⛱️.சாது சுந்தர்சிங் அவர்களை
சந்திக்க ஒரு வயதான சன்னியாசி வந்திருந்தார்..⛱️
⛱️.அவர் சுந்தர்சிங்கை பார்த்து நீங்கள் இவ்வளவு இளம் வயதிலேயே சன்னியாசி ஆகியிருக்ககூடாது. என்னைப் போல உலகத்தில் உள்ளதை எல்லாம் அனுபவித்துவிட்டு வயதானபிறகு சன்னியாசி ஆகியிருக்கலாம்.உங்கள் இளமை காலத்தை வீணாக்கலாமா..?என்றார்..⛱️
⛱️.அதற்கு சாது சுந்தர்சிங் அவர்கள் ஒரு பலாபழத்தை கொண்டுவர சொன்னார் அதை வெட்டி பலாசுளையை எடுத்து குப்பையில் தூக்கி எறிந்துவிட்டு அதில் உள்ள சக்கையை சாப்பிட கொடுத்தார்..⛱️
⛱️.அதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த சன்னியாசி சற்று எரிச்சலோடு பலாபழத்தின் சுளையை குப்பையில் வீசிவிட்டு ஒன்றும் பிரயோஜனமில்லாத அதனுடைய சக்கைபகுதியை தருகிறீர்களே இது முட்டாள் தனமாக அல்லவா இருக்கிறது என்றார்..⛱️
⛱️.அதற்கு சுந்தர்சிங் அவர்கள் பொறுமையாக சிரித்துகொண்டே
ஐயா சாதாரண மனிதனான நீங்களே பெலாப்பழத்தின் சக்கையை ஏற்றுகொள்ள மறுக்கிறீரே அப்படி தானே நம்மை படைத்த ஆண்டவரும் நினைப்பார்..⛱️
⛱️.நம்முடைய வாழ்நாட்களில் இளமை பருவம் என்பது பலாச்சுளையை போன்றது. அந்த இளமைபருவத்தை குப்பையான உலக இன்பத்திற்குள் போட்டுவிட்டு சக்கைபகுதியாகிய வயதான பருவத்தை ஆண்டவருக்கு கொடுப்பது என்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் காரியம் என்றார்..⛱️
⛱️.அதை சற்றும் எதிர்பார்க்காத சன்னியாசி வெட்கி தலைகுனிந்தவராக அங்கிருந்து சென்றுவிட்டார்..⛱️
⛱️.அன்பான தேவபிள்ளைகளே உங்கள் வாழ்நாட்களில் வாலிபபருவத்தை ஆண்டவருக்கு கொடுங்கள்..⛱️
⛱️.வேதம் சொல்கிறது;-
⛱️.வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும், உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட, ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை #நியாயத்திலே கொண்டுவந்து #நிறுத்துவார் என்று அறி..⛱️
🚩பிரசங்கி 11:9
⛱️.நீ உன் இஷ்டம் போல் வாழலாம் ஆனால் ஒரு நாள் நியாயதீர்ப்பு உண்டு என்பதை மறந்துவிடாதே..⛱️
⛱️.மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் #வாலிபப்பிராயத்திலே_நினை.
🚩பிரசங்கி 12;7
⛱️.அதனால் தான் பிசாசானவன் உன் வாலிப பருவத்தில் ஆண்டவரை நீ நினைக்க விடாதபடி
மது,மாது...
நெட்,சிகரெட்...
காதல்,மோதல்,சினிமா,
இப்படியான அந்த நினைவில் அலையவைக்கிறான் இப்படியான சிற்றின்ப வலையில் விழவைக்கிறான் ..⛱️
⛱️ஆதாம் தன்னுடைய வாலிபபருவத்தில் ஆண்டவருக்கு கீழ்படியாமல் செய்த பாவம் எல்லா மனிதனுக்கும் சாபத்தை வாங்கிதந்தான்..⛱️
⛱️.அதனால் இயேசு அதே வாலிபபருவத்தில் ஆண்டவருக்கு எல்லாவற்றிலும் கீழ்படிந்து சாபத்தை சிலுவையில் நீக்கினார்..⛱️
⛱️.ஆண்டவர் வாலிபபிராயத்தை எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கு சிலவற்றை மட்டும் பதிவிடுகிறேன்..⛱️
⛱️இயேசு மரித்தது வாலிபனாக..⛱️
⛱️இயேசு அற்புதம் செய்தது வாலிபனாக..⛱️
⛱️இயேசுவின் சீடர்கள் வாலிபர்களே..⛱️
⛱️இயேசு உயிரோடு எழுப்பிய மூன்றில் இருவர் வாலிபர்..⛱️
⛱️தானியேலை சிங்ககெபியில் வாலிபனே..⛱️
⛱️தானியேல் நண்பர்கள் அக்கினி சூலையிலே வாலிபரிகளே..⛱️
⛱️இன்னும் சொல்லவேண்டும் என்றால் சிம்சோன்,தாவீது,யோசேப்பு..⛱️
⛱️இன்றைய கிழவன் எல்லோரும் நேற்றைய வாலிபன்..⛱️
⛱️இன்றைய வாலிபன் எல்லோரும்
நாளைய கிழவன்..⛱️
⛱️தேவபிள்ளைகளே உன் வாலிப பருவத்தை வீணாக்காதே இந்த வாலிபமும் மாயையே நிரந்தரமானதல்ல எல்லாம் கடந்து போககூடியது..⛱️
⛱️.உன்னை சுந்தர்சிங்கை போல சன்னியாசி ஆக சொல்லவில்லை.
அந்த ஊழியம் அந்த அழைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே.. ⛱️
⛱️நீ படி, சம்பாதி,வேலைக்கு போ வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் உன்னை குறித்த அழைப்பு என்ன என்று ஆண்டவரிடம் தினமும் கேள் ஒரு நாள் உனக்கு உன்னதத்தில் இருந்து அழைப்பு வரும் அதுவரை அவருக்காக ஏதாவது ஒன்றை செய்வாயா..⁉
⛱️தேவபிள்ளைகளே உங்கள் வாலிபபருவம் யாருக்கு என்று முடிவு பண்ணீட்டீங்களா...⁉
No comments:
Post a Comment