பெந்தேகோஸ்தே நாளில் நடந்த நிகழ்ச்சிகளின் பொருள்
The Meaning of the Pentecostal Day event.
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
1. கடவுளின் காணக்கூடிய பிரசன்னம் வெளிப்பட்டது. ( Theophany )
கடவுள் தன்னுடைய பிரசன்னத்தை வெளிப்படுத்தும் இடத்தில் "காற்றும்" "நெருப்பும்"காணப்படும். பழைய ஏற்பாட்டில் கடவுள் ஓரிடத்திற்கு வரும்போது அவ்வாறு நடந்தன. இரண்டாவது அங்கு கூடியிருந்தவர்கள் புரிந்து கொள்ளும் படியாக அந்த 120 பேரும் அயல் மொழிகளை பேசினார்கள். ( அப்போஸ்தலர் 2: 3; 5-11).
2. கடைசிகாலத்தில் ஊற்றப்படப்
போகின்ற பரிசுத்த ஆவியின் அருள்மாரியினைக்குறிக்கும்.
Eschatological outpouring of the Spirit.
கடைசிக்காலம் என்பது பெந்தேகோஸ்தே நாள் முதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு இடைபட்ட காலமாகும். கடைசி நாட்கள் (Last days )என்றும் இதற்கு மறுபெயர் உண்டு. பரிசுத்த ஆவியானவர் அனைத்து மனிதர்கள்- ஆண்கள் பெண்கள் முதியோர் இளைஞர் கடவுளின் வேலைக்காரர்கள் வேலைக்காரிகள் ஆகிய அனைவர் மீதும் தனது ஆவியை ஊற்றுவார் என்பது பெந்தேகோஸ்தே நாளில் ஆரம்பிக்கப் படப் போகிற ஆவியின் அருள்மாரியைக் குறித்த தீர்க்க தரிசன நிறைவேறுதல் என்று கூறலாம் (யோவேல் 2: 28,29; எசேக்கியேல் 36:27 ; அப்போஸ்தலர் 1:5 )
3. பெந்தேகோஸ்தே இயேசு உயிர்த்தெழுதலின் நிறைவாகும். Pentecost is the fullness of Easter. (அப்போஸ்தலர் 2: 23-33). கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்து பரத்துக்கேறி பிதாவினுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து அவருடைய அப்போஸ்தலர்களின் சமுதாயத்தின் (apostolic community)மீது பரிசுத்த ஆவியை அனுப்பி தனது மீட்பின் கிரியைகளை நிறைவேற்றி முடித்தார்.
4. மேசியாவின் சமுதாயத்தை கூட்டி சேர்த்தல். The gathering together of the Messianic Community .
பழைய ஏற்பாட்டில் இறைவாக்கு உரைத்தவர்கள் சிதறடிக்கப்பட்ட இஸ்ரவேலர்கள் அனைவரும் சீயோன் மலையில் கூட்டி சேர்க்கப்படுவார்கள் என்றும் இஸ்ரவேல் சபையார்கள் கர்த்தரை மையமாக வைத்து சேர்க்கப்படுவார்கள் என்றும் உரைத்தனர். அவ்வாறு சேர்க்கப்படும் போது சகல நாடுகளிலிருந்து வந்திருந்த யூதர்களும் யூத சமயத்திற்கு மதம் மாறியவர்களும் (proselytes) ஒரு ஆவிக்குரிய ஐக்கியத்திற்கு வர பெந்தேகோஸ்தே நாள் அவர்களுக்கு உதவியது . அவ்வாறு வந்த அவர்கள் அப்போஸ்தலர்களின் உபதேசத்திலும் சகோதர சிநேகத்திலும் அப்பம் பிட்குதலிலும் நிலைத்திருந்தார்கள். (அப்போஸ்தலர் 2: 42 ).
