*பிலேயாமும், கழுதையும்*
வேதத்தில் எண்ணாகமம் புத்தகத்தில் 22ஆம் அதிகாரத்தில் 28லிருந்து 30ஆம் வசனம் வரை பேசுகின்ற கழுதையை பார்க்கின்றோம். மற்ற மிருகங்களை விட கழுதையை அநேகர் விரும்புவதில்லை. திட்டும்போது அநேகர் வாயிலில் கழுதை என்று தான் வரும். முரட்டுத்தனம் கொண்டது. அதே சமயம் நல்ல ஞாபக சக்தி, புத்தி கூர்மை மற்றும் அமைதியான குணமும் உண்டு. ராஜாக்கள் அந்த காலத்தில் இதை உபயோகப்படுத்தினர். நமது ஆண்டவரும் எருசலேமுக்குள் பவனியாக கழுதை மேல் சென்றார்.
*யார் இந்த பிலேயாம்:*
இவன் ஒரு கள்ள தீர்க்கதரிசி. இஸ்ரவேல் மக்கள் தங்களது கடைசி கட்ட பிரயாணமாக மோவாப் தேசத்தை கடக்க வேண்டி இருந்தது. மோவாப் ராஜா பாலாக் இஸ்ரவேல் மக்களை கண்டு மிகவும் பயந்தான். அவர்களை போரில் ஜெயிக்க முடியாது என்பதினால் அவர்களை சபிப்பதற்கு பிலேயாமுக்கு ஆட்களை அனுப்புகின்றான். ஆண்டவர் இரு முறையும் அவனை தடுக்கின்றார்.மூன்றாவது முறை அவர்கள் கூப்பிட்டால்தான் போக வேண்டும் என்கின்றார். பிலேயாமோ கூப்பிடுவதற்கு முன்னரே பணத்திற்கு ஆசைப்பட்டு கழுதையில் கிளம்புகின்றான். போகின்ற வழியில் தூதன் ஒருவர் பட்டயத்தோடு நிற்பதை கழுதை கண்டு முன்னே போக மறுக்கின்றது. ஆனால் பிலேயாமின் கண்களுக்கு தூதன் தெரியவில்லை. கழுதையை கோபத்தோடு இரு முறை அடிக்கின்றான். மூன்றாம் முறை அடிக்கும் போது கழுதை ஏன் அடிக்கின்றாய் என்று அவனை கேட்கின்றது. கழுதை பேசுவதை கேட்டு பிலேயாம் ஆச்சரியப்படாமல் கழுதையை திட்டுகின்றான். ஏன் ஆண்டவர் கழுதையை பேச செய்கின்றார். பிலேயாமுக்கு பணமும்,பெயரும் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை. அதனால்தான் கழுதை மூலமாக பேசி அவன் கண்களை திறக்கின்றார். உருவின பட்டயத்தோடு தேவ தூதன் நிற்கின்றதை பார்த்து பணிகின்றான். கழுதை அவன் உயிரை காப்பாற்றியது.
No comments:
Post a Comment