*டைட்டானிக் கப்பலும் மிஷனெரி ஜான் ஹார்ப்பரும்*
டைட்டானிக் என்ற வார்த்தையை கேட்ட உடனே அனைவரின் கண் முன்னாலே நிற்பது பிரமாண்டமான கப்பல்தான். ஏப்ரல் 14, 1912 தனது முதல் பயணத்தை இங்கிலாந்திலிருந்து நியூயார்க் கிளம்பியது.
2200 நபர்கள் பயணம் செய்தனர். அதில் அநேகர் பெரும் பணக்காரர்கள். கடவுளே வந்தாலும் இந்த கப்பலை ஒன்றும் செய்ய முடியாது என்று இதை கட்டியவர்கள் பெருமையாக கூறினார்கள்
இதே கப்பலில் மிஷனெரி ஜான் ஹார்ப்பரும் பிரயாணம் செய்தார்.
*யார் இந்த ஹார்ப்பர்*
மே மாதம் 29ஆம் தேதி, 1872 ஆண்டு அருமையான கிறிஸ்தவ தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார்.
தன்னுடைய சின்ன வயதிலேயே பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்பி ஆண்டவரை ஏற்று கொண்டார். 17ஆவது வயதில் தன் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தெருவாய் சென்று சுவிசேஷத்தை அறிவித்தார். 1896 ஆம் ஆண்டு சொந்த திருச்சபையை ஆரம்பித்தார். இதன் நடுவில் திருமணம் நடைபெற்றது. நானா என்ற மகளை ஈன்றெடுத்து விட்டு அவருடைய மனைவி இறந்து விட்டார்கள். ஆனால் ஹார்ப்பர் மனம் தளராமல் ஆண்டவருடைய வார்த்தையை பிரசங்கித்து கொண்டே வந்தார்.
தன் மகளை கூட்டி கொண்டு டைட்டானிக் கப்பலில் பிரயாணம் செய்யும் போது இரவு 11.40க்கு பனிப்பாறையை மோதியதால் கடல் தண்ணீர் கப்பலில் நுழைய ஆரம்பித்து கப்பல் மூழ்க ஆரம்பித்து விட்டது. உடனே தன் அருமை மகளை உயிர் காக்கும் படகில் ஏற்றி நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு மகளை பார்த்து மகளே கலங்காதே! நிச்சயமாக
மீண்டும் உன்னை நான் சந்திப்பேன் என்று கூறிவிட்டு அவலக்கூக்குரலிடும் மக்களிடம் செல்லுகிறார். ஹார்ப்பர் நினைத்து இருந்தால் அரும் தன் மகளோடு சென்று தப்பி இருந்து இருக்கலாம். ஆனால் அவருக்கு அழிந்து போகின்ற ஆத்துமாக்களை பற்றிய பாரம் இருந்தது.
பெண்களே, பிள்ளைகளே, இரட்சிக்கப்படாதர்களே உயிர் காக்கும் படகில் ஏறுங்கள் என்று ஹார்ப்பர் கூக்குரலிட்டார்.
அதற்குள் கப்பலின் அடிப்பாகம் மேலே எழும்பி இரண்டாக உடைந்தது. அநேகர் தண்ணீரில் விழுந்தனர்.
தண்ணீர் ஐஸ் மாதிரி இருந்தது. ஹார்ப்பர் அந்த நேரத்திலும் நீச்சல் அடித்து கொண்டே மக்களை பார்த்து இந்த கடைசி நேரத்திலாவது இயேசுவை விசுவாசி நீ இரட்சிக்கப்படுவாய் என்று சுவிசேஷத்தை அறிவித்தார். அங்கே ஒரு வாலிபன் மிதந்து இருந்த ஒரு மரக்கட்டையில் உட்கார்ந்து இருந்தான். ஹார்ப்பர் அவனிடம் வாலிபனே நீ இரட்சிக்கபட்டு இருக்காயா என்று கேட்க அவன் இல்லை என்றான். அவனையும் ஆண்டவருக்குள் வழி நடத்தினார். தன்னுடைய லைப் ஜாக்கெட்டை கழற்றி அந்த வாலிபனிடம் இது உனக்குதான் தேவை என்று கூறிவிட்டு மறுபடியும் நீச்சல் அடித்து மற்றவர்களை பார்த்து இயேசுவை விசுவாசி நீ இரட்சிக்கபடுவாய் என்று கூறியதுதான் கடைசி வார்த்தை. குளிர்ந்த தண்ணீரில் உறைந்து போனார்.
ஏறக்குறைய 1528 பேர் அந்த குளிர்ந்த கடல் நீரில் விழுந்ததில் ஆறு பேர் மாத்திரமே லைப்ஜாக்கெட் மூலம் தப்பித்தார்கள். இந்த வாலிபனும் ஒருத்தன்.
After 4 years John shared this !!!
No comments:
Post a Comment