5. பெந்தேகோஸ்தே நாளில் உண்டான சபையில் அனைத்து மக்களும் அங்கத்தினர்கள் ஆகலாம்.A community opened to all the people. தூய ஆவியானவர் அப்போஸ்தலர்களின் சமுதாயத்திற்கு கொடுக்கப்பட்ட நோக்கமே அவர்கள் உலகத்தின் கடைசி எல்லை வரையிலும் இயேசுவுக்கு " சாட்சி " பகர வேண்டும் என்பதுவே ( அப்போஸ்தலர் 1:8 ). பெந்தேகோஸ்தே நாளில் புதிய மொழிகளில் பேசப்பட்ட வார்த்தையை வானத்தின் கீழெங்கிலுமிருந்து வந்திருந்த யூதர்களும் யூதமார்க்கத்தை ஏற்றுக்கொண்டவர்களும் தேவ பக்தியுள்ள யூதர்களும் கேட்ட பொழுது அவர்களும் அப்போஸ்தலர்களின் சமுதாயத்தில் சேர்த்துக்கொள்ளப்பட உதவியது(அப்போஸ்தலர் 2:5-11). புறஜாதிகள் மீது தூய ஆவியானவர் வந்து இறங்கிய போதும் அவர்கள் அப்போஸ்தலர்களின் சமுதாயத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்( அப்போஸ்தலர் 10: 44) . பாபேலில் பல்வகையான மொழிகள் பேசப்பட்ட போது மக்கள் பிரிந்தனர். ஆனால் பெந்தேகோஸ்தே நாளில் பல்வேறு வகையான மொழிகள் பேசப்பட்டபோது மக்கள் ஒரே ஐக்கியத்திற்குள் வந்தனர் ( ஆதியாகமம் 11:1-9) .
6. திருச்சபையின் ஊழியம் பெந்தேகோஸ்தே நாளில் உருவாயிற்று . Beginning of the Mission of the Church . பெந்தேகோஸ்தே நாளில் கிறிஸ்துவை நம்பினவர்கள் ஒரே சமுதாயமாக வந்தது மட்டும் அல்லாது அவர்களின் திருச்சபை ஊழியம் பெந்தேகோஸ்தே நாளில் ஆரம்பித்தது எனலாம். அப்போஸ்தலர் 2:14 யில் "பேதுரு பதினொருவருடனும் எழுந்து நின்று" என்று வருவதைக் கவனிக்க வேண்டும். " பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்" இயேசு.
(அப்போஸ்தலர் 1:8). அப்போஸ்தலர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் இறங்கியது அவர்களை இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் ஊழியத்திற்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட ஒரு பதவி ஏற்பு நிகழ்ச்சி( investiture) என்றும் கூறலாம். ஒரு ஆயரோ அல்லது ஒரு பேராயரோ அருட்பொழிவு பெற்ற பிறகு தங்களது ஊழியத்தை தொடங்குவதைப் போல இயேசுவின் அப்போஸ்தலர்கள் பெந்தேகோஸ்தே நாளில் பெற்ற தூய ஆவியானவரின் அருட்பொழிவுக்கு பின்னர் உலகமெங்கும் சென்று நற்செய்தியை பரப்பினார்கள். பெந்தேகோஸ்தே நாளில் புதிய பிரமாணமும் புதிய ஆவியும் ( New Law and New Spirit ) அப்போஸ்தலர்களுக்கு கொடுக்கப்படுகிறது( எரேமியா 31:33; எசேக்கியேல் 36:27). முக்கியமாக பெந்தேகோஸ்தே நாளில் " புது படைப்பின் செயல்" ( New Creation ) நடைபெற்றது ( ஆதியாகமம் 1:2) என்பதை உணரலாம்.
7. இரட்சிப்பின் இரகசியத்தை பெந்தேகோஸ்தே வெளிப்படுத்துகிறது. Pentecost reveals the mystery of Salvation . கிறிஸ்து பரத்துக்கேறிய பிறகு பத்தாம் நாளில் பெந்தேகோஸ்தே நாளில் தூய ஆவியானவர் அருளப்பட்டார். பெந்தேகோஸ்தே நாளில் சபையில் இறங்கிய அதே தூய ஆவியானவர் தான் இன்றும் சபையில் யிருக்கின்றார். கிறிஸ்துவின் வருகை வரையிலும் அதே தூய ஆவியானவர் தான் சபையை வழி நடத்தி செல்லுவார். திருச்சபையின் ஊழியங்களை வழிநடத்துவதும் திருச்சபையில் புதிய ஆத்துமாக்களை கொண்டு வந்து சேர்ப்பதும் தூய ஆவியானவர் தான். அது அவரின் செயல் ( அப்போஸ்தலர் 4:8; 13:2; 15:28; 16:6).சில இடங்களில் தூய ஆவியானவர் செயல்கள் வெளிப்படையாக வெளிப்படுவதையும் நாம் காண்கிறோம் ( அப்போஸ்தலர் 4:31; 10:44 ). பெந்தேகோஸ்தே நாளில் அப்போஸ்தல சமுதாயத்தின் மீது ( apostolic community ) இறங்கிய தூய ஆவியானவர் தற்போது நமது சபைகளிலும் பூமியில் உள்ள அனைத்து சபைகளிலும் இப்போதும் செயல்பட்டு வருகின்றார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
-பாஸ்டர் S.ஜான் மதியழகன்.
Reference :
Xavier Leon - Dufour . Dictionary of Biblical Theology .London. Burns & Oats. 1988.