FCRA 2020
~~~~~~~~
FCRA 2020 சட்டத்தில் குடியரசுத்தலைவர் (28.09.2020 ) கையெழுத்திட்டுள்ளார். இந்த சட்டத்தின் படி FCRA கணக்குகள் அனைத்தும் டில்லியில் உள்ள ஒரு SBI கிளையில் துவங்க வேண்டும்.ஏற்கனவே FCRA கணக்கு வைத்திருந்தாலும் டில்லியில் SBI கிளையில் FCRA கணக்கு துவங்க வேண்டும். அயல் நாட்டிலிருந்து FCRA கணக்கிற்கு வரும் பணம் அனைத்தும் டில்லியிலுள்ள அந்த SBI வங்கி FCRA கணக்கிற்கு வரவேண்டும். பிறகு அதை நாம் வசிக்கும் ஊரிலுள்ள FCRA வங்கி கணக்குக்கு money transfer செய்து கொள்ளலாம்.
இதுவரை FCRA கணக்கிலுள்ள பணத்தில், 50 % பணத்தை நமது அலுவலக நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்தலாம் என்றிருந்தது . இனிமேல் 20 % பணத்தை மட்டுமே நிர்வாக செலவுகளுக்கு செலவழிக்க முடியும்.
FCRA கணக்கு வைத்துள்ள நிர்வாக குழுவில் உள்ள அனைவரும் ஆதார் எண் வைத்திருக்க வேண்டும்.
FCRA கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கிலிருந்து மற்றொரு FCRA கணக்கிற்கு பணத்தை கொடுக்கவோ அனுப்பவோ கூடாது.
FCRA வைத்துள்ள ஒரு நிர்வாகக்குழுவில் உள்ள ஒரு உறுப்பினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர் அங்கத்தினராக நீடிக்க இயலாது. அதினிமித்தம் FCRA வைத்துள்ள அந்த ஊழியமும் பல சோதனைகளை சந்திக்க வேண்டி வரும்.
FCRA வைத்துள்ளவர்கள் தங்களுக்கு வரும் பணத்தின் மூலமாக ஆசைகாட்டி மக்களை மதமாற்றம் செய்கிறார்கள் என்று அரசாங்கத்திற்கு ஐயம் ஏற்பட்டாலே FCRA வைத்துள்ள நிறுவனத்தை செயல் பட விடாமல் தற்காலிகமாகமாக தடை செய்ய முடியும். தற்காலிகமாக தடை செய்யப்பட்ட நிறுவனம் அலுவலக பயன்பாட்டிற்காக ஊழியர்களுக்கு மாத சம்பளம் தர வங்கியில் இருக்கும் பணத்தில் மிகக் குறைந்த அளவு பணத்தை மட்டுமே எடுக்க இயலும் (ஏறத்தாழ 10 % முதல் 20 % ).
FCRA வைத்துள்ள ஒருவர் எனக்கு FCRA வேண்டாம் . நான் எனது FCRA சான்றிதழை திருப்பி தந்துவிடுகிறேன்(Surrender) என்று கூறினால் அவர் தனது FCRA சான்றிதழுடன் அந்த FCRA பணத்தின் மூலமாக வாங்கின அசையும் அசையா சொத்துக்களை- கட்டிடங்கள், வாகனங்கள்- பஸ் , கார் , இரு சக்கர ஊர்திகள் - வங்கியிலுள்ள பணம் , கையிலுள்ள பணம் அனைத்தையும் மாநில தலைமை செயலாளரிடமோ அல்லது அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவரிடமோ ஒப்படைக்க வேண்டும். அதை அவர்கள் அரசாங்கத்தின் சார்பில் பயன்படுத்துவார்கள் , நிர்வாகிப்பார்கள்.
அரசாங்கத்திற்கு விரோதமாக மக்களை தூண்டி விடுபவர்களின் FCRA எண்கள் முடக்கப்படும். உதாரணமாக மக்கள் உரிமை இயக்கங்கள் மற்றும் அது போன்ற இன்னும் பிற இயக்கங்கள். மதமாற்ற தடை சட்டம் அமலில் இருக்கும் மாநிலங்களில் மதமாற்றம் வெளியரங்கமாக நடைபெற வில்லை யென்றாலும் மதமாற்ற முயற்சிகள் நடைபெறுகிறது என்ற சந்தேகம் வந்தாலே FCRA வை நிறுத்த முடியும். அதற்கு வரும் பணத்தை எடுக்க முடியாமல் செய்யமுடியும். தற்போது வந்துள்ள இந்த FCRA 2020 என்ற சட்டம் இயேசு கிறிஸ்துவின் மாபெரும் கட்டளையை FCRA வைத்துள்ள கிறிஸ்தவ நிறுவனங்கள் செய்ய தடை விதிக்கிறது.
No comments:
Post a Comment