லுத்தர் திருச்சபையில் சீர்திருத்தம்
ஏற்படுத்த உண்மையான காரணமாக எது இருந்தது ? What was the real driving force behind Luther's Reformation ? It is the Greek word " metanoia "
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Key word - Gk. metanoia - do penance Vs change of mind
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
16 -ஆம் நூற்றாண்டில் லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் 1582 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ரீம்ஸ் நகரில் ( Rheims ) புதிய ஏற்பாடு மொழி பெயர்க்கப்பட்டது.
பிறகு 1609-1610 ஆம் ஆண்டில் டூயை நகரில் பழைய ஏற்பாடு மொழி பெயர்க்கப்பட்டது .
இந்த மொழி பெயர்ப்பு Douay - Rheims Bible என்றழைக்கப்படுகிறது. இதன் உச்சரிப்பு du: ei - ri:mz ஆகும். இந்த மொழி பெயர்ப்பு சுருக்கமாக DRB என்று அழைக்கப்பட்டது. சில சமயம் இது DRA என்றும் அழைக்கப்பட்டது. A - என்பது Academic என்று பொருளாகும்.
இந்த DRB மொழி பெயர்ப்பு லத்தீன் வல்கேட் பைபிளின் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பு என்று கருதப்பட்டது. தமிழில் "மனந்திரும்புதல்" ஆங்கிலத்தில் " repentance" என்ற கிரேக்க மூல மொழியின் " மெட்டனோயா " - metanoia - என்ற வார்த்தை இந்த DRB மொழிபெயர்ப்பில் do penance என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இந்த "பெனன்ஸ்" என்ற ஆங்கில வார்த்தை "பெனிடென்டிஷியா" - paenitentia என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாகும். பெனன்ஸ் -penance - என்ற வார்த்தை தவம் , நோன்புகள் ஆகியவைகளைக் குறிக்கும். எனவே மனந்திரும்பு என்பது தவம் செய் , நோன்புகளை கடைபிடி , போய் குருவானவரிடம் பாவ அறிக்கையை செய், தான தருமம் செய், உன்னை வருத்திக்கொள் என்ற பொருளில் வருவதாக do penance என்ற வார்த்தை யின் பொருளை கவனிக்கலாம்.
16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வாழ்ந்த மக்கள் தாங்கள் செய்த பாவங்களுக்காக தங்களுக்குத் தாங்களே தண்டனையைக் கொடுத்துக் கொள்ளுவார்கள். தங்களை சாட்டையால் அடித்துக் கொள்ளுவார்கள். பனியில் மழையில் குளிரில் போய் நிற்பார்கள். தங்களுடைய இல்லங்களிலிருந்து முழங்கால்/முட்டிக்கால் போட்டுக்கொண்டு அவர்கள் ஊரிலுள்ள ஆலயத்திற்கு முட்டிக்கால் மூலமாகவே தவழ்ந்து அல்லது ஊர்ந்து செல்லுவார்கள். பல நாட்கள் சாப்பிடாமல் பட்டினி கிடந்து தங்களைத்தாங்களே வருத்திக் கொள்வார்கள். புனித யாத்திரை சென்று புனித இடங்களை தரிசித்து வந்தார்கள். மற்றும் தான தர்மங்களையும் செய்வார்கள்.
மார்ட்டின் லுத்தரும் தனது பாவங்களுக்காக தன்னை தானே இவ்வாறு வருத்திக்கொள்ளும் பழக்கத்தை யுடையவராகயிருந்தார்.
ஒரு நாள் மார்ட்டின் லுத்தர் அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தை இறையியல் மாணவர்களுக்கு போதிக்கும் போது, " மனிதன் தான் செய்யும் நற்கிரியைகளினால் நீதிமானாகிறது இல்லை. கடவுள் , கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒரு மனிதனுடைய இதயத்திலே தனது நீதியை தந்து அவனை நீதிமானாக்குகிறார். மனிதர்களின் நற்கிரியைகளை கண்டு கடவுள் அவ்வாறு செய்வது இல்லை. ஒருவன் நீதிமானாக கிறிஸ்துவை விசுவாசித்தாலே போதும். கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமாகவே கடவுளுடைய நீதி ஒரு மனிதனுடைய இருதயத்திற்குள் கடவுளால் அருளப்பட்டு அவனை நீதிமானாக்குகிறது . அதற்காக அவன் வேறு எந்த நற்செயல்களையும் செய்ய தேவை இல்லை என்பதுவே லுத்தரின் கண்டுபிடிப்பு ஆகும். இது லுத்தரின் வாழ்க்கையில் நடைபெற்ற "லுத்தரின் கோபுர அனுபவம் ( Tower Experience of Luther )" என்றழைக்கப்படுகிறது.
