கோரானா வெல்லமுடியாத ஒரு நோயல்ல..
இது ஒரு நண்பரின் பதிவு. இந்த வைரஸ் என்னையும் தாக்கும் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. மிக எச்சரிக்கையாய் இருந்தேன். கைகளில் கையுறை அணிந்து இருந்தேன், முக கவசத்தோடு தான் வெளியில் செல்வேன்.
08.06.2020 அன்று காலையில் ஒருவிதமான சோர்வு இருந்தது சரி இரவு தூக்கம் சரியில்லை போல என என்னை நானே தேற்றிக் கொண்டு அன்றாட அலுவல்களை கவனிக்க சென்றேன். நேரம் செல்லச் செல்ல ஒருவிதமான குளிர் ஊடுருவ தொடங்கியதையும், உடல் அடிக்கடி பதட்ட படுவதையும் என்னால் உணர முடிந்தது. மதியம் மூன்று மணிக்குள்ளாக அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வீட்டிற்குள் அடைந்துவிட்டேன். சுரம்:99°
09.06.2020. லேசான ஜுரம் இருந்தது தொண்டையில் ஒருவிதமான கரகரப்பும், வயிற்றில் உணவு செரிக்காத ஒருவித உணர்வும் இருந்தது. உடல் லேசாக நடுங்குவதை உணர முடிந்தது. என் வீடு பதட்டம் அடைவதை பார்க்க முடிந்தது. எனக்கு கழிவறையுடன் கூடிய தனி அறை ஒதுக்கி தரப்பட்டது. நான் என்னைத் தனிமைப் படுத்திக் கொண்டேன். சுரம்:99°
10.06.2020. சுவாசம் வேகமாக நடைபெற்றது. முழு சுவாசம் நடைபெறவில்லை முழு சுவாசத்திற்கு முயற்சி செய்தால் இரும்பல் வந்தது. கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டேன் நான் பிரச்சினையில் இருக்கிறேன் என்று. மிக நெருங்கிய நல்ல நண்பர்களுக்கு என் நிலையை விளக்கினேன். யாரும் என்னை பயப்படுத்தவில்லை மாறாக உற்சாகப்படுத்தினார்கள் பயப்பட வேண்டாம் என்றார்கள் மருந்துகளை பரிந்துரைத்தார்கள். எனக்காக அக்கறை எடுத்துக் கொண்டார்கள். சுரம்:99°.
11.06.2020: தொண்டையில் அடிக்கடி யாரோ துளையிடுவது போன்று ஒரு வலி. ஒட்டுமொத்த உடலிலும் வலி. அந்த நேரத்தில் என்னுடைய மிகக் கடினமான செயல் என்னவென்றால் எழுந்து நீர், உணவு எடுத்துக்கொள்வது சிறுநீர் கழிக்க செல்வது. சுரம்:99°.
12.06.2020: உடல் சோர்வடைய தொடங்கிவிட்டது படுக்கையில் திரும்பிப் படுப்பது என்பது ஒரு மிகப்பெரிய சவாலான காரியமாக மாறிப்போனது. உடலின் ஒவ்வொரு செல்களிலும் வலி மட்டுமே பிரதானமாக இருந்தது. சுரம்:99°
13.06.2020 to 15.06.2020: படுக்கையிலிருந்து எழ மிகவும் சிரமப்பட்டேன். உணவருந்துவது குறித்த உணர்வே இல்லாமலிருந்தது. எனது உடல் தன்னுடைய தேவையான பசி,தாகம்,குளிர் வெப்பம் இது குறித்து எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை. நானே மிகவும் சிரமப்பட்டு ஒவ்வொன்றாக புரிந்துகொண்டேன். எனது சகோதரன் ஆக்சி மீட்டர் என்ற கருவியை வாங்கி வந்து கொடுத்தான். அதில் ஆக்ஸிஜன் அளவு 94 என்றால் உடனே மருத்துவமனைக்கு செல்லும்படி கூறினான். நல்ல வேலை எனக்கு 98, 99 என ஆக்சிஜன் அளவு இருந்தது. சுரம்:99.4°
16.06.2020: உடல்வலி குறைய தொடங்கியது. ஆனால் உடல் பதட்டப் படுவது நிற்கவில்லை. உள்ளே குளிரும் வெளியே வேர்வையும் ஒருவிதமான புதிய உணர்வை ஏற்படுத்தியது. பின் என் மருத்துவ நண்பர் அதை என் பயம் என்றார். நான் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது என முடிவெடுத்து பரிசோதனை செய்துகொண்டேன். சுரம்:99.3°
17.06.2020: காலை 11 மணி, மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்துவிட்டது ஆம் நான் ஒரு கோரானா நோயாளி. இப்போது என் குடும்பம் மிகவும் பதட்டம் ஆகிவிட்டது. என் மனைவி அரசாங்கம் வந்து என்னை ஆம்புலன்சில் அழைத்துச் சென்றுவிடுவார்கள் என மிகவும் பயந்து தன் தம்பியை, என் மச்சினனை உடனே உதவிக்கு அழைத்தாள். சென்னையின் மிகப்பிரபலமான கோவிட் மருத்துவமனையில் அடுத்த அரை மணி நேரத்தில் எனக்கு அப்பாயின்மென்ட் வழங்கப்பட்டது உபயம் என் மைத்துனன்.
என்னை பல பரிசோதனைகள் மேற்கொண்ட பின் அந்த மருத்துவர் என் மனைவியிடம் மிக உறுதியான ஒரு வார்த்தை சொன்னார் "உங்கள் கணவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டார் இனி அவருக்கு எந்த மருத்துவ உதவியும் தேவையில்லை." தனிமைப்படுத்திக் கொண்டதை மேலும் பத்து நாட்களுக்கு தொடர சொன்னார். என்னை அவர் பரிசோதித்ததை அறிக்கையாக தயார் செய்து கொடுத்தனர். அரசாங்கத்திடமிருந்து ஆள் வரும்போது அதை காட்டச் சொன்னார்கள்.
அந்த மருத்துவர் என் மனைவியின் அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தார். என் மனைவி அந்த மருத்துவரிடம் என்னை அரசாங்கம் கூட்டி செல்ல மாட்டார்கள் என்ற உறுதியை பெற்றுக்கொண்டு விடைபெற்றோம். சுரம் இல்லை.
18.06.2020: உடல் வலி சுத்தமாக இல்லை. பசி இல்லை தாகம் இல்லை. நானாகவே உணவும் தண்ணீரும் எடுத்துக்கொள்ளகிறேன். உடல் தன்னுடைய அனைத்து சக்திகளையும் இழந்து விட்டிருக்கிறது. இந்த சுய சிறைக்குள் எட்டு நாட்களை ஓட்டவேண்டும்.
இயற்கைக்கு என் இருப்பு தேவைப்படுகிறது.
நான் விடாமல் மூன்று விஷயத்தை செய்து வந்தேன். 1. எலுமிச்சம் பழச்சாற்றில் தேன் கலந்து பருகுவது. 2. ஆவி பிடிப்பது. 3. சூடான ஏதாவது ஒரு பானத்தை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை உட்கொள்வது, இவையே என்னை காத்தது என நான் நினைக்கிறேன்.
என் குடும்பம், என் நண்பர்கள் மற்றும் என்னை பார்க்காமலே எனக்காக சிபாரிசு செய்த என் மைத்துனனின் நண்பர்கள் என அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
கோரானா வெல்லமுடியாத ஒரு நோயல்ல.
G #ஜெயப்பிரகாஷ், M.L.,
வழக்கறிஞர், ஈரோடு...