற்போது Triplicane என மாற்றம் கண்டுள்ளது.

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...