லுத்தர் ரோமர் நிருபத்தையும் கலாத்தியர் நிருபத்தையும் ஆய்வு செய்து தியானிக்கும் போது அவர் கண்டறிந்தது "மனந்திரும்புதல் " அல்லது "மனமாற்றம்" என்பது "தவமோ அல்லது நோன்போ அல்லது தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் ஒரு செயலோ அல்ல. அது சிந்தையில் ஏற்படும் மாற்றமே " என்று கண்டறிந்தார். எனவே மனந்திரும்புதல் என்பதற்கு do penance - தவம் செய் , நோன்பு யிரு , உன்னை நீயே வருத்திக்கொள் என்பதல்ல change of mind -மன மாற்றமே - சரியான கிரேக்க மொழியின் பொருள் என்று கூறி அவர் காலத்திலிருந்த "நற்கிரியைகள் " மனிதனுக்கு இரட்சிப்பை தராது என்று அறிவித்தார். மனிதன் கிரியைகளினால் அல்ல இயேசு கிறிஸ்துவின் மீது வைக்கும் விசுவாசத்தின் மூலமே நீதிமானாக்கப்படுகிறான் என்று லுத்தர் போதிக்க ஆரம்பித்தார்.
Man is justified by faith alone not by works . திருச்சபை சீர்திருத்த வாசகங்களில் (Slogans of Reformation) முக்கியமான ஒரு வாசகத்திற்கு அடிப்படையான ஒரு வசனம் ரோமர் 1:17 . "விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் " என்பதாகும். Sola Fide - சோலா ஃபிடே (லத்தீன் )- Faith Alone - விசுவாசம் மாத்திரமே ! (கிரியைகள் அல்ல ) . சமீபத்தில் மொழி பெயர்க்கப்பட்ட -New Revised Standard Version (NRSV)/ New Jerusalem Bible (NJB) / New American Bible (NAB) பொது மொழிபெயர்ப்பு (CB) மற்றும் கத்தோலிக்க பைபிள்களின் மொழிபெயர்ப்பில் பெனன்ஸ் ( penance )என்ற வார்த்தையை நீக்கி மனந்திரும்புதல் /மன மாற்றம் என்பதற்கான சரியான ஆங்கில வார்த்தையை repentance யை பயன் படுத்தியுள்ளனர்.
நாம் இரட்சிக்கப்படுவதும் நாம் நீதிமானாக்கப்படுவதும் நாம் கடவுளிடம் பாவமன்னிப்பை பெறுவதும் நாம் செய்யும் நல்ல செயல்களால் அல்ல- நமது நற்கிரியைகளால் அல்ல. மாறாக கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமாகவே நாம் இரட்சிக்கப் படுகிறோம். நீதிமான்களாக்கப் படுகிறோம். கிறிஸ்துவின் மீது நாம் விசுவாசத்தை வைக்கும் போது கடவுள் தனது நீதியை கிறிஸ்துவின் வழியாகத்தந்து நம்மை நீதிமானாக்குகிறார்.
" நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்." தீத்து 3:5
DRB மொழிபெயர்ப்பில் மனந்திரும்புதல் /மன மாற்றம் என்பதற்கு தவம் /நோன்பு (do penance )என்று மொழி
பெயர்க்கப்பட்ட சில இடங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மனந்திரும்புதல் என்பது சிந்தையில் வரும் மாற்றம். அதை do penance என்று மொழிபெயர்க்கக்கூடாது. do penance என்பது இரட்சிப்புக்கு நற்கிரியைகளை செய்ய மக்களை ஊக்குவித்தலாகும். லுத்தர் இதை தவறு என்றார்.
மார்ட்டின் லுத்தரின் சிந்தனையை மாற்றிய ஒரு சில திருமறை சொற்களில் ஒன்று இந்த "do penance " ஆகும். மனந்திரும்புதல் என்பது சிந்தையை மாற்றுதல் ஆகும் ( change of mind - metanoia ) . ஆனால் அது மார்ட்டின் லுத்தர் காலத்தில் தவம் செய் , நோன்பு யிரு , உன்னை நீயே வருத்திக்கொள் என்ற பொருளில் போதிக்கப்பட்டது. மார்ட்டின் லுத்தர் கிரேக்க மொழியின் அர்த்தத்தை உணர்ந்து கொண்டதால் மனந்திரும்புதல் ஒரு செயல் அல்ல அது மாறாக சிந்தையின் மாற்றம் என்று அவர் புரிந்து கொண்டு அவர் தனது மனதில் மாற்றம் பெற்றார். திருச்சபையில் அவ்வாறே அதை போதித்தார்.
do penance வரும் சில இடங்கள்( DRB மொழிபெயர்ப்பு):
Matthew 3:2 " And saying: Do penance: for the kingdom of heaven is at hand."
Mt. 3:11- I indeed baptize you in the water unto penance
Lk 24 :47 - And that penance and remission of sins should be preached in his name, unto all nations, beginning at Jerusalem.
Acts 2 :38 - But Peter said to them: Do penance, and be baptized every one of you in the name of Jesus Christ, for the remission of your sins: and you shall receive the gift of the Holy Ghost.
Acts 8 : 22 - Do penance therefore for this thy wickedness;
Rev.2:16 - In like manner do penance;
Rev.2:21 - And I gave her a time that she might do penance
do penance என்பது லுத்தர் கால ஐரோப்பா வை நமக்கு நினைவுக்கு கொண்டுவருகிறது. do penance கு பதிலாக repentance என்று மொழி பெயர்ப்பது மிகவும் சரியான மொழிபெயர்ப்பாகும். லுத்தர் மூலமாக கர்த்தர் திருச்சபைக்குக் கொடுத்த இந்த வசன வெளிச்சத்திற்காகவும் திருச்சபை சீர்திருத்தத்திற்காகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம் ! ஆமென் !!
- பாஸ்டர் S. ஜான் மதியழகன்.
சென்னை -600076.